Sunday, April 1, 2012

கவிதை:




அவர்கள் சொல்வார்கள்!






'மனித சுபாவம் அப்படி
நீங்கள் உட்கார்ந்தால்
அவர்கள் சொல்வார்கள்
உட்காராதே!


நின்றால் சொல்வார்கள்
'உனக்கு என்ன பிரச்சினை
நடக்கக்கூடாதா?'


நடந்தால் சொல்வார்கள்
'அவமானம்
உட்கார் நீ!'



நீங்கள் தாளமுடியாமல்
படுத்தால் சொல்வார்கள்
'எழுந்து நில்'.

நீங்கள்
படுக்கவில்லையானால் சொல்வார்கள்
'கொஞ்சம் படுக்கலாமில்லையா?'


விழிப்பதும் தூங்குவதுமாக என் வாழ்வை
நான் வீணாக்கிக் கொண்டிருக்கின்றேன்.....!

நான் இக்கணமே இறந்துபோனால்
அவர்கள் சொல்வார்கள்
'நீ வாழவேண்டும்'.


நான் வாழ்வதைப் பார்த்தார்களானால்
யாருக்குத் தெரியும்
அவர்கள் சொல்வார்கள்
'நீ இருப்பதே அவமானம்
செத்துத் தொலை!'


அதீத பயத்துடன்
ரகசியமாக
நான் தொடர்ந்து
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்!'

-தஸ்லீமா நஸ்ரின்

No comments:

Post a Comment