சிறகுகள்

'சிறகிலிருந்து/ பிரிந்த இறகு ஒன்று/ காற்றின் / தீராத பக்கங்களில்/ ஒரு பறவையின் வாழ்வை/ எழுதிச்செல்கிறது!' -பிரமிள்

Sunday, January 20, 2013

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்


Healer Basker:




“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”, உண்மைதான், இவ்வுலகில் நிறைவான வாழ்வு வாழ ஆரோக்கியம் மிக மிக இன்றியமையாதது. ஆரோக்கியமற்ற மனிதரால் விரும்பினாலும் மகிழ்சியாக வாழ முடிவதில்லை. அவர் தானும் துன்புற்று தம்மை நேசிப்பவர்களையும் வருத்தத்தில் ஆழ்த்துகின்றார்.


இன்றைய நவ‌நாகரீக யுகத்தில் விளைந்த நவீன வாழ்வியல் முறைகளும், விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மனித வாழ்வை பல வழிகளில் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளன என்பது உண்மை, எனினும் நோயற்ற வாழ்வை அவை நமக்குத் தந்துள்ளன என நம்மால் நிறைவு கொள்ள முடிவதில்லை காரணம், நாளும் ப‌ல்கிப்பெருகி வரும் எண்ணற்ற நோய்கள், \
 
(பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பதைப்போல அல்லவா விஞ்ஞானிகள், நாளும் ஒரு நோயைக் கண்டுபிடித்து புதிது புதிதாய் அவற்றுக்கு பெயர் வைத்துக் கொன்டு வருகின்றனர்)



பண்டைய நாளில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நமது மூதாதையர்கள் கேள்விப்பட்டும் இருந்திரா எண்ண‌ற்ற பல நோய்களுக்கு இன்று நாம் பதில் சொல்லிக் கொன்டிருக்கிறோம் என்பது வருத்தத்திற்குரிய உண்மை. பால் மணம் மாறா சிசுவிலிருந்து, பலகாலம் வாழ்ந்து விட்ட முதியோரும், பெண்கள், ஆண்கள் என அனைவரும் வயது வரம்பின்றி நோயால் பீடிக்கப்படுவது இக்காலத்தில் சர்வ சகஜமாகிவிட்டது.



நோய் என்றால் சாதாரண சளி, காய்ச்சல் முதற்கொன்டு உயிரைக் கொல்லும் இதயநோய், உடல் உறுப்புக்களை இழக்கச்செய்யும் சர்க்கரை நோய் (பெயர் என்னவோ கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது, ஆனால் ஏற்படுத்தும் தீய விளைவுகள்!!!!), உடலை வலுவிழக்கச் செய்யும் ஆட்கொள்ளி நோயான எயிட்ஸ், உடலுக்கு உள்ளே ஊனை உருக்கும் புற்று நோய் என, இன்றைய காலத்து மாந்தர்களுக்கு சொந்தக்காரர்களாகி விட்டன எண்ணற்ற பல நோய்கள்.



இன்றைய நாளில் மருத்துவம் மட்டுமென்ன சாதாரணமா ? அவர்கள் சிகிச்சையளிப்பதில் மட்டுமல்ல, தனியார் மயமென்ற பெயரில் மக்களிடம் உள்ள கொஞ்ச நஞ்ச பணத்தையும் வசூல் செய்துவிடுவதிலும் மகா கில்லாடிகள் ! 
 
 இதில் ஆச்சரியம் என்னவென்றால் பல சமயங்களில் இவர்களது சிகிச்சை பலனளிக்காது நோயாளி மரித்துப் போனாலும் இவர்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை, ஒரு சல்லிக்காசும் குறையாது வசூல் செய்து விடுவார்கள், என்னே ஒரு மனசாட்சி...! கேட்டால் இந்தச் செலவு, அந்தச் செலவு, என அவர்கள் காட்டும் பில்லில் தாதியர் கூடுதல் நேரம் வேலை செய்தனர் என்பதற்கும் வரவு வைக்கப்பட்டிருக்கும் ! சரி சரி போகட்டும், வியாபாரமாகிப்போன உலகில் இதுவெல்லாம் சகஜமப்பா என நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான், வேறு வழி ?




வசதி படைத்தவர்கள் நோய் பீடித்தால் மேற்குறிப்பிட்ட "அருமையான" வசதி படைத்த மருத்துவமனைகளை நாடி சிகிச்சை பெறுகின்றனர் (முற்றிலும் குணமடைவதும், அடையாததும் வேறு விசயம் ) வசதி குறைந்த மக்கள் ?
அவர்களை நோய் தாக்காமல் விட்டு விடுவதில்லையே ! அரசாங்க மருத்துவமனைகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிறைந்திருப்பவர்கள் இவர்களே. ஏறக்குறைய இருந்தாலும் தற்காலிக நிவாரணிகள் இவை.



எனினும் இவற்றுக்கெல்லாம் நிரந்தர‌ நிவாரணி ஒன்று உண்டு, அதுவே இன்று நமது தலைப்பில் காணும் "அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை "!!!!
இந்தச் சிகிச்சை வழி கத்தியின்றி இரத்தமின்றி, மருந்து மாத்திரைகளின்றி, மருத்துவ சிகிச்சைகளின்றி, உண‌வுக்க‌ட்டுப்பாடுக‌ள் ஏதுமின்றி நமக்கு ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை நாமே முழுமையாக விடுவித்துக்கொள்ள முடியும், நோயின் பிடியிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும், நமது இரத்தத்தினை நாமே சுத்திகரித்துக்கொள்ள முடியும். நம்மை ஆரோக்கியமாகவும், இளமையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள இயலும். இதற்கு அதிகமான செலவுகளோ, சிரமங்களோ கிடையாது. தேவையெல்லாம் முழு ஈடுபாட்டுடன் சில வழிமுறைகள் பின்பற்ற வேண்டியதேயாகும்.


இதையெல்லாம் கேள்விப்பட்டதும் மிக ஆச்சரியமாகவே இருந்தது, ஆனால் அண்மையில் ச‌கோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் இங்கே மேற்கொன்ட ஒரு சொற்பொழிவில் இவையனைத்தும் சாத்தியமான உண்மைகள் என்பது, தெளிவாக விளங்கியது. " நிறைகுடம் தளும்பாது" என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சகோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள். பகட்டு, படாடோபம் ஏதுமின்றி மிகவும் எளிமையாக காட்சியளிக்கும் இவர், "நான் உங்கள் சகோதரன்" எனும் முகவரியோடு தனது சொற்பொழிவைத் துவங்கி, இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களின் ஆரோக்கியக் கேடுகளுக்கான தீர்வை தெளிவுற விளக்குகிறார். இந்த சிகிச்சை குறித்த மேலும் பல தகவல்களை யாவரும் அறியும் பொருட்டு, இணையத்திலும் பதிவு செய்துள்ளார்.
இந்த சிகிச்சையில் சகோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் பேசுவதை முழுமையாக செவிமடுத்து, அவர் குறிப்பிடும் சில எளிமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், ஒருமுறை மேற்கொன்ட சிகிச்சை வாழ் நாள் முழுக்க நலமளிக்க வல்லதாகும். .



சகோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் உடல் நலம், நோய்கள் மீதான விழிப்புணர்வின் அவசியம், நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகள் என பல விச‌யங்களை எளிமையான முறையில் சிறப்பாக தெளிவுபடுத்தினார், அவையனைத்தையும் இங்கே பதிவிடல் சற்றே சிரமமாகையால், முக்கியமான சில குறிப்புகள் மட்டும் இங்கே பதிவிடப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு இங்கே...!

அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை - இயற்கையுடன் இணைந்த வாழ்வு

உணவு (மண்):
*பசித்தால் மட்டுமே உண்ணவேண்டும்
*உண்பதற்கு அரைமணி நேரம் முன்பும்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍பின்பும் நீர் அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் மட்டுமே சிறிதளவு அருந்தலாம்.
*உண்ணும் பொழுது கண்களை மூடி, இதழ்களை மூடி, இதழ் பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும்.
*தொலைகாட்சி பார்த்தல், புத்தகம் படித்தல், செல்போன் பேசுதல், கால்களை தொங்கவிடுதல் ஆகிய கவனச் சிதறல்கள் உண்ணும் நேரத்தில் கூடாது.
*முடிந்தவரை வீட்டு உணவு ( நம்மேல் அக்கரை கொன்டவர்கள் சமைத்த உணவை ) உட்கொள்ளவும்.

காற்று (வாயு):


*கொசுவர்த்தி கட்டாயம் உபயோகிக்கக்கூடாது. கொசு வலை பயன்படுத்திக் கொள்ளலாம்
*எந்நேரமும் நல்ல காற்று உள்ளே வருவதற்கும், அசுத்தக்காற்று வெளியேறுவதற்கும் ஏற்புடைய வச‌தியான காற்றோற்றம் நமது வாழ்விடத்தில் அமைந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

ஓய்வு தூக்கம் (ஆகாயம்):

*வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது.
*டீ, காபி குடிக்கக்கூடாது.
*தூக்கத்திற்கும், ஓய்விற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
*இரவில் பல்துலக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
*தலையில் உச்சிக்கும், சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாக உறக்கம் வரும்.

உழைப்பு ( நெருப்பு ):

*A/C (குளிர்சாதன வசதி) பயன்படுத்துதல் கூடாது.
*தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் பயிற்சி
அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நிண நீர் ஓட்டம் நன்றாக இருக்கும்.
*இரத்த ஓட்டத்திற்கு இருதயம் உதவும், ஆனால் நிண நீர் ஓட்டத்திற்கு உடல் உழைப்பு ஒன்றே உதவிடும்.
 
Thanks: Tamil Poonga
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இடுகையிட்டது Jesslya Jessly நேரம் 22:29 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

தலையிடிக்கு தலையணை மாற்றம் ஒரு தீர்வாகுமா?



பெண்களைப் பணிப்பெண்ணாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கோரி  மாபெரும் கையெழுத்து வேட்டை மூதூரில் நடைபெற்று வருகின்றது என்று அங்கிருந்து வரும் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மூதூர் பீஸ் ஹோம் நிறுவனத்தோடு இணைந்து மஜ்லிஸ் அஸ்ஸுறா உலமா சபை, கதீப்மார் நலன்புரிச் சங்கம் மற்றும் தடயம் சமூக அபிவிருத்தி மையம் ஆகியன ஒன்றிணைந்து பெண்கள் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாகச் செல்வதை தடைசெய்யுமாறு கோரி பத்தாயிரம் பொதுமக்களின் கையெழுத்துக்களைத் திரட்டி அரசாங்கத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்பத் தீர்மானித்துள்ளனர்.

(தகவல்: மூதூர் முறாசில்)
 
நண்பர்களே,
 
மேலேயுள்ள செய்தியை வெளிப்படையாகப் பார்த்தால் ஏதோ பெரிய சமூகத்தைக் காக்கும் நடவடிக்கைபோலத் தோன்றுகின்றதல்லவா? ஆனால் இதற்கு இன்னொரு முகமும் உண்டு நண்பர்களே. கூறுகின்றேன் பொறுமையாகக் கேளுங்கள்.

 

நமது சமூகத்திலுள்ள பெண்கள் யாரும் உல்லாச வாழ்வுக்கு ஆசைப்பட்டு கடல்கடப்பதில்லை. ஒரு தாய் அல்லது இளம்பெண் எப்போதுமே தனது கணவன் குழந்தைகள் என்றும்  தாய் தகப்பன் உற்றார் உறவினர் என்றும் பாசப்பிணைப்புக்குள்தான் வாழ நினைப்பாள். அதுதான் அவளுக்குரிய உயரிய பாதுகாப்பையும் வழங்கமுடியும். அத்தகைய மனோபாவம் கொண்டவள் மொழிபுரியாத கலாசாரம் புரியாத அந்நிய நாடொன்றுக்குப் போக நினைக்கின்றாள் என்றாள் அங்கனம் அவளை நிர்ப்பந்தம் புரியும் காரணிகள் யாவை?

 

வேலையில்லா திண்டாட்டம், சீதனம் சேர்க்கும் தேவை, கணவரின் பொறுப்பின்மை, நோய் முதலிய இயலாமை, சோம்பேறித்தனம் பிள்ளைகளின் பசி, வறுமை அயலவரின் ஏளனம், அலட்சியம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றைவிட காசு பணத்துக்கு சமூகம் தரும் அபரிமித மதிப்பு,செல்வாக்கு பணத்தால் எதையும் வாங்கலாம் மறைக்கலாம் என்று காட்டித்தருகின்ற சமூகப் பெரிய மனிதர்களின் அற்ப நடவடிக்கைகள்....

 

சுற்றியுள்ள சூழல் இத்தனை 'ஆரோக்கியமாக' இருக்கும்போது ஒரு பெண் என்ன முடிவுக்கு வர முடியும்?

 

நீங்கள் தாடிகளையும் தொப்பிகளையும் வைத்துக்கொண்டும் குர்தாக்களை அணிந்துகொண்டும் வெறும் ஹதீதுகள் மட்டும் கூறிக்கொண்டிருந்தால் இந்த சமூக அவலங்களை ஒழித்துவிட முடியுமா? இந்த நிலைமைகளை ஒழிக்க குறைந்தபட்சம் கட்டுப்படுததுவதற்காகவாவது எதுவித சமூகநலத் திட்டமும் இல்லாது வெறும் கையெழுத்து வேட்டை நடத்துவதால் என்ன மாற்றம்தான் வந்துவிடும்?

 

தலையிடிக்கு தலையணைகளை மாற்றுவதால் மட்டும் பயனில்லை!
 
- Jesslya Jessly
இடுகையிட்டது Jesslya Jessly நேரம் 11:01 3 comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

மனதைக்கவர...

மனதைக்கவர...

கேள்வி-பதில்

*மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மதங்களால் பல இன்னல்களுக்கு ஆளாகிறது. பஹாய் எனும் ஒரு மதம் 19ம் நூற்றாண்டில் ஈரான் நாட்டில் வடிவம் எடுத்து வந்தபோது, இஸ்லாமிய மதத்தினால் பெரும் துன்பத்திற்கு ஆளானது. அதன் ஸ்தாபகர் பஹாவுல்லா என்பவர். இப்படி ஒரே நோக்கத்திற்காக உருவாகும் மதங்களுக்குள் எதற்காக இந்தப் போட்டி? அந்தப் போட்டியை உருவாக்குபவர்கள், அந்த மதங்களுக்கு தலைமையேற்கும் மதகுருக்களே. அரசு அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்கும் அந்த மதகுருக்கள் ஏன் இந்த மோதலை உருவாக்குகிறார்கள்? சமரசம் செய்துகொண்டு செல்லலாமே? பழைய மதத்திலிருந்து புதிய மதத்திற்கு மாறிக் கொள்ளலாமே? தொழில் ஒன்றுதானே?மேலும், ஒரு மதத்தின் ஸ்தாபகர், தன் வாழ்நாளை செலவழித்து, இப்படியொரு கடினமான பணியைச் செய்ய வேண்டிய அவசியமென்ன? அவர்களுக்கு, இதைத் தாண்டி வேறு லட்சியங்களும் உண்டா?

அரேபிய வணிகரான முகமது, கதீஜாவின் மூலமாக கிடைத்த சொத்தை அனுபவிப்பதை விட்டுவிட்டு, பல்வேறு கடின முயற்சிகளின் மூலமாக ஒரு மதத்தை தோற்றுவிக்க வேண்டிய அவசியமென்ன? அவர் இறந்த பிறகு, ‍அதைப் பார்க்கப் போகிறாரா என்ன?

எனவே, மதங்கள் எதற்காக, எந்த அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன? அவற்றின் மூலங்கள் என்ன? அவற்றின் தொடர்புகள் என்ன? என்பது குறித்து எனக்கு விரிவான விளக்கம் தேவை.எனது கேள்வியானது சற்று குழப்பமாகவும் இருக்கலாம். ஆனாலும், கேள்வியை மீண்டும் மீண்டும் படித்து, புரிந்துகொண்டு பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன் தோழரே. தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் கேட்டுள்ளது மிகச் சிறந்த கேள்வி என எண்ணுகிறேன். மதங்களைப் பற்றிய இந்த உங்களின் கேள்விக்கான பதிலை கடவுள் நம்பிக்கைக்கும் மதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கூறுவதிலிருந்து தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் கடவுள் நம்பிக்கையும் மதமும் ஒன்றல்ல. கடவுள் நம்பிக்கை காலத்தால் முற்பட்டது மதம் பிற்பட்டது. இயற்கையின் மீதான அறியாமை, மரணத்தின் மீதான் பயம், பதைப்பு ஆகியவையே கடவுள் நம்பிக்கைக்கான தோற்றுவாய். மதம் என்பது அரசு உருவான பின்பு குறிப்பிட்ட ஒரு சமூகத் தேவை காரணமாகவோ, தேவையின்மையை அகற்றும் காரணமாகவோ அரசுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ தோற்றம் பெற்றது. இரண்டையும் தனித்தனியே பிரித்துப் பார்த்து புரிந்து கொள்வது மதங்களைப் பற்றிய புரிதலுக்கு இன்றியமையாதது.உலகின் எந்த மதமும் தனியொரு மனிதரால் உருவாக்கப்பட்டவை எனக் கொள்வது மாத்திரைக் குறைவானதாகவே இருக்கும். நீங்கள் கூறும் பஹாய் என்பது தனி மதமல்ல, இஸ்லாத்தின் ஒரு பிரிவு. இதற்கு எதிராய் இஸ்லாத்தின் சன்னி, ஷியா பிரிவு மதவாதிகள் கூறுவதை பொருட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இஸ்லாம் குறித்து பார்த்தால் இஸ்லாம் முகம்மதால் உருவாக்கப்பட்டதல்ல. அவர் நிறுவியது ஓர் அரசைத் தான். இஸ்லாம் முகம்மதின் மரணத்திற்குப் பிறகே உருவாக்கப்பட்டது.சமூகத்தில் உருவாகும் அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது உற்பத்தி முறையே. இதனை மார்க்சியம் அடிக்கட்டுமானம் என்கிறது. இந்த அடிக்கட்டுமானத்தில், உற்பத்தி சக்திகளுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்க்க ஏற்படுத்தப்படும் வடிவங்கள் எல்லாம் மேற்கட்டுமானம் ஆகிறது. அந்த வகையில் மதம் என்பது ஒரு மேற்கட்டுமான அமைப்பு. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மதத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அவை சமூகத்தில் நிலவிய ஏதாவது ஒரு சிக்கலுடன் தொடர்புடையதாகவே இருக்கும். எனவே, மதம் என்பது அதன் தோற்ற அடிப்படையில் சீர்திருத்த நிகழ்வாகவே இருக்கிறது.ஆகவே, மதம் என்றாலே அது புரட்சிகர எண்ணங்களை மழுங்கடிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது என புரிந்து கொள்வது தட்டையான புரிதல். எடுத்துக்காட்டாக ரோமனிய மன்னர்களும் திருச்சபைகளும் இணைந்து நிலப்பிரபுத்துவத்தின் கடைசிக் காலத்தில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த போது அதை எதிர்த்து புரோட்டஸ்டாண்ட் பிரிவு தோன்றியது. பார்ப்பனிய மதம் விவசாயத்துக்கு உற்றதுணையாக இருந்த மாடுகளை தின்று தீர்த்துக் கொண்டிருந்த போது அதற்கு எதிராக பௌத்தம் கொல்லாமையை பேசியது. இந்நிகழ்வுகளை மார்டின் லூதருடனும், கௌதம சித்தார்த்தனுடனும் மட்டுமே இணைத்துப் பார்க்க முடியுமா? அந்தக் காலகட்டத்தின் புரட்சிகர எண்ணங்களை அவர்கள் தங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.அதேநேரம் மதங்கள் தங்கள் இயல்பில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது? எந்த ஒரு கோட்பாடும் அது தோன்றிய காலகட்டத்துக்கு மட்டுமே புரட்சிகரமானதாக இருக்கும். சமூகத்தில் மாற்றம் நேரும் போது அதை பிரதிபலிக்கும் கோட்பாட்டிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அவ்வாறான மாற்றம் நேராத போது, அல்லது சமூகத்துக்கு தேவையற்ற காலத்தில் மாற்றங்கள் நேருகின்ற போது அந்தக் கோட்பாடு தேங்கிப் போகிறது. எந்த ஒரு அரசானாலும் அதன் தவிர்க்கவியலாத குணமாக இருப்பது, நிலவுகின்ற உற்பத்தி முறையில் எந்த மாற்றமும் நேர்ந்து விடாதவாறு பாதுகாப்பது. உற்பத்தி உறவுகளுள் முரண்பாடு தோன்றும் போது அது நிலவும் உற்பத்தி முறையை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக உற்பத்தி உறவுகளான மக்களை மழுங்கடிக்க அரசு செய்யும் பல்வேறு உத்திகளில் மதம் – தேக்கமடைந்து மாற்றங்களுக்கு முகம் கொடுக்காத மதம் – முதன்மையானதாக இருக்கிறது. இது தான் அரசுகளுக்கும் மதங்களுக்கும் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு. மதங்களை மக்களிடம் நிலை நிறுத்துவதற்கு தேவையான இன்றியமையாத கச்சாப் பொருள் தான் கடவுள் நம்பிக்கை.ஆக, மதம் என்பதை அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானத்திற்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே நம்மால் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மதங்கள் அந்தந்த காலகட்டத்தின் தேவையை ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதை தனி ஒருவரால் முன் திட்டமிட்டு தொடங்கியிருக்க முடியாது. இருப்பினும் மதங்களின் தோற்றத்தில் தனி மனிதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவும் முடியாது. சமூகத்தின் தேவையை முழுமையான அம்சமாக கொண்டால் தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட அம்சமாக கொள்ளலாம்.மதங்களின் தோற்றங்களின் போது தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்புக்கு வேறுசில நோக்கங்கள் இருந்திருக்கலாம். இஸ்லாம் எனும் மதத்தை எடுத்துக் கொண்டால் முகம்மதின் நோக்கம் மூன்று பிரிவாக இருந்த மக்களை ஒருங்கிணைத்து ஒரு அரசை தோன்றுவிக்க வேண்டும் என்பது மட்டுமே. அந்த அரசுக்கு வாரிசுகள் யார் எனும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேவையே இஸ்லாம் எனும் மதமாக உருத்திரண்டது. கிருஸ்தவத்தை எடுத்துக் கொண்டால் இயேசுவின் – இவர் உலகில் வாழ்ந்த ஒரு மனிதரா? இல்லையா என்பது வேறு விசயம் – நோக்கம் அடிமைகள் மீதான இரக்கமாக இருந்தாலும், பவுலின், அப்பலோஸ்தர்களின் நோக்கம் அடிமைகளின் எழுச்சியை மட்டுப்படுத்தி மன்னனுக்கு கீழ்ப்படிய வைப்பதே.எந்த விதத்தில் பார்த்தாலும் மதங்கள் என்பவை மக்களின் தேவைகளோடு தொடர்பு கொண்டவைகளாகவே இருந்திருக்கின்றன. நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ மக்களின் துயரங்களுக்கான வடிகால்களாக இருந்திருக்கின்றன. அதேநேரம் மக்களை துயரங்களைத் தீர்க்கும் அறிவியல் ரீதியான தீர்வு எது எனும் பார்வையை மதங்கள் கொண்டிருக்க முடியாது. இதனால் தான் மார்க்ஸ் மதம் மக்களுக்கு அபினியாக இருக்கிறது என்பதோடு இதயமற்ற உலகின் இதயமாகவும் இருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொன்னார். விலங்குகளுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மனிதனின் தொடக்க காலங்களில் கடவுள் நம்பிக்கையோ, மதவழிப்பாடோ இல்லாமல் இருந்ததைப் போல இனி வருங்காலத்திலும் மதமும் கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் போகும்.


*அண்மையில் இணையத்தில் உலாவியபோது தற்செயலாக ‘1969ல் அமெரிக்கர்கள் சந்திரனில் சென்று இறங்கியது பெரும் மோசடி’ என்று ஆதாரங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி விளக்குவதைப் பார்த்தேன். அவர்கள் நிலவில் சென்று இறங்கவேயில்லை என்றும் இறங்கியதாக காண்பிக்கப்படும் படங்கள்,சலனப்படங்கள் அனைத்தும் ஸ்டூடியோக்களிலே சித்தரிக்கப்பட்டவை என்றும் கூறுகின்றனர்.

அப்பலோ 11 இறக்கம் பற்றிய உத்தியோகபூர்வ ஒளிப்படங்களில் தரையிறங்கிய விண்கலத்தின் நிழலும் விண்வெளி வீரர்களின் நிழலும் வேறுவேறு கோணங்களில் விழுவது. சலனப்படத்தில் அமெரிக்கக்கொடி நிலவில் நடப்படும்போது காற்றிலசைவது போல அசைவது.. விண்கலத்தின் பாதங்களில் சந்திரத்தரையிறங்கலுக்கான சிறு தூசுகூடப்படியாமல் சுத்தமாக இருப்பது.. வானிலே நட்சத்திரங்கள் இல்லாமல் இருப்பது.. என்று ஏகத்துக்கு அடுக்கிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் கூறுவதைப் பார்த்தால் அதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லையே ?

ஒருவேளை அன்றைய சோவியத் யூனியனை மிஞ்சிக் காட்ட வேண்டும் என்ற அவசரத்தில் அவகாசம் போதாமல்தான் மோசடியாக சித்தரித்தார்களா? அப்படியானால் அது எத்தனை பெரிய ஏமாற்று? எது உண்மை என்று கூறுவீர்களா..


ஆம். இப்படி ஒரு செய்தி முன்பிருந்தே உலவிக் கொண்டுதான் இருக்கிறது. நிலவில் தரையிறங்கவே இல்லை என்பதற்கு என்னென்ன காரணங்கள் கூறுகிறார்களோ, அது எப்படி பொருத்தமாக இருக்கிறதோ அதேபோல் அமெரிக்கா அந்தக் கேள்விகளுக்கு கூறிய பதிலும் பொருத்தமாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டு, நிலவில் காற்றில்லை ஆனால் நட்ப்படும் அமெரிக்க கொடி அசைகிறதே எப்படி? இதற்கு அவர்களின் பதில், நடப்படும் போது உண்டாகும் பௌதிக அசைவு, அதை தடை செய்வதற்கான காற்று போன்ற ஊடகங்கள் இல்லாததால் நீண்ட நேரத்திற்கு இருக்கும் என்பது. இதுவும் அறிவியல் ரீதியில் சாத்தியம் தான்.

ஆனால் அன்றைய நேரத்தில், சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விண்வெளி வெற்றிகளைச் சாதிப்பதில் பெரும் போட்டியே நிலவியது. அதில் சோவியத் யூனியன் முன்னணியிலும் இருந்தது. நிலவில் மனிதனை தரையிறக்கும் திட்டமும் அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த விசயத்தில் சோவியத் யூனியனை முந்திக் காட்ட வேண்டும் எனும் முனைப்புடன் அமெரிக்கா செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வேளயில் தான் 1969ல் அமெரிக்க மனிதனை நிலவில் தரையிறங்க வைத்தது. இது அந்த நேரத்தில் புதிய அறிமுகமான தொலைக்காட்சிப் பெட்டியில் ஒலிபரப்பாகி உலகமெங்கிலுமிருந்து பார்த்தார்கள். அதனால் நேரில் பார்த்த ஒன்றை சந்தேகிக்கும் எண்ணம் அந்த நேரத்தில் பெரும்பாலும் ஏற்படவில்லை. ஆனால் சோவியத் யூனியனின் லூனார் லாண்டிங் சிஸ்டத்தை பிரிட்டன் உதவியுன் திருடித்தான் அமெரிக்கா இதை சாதித்தது என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. என்றாலும் அமெரிக்கா நிலவில் தரையிறக்கியது குறித்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தெளிவான முடிவு இல்லை.

பொதுவாக இது போன்ற விண்வெளி ஆய்வுகள் மக்களின் உயர்வுக்கு உதவும் விதத்தில் செய்யப்படுவது இல்லை என்பதால் அவைகளை புறக்கணித்து விடலாம். ஆனால் அவ்வாறான ஆய்வுகளுக்கு செலவிடும் பணம் மக்களின் வரிப்பணத்தின் மூலம் பெறப்படுகிறது என்பதால் உண்மைகள் வெளிப்பட்டே ஆக வேண்டும். எய்ட்ஸ் எனும் நோய் எப்படி உருவாகியது என்பதை ஆய்வு செய்த பல அறிவியலாளர்கள் மர்மமான விதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தொடர்ச்சியாக கொலை செய்தது யார் என்பது கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஆனால் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் அது போன்ற உயிரியை உருவாக்கும் முயற்சியில் இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தன்னை ஏகாதிபத்திய தலைமையாக முன்னிருத்திக் கொள்ள இது போன்ற பல மோசடிகளை அமெரிக்க செய்திருக்கலாம். வெளிக்கசிந்திருப்பவை கொஞ்சமே. நாளை அமெரிக்காவில் சோசலிச அரசு ஏற்பட்டால் இது போன்ற பல புதிர்களுக்கு விடை கிடைக்கலாம்.



*ஆதிகாலத்திலிருந்து உழைக்கும் மக்களின் இலக்கியங்களையும் கலைகளையும் (உ-ம் நாட்டார் பாடல்கள் தெருக்கூத்து) எடுத்துக்கொண்டால் கூட அவற்றில் அந்தந்த பிரதேசங்களுக்குரிய கடவுள் நம்பிக்கைகளும் (சிறுதெய்வ வழிபாடுகள் முதற்கொண்டு இன்றைய நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் வரையிலான) மூடநம்பிக்கைகளும் பின்னிப்பிணைந்ததாகத்தானே இருந்து வருகின்றன.


இவற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது..? இவற்றை அவர்களின் அந்தக் காலகட்டத்திற்குரிய நம்பிக்கைகளைத் தவிர்த்த இலக்கிய கலைவடிவங்களாக ஏற்றுக்கொள்வதா அல்லது முற்றிலும் நிராகரிப்பதா? இதனைச் சிறிது விளக்குங்கள்.



கலை இலக்கியம் யாவும் மக்களின் உழைப்பிலிருந்து கிளைத்தவைகளே. கலைகளை உருவாக்குவதும் அதைப் பாதுகாப்பதும் மக்களே. உழைக்கும் மக்களிடமிருந்து அன்னியப்படும் எந்தக் கலையும் வளரவோ நிலைக்கவோ செய்யாது. ஆனால் அவ்வாறான கலைகளில் மக்களின் மேம்பாட்டுக்கு எந்த விதத்திலும் உதவாத கடவுள், மத நம்பிக்கைகளும், மரபு சார்ந்த மூட நம்பிக்கைகளும் விரவிக் கிடக்கின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது?

அறிவியலும், உண்மைகளும், வரலாறும் உழைக்கும் மக்களின் வாழ்வில் நேரடியாக வெளிப்படுவதில்லை. மறைபொருளாக, வடிவங்களினூடாகத்தான் வெளிப்படும். மறுபக்கம், கடவுள் நம்பிக்கை என்பது வேறு, மதங்கள் என்பது வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உழைக்கும் மக்கள் தொடக்க காலத்தில் தங்கள் உழைப்பின் மீதான கடினங்களையும், தடைகளையும், அறியாமைகளையும், பயங்களையும் தான் கடவுளாக உருவகப் படுத்தினார்கள். இந்த உருவகங்களினூடான உண்மைகளை தலைமுறை தாண்டி அறிவிப்பதற்காகத் தான் கலை வடிவங்களை பயன்படுத்தினார்கள். மக்கள் பயன்படுத்திய அந்த வடிவங்களைத் திருடி மறுகட்டமைத்துத்தான் மதங்கள் உருவெடுத்தன. இப்போது மதங்களை அம்பலப்படுத்தி மக்களிடம் மத மயக்கத்தை நீக்கும் அவசியம் இருக்கிறது என்பதற்காக உழைக்கும் மக்களின் கலைகளை மறுதலிப்பது என்பது மக்களையே மறுதலிப்பதாகும்.

அதேநேரம், இன்றைய ஏகாதிபத்திய சூழலில் கலைகள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன? ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிரான, அரசுகளுக்கு எதிரான மக்களின் கோபத்தை மடைமாற்றி மறக்கடிப்பதற்காக பயன்படுகின்ன்றன என்பதையும் உள்வாங்க வேண்டும். எனவே, கலைகள் என்றால் அந்த நேர மக்களின் உண்மைகளின் மேல் மூடியாக இருக்கும் மத அலம்பல்களையும், மக்களை மழுங்கடிக்கும் ஏகாதிபத்திய நோக்கங்களையும் களைந்து தரிசிக்க வேண்டும். இதை உழைக்கும் மக்களை உணர்வூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே சாதிக்க முடியும். அப்போது தான் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானதாக இருக்கும்.



*

“மத நூல்களிலுள்ள அறிவியல் குறைபாடுகளைக் குறிப்பிட்டு அவற்றை ஒருபோதும் நான் இழிவு செய்யப்போவதில்லை. ஏனென்றால் அவை எதுவுமே அறிவியல் நூல்கள் கிடையாது” என்று கலிலியோ கலிலி கூறியதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?



கலிலியோவின் வாதப்படி, மதவாதிகளின் உளறல்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு சக்தியை விரயம் செய்துகொண்டிருக்கின்றோமே என்ற ஐயம் உங்களுக்கு ஒருபோதும் வரவில்லையா கூறுங்கள்?



மத நூல்கள், வேதங்கள் அறிவியல் பேசுபவை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். கலிலியோ இவ்வாறு குறிப்பிட்டிருந்தாரென்றால் அது சரியானது தான். ஆனால் ஒரு அறிவியலாளனின் பணிக்கும், சமூகத்தை மாற்றியமைக்க விரும்புபவனின் பணிக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. அறிவியல் உண்மைகளை கண்டறிந்து உலகிற்கு நிரூபித்துக் காட்டுவது அறிவியலாளனின் பணி. ஆனால் சமூகத்தை மாற்றியமைக்க அது மட்டும் போதாது. எதுவெல்லாம் மக்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறதோ அவைகளையெல்லாம் அம்பலப்படுத்தி உடைத்து எறிந்து மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டியது அவனுடைய கடமை. மதம் என்பது ஆளும் வர்க்கங்கள் மக்களை அறியாமையில் மூழ்கடித்து வைத்திருக்க கண்டுபிடித்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் உத்தி. இதில் உடைப்பை ஏற்படுத்துவதுவும் மக்கள் நலம் நாடுபவர்களின் பணி தான். இந்த அடிப்படையில் தான் கம்யூனிடுகள் மதங்களை கடவுளர்களை தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருகிறார்கள். இது சக்தியை விரையம் செய்வதாகாது. ஆனால், கடவுளர்களை அம்பலப்படுத்துவது மட்டுமே அவர்களின் பணியல்ல. இது முதன்மையானதும் அல்ல. பல்வேறு பணிகளில் இதுவும் ஒன்று எனும் அளவில் தான் அதன் முக்கியத்துவம். ஏனென்றால், சமூக அமைப்பில் ஏற்றத்தாழ்வுகள் நீடித்துக் கொண்டிருக்கும் வரை மதங்கள், கடவுட் கொள்கைகள் உயிருடன் இருக்கவே செய்யும்.




*கமல்ஹாசன்,பாரதி போன்றோரை பார்ப்பன எண்ணம் கொண்டவர்கள் என்று சித்தரிப்பது ஏன்? அவர்கள் முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் பிராமணனாக பிறந்ததால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியா?அவர்கள் சுயஜாதி அபிமானம் கொண்டவர்கள் என்று எவ்வாறு குற்றம் சாட்டுகிறீர்கள்?


கமல் பாரதி போன்றவர்களிடம் முற்போக்கு இருக்கிறதா என்பதை அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் பிம்பத்தின் மூலம் எடை போட முடியாது. அவர்களின் படைப்புகளை சீர்தூக்கிப் பாருங்கள். அவர்களின் முற்போக்கு முகமூடி இற்றுப் போயிருப்பது அப்போது புரியும். வே. மதிமாறன் எழுதிய ‘பாரதீய ஜனதா பார்ட்டி’ படித்திருக்கிறீர்களா? பார்ப்பன ஜாதியில் பிறந்ததால் மட்டுமே ஒருவன் பார்ப்பானாகி விடுவதில்லை. பார்ப்பனீயத்தை யாரெல்லாம் தூக்கிப் பிடித்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் பாப்பான்கள் தாம், அவர்கள் எந்த ஜாதி, மதத்தில் பிறந்திருந்தாலும். அப்துல் கலாம் கூட ஒரு பாப்பான் தான். பிறப்பின் அடிப்படையில் தகுதியை தீர்மானிப்பது பார்ப்பனியத்தின் ஒரு பகுதி. பாரதி, கமல் போன்றவர்களை ‘முற்போக்கு’ கேட்டகிரியில் வகைப்படுத்தியே ஆகவேண்டும் என நீங்கள் விரும்பினால் பார்ப்பனிய முற்போக்கு என்று குறித்துக் கொள்ளுங்கள், பொருத்தமாக இருக்கும்.




*ஆண்கள் விருத்தசேதனம் செய்து கொள்வது நன்மையே என்று சில மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். சிலர் தேவையற்ற செயல் என்று கண்டிக்கின்றனர். இதை பற்றிய தங்கள் கருத்து என்ன .?



விருத்த சேதனம் செய்வது நல்லதா அல்லதா என்று பொதுவாக கேட்டால் நல்லது என்றே கூறலாம். நகம் வெட்டுவது, அதில் அழுக்கு சேரும் என்பது போன்ற பயன்பாடு. ஆனால் அது ஒன்றும் பாலியல் ரீதியான நோய்களுக்கு நிவாரணியல்ல. விருத்த சேதனம் செய்வது நோய்களைத் தடுக்கவும் செய்யாது. அது மதச் சடங்காக இருப்பதனால் புனிதப்படுத்தப்பட்டு உயர்வாக கூறப்படுகிறது அவ்வளவு தான். அப்ரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மதச் சடங்காக செய்யப்பட்டு வந்தாலும் வட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் பழக்கம் தொடங்கியது. கிமு 2300லியே விருத்த சேதனப் பழக்கம் இருந்திருக்கிறது என்பதை எகிப்திலுள்ள குகை ஓவியங்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட சுகத்தை விட சமூக நலனே முதன்மையானது எனும் பொருளில் தொடங்கிய சடங்கானது இன்று மதச் சடங்காக எய்ட்ஸைக் கூட தடுக்கும் என்றெல்லாம் பொய்யாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் சாதாரண பாலியல் நோய்களைக் கூட இது தடுக்காது என்பதை மருத்துவர் வாலஸ்டைன் என்பவர் அறிவியல் ரீதியாக வெளிப்படுத்தினார்.


*நலமா? சிறிது காலமாக அலிசினா எனும் இறைமறுப்பாளர் ஒருவரின் இணையத்தளத்தை பார்த்து வருகின்றேன். அவர் உலகின் மதங்கள் அனைத்தையும் ஒரே தராசில் எடைபோடாமல் இஸ்லாத்தை சாத்தானின் மதம் என்கிறார். அதாவது இஸ்லாம் வெறுப்பின் மதம் என்றும் அது மட்டுமே தனது இருப்புக்காக ஏனைய மதங்களையும் அதனைப் பின்பற்றுவோரையும் மதம் மாற்ற நினைக்கின்றது. அது முடியாதபோது அழிக்கத் துடிக்கின்றது…என்பதற்கான ஆதாரங்களைத் தர்க்கரீதியாக முன்வைக்கின்றார்.அலிசினா தன்னை மதநம்பிக்கையற்றவர் என்று சொல்கின்றார். அதேவேளை ஏனைய மதங்களினால் மக்களுக்குள்ள ஆபத்தைவிட இஸ்லாமிய மதத்தினால் விளையும் ஆபத்துதான் பிரமாண்டமானது என்கின்றார். அதேவேளை அவர் கம்யுனிசத்தையும் மறுக்கின்றார். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள். முடிந்தால் அவரது தளத்தைப் பார்வையிடுங்கள்.

அலி சினாவின் சில கட்டுரைகளை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

அவர் முகம்மது குறித்து எழுதிய நூலை படித்துக் கொண்டிருகிறேன். ஈரான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவரான அவருடைய இஸ்லாமிய வெறுப்பு மேற்கத்திய கருத்தியலிலிருந்து தோன்றியிருக்கிறது. இஸ்லாம் நடப்பிலிருக்கும் ஏனைய மதங்களுடன் ஒப்பிட்டால் சிறப்பானதே,

ஆனால் அது ஏனைய மதங்களைப் போலவே எப்போதோ காலவதியாகிவிட்டது. அலி சினாவின் எழுத்துகளைப் பார்க்கும் போது அவர் நாத்திகர் எனும் நிலையில் கூட இல்லாமல் இஸ்லாமிய வெறுப்பு எனும் நிலையில், வரட்டுத்தனத்தில் நிலை கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

எடுத்துக்காட்டுகளாக, முகம்மது தம் வாழ்நாளின் பிற்பகுதியில் ஒருவித பாலியல் நோய்க்கு ஆட்பட்டிருந்தார், மரியா கிப்தியாவின் மகனுக்கு தந்தை யார்? போன்றவற்றில் அவரின் வாதங்களைக் குறிப்பிடலாம். ஆனால் இஸ்லாமிய வேத, உபனிடதங்களின் மூலை முடுக்குகளையெல்லாம் ஆய்ந்து தன் படைப்புகளை எழுதுகிறார் என்பதில் ஐயமொன்றுமில்லை.பொதுவாக நாத்திகம் என்பது முழுமையானதல்ல என்தை நான் அடிக்கடி குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறென். கடவுள் நம்பிக்கை, மத நிறுவனங்கள் எல்லாம் சுரண்டலின் வடிவங்கள். சுரண்டலைப் புரிந்து கொள்ளாமல், சுரண்டலை ஒழிப்பது பற்றி சிந்திக்காமல், அதற்கான வழிமுறைகளைக் காணாமல், அவற்றை நடைமுறைப்படுத்த முயலாமல் மதங்களை தங்களின் விருப்பத்தளத்திலிருந்து விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருப்பது குறைபாடுடையதே. நான் புரிந்து கொண்ட வகையில் அலிசினாவின் இஸ்லாமிய எதிர்ப்பு இந்த வகையானதாகவே இருக்கிறது. இதற்கு வெளியே சமூகப் பார்வை என்று அவருக்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

அவரின் கம்யூனிச எதிர்ப்பு குறித்து சில கட்டுரைகளில் ஒரு சில சொற்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். சர்வாதிகாரம் எனும் பார்வையில் தான் அதுவும் இருக்கிறது. தன்னுடைய கம்யூனிசத்திற்கு எதிரான நிலைப்பாடு குறித்து அவர் விளக்கினால், ஏதும் கட்டுரை எழுதினால் தான் அதை தெரிந்து கொள்ளவும், சரியா? என அலசவும் முடியும்.



*…இஸ்லாம் பெண்களின் மனித உரிமைகளை நசுக்குகின்றது என்று கூப்பாடு போடும் மேற்கத்திய சிந்தனையாளர்கள், முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவை மனித உரிமைகளோடு இணைக்கின்ற அளவுக்கு ஏறக்குறைய அதை ஒத்த வடிவிலான உடையையே கிறிஸ்தவ பெண் மதகுருமார்கள் அணிகின்றார்கள் என்ற உண்மையைக் கண்டு கொள்வதில்லை….என்று “ஜனநாயகம் : வெள்ளைக் கிறிஸ்தவர்களின் அரசியல் முறைமை” என்ற தனது நூலிலே எழுதிக்கொண்டு செல்கிறார் எங்கள் நாட்டிலுள்ள ஒரு ஆய்வாளர். இதுபற்றி உங்கள் கருத்துதான் என்ன?



நீங்கள் குறிப்பிட்ட அந்த நூலை நான் படித்திருக்கவில்லை, நீங்கள் எழுதியதைக் கொண்டு மட்டும் கூறுவதாக இருந்தால், அந்த ஆய்வாளர் கூறுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.


எதை எதிர்க்கிறார்களோ அதே வடிவிலான ஆடை அணிவதை மத அடிப்படையில் சொந்த மதத்தில் ஏற்கும் போது, பிற மதத்தில் செயல்பாட்டை விமர்சிக்க அடிப்படையற்றுப் போகிறது. குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் என்று கிருஸ்தவமும், எல்லாப் பெண்களுக்கும் என்று இஸ்லாமும் கூறுவதைத் தவிர வேறு வேறுபாடுகள் இரண்டுக்குமிடையே இல்லை. ஆண்களை விட பெண்கள் அதிக அளவு ஆடை அணிய வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. அதை மதக் கட்டுப்பாடாக திணிப்பதன் நோக்கம் என்ன? அது சமூக நோக்கில் சரியானதா? என்பது தான் அதை பரிசீலிக்கும் போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைகள்.


இந்த அடிப்படையில் நின்றுதான் புர்கா குறித்த என்னுடைய விமர்சனத்தை கற்பனைக் கோட்டை .. தொடரில் வைத்திருந்தேன். அந்த அடிப்படைகளை கவனத்தில் கொள்ளாமல் செய்யப்படும் விமர்சனங்களும், விளக்கங்களும் மாற்றுக் குறைவானவைகள் தாம்.




*கருத்து சுதந்திரம் என்பதின் வரையறை என்ன?ஆதாரம் இல்லாமல் கூட யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம் என்பதா?நடைமுறையில் விமர்சனத்திற்கு உள்ளாகிறவர்கள் எங்கள் மீது அவதூறு கூறுகிறார்கள் என்று கூறி கொண்டு வன்முறையில் இறங்கும் போது அவர்களை கண்டிக்கும் அனைவரும் தனது மனைவியின் நடத்தையையோ அல்லது தனது தாயின் நடத்தையையோ பற்றி ஒருவன் ஆதாரம் இல்லாமல் உளரும் போது அவனை அழைத்து விவாதிப்பதில்லையே?அவனை தாக்க தானே செய்கிறார்கள்?ஆக கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு தானே?இதை சற்று உதாரணங்களுடன் விளக்கவும்.



கருத்து சுதந்திரம் என்பது நினைத்ததை வெளிப்படுத்தும் உரிமை. அதன் எல்லை என்ன? தனி ஒரு மனிதனின் சுதந்திரம் என்பது சமூகத்தை மீறியதாக இருக்கக் கூடாது. சமூகத்தை மீறி யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது, கருத்துச் சுதந்திரம் உட்பட. ஆனால், அதை இன்னொரு மனிதனை பாதிப்பது என்பதாக சுருக்கிக் கொள்கிறார்கள். விமர்சனம் என்றாலே அது யாருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்யப்படுகிறதோ அவரை அவருடைய கருத்தை பாதிக்க வேண்டும். எதையும் பாதிக்காத விமர்சனம் என்று எதிவுமில்லை. உங்களுடைய பார்வை கோணலாக இருக்கிறது என்று கூறினால், கூறப்பட்டவரை அது பாதிக்கவில்லை என்றால் அங்கு பரிசீலனையே எழாது. ஆனால் விமர்சனங்களை எதிர் கொள்ளும் திராணியற்றவர்கள் விமர்சனங்களையே அவதூறு என்று அவதூறு செய்கிறார்கள். விமர்சனம் தனி மனிதன் மீதும் இருக்கலாம் பொதுவானதாகவும் இருக்கலாம் எதன் மீதும் இருக்கலாம். அதை பரிசீலித்தால் தான் அது அவதூறா? விமர்சனமா? என்பது விளங்கும். ஆனால் விமர்சனம் கூடாது எனக் கருதுபவர்கள், விமர்சனங்களை எதிர் கொள்ள முடியாதவர்கள் விமர்சனந்த்தையே அவதூறு என்பது தான் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் எடுத்துக்காட்டையே எடுத்துக் கொள்வோம். தனிப்பட்ட விசயங்களை யார் விமர்சனம் செய்ய முடியும்? தனிப்பட்ட விசயங்களை அந்த வட்டத்துக்கு உட்பட்டவர்கள் தாம் விமர்சனம் செய்ய முடியும். தாயையோ தாரத்தையோ மகனோ கணவனோ விமர்சனம் செய்தால் யாரும் கோபம் கொள்வதில்லையே பரிசீலனை தானே செய்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட வட்டத்துக்கு வெளியிலுள்ள யாரும் விமர்சனம் செய்தால் கோபம் வருகிறது. இதை பொதுவான மனிதர்களுக்கு நீட்ட முடியாது. ஒரு மனிதர் பொதுவானவராக, வழிகாட்டியாக கருதப்படுகிறார் என்றால் அவரை விமர்சிக்க எவருக்கும் உரிமையுண்டு. அந்த விமர்சனத்தை பரிசீலித்து அதை அவதூறு என்பதை விளக்க வேண்டும். தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கலாம். அதேநேரம் பொதுவான ஒருவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் கிடையாது. விமர்சனத்தை எதிர்கொள்ள மறுப்பவர்கள் தாம் பொதுவானதையும், தனிப்பட்டதையும் குழப்புவார்கள், விமர்சனத்தை தடுக்க வன்முறையைக் கையாள்வார்கள். ஒன்று விமர்சனமா அவதூறா என்பது விமர்சனத்தின் நோக்கம், ஆதாரம் உண்மைத்தன்மை ஆகியவற்றைப் பொருத்தது. இவைகளைப் பரிசீலிக்காமல் விமரசனங்களை முடக்க நினைத்தால் அவர்களை முடக்க வேண்டியது தான்.




*நண்பரே,சிலை என்பது பின்னாளில் வழிபடுவதற்கு (கடவுளாக) ஒன்றானதாக ஆகிவிடாதா?



சிலை வைப்பதினால் புதிதாக ஒரு கடவுளோ, மதமோ தோன்றி விடுமா?

சிலைகள் இல்லாவிட்டால் கடவுள் நம்பிக்கையோ, மதப்பிடிப்போ அற்றுப் போய் விடுமா?

கடவுளும் மதமும் ஒரு சிலை வைத்ததினால் தோன்றியது என்று ஏதேனும் ஒரு வரலாற்று நூலில் படித்திருக்கிறீர்களா?

அவைகளுக்கெல்லாம் சமூகப் பின்னணி வேண்டும். சமூகத் தேவைகளிலிருந்து தான் கடவுளோ மதமோ தோன்றியிருக்கிறதே ஒழிய, சிலையினாலோ, தனிப்பட்ட ஒரு செயலினாலோ தோன்றிவிடுவதில்லை. ஆண்டான் அடிமைக் காலகட்டத்தின் கொடூரங்களும், நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் வதைகளுமே கடவுளும் மதமும் தோன்றி வளர்வதற்கான தேவையைக் கொடுத்தன. என்று முதலாளித்துவம் தொடங்கியதோ அப்போதே கடவுளோ மதமோ தோன்றுவதற்கான சமூகத் தேவையை அது செரித்து விட்டது. இனி புதிதாக கடவுளோ, மதமோ தோன்றப் போவதில்லை. இப்போது இருக்கும் மதங்களும் கடவுளும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதற்காகவே தக்கவைக்கப் பட்டிருக்கின்றன. மதவாதிகளுக்கு என்றுமே வரலாற்று அறிவோ, சமூகப் புரிதலோ இருந்ததில்லை, இருக்கப் போவதில்லை. அதனால் தான் அவர்கள் ஒரு கற்சிலையால் புதிதாக போட்டிக்கு ஒரு மதம் தோன்றிவிடும் என்று பீதியூட்டுகிறார்கள். அவர்கள் கற்சிலை கூடாது என்கிறார்கள் என்றால் அதன் பொருள் அவர்களின் மதம் அதை தடுத்திருக்கிறது என்பதால் மட்டுமே, இன்னொரு கடவுளோ அதன் மூலம் மேலும் குழப்பங்களோ தோன்றிவிடக்கூடாதே எனும் அக்கரையினால் அல்ல. எப்போதுமே மீன்பிடிப்பவர்கள் முள்ளைக் காட்டி மீன் பிடிப்பதில்லை புழுவைக் காட்டித்தான் மீன் பிடிக்கிறார்கள். இன்னொரு கடவுள் தோன்றிவிடுவார் என்பது புழு. அந்தப் புழுவைக் காட்டி எதை பிடிக்க எண்ணுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அப்போது தான் நீங்கள் தூண்டிலில் மாட்டாமல் தப்பிக்க முடியும்.



*முதலாளித்துவத்தைக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததிராய் போன்ற அறிவுஜீவிகள் கம்யூனிசத்தை ஆதரிக்காதது ஏனோ?



கம்யூனிசம் என்பது சமூக அறிவியல். முதலாளித்துவம் என்பது சமூக அவலம். சமூக அவலத்தை தம் அறிவால் கண்டு அதை எதிர்பவர்கள் எவரும் கம்யூனிசத்தை ஏற்பார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது. அருந்ததிராய் போன்றவர்கள் அடிப்படையில் மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள். கம்யூனிசம் என்பது பாட்டாளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், இதில் மேட்டுக்குடி வர்க்கத்தினர் இயல்பாகவே ஒன்ற முடிவதில்லை. அதற்கு ஆழ்ந்த சிந்தனையும், பரிசீலனையும் தேவைப்படுகிறது. அருந்ததிராய் போன்றோர் அவர்கள் பிறந்து வளர்ந்த சூழல் கல்வி போன்றவற்றால் ஜனநாயக அரசியலமைப்பு என்பதைத் தாண்டி அவர்களின் பரிசீலனை செல்வதில்லை. ஆனால் முதலாளித்துவ உலகமும் அதன் சுரண்டல் தன்மையும் நேர்மையாய் சிந்திப்பவர்கள் அனைவரையும் பாதிக்கவே செய்யும். இதிலிருந்து தான் அவர்களின் முதலாளித்துவ எதிர்ப்பு தொடங்குகிறது. இதற்கு மாற்று என்ன எனும் சிந்தனை தோன்றினால் தான்; எதிர்ப்பு மட்டுமே முழுமையானதில்லை என்பதை உணர்ந்தால் தான் கம்யூனிசத்திற்கான பாதை விரியும். ஆனால் பெரும்பாலானவர்கள் முதலாளித்துவ எதிர்ப்பை தாண்டி அடுத்த கட்டத்திற்கு நராமல் அப்படியே தேங்கி விடுகிறார்கள். அதனால் தான் முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆகிவிட முடிவதில்லை.




*பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது நடைமுறையில் ஒரு கட்சி ஆட்சி முறையில்தான் சாத்தியமா?





ஆம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஒரு கட்சி ஆட்சி முறையில் தான் முழுமையாக சாத்தியப்படும். ஆனால் சர்வாதிகாரம் என்ற சொல்லை தீண்டத்தகாதது போலவும் பலகட்சி ஜனநாயகம் என்ற சொல்லை மேன்மையான ஜனநாயக வடிவமாகவும் நடப்பில் பொருள் கொண்டு அந்த அடிப்படையிலிருந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், ஒரு கட்சி ஆட்சி முறையையும் பார்க்கிறார்கள். இது தவறானது. முதலாளித்துவம் தந்த ஜனநாயகம் எனும் சொல்லின் பொருளே வர்க்க சர்வாதிகாரம் என்பது தான். நடப்பு உலகில் ஜனநாயகம் இருக்கிறது என்றால் அதன் பொருள், ஆளும் வர்க்கமான முதாளிகளுக்கு ஜனநாயகமாகவும் ஏனையவர்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கிறது என்பது தான். உலகில் 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு ஜனநாயகமாகவும் 90 நூற்றுமேனி இருக்கும் மக்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் ஒரு அரசு வடிவம் ஜனநாயகம் என்று போற்றப்படுகிறது. அதேநேரம் 90 நூற்றுமேனி இருக்கும் உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகமாகவும், 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் அரசு வடிவம் தூற்றப்படுகிறது.இதே விதம் தான் பலகட்சி ஆட்சிமுறையிலும் நடக்கிறது. ஒரு முதலாளித்துவ கட்சி செயல்படும் சுதந்திரத்துடன் பாட்டாளி வர்க்க கட்சி செயல்பட சுதந்திரம் உண்டா? அரசுக்கு எதிராக செயல்படும் கட்சியை தடை செய்கிறார்கள். என்றால் பலகட்சி ஆட்சிமுறை என்பதன் பொருள் தான் என்ன? முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொண்டு அதன் கீழ் இருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு, முதலாளித்துவ சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கட்சிகள் தீவிரவாத கட்சிகளாக அவதூறு செய்யப்படுகின்றன. சுவரொட்டி ஒட்டுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுவது தான் இங்கு நடைமுறையாக இருக்கிறது. அதேநேரம் சோவியத் ரஷ்யாவில் பல கட்சிகள் செயல்பட்டும் இருக்கின்றன. போல்ஷ்விக் மென்ஷ்விக் என்றுஇரண்டு பிரிவுகளாக கட்சிகள் செயல்பட்டிருக்கின்றன. முதலாளித்துவத்தை பிரநிதித்துவப்படுத்தும் கட்சிக்குத்தான் அனுமதி இல்லை.சுருக்கமாகப் பார்த்தால் இன்று ஜனநாயம் என்று கூறப்படுவது சாராம்சத்தில் சர்வாதிகாரமாக இருக்கிறது, சர்வாதிகாரம் என்று தூற்றப்படுவது சாராம்சத்தில் ஜனநாயகமாக இருக்கிறது என்பதே உண்மை. இன்னொருமுனையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது வெறும் அரசு செயல்படும் வடிவம் மட்டுமல்ல. இதுவரையிலான அரசுகள் சுரண்டல் அரசுகளாய் இருந்ததினால் அதற்கு இசைவாகவே மக்களை மாற்றியமைத்திருக்கின்றன. இன்று மக்கள் சுயநலமிகளாய் இருப்பதன் காரணம் இதுவே. இதை சீராக்கி மக்களை உயர்ந்த பண்பாட்டை நோக்கி அழைத்துச் செல்லும் பணியும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளித்துவம் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை பின்னோக்கி இழுக்கும். கலாச்சாரப் புரட்சி உள்ளிட்டு வர்க்க வேறுபாடுகளை கழித்துக்கட்டும் பெரும்பணிகளுக்கும் முதலாளித்துவத்தை அதன் எச்சங்கள் கூட எழாமல் முறியடிக்க வேண்டியதிருப்பதால் ஒருகட்சி ஆட்சிமுறை மிக அவசியமானது.



*ஒரு சிறுகதையையோ அல்லது கவிதை போன்ற ஆக்கங்களையோ நாம் படைக்கும்போது அவற்றிலே இயல்பாகவே நம்மைப் பாதிக்கும் முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றோம். அதனை சில பத்திரிகைகள் பிரச்சார நெடி என்று ஒதுக்குவதேன்? ஒரு ஆக்கத்தினை எதுவித சமூக அவலங்களையும் இல்லாமல் எழுதவேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்களா அல்லது அவ்வாறானவை யாரையும் சிந்திக்க வைக்குமளவுக்கு இருந்துவிடக்கூடாதது என்று விரும்புகின்றார்களா?



கலை, இலக்கியம் என்பவை ஒரு கருத்தை பிறருக்கு சொல்லும் வடிவம் தான். தன்னிடம் இருக்கும் கருத்தை பிறருக்கு கூறுவது, புரியவைப்பது எனும்போது அங்கு பிரச்சாரம் தவிர்க்க முடியாதது. இது எல்லா வகை மாதிரி இலக்கியங்களுக்கும் பொருந்தும். ஆனால் எல்லாவற்றையும் பிரச்சாரம் என்று நடைமுறையில் கூறுவதில்லை. என்றால் பிரச்சார நெடி என்று கூறப்படுபவைகள் எந்த அடிப்படையிலிருந்து கூறப்படுகின்றன?கலைக்கு, பொழுதுபோக்கிற்கு, மக்களுக்கு என்று நோக்கத்தைக் கொண்டு மூன்றாக பிரித்தாலும் இரண்டு அம்சங்கள் தான் அவற்றின் அடிப்படையாக இருக்கின்றன. மக்களுக்கானது, மக்களிடம் திணிக்கப்படுவது. பிரச்சார நெடி என்று முத்திரை குத்தப்படும் எழுத்துகளையெல்லாம் எடுத்துப் பார்த்தால் அவை மக்களுக்கான இலக்கியமாகவே இருக்கும். தெளிவாகச் சொன்னால் பிரச்சார நெடி என்று முத்திரை குத்துவது அரசியல் தானேயன்றி இலக்கிய விமர்சனம் அல்ல.எந்த ஒரு நேர்த்தியான யதார்த்தமான எழுத்தையும் அதன் மையக் கருவைப் பார்த்தால் அது குறிப்பிட்ட ஒரு நடைமுறையை, கலாச்சாரத்தை, புரிதலை வாசிப்பவனிடம் அறிமுகப்படுத்துவதாக, தூண்டுவதாக மட்டுமே இருக்கும். இது பிரச்சாரமாக வகைப்படுத்தப்படுவதில்லை. காரணம், அது நுகர்வுப்பண்பாட்டை, நடப்பு சமூகத்தை அப்படியே தக்க வைப்பதை நோக்கமாக கொண்டிருக்கும். இது யதார்த்தமாக இருப்பதால் பிரச்சாரம் என்று முத்திரை குத்தப்படுவதில்லை. அதுவே நடப்பிலிருக்கும் சுரண்டலை எதிர்கொண்டு சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டிருந்தால் அது பிராச்சாரமாக முத்திரை குத்தப்படுகிறது. மெய்யாகவே அது செழு நேர்த்தியுடன் வடிக்கப்பட்டிருந்தாலும் கூட அதாவது உள்ளடக்கத்தில் அனைத்துமே பிரச்சாரமாக இருந்தாலும் கூட அரசியல் பார்வையில் எதிர் தன்மை கொண்டிருப்பவைகள் பிரச்சாரம் என வகைப்படுத்தப்படுகிறது. அதேநேரம் கவனமாக அது வடிவம் குறித்த விமர்சனமாகவே முன்வைக்கப்படுகிறது. தெளிவாகச் சொன்னால் எதிர் அரசியலை உள்ளடக்கமாக கொண்டிருப்பவை -உள்ளடக்கத்தை விமர்சிப்பதாக கூறினால் அம்பலப்பட நேரும் என்பதால்- வடிவத்தில் பிரச்சாரம் என முத்திரை குத்தப்படுகிறது. பிரச்சாரம் என முத்திரை குத்தப்படும் அநேக இலக்கியங்கள் வடிவத்தில் யதார்த்த அழகியலோடும் உள்ளடக்கத்தில் செம்மையாகவும் இருப்பதை நீங்கள் காணலாம். ரஷ்ய, சீன நெடுங்கதைகளை படித்துப் பாருங்கள் மொழிபெயர்ப்பு நாவல்கள் என்பதையும் தாண்டி அதன் நடையும் கருவும் உங்களை ஈர்க்கும். மற்றப்படி நேர்மையற்ற விமர்சனங்களை புறந்தள்ளுங்கள்




*பொதுவுடமைக் கொள்கையைப் போற்றுபவர்கள் சுரண்டப்படும் மக்களுக்காகப் போராடினாலும் கூடஒருவகையில் வரட்டுத்தனமானவர்கள் என்கிறார் எனது உறவினர் ஒருவர். எப்போதோ ஏற்படுத்தப்படப்போகும் பொதுவுடமைச் சமூக அமைப்பு வரும் வரை இப்போதுள்ள வாழ்க்கையில் (யாருக்காகப் போராடுகிறீர்களோ அந்த மக்கள் கூட அனுபவித்துக் கொண்டிருக்கும்) எந்த ஒரு சிறந்த விடயத்தையும் நீங்களெல்லாம் முழுமையாக இரசித்துக் கொள்ள மாட்டீர்கள் என்கிறார் அவர்.

உதாரணமாக ஒரு இனிய குரலையுடைய பாடகரின் திறமையை சாதாரண ஒரு ஏழை ஏதாவது ஒரு நேரத்தில் தன் வாழ்க்கைச் சுமையை தற்காலிகமாக மறந்து இரசிப்பான். ஆனால் நீங்களோ குரல் இனிமையாக இருந்தாலும் அவர் பாடுவதெல்லாம் எதிர்ப்புரட்சிக் கருத்துக்களுள்ள பாடலைத்தானே என்பது போன்ற ஏதாவது ஒருவிடயத்தைக் கூறி விமர்சித்து விட்டு ஒதுங்கி விடுவீர்கள். ஒரு நடிகன் ஒரு திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் அதை சிலாகிக்காமல் சில வருடங்களுக்கு முன் அவர் வேறு ஒருவிதமான கருத்தை முன்னிறுத்தியவர்தானே என்று சொல்லிவிட்டு நழுவ விடுவீர்கள் அல்லது நழுவிவிடுவீர்கள்.




நல்ல ருசியான உணவைத் தந்தால் ஒருவேளைச் சோற்றுக்கு இல்லாத ஏழைகளுள்ள நாட்டில் இப்படி ஆடம்பரமாகச் சமைக்கத்தான் வேண்டுமா? என்பீர்கள். அதுவே சரியில்லாமலிருந்தால் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்ற அலட்சியமா? என்பீர்கள். அழகான பூந்தோட்டத்தை ரசிக்காமல் பணவிரயம் என்பீர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். இதற்குரிய உங்கள் பதில் என்ன?





இது போன்ற குற்றச்சாட்டுகள் ஒரு உத்தியாக கையாளப்படுபவைகள். இது போன்ற குற்றச்சாட்டுகள் எப்போதெல்லாம் எழுப்பப்படுகின்றன? வைக்கப்பட்ட விமர்சனத்தின் மீது அவர்களின் கருத்து என்ன? இந்த இரண்டு அடிப்படைகளிலிருந்து ‘அந்த வரட்டுத்தனத்தை’ நாம் மதிப்பிடலாம்.

முதலில், கலை என்பது மக்களுக்காகவேயன்றி வேறெதற்காகவும் அல்ல என்பது உணரப்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் கலை என்பது வணிகமாகவும், மக்களை அரசியலிலிருந்து விலக்கி வைக்கவும் அல்லது மக்களுக்கான அரசியலிலிருந்து அவர்களை திசை திருப்பவுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நல்ல திரைப்படம் அல்லது ஒரு நல்ல இசைப்பாட்டு என்பது என்ன ஒப்பீடுகளிலிருந்து நல்லவை என மதிப்பிடப்படுகிறது? பொழுது போக்கு அம்சத்திலிருந்தும், உழைப்பின் கடுமையிலிருந்து ஒருவித போதைத்தனமான மாற்றிலிருந்தும் தான் மதிப்பிடப்படுகிறது. எதையுமே இந்த முதலாளித்துவ உத்திகளிலிருந்து அணுகுவது தான் இயல்பானது யதார்த்தமானது என்று உலகம் திட்டமிட்டு பயிறுவிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் (உங்கள் உறவினர்) கூறுவதின் சாராம்சமான பொருள் இது தான்,

முதலாளிகளுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் இயல்பானது, மக்களுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் வரட்டுத்தனமானது. இது தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழில் வெளிவந்த அர்ஜுன், விஜயகாந்த் வகைப்பட்ட போலீஸ் சூரத்தனங்களைக் காட்டும் படங்கள் தொடங்கி ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட், ராம்போ வரை தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படுகின்றன. இப்படி தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படும் அதே நடப்பு காலத்தில் யதார்த்தத்தில் காவல்துறை மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருப்பதும், சொந்த நாட்டு மக்கள் எனும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் அவர்களைச் சிக்க வைப்பதும், சுட்டுக் கொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆக யதார்த்தத்தில் என்ன நடக்கிறதோ அதை பிரதிபலிக்காமல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உண்மையை மறைப்பதுதான் கலையாக இருக்கிறது. இதை மறுத்து, கலை எப்படி திட்டமிட்டு உண்மையை மறைத்து மலிவான ரசனையில் மக்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடமே திணிக்கிறது எனும் உண்மையை எடுத்துக் கூறினால் அது வரட்டுத்தனம் எனப்படுகிறது. ஆக, முதலாளித்துவத்திற்கு ஆதரவான மனோநிலையை உண்மையை மறைத்து வெளிப்படுத்தினால் அது ரசனை, இயல்பு. அதை விமர்சித்து உண்மையை பேசினால் அது வரட்டுத்தனம், இயல்புக்கு மாறானது. இது தான் வரட்டுத்தனம் என்று கூறுபவர்களின் பார்வையாக இருக்கிறது.

ஒரு கலை வடிவம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்றால், அந்த விமர்சனம் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா? தவறாகவா? என்று பார்ப்பது தான் சரியான பார்வையாக இருக்க முடியும். அந்த விமர்சனத்தை வரட்டுத்தனம் என்று கூறப்படும் இடங்களையெல்லாம் கூர்ந்து கவனித்தால், அங்கு செய்யப்பட்ட விமர்சனத்திற்கான பதிலோ அல்லது மாற்றுப் பார்வையோ வைக்கப்பட்டிருக்காது. தெளிவாகச் சொன்னால் எந்த இடத்தில் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லையோ அந்த இடங்களிலேயே வரட்டுத்தனம் என்பது முன்வைக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு விமர்சனத்தை வரட்டுத்தனம் என்றே கூறக்கூடாது என்பதல்ல. வைக்கப்படும் விமரசனம் வரட்டுத்தனமானது என்றால், இன்னின்ன விதங்களில் அது வரட்டுத்தனமாக இருக்கிறது என்று மீள்விமர்சனம் செய்யலாம். அதை யாரும் குறைகூற முடியாது. ஆனால் இங்கு வரட்டுத்தனம் என சுட்டப்படுவது மக்களின் விருப்பம் எனும் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளிலிருந்து கூறப்படுகிறது. வரட்டுத்தனம் என உங்கள் உறவினர் கூறுவதை அது எப்படி வரட்டுத்தனமாக இருக்கிறது என்பதை விளக்குமாறு கேளுங்கள். அப்போது உங்களுக்கு புரியும் அவர் வரட்டுத்தனம் என்று கூறுவது விமர்சனத்தை அல்ல, மாறாக விமர்சிப்பதையே வரட்டுத்தனம் என்கிறார் என்பது.

இன்னொன்றையும் கூறலாம். ஒரு திரைப்படத்தையோ, ஒரு கலை வடிவத்தையோ பார்க்ககூடாது, கேட்கக்கூடாது என்று யாரும் தடைபோட முடியாது. விமர்சனம் செய்வதன் பொருள் யாரும் அந்த கலை வடிவத்தை ரசிக்காதீர்கள் என்று தடை போடுவதல்ல. ஒரு தவறுக்கு எதிராக எது சரியானது என்று புரியவைப்பதற்கான ஒரு முயற்சி. பொதுவெளிக்கு வரும் ஒன்றை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் உண்டு. ஆனால் விமர்சிக்காமல் முத்திரை குத்தினால் அதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதே பொருள். அதேநேரம், கலை என்ற பெயரில் செய்யப்படும் நச்சுத்தனங்களை தடுத்தாக வேண்டும்.

அண்மையில் ’டேம் 999’ என்ற திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்தும் விமர்சனம் எழுந்தது. அதாவது, ஒரு கலை வடிவத்தை மக்கள் பார்க்கக் கூடாது என தடை செய்யலாமா? எனும் அடிப்படையில். கலை என்ற பெயரில் செய்யப்படும் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியுமா? படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது. கலையின் வடிவம் எனும் அடிப்படையில் இதை அனுமதிக்க வேண்டும் என யாரும் கோர முடியுமா? அந்த திரைப்படம் முல்லைப் பெரியாறுடனோ, கேரள தமிழ்நாட்டுடனோ தொடர்புடையதல்ல. முன்பு சீனாவிலுள்ள ஓர் அணை உடைந்த நிகழ்வை வைத்து எடுக்கப்பட்டது அதை ஏன் தடுக்க வேண்டும்? என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களிடம் உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நாகசாகி, ஹிரோஷிமா அணுக் கதிர்வீச்சின் விளைவுகளையும், புஹுஷிமா அணு உலை விபத்தினால் மக்கள் இறப்பதையும் மக்கள் பயங்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் கலையின் வடிவம் எனும் அடிப்படையில் ஏற்பார்களா? கூடங்குளத்தில் விபத்து மட்டும் பிரச்சனையல்ல. வெறுமனே பயங்காட்டி கருத்தை திணிப்பதைவிட அதிலிருக்கும் அரசியல், அடிமைத்தனம், மறுகாலனியாக்க சுரண்டல்கள், மின்சாரம் அதில் பொருட்டல்ல போன்றவை உள்ளிட்ட அனைத்தையும் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டுவதனூடாக அணிதிரட்டுவதே சரியானதும் சிறப்பானதுமாக இருக்கும். ஆனால் டேம் 999 திரைப்படம் நடந்த நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை பயங்காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. மட்டுமல்லாது அத்திரைப்படம் உண்மையின் அடிப்படையிலான பயங்காட்டலல்ல, அரசியல் பொய்யின், தொழில்நுட்ப பொய்யின் அடிப்படையிலான பயங்காட்டல். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கேரள அரசு இது போன்ற பொய்ப் பரப்புரையை குறுந்தட்டுகள் வாயிலாக செய்து கொண்டிருக்கிறது. இதுவும் தடுக்கப்பட வேண்டியதே. ஆனால் அதே கருத்தை கேரளாவுக்கு வெளியிலுள்ள மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் நரித்தனமாக எடுக்கப்பட்டிருப்பது தான் அந்த திரைப்படம். கலை என்ற பெயரில் அதை அனுமதிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

ஒரு வகையில் டேம் 999 திரைப்படமும், வெளிவந்த, வெளிவந்து கொண்டிருக்கும் தேசபக்தி திரைப்படங்களும் ஒரே அடிப்படையிலானவை தாம். ஆளும்வர்க்கங்களுக்கு ஆதரவான கருத்தை நேர்மையற்ற முறையில் பொழுது போக்கு, ரசனை என்று பின்வாயில் வழியாக திணிப்பவை தாம் என்றாலும் டேம் 999 உடனடி விளைவை எதிர்நோக்கி திரையிடப்படுவதால், விமர்சித்து விழிப்புணர்வை எட்டும் காலம் இல்லாததால் தடை செய்வது அவசியமாகிறது.

அடுத்து, ஒரு கலை வடிவத்தின் மீதான மக்கள் ரசனை எப்படி இருக்கிறது? அல்லது எப்படி இருக்க வேண்டும்? கலை என்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா? அழகியல் உணர்ச்சியா? இருவர், ஒரு பொருள் குறித்து தமக்குள் உரையாடிக் கொள்கிறார்கள் என்றால் எதிரிலிருப்பவர் என்ன பேசுகிறார் என்பது தான் இன்னொருவருக்கு முக்கியமேயன்றி அப்படி பேசும்போது என்ன உடையணிந்திருந்தார்? அவர் அமர்ந்திருந்த விதம் எப்படி இருந்தது? நளினமாக கைகளை அசைத்தாரா? என்பதெல்லாம் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லாதவைகள். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. ஒரு திரைப்படம் என்றால் நடித்தவர்களின் நடிப்புத்திறன் அலசப்படுகிறது, அமைக்கப்பட்ட இசையின் இசைவு தரப்படுத்தப்படுகிறது, பாடியவர்களின், பேசியவர்களின் ஒலியின் குழைவு இனிமையாக பொருத்தமாக இருக்கிறதா என்பது ஒப்புநோக்கப்படுகிறது, ஒளிப்பதிவின் தரமும், ஒளியின் பாங்கும் கணிக்கப்படுகிறது, காட்சியின் பின்னணி கவனிக்கப்படுகிறது, இயக்குனரின் நெறியாள்கையின் நேர்த்தி மதிப்பிடப்படுகிறது. ஆனால், மறந்தும் கூட அத்திரைப்படம் மக்களுக்கு என்ன கூற முனைகிறது என்பதை எடுத்துக் கொள்வதில்லை. இங்கு தான் அரசியல் இருக்கிறது. ஒரு உள்ளடக்கத்தின் புறத்தன்மைகளை மட்டுமே ரசிப்பதற்கு மக்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அகத்தன்மை குறித்து வாளாவிருக்குமாறு வழக்கப்படுத்தப்படுகிறார்கள். பார்வையாளனுக்கு புறத்தன்மை சில நாட்களில் மறந்து போகும் அகத்தன்மையோ உள்ளுக்குள் மறைந்திருக்கும். ஒரு கலை வடிவத்தில் ஒருவன் காணும் அகத்தன்மைகளே பிறிதொரு நேரத்தில் அவனுடைய விருப்பமாக வெளிப்படுகிறது.

இந்த இடத்தில் இன்னொன்றையும் பேசியாக வேண்டும். வரட்டுத்தனம் என்று கூறுபவர்கள் அதை மட்டுமா சொல்கிறார்கள், பிரச்சாரம் என்றும் சிலவற்றை மதிப்பிடுகிறார்கள். இதை நுணுக்கமாக பார்த்தால் கண்டு கொள்ளலாம். ஒரு இயக்குனர் மக்களுக்கு நல்ல விசயங்களை(அவரின் கோணத்தில்) கூற வேண்டும் என எண்ணி ஒரு படம் எடுத்தால் அதை பிரச்சரப் படமாக இருக்கிறது என்றும் கூறக் கேட்டிருக்கலாம். ஆக, விமர்சனத்தை வரட்டுத்தனம் என ஒதுக்குகிறார்கள், எதிர்மறையான படங்களை பிரச்சாரம் என ஒதுக்குகிறார்கள். என்றால் அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவது எதை? மக்களுக்கு எதிரான அரசியலை அகத்தன்மையாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு புறத்தன்மையின் ஈர்ப்புகளில் வெளிவருபவைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். கலை ரசனை என்ற பெயரில் இருக்கும் இந்த நயவஞ்சக அரசியலை மக்களுக்கு விளக்குவதும், விழிப்புணர்வூட்டுவதும் யாருடைய கடமை? எனவே, வரட்டுத்தனம் என்பன போன்ற முத்திரை குத்தல்களை மக்களைச் சிந்திக்கும் கம்யூனிஸ்டுகள் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

இந்த நயவஞ்சகமான அரசியல் கலைகளில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் ஊடாடி நிற்கிறது. அவற்றில் ஒன்று தான் பூ. அழகு என்பதை விடுத்து பூந்தோட்டத்தில், பெண்கள் பூச்சூடுவதில், பூக்களின் வேறு பயன்பாடுகளில் என்ன இருக்கிறது? மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன? பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதை யாரால் மறைக்க முடியும்? வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா? மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது?, மக்களை மடமையில் நீடிக்க வைப்பதைத் தவிர. அன்றாட வாழ்வில் மலர்களின் பயன்பாட்டின் பின்னே மறைந்திருக்கும் பொருளை அறியவிடாமல், மலர் என்றால் அழகு என திசைதிருப்பப் பட்டிருப்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?

மறுபக்கம், ஏகாதிபத்தியங்களின் நிர்ப்பந்தங்களால் அரசுகள் விவசாயத்திற்கு எந்த ஆதரவையும் வழங்குவதில்லை. விவசாயிகளிடமிருந்து உணவு தானிய விவசாயத்தை அப்புறப்படுத்தி அதை பெருநிறுவங்களிடம் ஒப்படைக்க, அரசு பணப்பயிரை ஊக்குவிக்கிறது. இந்த அடிப்படையில் தான் மலர் விவசாயமும் வருகிறது. ஆக, உணவு தானிய விளைச்சலை பெருநிறுவனங்களிடம் வாரிக்கொடுக்க வழிகாணும், மனித குலத்திற்கு எந்த பயனும் இல்லாத, மடமைகளிலும், ஆணாதிக்கத்திலும் உழன்று கிடக்க ஏதுவாக்கும் பூக்களின் பயன்பாட்டை விமர்சித்தால் அதை வரட்டுவாதம் என்று ஒதுக்குவதும்; இவைகளை எல்லாம் மறைத்து அழகு என்பதாக முன்னிருத்தினால் அதை இயல்பு என்றும் கூறப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?

”நல்ல உணவைத்தந்தால் ஆடம்பரம் என்பதும், சரியில்லாத உணவைத்தந்தால் மறுப்பதும்” என்பது புரிதலின்றி வைக்கப்படும் குற்றச்சாட்டு. உணவை தேவைக்காக உண்பதும், ருசிக்காக உண்பதும் இருவேறு வகைப்பட்டவை. ருசியை முன்வைத்து உணவை வீணாக்குவதும், லாபத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சத்துக்குறைவான உணவை வழங்குவதும் தான் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படும். கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்திருக்கும் நாட்டில் தங்கள் பணத்திமிரை காட்ட விருந்துகளாகவும் கேளிக்கையாகவும் வீணாக்கப்படும் உணவு குறித்து விமர்சனம் வைக்கப்படுமேயன்றி; மக்கள் பட்டினி கிடக்கும் நாடு என்பதால் தனியொரு மனிதன் தனக்கு விருப்பமான உணவு வகையை உண்பது விமர்சிக்கப்படாது. மாணவர் விடுதிகள், உணவுக்கூடங்களில் லாபநோக்கில் திட்டமிட்டு செய்யப்படும் பற்றாக்குறைகளை, அலட்சியம் செய்யப்படும் கலோரிகளின் அளவை முன்னிட்டு போராட்டம் நடத்தப்படுமேயன்றி, ருசியை மட்டும் முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எப்படி ஒப்பீடு செய்ய முடியும்?

பொதுவாக, மக்கள் ரசனையாக, விருப்பமாக இருப்பதெல்லாம் முதலாளித்துவ விழுமியங்களுக்கு உட்பட்டே அமைந்திருக்கும். அவர்களின் நலனுக்கு வெளியே எதையும் மக்கள் தங்களின் சொந்த விருப்பமாகவோ, நாகரீகமாவோ, முன்னேற்றம் என்ற பெயரிலோ கொண்டிருக்க முடியாது. சமூகம் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் முதலாளித்துவம் தங்களின் சுரண்டலை பெரும்பான்மை மக்களின் கவனத்திற்கு வரமலேயே செய்து கொண்டிருக்க முடிகிறது. இது தான் வரட்டுத்தனம் எனும் சொல்லின் பின்னே மறைந்துள்ள அரசியல்.



ஒவ்வொருவரின் சொல்லின் செயலின் பின்னேயும் அவரின் வர்க்கம் மறைந்திருக்கிறது என்பது ஆசானின் கூற்று













*கடாபியின் நிலை பற்றி உங்களது பார்வை என்ன?








தற்கொலை செய்து கொள்வது அல்லது கோரமாக கொலை செய்யப்படுவது இதுதான் உலகின் பல சர்வாதிகாரிகளுக்கு, கொடுங்கோலர்களுக்கு நடந்திருக்கிறது. கடாஃபி இதில் விலக்கானவர் இல்லை. ஆனால் அவரைக் கொன்றவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதில் பிரச்சனை இருக்கிறது. கடந்த நாற்பதாண்டுகளாக லிபியாவை சர்வாதிகாரமாக அடக்குமுறை ஆட்சி புரிந்ததற்காக அவர் கொல்லப்படவில்லை. தொடக்கத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை லிபியாவில் எடுத்த போதிலும் கடைசியில் ஏகதிபத்திய ஆதரவு நிலையெடுத்து சலுகைகளை வழங்கினார். ஆனாலும் அவை ஏகாதிபத்தியங்களுக்கு போதுமானதாக இல்லை. லிபியாவின் வளங்களை யார் கொள்ளையடிப்பது? கடாஃபி குடும்பமா? பன்னாட்டு நிறுவனங்களா? எனும் போட்டியில் பன்னாட்டு நிறுவனங்கள் வென்றிருக்கின்றன.











*பார்ப்பனியம் அல்லது பிராமணியம் பற்றி நீங்கள் உங்கள் பதில்களில் குறிப்பிட்ட வண்ணமுள்ளீர்கள். அந்தச் சொல்லுக்குரிய அர்த்தம் தவிர அதுபற்றி விரிவாகவோ முழுமையாகவோ எனக்குத் தெரியவில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். இதுபற்றி சுருக்கமாகவேனும் விளக்குவீர்களா?


அதுமட்டுமன்றி ஒருவர் எவ்வளவுதான் அறிவாளியாகவும் மக்களுக்கு பயன்தருபவராகவுமிருந்தாலும் பார்ப்பானியச் சிந்தனை உள்ளவர் என்ற காரணத்துக்காக அவரை நிராகரிப்பது சரியாக இருக்குமா?







என்பதும் பிராமணன் என்பதும் ஒரே பொருள் கொண்ட சொல்லாகவே வழமையில் கையாளப்படுகிறது. உடலின் வேறுபட்ட இடங்களிலிருந்து பிறந்ததாகவும், இழிபிறப்பாகவும் பகுத்து வைத்திருக்கும் மக்களில் தான் மட்டும் உயர்ந்தவன், ஏனைய அனைவரும் தமக்கு ஊழியம் செய்ய பிறப்பெடுத்தவர்கள் எனும் பொருளில் தங்களை பிராமணன் என அழைத்துக் கொள்கிறார்கள். இப்படியான சிந்தனை கொண்டவர்களின் அந்த சிந்தனைக்கு துணை செய்பவர்களின் பொதுப்பெயராக பாப்பான் என்பது இருக்கிறது.



இந்து என்பது சாரம்சத்தில் ஒரு மதமல்ல. அடக்குமுறைச் சட்டங்களின் தொகுப்பு. தன்னுடைய மேலாதிக்கத்திற்கான அந்த சட்டத் தொகுப்பைக் கொண்டு சிந்தனையாலும் செயலாலும் மக்களை வதைப்பதே பார்ப்பனியம்.


இது பிராமணன் என தம்மை பெருமையாக அழைத்துக் கொள்ளும் ஒரு கும்பலை மட்டும் குறிப்பதல்ல. ஆனால் அவர்களை சிறப்பாக குறிக்கிறது என்பது வேறு விசயம். அதேநேரம் அங்கு பிறந்திருந்தாலும், அந்த நச்சுச் சிந்தனை தவறு என்று தூக்கி எறிந்தவர்களை பாப்பானாக சுட்டப்படவேண்டிய அவசியமில்லை. அடிப்படயில் பிராமணன் என அழைப்பதே தவறானது.



ஏனென்றால் அந்தப் பெயர், அந்த பகுப்பை ஏற்றுக் கொண்டதான ஓர் ஒப்புதல் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது. எனவே நாங்கள் பிராமணன் எனும் சொல்லைப் பயன்படுத்துவதில்லை.



ஒருவர் அறிவாளியாக இருக்கிறாரா என்பதை விட மக்களுக்கு எந்த அளவுக்கு பயன்படக்கூடியவராக இருக்கிறார் என்பதே அவரை அளக்கும் அளவுகோலாக இருக்க வேண்டும். பார்பனியச் சிந்தனை கொண்ட யாரும் மக்களுக்கு பயன்படுபவராக, சமூக உயர்வைச் சிந்திப்பவராக இருக்க முடியாது. ஆனால் அப்படி இருப்பதாக தோற்றம் காட்டலாம்.



சிறுபான்மை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அப்துல் கலாமை நாங்கள் பார்ப்பனியவாதியாக அழைக்கிறோம். அவர் அறிவியலாளர் தான். கனவு காணுங்கள் என்று ஊரெங்கும் பேசி, இந்திய இளைஞர்களின் உயர்மாதிரியாக தூக்கிப் பிடிக்கப்படுபவர்தான். குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள மயிலுக்கு அடிபட்டபோது, அதற்கு மருத்துவம் செய்து அழைத்து வரும் வரையில் உண்ணமாட்டேன் என அடம்பிடித்த அப்துல் கலாம், தன்னுடைய காலத்தில் நடைபெற்ற குஜராத் படுகொலைகளைப் பற்றி இன்றுவரை மூச்சு விடவில்லை. எதைக் கொண்டு இவரை மதிப்பிடுவது?







*இன்றைய முதலாளித்துவ அரசும் சுரண்டல் சமூகமும் என்றாவது ஒருநாள் வீழ்ச்சியடையப்போவதும் அதன் பின்பு புதிய சமூக அமைப்பு ஒன்று மலரப்போவதும் உறுதி என்பதுதான் சோசலிசத்தை விரும்புபவரின் எதிர்பார்ப்பு. ஆனால் நாம் வெறுமனே இது நடக்கும் என்று பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பதால் துரிதமாக நடந்து விடப் போகின்றதா என்ன? அல்லது பேசாதிருப்பதால் தாமதிக்கத்தான் போகின்றதா…இந்த ரீதியில் சிந்தித்துப் பார்க்கும்போது ஏனோ சலிப்பு மேலிடுகின்றதே..?




“ஒரு நல்லவனுக்கும் யோக்கியமானவனுக்கும் கிடைக்கின்ற எல்லா மரியாதையும் அயோக்கியனுக்கும் கிடைத்து விடுகின்றதே!” என்று மகாநதியில் ஒரு சராசரித் தகப்பனாய், மனிதனாய் கமலின் ஆதங்கம்தான் எங்களுக்கும் ஏற்படுகின்றது இது ஏன்?







எந்த ஒன்றையும் நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் அதற்கான விளைவும் அடங்கியிருக்கும். சரியான ஒன்றை அது சரியானது தான் என ஒப்புக் கொள்வதற்கும், அதை ஏற்றுக் கொள்வதற்கும் இடையே பாரிய‌ வித்தியாசம் உண்டு. முதலாளித்துவ கோரங்களை உணரும் யாரும், அது சுரண்டலினால் மக்களை எந்த எல்லைக்கு தள்ளியிருக்கிறது என்பதை சிந்திக்கும் யாரும், இதை தீர்க்கும் வழி என்ன? என்பதை ஆலோசிப்பது தான் அடுத்த கட்டமாக இருக்கும். ஆனால் அதில் எந்தவிதமான பங்களிப்பையும் செய்ய முன்வராமல், அதாவது தன்னுடைய சொகுசுகளை எதன்பொருட்டும் இழக்க விரும்பாமல் இருக்கும் போது தான் சலிப்பும், ஆயாசமும் தோன்றுகின்றன.







பலவிதமான பொருட்களை பாவிப்பதும், உழைக்காமல் இருப்பதுமே மகிழ்ச்சி எனும் கசடுகளை கழித்து “மகிழ்ச்சி என்பது போராட்டம்” என்பதன் முழுமையான பொருளை உணரும் போது தான், சோசலிசம் என்பது திண்ணை நியாயமல்ல என்பது புரியும். உலகில் இதுவரையான இசங்கள் அனைத்தும் உலகை வியாக்கியானம் மட்டுமே செய்தன. ஆனால் தேவையோ உலகை தலைகீழாய் மாற்றியமைப்பது. இதுதான் கம்யூனிஸ்டுகளின் தலையாய பணி. பேசுவதோடும், எழுதுவதோடும் அவர்கள் முடங்கிவிடுவதில்லை.







தனக்கு துன்பம் நேரும் போது நொந்து கொள்வதும், தத்துவம் பேசுவதும் தான் மகாந‌தி கிருஷ்ணசாமிகளின் வேலை. அது ஏன் நேருகிறது? அதிலிருந்து மக்களை மீட்பது எப்படி? என்று செயல்படத் தொடங்கும் போது நொந்து கொள்ளும் அவசியம் நேராது. மாறாக, அதுவே வேலை செய்வதற்கான உற்சாகத்தைத் தரும்.











*முதலாளித்துவ முறையில் வளர்ந்த வலைதளங்களின் மூலம் பொதுவுடைமை சிந்தனையை வளர்க்கலாமா? வலைதள வளர்ச்சி முதலாளித்துவ முறை மூலம் பலம் பெற்றதுதானே ?







இந்த உலகம் முதலாளித்துவ உலகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவுடமை பேசுபவர்கள் முதலாளித்துவத்தின் விளைவுகளை பயன்படுத்தக்கூடாது என்றால், அவர்கள் உலகில் வாழவே கூடாது என்பதுதான் பொருளாக வரும். இன்றைய தொழில்நுட்பம் தொடங்கி, அறிவியல் கண்டுபிடிப்புகள், கருவிகள், வாய்ப்புகள் வரை அனைத்திலும் முதலாளித்துவத்தின் பங்களிப்பு இருக்கிறது. அதை தவிர்க்க முடியாது. மட்டுமல்லாது, அதை தவிர்க்க வேண்டுமென்பது தேவையுமல்ல.







புதிய சமூகம் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்திற்குள்ளிருந்து தான் கிளைத்து வரும் என்பதுதான் உண்மை . முதலாளித்துவமேகூட அதற்கு முன்பிருந்த சமூகத்தின் தோளில் ஏறி நின்று தான் இந்த வளர்ச்சிகளை சாதித்தது. எனவே முதலாளித்துவ விளைவுகளை பயன்படுத்தாமல்தான் பொதுவுடமை பேசவேண்டும் என்பது வறட்டுவாதம்.







*பங்குச்சந்தையும் ஒரு தொழில்தான் என்கிறார்கள். பங்குச்சந்தை ஓர் சூதாட்டம் என்கிறார்கள். பங்குச்சந்தையை எந்த வகையில் சேர்க்கிறீர்கள்?







பங்குச்சந்தை என்பது வர்த்தகமோ தொழிலோ அல்ல, அது அப்படி குறிப்பிடப்படும் போதும் சூதாட்டம் என்பதே சரி. முதலாளித்துவ சுரண்டலை தீவிரப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு வடிவம். மக்களிடமிருந்தே முதலீட்டை திரட்டி அதன் பலனை சொற்ப அளவில் முதலீடு வழங்கிய மக்களுக்கு வழங்கிவிட்டு மொத்தத்தையும் சுருட்டிக்கொள்ளும் ஒரு ஏற்பாடு. முதலீடு என்பதே உபரி உழைப்பின் குவிப்பு. இந்த முதலீட்டின் காரணமாகவே முதலாளிகள் உற்பத்தியின் பலனில் பெரும்பகுதியை தமதாக்கிக் கொள்கின்றனர். ஆனால் பகுதியளவிலான பங்கை தன்னிடம் வைத்திருக்கும் ஒரு முதலாளி பெரும்பகுதி பங்கை உதிரிகளாக வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு உரிய பங்கை பகிர்ந்தளிக்காமல் குறைந்த அளவிலான மதிப்பையே பகிர்ந்தளிக்கிறான். இதையும் கூட திருட்டுத்தனமாக ஏற்றியும் இறக்கியும் காண்பிப்பதற்கு அதன் விதிமுறைகளில் சந்துபொந்துகள் திட்டமிட்டு உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஒட்டுமொத்தமாக தங்களின் சேமிப்பை முதலீடுகளாக செய்யும் மக்களுக்கு சற்று லாபத்தை வழங்குவதாலும், இதற்கென்று தனிப்பட்ட உழைப்பு எதையும் செய்யவேண்டிய தேவையில்லாதிருப்பதாலும் மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. மொத்தமாக பார்த்தால் இது மக்களுக்கு இழப்பையே கொண்டுவருகிறது.















*ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சியில் திரைப்பட விமர்சகர் திரு மதன் அவர்கள் ஆவிகள் அல்லது பேய்கள் நான்கு வகைப்படும் என்றும் அவை அறிவியல் படி நிருபிக்கப்படுள்ளன என்றும் கூறுகிறார்.. சினிமாவில் காண்பிக்ககூடிய ஆவிகள் போன்று இருப்பது நடைமுறையில் இருப்பது சாத்தியம் என்கிறார்.அந்த சினிமாவை விட்டுத்தள்ளுங்கள். இந்த விஞ்ஞான நவீன உலகிலும் இது போன்ற நம்பிக்கைகளும் அறிவியற்ப்பூர்வமாக நிருபிக்கப்படுள்ளன என்ற வாதமும் எந்த அளவிற்கு உண்மை..?











பேய். பிசாசுகள் இருப்பது சாத்தியமில்லாதவை, அறிவியல் ரீதியாகவும் கூட. மனிதன் என்பது மூளை எனும் பொருளின் அனுபவத்தொகுப்பின் வழிகாட்டலின் ஊடாக உடலுறுப்புகளின் இயக்கங்களின் வழியே சாத்தியப்படும் ஒன்று. ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட குறைந்த காலத்தில் முடிந்து விடுபவனா மனிதன் என்பது தொடக்கத்திலிருந்தே மனிதனை காயப்படுத்தி வருகிறது. அதன் விளைவுகள் தான் கடவுள், மதம் முதலான பயங்காட்டல்களும் பேய,பிசாசு முதலான பயங்களும்.







ஒரு மனிதன் இறந்துவிட்டானென்றால், அவன் மூளை மீள முடியாமல் செயலிழந்து விடுகிறது. உடலுறுப்புகளோ புதைப்பதன் மூலமோ எரிப்பதன் மூலமோ வேறு வழிகளின் மூலமோ சீர்குலைந்து ஆற்றல் மாற்றம் நடைபெற்று விடுகிறது. இதன்பிறகு இவைகள் ஒன்று கூடி செயல்படுவதற்கு எந்த வடிவிலும் சாத்தியமில்லை.







*இந்திய விடுதலைப்போரில் முஸ்லிம்களின் நோக்கம் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கபட்டதா?இல்லை சுதந்திரம் ஒன்றே குறிக்கோள் என்று துவங்கியதா?







மதவாதிகள் அப்படித்தான் விளக்கமளிப்பார்கள். முடிந்தால் சிரியுங்கள். அவ்வளவுதான்.



இந்திய விடுதலைப்போரில் முஸ்லீம்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவே செய்தது. இது குறித்து அனேக நூல்கள் கிடைக்கின்றன. நானும் ஓரிரு நூல்களை படித்திருக்கிறேன்.



விடுதலைப்போரில் பங்களிப்புச் செய்த முஸ்லீம்களிடம் விடுதலையே முதன்மையானதாக இருந்தது. ஆனால் ஜின்னா தலிமையிலான முஸ்லீம் லீக் பிரிவினையை நோக்கமாக கொண்டிருந்தது. ஆனாலும் பிரிவினைக் கோரிக்கை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதல்ல. இன்றைய ஆர்.எஸ்.எஸ் ன் தொடக்கமான சித்பவன பார்ப்பனர்களின் கோரிக்கையாகவே பிரிவினை இருந்தது. காங்கிரஸின் பாராமுகத்தால் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லீம் லீக், முதலில் சமஸ்டி கோரிக்கையைத்தான் வைத்தது. அது நிராகரிக்கப்பட்டதால் தான் பாகிஸ்தான் கோரிக்கையை முக்கியமான நிபந்தனையாக ஜின்னா முன்மொழிந்தார்.







*இந்தியா போன்ற பல்தேசிய நாடுகளில் வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்கு மொழி தடைபோல தோற்றமளிக்கிறது. என்றாலும், பாரிய அளவில் தடையாக இருப்பதில்லை. ஒற்றைத் தேசிய நாடுகளையும் பல்தேசிய நாடுகளையும் ஒப்பிட்டு நாடு முழுவதும் ஒத்த கருத்தை உருவாக்குவதில் ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக் காட்டி இதை முன்வைக்கிறார்கள். ஆனால் தேவையின் அழுத்தம் இருந்தால் எந்த மொழியையும் மனிதன் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக வடகிழக்கு இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் பரவலில் பெரும் பங்களிப்பை செய்திருப்பது ஆந்திரத்தின் மக்கள் யுத்தக் குழுவினர் தான்.







நிதிமூலதனங்களின் சுரண்டல் தன்மை சாரம்சத்தில் எல்லா இடங்களிலும் பொதுவாக இருப்பதால் மொழி உள்ளிட்ட வேறுபாடுகள் பெரும் பொருட்டல்ல. வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்காக போராடுபவர்கள் யதார்த்தத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவற்றில் மொழியும் குறிப்பிடத்தக்க ஒன்று, அவ்வளவு தான்.







அனைத்துமக்களும் ஒரே மொழியைப் பயன்படுத்துவது சாத்தியமும் அல்ல, சரியானதும் அல்ல. கல்வி உள்ளிட்டு அனைத்தும் அவரவர் தாய் மொழியிலேயே இருப்பதுதான் மக்களின் வளர்ச்சிக்கு உகந்தது. ஒரு பல்தேசிய நாட்டில் சரியான வளற்சியற்ற மொழியை ஏனைய மொழிகளின் உயரத்திற்கு வளர்த்தெடுப்பது ஒரு சோசலிச அரசின் கடமைகளில் உள்ளதாகும்.







சிறுபான்மை மதப் பிரிவுகளுக்கு நீங்கள் குறிப்பிடுவது போல் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. சீக்கியர்களுக்கு குறுவாள் வைத்திருக்கும் அனுமதி போன்று மதச் சடங்குகளுக்கு இசைவாக அந்த சலுகைகள் இருக்கும். அதாவது இந்திய குற்றவியல், குடும்பவியல் சட்டங்கள் குறிப்பிட்ட மதப்பிரிவினரின் மரபுகளுக்கு எதிராக இருக்கும் போது அதை ஒரு சலுகையாக அந்த மதத்தினருக்கு அளித்திருக்கிறார்கள். ஆனால் இது பொருளியல் நோக்கில் இருக்க முடியாது. வருமானவரிச் சலுகைகள் என்று இந்து மதத்தினருக்கு இருப்பதாக தெரியவில்லை. அதேநேரம் இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருப்பதால்இ நீதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் பார்ப்பன மயமாக இருப்பதால் அலுவலுக்கு அப்பாற்பட்டு பல வாய்ப்புகளை அவர்கள் பெற்று வருகிறார்கள்.







ஆனால், வருமான வரி உள்ளிட்ட பொருளாதார ரீதியான பல சலுகைகள் மதம் கடந்து முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் இந்திய அரசு முதலாளிகளுக்கு நிதிநிலை அறிக்கைகளில் அறிவித்துக் கொடுத்த சலுகைகள் மட்டுமே ஐந்து லட்சம் கோடிக்கு மேல். வெளிப்படையாக அறிவிக்காமல் கொடுக்கப்படுவதை கணக்கிடவே முடியாது. முக்கியமாக மக்கள் கவனிக்க வேண்டியதும் போராட வேண்டியதும் இதற்கு எதிராகத்தான். மாறாக மக்களின் கவனம் பிசாத்து மதச் சலுகைகளில் குவிக்கப்படுகிறது. இதுவும் ஒருவகையில் பொருளாதார சலுகைகள் வழங்கப்படுவதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் உத்தி தான்.











*ரிச்சர்ட் டாகின்ஸ், கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ், சாம் ஹாரிசன், டேனியல் தந்நெட் போன்ற நாத்திக அறிவியல் அறிஞர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?நீங்கள் பொதுவுடைமையை நிறுவ மதங்களை எதிர்க்கிறீர்களா இல்லை அதன் போலித் தன்மையை எதிர்க்கிறீர்களா ?







பொதுவாகவே அறிவியல் அறிஞர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாகவே இருந்திருக்கின்றனர். அதேநேரம் அவர்களிடம் வர்க்கக் கண்ணோட்டம் இருப்பது அரிது. அவர்களின் அறிவியல் தெளிவு கடவுள் கற்பிதமாகத்தான் இருக்க முடியும் எனும் தெளிவை அவர்களுள் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவர்களுக்கு சமூகம் குறித்த தேடல் குறைவாக இருப்பதால் அவர்களின் கடவுள் மறுப்பு முழுமையடையாமல் இருக்கும்.



சமூகப் பார்வையற்ற, வர்க்கக் கண்ணோட்டமில்லாத கடவுள் மறுப்பு என்பது முழுமையான பலனை தருவதில்லை. கடவுள் மறுப்பு ஒரு பகுதி மட்டுமே.



பொதுவுடைமையை நிறுவ மதங்களை எதிர்க்க வேண்டியதில்லை. கடவுள் மதம் என்பதெல்லாம் காயத்தின் மீது காய்ந்திருக்கும் பொருக்கைப் போன்றவை. சமூகத்தில் கடவுளின் தேவை தீர்ந்ததும் தானாகவே உதிர்ந்துவிடும். எனவே மதங்களை எதிர்ப்பது பொதுவுடைமையை நிறுவுவதற்கான முன்நிபந்தனையல்ல. ஆனால் அனைத்துவித அடக்குமுறைகளுக்கும் எதிரான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது கட்டாயத் தேவை எனும் அடிப்படையில் மதங்களுக்கு எதிராக செயல்படவேண்டியதும் அவசியமானது தான்.


*நண்பரே, சௌதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் குறித்து உங்கள் கருத்து என்ன?


சௌதியில் ஒரு குழந்தையை கொன்ற குற்றத்திற்காக ரிஸானா எனும் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் இங்குள்ள ஊடகங்களும் அறிவுத் துறையினரும் காட்டும் அதீத கவனம் தேவையற்றது என்பதே என் கருத்து. ஒரு நாடு விதிக்கும் மரண தண்டனைகள் அனைத்துமே சரியாகவும் நேர்மையாகவும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. சிலவோ, பலவோ அந்தந்த நேர மக்களின் உணர்வுகளுக்கும், ஆளும் வர்க்கங்களின் நலனுக்கும் உகந்தவாறே இருக்கும். எடுத்துக்காட்டாக இந்தியாவில் அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் கூறலாம். நேரடியாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மரணதண்டனை விதிக்கிறோம் என்று போகிறது தீர்ப்பு. இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? இதை விடுத்து சிறுமிக்கு மரண தண்டனை விதிப்பது கொடூரம், ரிஸானா கொலை செய்யவே இல்லை என்பன போன்ற வாதங்களுடன் இந்த பிரச்சனையை விவாதிப்பது சரியானதாக இருக்காது. ஆனால் இதில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சம் சௌதிக்கு செல்லும் பணிப் பெண்களின் பணிச் சூழல் இது போன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறதா என்பது தான். மெய்யாகவே சௌதியில் வீடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்கள் மிகக் கொடுமையாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ரிஸானா விவகாரம் சௌதியில் புதிதல்ல. இது போன்ற ஏராளமான நிகழ்வுகள் பணிப்பெண்களை தொடர்புபடுத்தி அங்கு நிகழ்ந்துள்ளன. விவாதிக்க வேண்டியதும், களைய்ப்பட வேண்டியதும் அந்த அடிப்படையைத் தான்.



நன்றி:



(பதில்கள்: செங்கொடி)




























































































































































































































































































































































































Here you're

  • சிறுகதை:
  • Home

சுதந்திரக்களிப்பு!

சுதந்திரக்களிப்பு!

Followers

Blog Archive

  • ►  2019 (1)
    • ►  07/21 - 07/28 (1)
  • ►  2018 (1)
    • ►  02/04 - 02/11 (1)
  • ►  2017 (1)
    • ►  06/18 - 06/25 (1)
  • ►  2016 (6)
    • ►  12/04 - 12/11 (1)
    • ►  11/20 - 11/27 (1)
    • ►  05/29 - 06/05 (1)
    • ►  03/20 - 03/27 (1)
    • ►  02/21 - 02/28 (1)
    • ►  01/31 - 02/07 (1)
  • ►  2015 (19)
    • ►  11/08 - 11/15 (1)
    • ►  10/11 - 10/18 (3)
    • ►  10/04 - 10/11 (2)
    • ►  09/13 - 09/20 (1)
    • ►  08/09 - 08/16 (2)
    • ►  08/02 - 08/09 (1)
    • ►  07/19 - 07/26 (1)
    • ►  07/12 - 07/19 (1)
    • ►  06/14 - 06/21 (1)
    • ►  05/24 - 05/31 (2)
    • ►  04/12 - 04/19 (1)
    • ►  04/05 - 04/12 (1)
    • ►  02/01 - 02/08 (1)
    • ►  01/18 - 01/25 (1)
  • ►  2014 (32)
    • ►  09/28 - 10/05 (1)
    • ►  09/21 - 09/28 (1)
    • ►  08/31 - 09/07 (1)
    • ►  08/17 - 08/24 (2)
    • ►  08/10 - 08/17 (1)
    • ►  07/20 - 07/27 (3)
    • ►  07/13 - 07/20 (1)
    • ►  07/06 - 07/13 (1)
    • ►  06/29 - 07/06 (1)
    • ►  06/08 - 06/15 (2)
    • ►  06/01 - 06/08 (1)
    • ►  05/11 - 05/18 (1)
    • ►  04/20 - 04/27 (1)
    • ►  04/13 - 04/20 (2)
    • ►  04/06 - 04/13 (2)
    • ►  03/23 - 03/30 (1)
    • ►  03/16 - 03/23 (1)
    • ►  03/09 - 03/16 (2)
    • ►  02/23 - 03/02 (2)
    • ►  02/16 - 02/23 (4)
    • ►  02/09 - 02/16 (1)
  • ▼  2013 (114)
    • ►  12/29 - 01/05 (2)
    • ►  12/22 - 12/29 (3)
    • ►  12/15 - 12/22 (5)
    • ►  12/01 - 12/08 (1)
    • ►  11/24 - 12/01 (1)
    • ►  11/10 - 11/17 (1)
    • ►  11/03 - 11/10 (1)
    • ►  10/27 - 11/03 (3)
    • ►  10/20 - 10/27 (4)
    • ►  10/13 - 10/20 (1)
    • ►  09/29 - 10/06 (1)
    • ►  09/22 - 09/29 (1)
    • ►  09/08 - 09/15 (2)
    • ►  07/28 - 08/04 (4)
    • ►  07/21 - 07/28 (5)
    • ►  07/14 - 07/21 (2)
    • ►  07/07 - 07/14 (1)
    • ►  06/30 - 07/07 (6)
    • ►  06/23 - 06/30 (1)
    • ►  06/16 - 06/23 (1)
    • ►  06/09 - 06/16 (4)
    • ►  06/02 - 06/09 (2)
    • ►  05/26 - 06/02 (2)
    • ►  05/12 - 05/19 (2)
    • ►  05/05 - 05/12 (1)
    • ►  04/28 - 05/05 (1)
    • ►  04/21 - 04/28 (2)
    • ►  04/14 - 04/21 (5)
    • ►  04/07 - 04/14 (3)
    • ►  03/31 - 04/07 (9)
    • ►  03/24 - 03/31 (1)
    • ►  03/17 - 03/24 (6)
    • ►  03/10 - 03/17 (1)
    • ►  03/03 - 03/10 (5)
    • ►  02/24 - 03/03 (2)
    • ►  02/17 - 02/24 (4)
    • ►  02/10 - 02/17 (5)
    • ►  02/03 - 02/10 (4)
    • ►  01/27 - 02/03 (4)
    • ▼  01/20 - 01/27 (2)
      • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
      • தலையிடிக்கு தலையணை மாற்றம் ஒரு தீர்வாகுமா?
    • ►  01/13 - 01/20 (2)
    • ►  01/06 - 01/13 (1)
  • ►  2012 (107)
    • ►  12/30 - 01/06 (1)
    • ►  12/23 - 12/30 (1)
    • ►  12/16 - 12/23 (2)
    • ►  12/02 - 12/09 (1)
    • ►  11/25 - 12/02 (2)
    • ►  11/18 - 11/25 (2)
    • ►  11/11 - 11/18 (1)
    • ►  11/04 - 11/11 (2)
    • ►  10/28 - 11/04 (2)
    • ►  10/21 - 10/28 (3)
    • ►  10/14 - 10/21 (1)
    • ►  09/09 - 09/16 (6)
    • ►  09/02 - 09/09 (6)
    • ►  08/26 - 09/02 (3)
    • ►  08/19 - 08/26 (2)
    • ►  08/12 - 08/19 (2)
    • ►  07/29 - 08/05 (3)
    • ►  07/22 - 07/29 (2)
    • ►  07/15 - 07/22 (2)
    • ►  07/08 - 07/15 (1)
    • ►  06/24 - 07/01 (1)
    • ►  06/17 - 06/24 (3)
    • ►  06/03 - 06/10 (2)
    • ►  05/27 - 06/03 (4)
    • ►  05/20 - 05/27 (3)
    • ►  05/13 - 05/20 (1)
    • ►  05/06 - 05/13 (4)
    • ►  04/29 - 05/06 (4)
    • ►  04/22 - 04/29 (7)
    • ►  04/15 - 04/22 (3)
    • ►  04/08 - 04/15 (9)
    • ►  04/01 - 04/08 (5)
    • ►  03/25 - 04/01 (4)
    • ►  03/18 - 03/25 (1)
    • ►  03/04 - 03/11 (1)
    • ►  02/19 - 02/26 (1)
    • ►  02/12 - 02/19 (1)
    • ►  01/29 - 02/05 (1)
    • ►  01/22 - 01/29 (2)
    • ►  01/15 - 01/22 (1)
    • ►  01/08 - 01/15 (2)
    • ►  01/01 - 01/08 (2)
  • ►  2011 (42)
    • ►  12/25 - 01/01 (3)
    • ►  12/18 - 12/25 (4)
    • ►  12/11 - 12/18 (5)
    • ►  12/04 - 12/11 (2)
    • ►  11/20 - 11/27 (1)
    • ►  11/13 - 11/20 (1)
    • ►  11/06 - 11/13 (1)
    • ►  10/30 - 11/06 (2)
    • ►  10/23 - 10/30 (3)
    • ►  10/16 - 10/23 (1)
    • ►  10/02 - 10/09 (2)
    • ►  09/25 - 10/02 (1)
    • ►  09/18 - 09/25 (1)
    • ►  09/04 - 09/11 (1)
    • ►  08/28 - 09/04 (4)
    • ►  08/21 - 08/28 (3)
    • ►  08/14 - 08/21 (5)
    • ►  08/07 - 08/14 (2)
Watermark theme. Powered by Blogger.