ஆம், நிசிலாந்து அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் நடந்துவரும் 5 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரின் 3வது போட்டி இன்று புதுவருட தினத்தில் குயீன்ஸ்லாண்ட் மைதானத்தில் நடைபெற்றது.
மழை இடையூறு காரணமாக அணிக்கு 21 ஓவர்களாக நடந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய போட்டியில் 4வது விக்கட்டுக்காக களமிறங்கிய 23 வயது இடது கைத் துடுப்பாட்ட வீரர் C. J. ஆண்டர்ஸன் (Corey James Anderson) அதிரடியாகத் துடுப்பெடுத்தாடினார். ஆரம்பம் முதலே வேகமாக ஓட்டங்களைக் குவித்த ஆண்டர்ஸன் தனது முதலாவதுஅரைசதத்தை 20 பந்துகளிலே கடந்தார்.
தொடர்ந்து அதிவேகமாக சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாசிய ஆண்டலர்ஸன் 16 வது ஓவர் முடிவிலே வெறும் 31 பந்துகளில் 9 பவுண்டரிகளையும் 4 சிக்ஸர்களையும் விளாசி 78 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்தார். அப்போதே அப்ரிடியின் சாதனை முறியடிக்கப்படலாம் என்று தோன்றியது எனினும் இன்னும் 5 பந்துகளில் குறைந்தபட்சம் 22 ஓட்டங்கள் தேவை என்பதால் அது அத்தனை சுலபமானதல்ல என்ற எண்ணமும் தோன்றியது.
ஆனால் சிம்மன்ஸ் வீசிய 17 ஓவரிலே முதல் இரண்டு பந்துகளிலும் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்ததன் மூலம் 33 பந்துகளிலே 86 ஓட்டங்கள் என்ற நிலைக்கு வந்து விட்டார் அண்டர்ஸன். 3வது பந்திலே 1 ஓட்டமும் 6 வது பந்திலே மீண்டும் ஒரு 1 ஓட்டமும் பெற்றதிலே 35 பந்துகளிலே 95 ஓட்டங்களை ஆட்டடமிழக்காது பெற்றிருந்தார்.
அதாவது அடுத்து சந்திக்கும் பந்தில் ஆறு ஓட்டங்களைப் பெற்றால் மட்டுமே ஏறத்தாழ ஒரு தலைமுறை இடைவெளி கொண்ட சஹீட் அப்ரிடியின் சாதனையை முறியடிக்கலாம் என்ற நிலை...!
ஆனால் 18வது ஓவரின் முதல் பந்தை மில்லர் குறைந்த நீளத்தில் நடு ஸ்டம்புக்கு வீச, அதனை லோங் லெக் திசையில் மைதானத்திற்கு வெளியில் ஆண்டர்ஸன் அனுப்ப..
1996ம் ஆண்டில் பாகிஸ்தானின் 16 வயதுப் பையன் அன்றைய உலகச்சாம்பியன்களுக்கு எதிராக அதுவும் தனது முதலாவது இன்னிங்ஸிலேயே உலகின் அதிவேகசதத்தை அடித்து அதிசயிக்க வைத்த சாதனையானது 2326 சர்வதேச ஒருநாள் போட்டிகளின் பின்பு இன்று புதுவருட தினத்தில் தகர்ந்தது!
Runs | Balls | 6s | 4s | Player | Match | Venue | Year |
---|---|---|---|---|---|---|---|
131* | 36 | 14 | 6 | CJ Anderson | New Zealand v West Indies | Queenstown | 01/01/2014 |
102 | 37 | 11 | 6 | Shahid Afridi | Pakistan v Sri Lanka | Nairobi | 04/10/1996 |
147* | 44 | 10 | 8 | MV Boucher | South Africa v Zimbabwe | Potchefstroom | 20/09/2006 |
117 | 45 | 4 | 18 | BC Lara | West Indies v Bangladesh | Dhaka | 09/10/1999 |
102 | 45 | 9 | 10 | Shahid Afridi | Pakistan v India | Kanpur | 15/04/2005 |
104 | 46 | 5 | 12 | JD Ryder | New Zealand v West Indies | Queenstown | 01/01/2014 |
134 | 48 | 11 | 11 | ST Jayasuriya | Sri Lanka v Pakistan | Singapore | 02/04/1996 |
113 | 50 | 6 | 13 | KJ O'Brien | Ireland v England | Bangalore |
'சாதனைகள் புரியப்படுவதே அவை என்றாவது ஒருநாள் முறியடிக்கப்பட வேண்டுமென்பதற்காகத்தான்'
-1997ல் தான் நிகழ்த்திய ஒரு இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்கள் (194) எனும தனது சாதனை 12 வருடங்களின் பின்பு 2010ல் சச்சின் டெண்டுல்கரினால் (200*) முறியடிக்கப்ட்டபோது சயிட் அன்வர் கூறியது
Afridi's Reaction :
Shahaid Afridi admitted that he had never heard of Corey Anderson until he broke his record for the fastest one-day hundred.
"I never heard his name and early morning my nephew told me about his feat and I sort of said the first news of 2014 is of my record being broken," he said.
"I must say it's a great achievement and Anderson deserves all the praise. Records are meant to be broken and I knew it would be broken someday. But I sort of wanted this record to stand until I retire because it has been a big pride for Pakistan and for me and whenever my name comes the record is mentioned.
"Now Anderson's name will come but I am sure with the advent of Twenty20 cricket this record will surely be bettered in the future. I had never expected it to be broken by a new player. I thought the way Gayle batted and hit sixes or the way Warner bats, they were favourites to break my record"
(Thanks : Cricinfo)
- Mutur Mohammed Rafi