Happy
Eid ul Alha Festival
to all
Viewers of Sirahukal !
Saturday, October 27, 2012
Friday, October 26, 2012
பரிசுபெற்ற இலக்கியத் தம்பதிகள்
A.J.M. Saly & Mubeena M. Saly |
இதிலே தி/ஜமாலியா முஸ்லீம் மகாவித்தியால ஆசிரியர் திரு. ஏ.ஜே. முகம்மது சாலி மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி முபீனா முகம்மது சாலி தம்பதிகள் கவிதைப்போட்டி மற்றும் சிறுகதைப்போட்டி ஆகியவற்றிலே பரிசில்களை வென்றிருக்கின்றனர்.
திரு. ஏ.ஜே. முகம்மது சாலி கவிதைப்போட்டியிலே பிரதேச மட்டத்தில் முதலாம் இடத்தையும் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றார். திருமதி முபீனா முகம்மது சாலி சிறுகதைப்போட்டியிலே பிரதேச மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் வெற்றி பெற்றார்.
அதேசமயம் இவர்கள் இருவரும் 2011 ம் ஆண்டுக்குரிய போட்டிகளிலும் பங்கேற்று பரிசில்களை வென்றெடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தம்பதிகளின் இலக்கிய முயற்சிகள் மீதான ஆர்வமும் திறமையும் பாராட்டுக்குரியது.
Jesslya Jessly
Monday, October 22, 2012
திருகோணமலை பிரதேச சாகித்திய விழா - 2012 சிறுகதைப்போட்டியில் 'மூதூர்' மொகமட் ராபிக்கு முதலிடம்!
2012ம் வருடத்திற்கான திருகோணமலை பிரதேச சாகித்திய விழாவை முன்னிட்டு திருகோணமலை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் எழுத்தாளரான மூதூர் மொகமட் ராபி முதலாம் இடத்தை வெற்றி பெற்றுள்ளார்.
அத்துடன் கவிதைப்போட்டியில் அவர் எழுதிய புதுக்கவிதை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கான பரிசுகள் எதிர்வரும் 2012.10.25 அன்று பிப 2.00 மணியளவில்
தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள பிரதேச சாகித்திய விழா 2012 விழாவில் வைத்து வழங்கப்படவுள்ளது.
இவர் பற்றிய ஒரு சிறுகுறிப்பு:
நண்பர் மொகமட் ராபி அண்மைக்காலத்தில் நம்பிக்கை தரும் ஒரு படைப்பாளியாக தன்னை இனங்காண்பித்துவரும் எழுத்தாளர். ஆனாலும் தன்னை தனது எழுத்துகளுக்கூடாக வெளிப்படுத்தினால் மட்டும் போதும் எனக் கருதுபவர்.
இதனால் இவர் பற்றிய சரியான அறிமுகம் இன்று வரையிலே இல்லாதிருக்கின்றது. இதுவரை ஏறத்தாழ இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் ஐம்பதுக்கும் மேலான புதுக்கவிதைகளையும் எழுதியுள்ள இவரதுபடைப்புகள் தினக்குரல், வீரகேசரி மீள்பார்வை, மித்திரன் போன்ற செய்தித்தாள்களிலும் மல்லிகை, ஜீவநதி போன்ற சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. தவிர, "சிறகுகள்", கிண்ணியா நெற், கல்குடா முஸ்லீம் நெற் போன்ற இணைய வெளியீடுகளிலும் இவரது ஆக்கங்கள்தொடர்ந்து பிரசுரமாகிக் கொண்டுமிருக்கின்றன.

இவர் தன்னை 'மூதூர் மொகமட் ராபி' என அழைத்துக் கொண்டாலும் இவரது படைப்புக்கள் இவரது ஊரோடு மட்டும் மட்டுப்படாது பரந்த தளத்தைக் கொண்டவையாகவுள்ளன.
இவர் ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓய்வுபெற்ற அதிபர் திரு ஏ.எம். புஹாரி (1992-1997 காலப்பகுதியில் T/Mutur Central College ல் சிறப்பான தனித்துவம் மிக்க அதிபராகக் கடமையாற்றியவர் ) -திருமதி அம்ரா புஹாரி தம்பதிகளின் மகன் ஆவார்.
இவரது தாயார் திருமதி. அம்ரா புஹாரி மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவரும் 1992 -2004 காலப்பகுதியிலே T/An-Nahar Girls' MV யில் வெற்றிகரமான ஓர் அதிபராக இருந்தவர் ஆவார்.
கடந்த 2011ம் வருடம் திருகோணமலை வலயக்கல்வி அலுவலகம், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடாத்திய சிறுகதைப்போட்டியிலும் 'மூதூர் மொகமட் ராபி' யின் சிறுகதை முதலிடத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறந்த படைப்பு முயற்சிகளுக்காக பெற்றுவரும் வெற்றிகள் குறித்து இவரை பாராட்டலாம்.

- Jesslya Jessly
Subscribe to:
Posts (Atom)