இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் நிகழ்ந்த / நிகழ்ந்து வரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் சில:
(1)
இந்தப் பெண்ணின் பெயர் இரும் சயீத். நீங்கள். இப்போது பார்க்கும் அவரது படம் 2008ம் ஆண்டு ஜுலை மாதம் 24ம் திகதியன்று பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தின் உருது பல்கலைக்கழகத்தின் அலுவலகத்தில் வைத்து எடுக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முஸ்லீம் வாலிபனின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததற்காக அவர் மீது நடுவீதியில் வைத்து அமிலம் வீசப்பட்டது. இத்தாக்குதலில் இரும் சயீத்தின் முகம், முதுகு மற்றும் தோள்கள் சேதமாகின. 25 தடவைகளுக்கு மேலாக படினமான வலியுடன் கூடிய அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின்புதான் இன்றிருக்கும் இந்த உருவம் கூடப் பெறப்பட்டது.
(2)
18 வயது நிரம்பிய சமீம் அக்தர் எனும் இந்த யுவதி மூன்று முஸ்லீம் வாலிபர்களால் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்ட பின்பு அவர்களால் அசிட் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது தழும்புகளைக் குணப்படுத்தி இந்த நிலைக்குக் கொண்டுவர 10க்கு மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
(3)
16 வயது யுவதி நஜாப் சுல்தானா, 5 வயதுச் சிறுமியாக இருந்தபோது நடந்த கொடூரத்தின் விளைவு இது. இவரைச் சிதைத்தவர் இவரது தந்தை என்றால் நம்புவீர்களா? தனது குடும்பத்திற்கு மேலும் ஒரு பெண்குழந்தை தேவையில்லை என்பதற்காக ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோது நெருப்பினால் எரிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்தான் நஜாப். இந்தக் கொடுமையினால் பார்வையை முற்றாக இழந்த நஜாப் சுல்தானாவின் தழும்புகளைச் சீரமைக்க 15 சத்திரசிகிச்சைகள் தேவைப்பட்டன. பெற்றோர்களால் கைவிடப்பட்ட இவர் தற்போது உறவினர்களோடு வாழ்ந்து வருகின்றார்.
(4)
சுமார் 9 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த குடும்பத் தகராறு ஒன்றிலே உறவினர் ஒருவரால் அசிட் வீச்சுத்தாக்குதலுக்குள்ளானவர் லாஹுரில் வசிக்கும் தற்போது 40 வயதான பெண்மணி ஸஹ்னாஸ் உஸ்மான். 10 தடவைகள் நிகழ்ந்த அறுவைச் சிகிச்சைகளினால் இந்தளவுக்கு உருவம் மீட்கப்பட்டிருக்கின்றார் இவர்.
(5)
கன்வால் கையூம் எனும் 26 வயது லாஹுரில் வாழும் இந்த முஸ்லீம் நங்கை வாலிபன் ஒருவனின் திருமணத்திற்கு உடன்படாத காரணத்துக்காக அசிட் வீச்சுக்குள்ளாகிச் சிதைந்து போனவர். இவருக்கு அவசியமான ப்ளாஸ்டிக் சத்திரசிகிச்சை கூட வழங்கப்படவில்லை.
(6)
லாஹுரைச் சேர்ந்த முனீரா அசிப் (23 வயது) 5 வருடங்களுக்கு முன்பு காதலை மறுத்த காரணத்துக்காக நிராகரிக்கப்பட்ட இளைஞனின் அசிட் வீச்சுக்கு ஆளாகினார். இப்போதுள்ள நிலையை மீட்பதற்கு 7 தடவைகள் ப்ளாஸ்டிக் சத்திரசிகிச்சைகள் வழங்கப்பட்டது.
(7)
தனது மனம் விரும்பாத கணவனை விவாகரத்துச் செய்வதற்கு முயன்ற காரணத்திற்காக அதே கணவனால் அசிட் வீச்சுத் தாக்குதலுக்குள்ளானவர்
,தற்போது 39 வயதான புஷ்ரா சாரி. ஐந்து வருடங்களக்கு முன் நிகழ்ந்த இந்தக் கொடுமையினால் 25 முறை தடவைகள் ப்ளாஸ்டிக் சத்திரசிகிச்சைக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டது இவருக்கு.
(8)
காதலை மறுத்த காரணத்துக்காக கோபங் கொண்ட இளைஞன் ஒருவனின் அசிட் வீச்சுக்கு ஆளாகிய மற்றொரு பெண் 17 வயது ஸைனப் பீபி. இஸ்லாமாபாத்தில் வாழும் இவர் பல தடவைகள் ப்ளாஸ்டிக் சத்திரசிகிச்சைக்கு உள்ளாக வேண்டியேற்பட்டது.
(9)
நைலா பர்கத் (19)தும் ஐந்து வருடங்களுக்கு முன்பு தனக்கு ஒத்துவராது எனக் கருதிய திருமணத்தை மறுத்த காரணத்துக்காக தாக்குதலுக்குள்ளானவர் ஆவார்.
(10)
15 வயதிலே தனது உறவு முறையான இளைஞனின் வற்புறுத்தல் காரணமாக திருமண பந்தத்தில் இணைந்தவர் தற்போது 26 வயதுள்ள சயீரா லியாகத்.
பின்பு திருமணத்தினால் இடையில் நின்றுபோன தனது படிப்பை முடிப்பதற்கு ஆசைப்பட்டு பெற்றோருடன் வந்து தங்கிய காரணத்துக்காக கணவரினால் கொடுமையான முறையில் அசிட் தாக்குதலுக்காளானார். 9 தடவைகள் ப்ளாஸ்டிக் சத்திரசிகிச்சைக்கு உள்ளாக வேண்டியேற்பட்டது.
(11)
இருபத்து மூன்று வயது மைமூனா கராச்சியைச் சேர்ந்தவர். 2002 ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி திருமணத்திற்கு சம்மதம் கிடைக்காத தனது மைத்துனன் ஒருவரால் அசிட் வீச்சுக்குள்ளாகித் தனது அழகிய தோற்றத்தையும் பார்வையையும் இழந்தவர். இருந்தும் தனது தைரியத்தை இழந்துவிடாமல் தன்னைக் குணப்படுத்திய வைத்தியசாலை ஒன்றிலேயே பணிபுரிந்து வருகின்றார்.
(12)
பங்களாதேஷின் காதீஷாவும் அவரது சிறுவயது மகள் சோனாலியும் அயலவர் ஒருவருடன் ஏற்பட்ட காணித்தகராறு காரணமாக அசிட் வீச்சுக்குள்ளாகி படுகாயமுற்றனர். பெண்கள்மீது அசிட் தாக்குதல் நடாத்தப்படுவது தெற்காசிய நாடுகளில் பரவலாக இருந்து வருகின்றது. அதிலும் இது குறிப்பாக பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் மிகவும் அதிகமாகவுள்ளது.
(13)
"நான் இப்போது திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. (பெண்ணைத்) துன்புறுத்தும் ஒரு கணவனுக்கு என்னால் முகம் கொடுக்கவே முடியாது. நான் எனது சொந்த உழைப்பிலேயே வாழ விரும்புகின்றேன். எல்லாருமே ஒருவர் வெளித்தோற்றத்தில் அழகாக இருப்பதையே விரும்புவர். ஆனால் ஒருவரது உளத்தூய்மையே சிறந்த அழகு என்பது எனது அபிப்பிராயம்" என்கிறார் தனது சொந்த மைத்துனின் காதலை மறுத்ததற்காக தனது திருமணத்துக்கு ஒன்பது நாட்கள் மட்டுமே இருக்கையில் நித்திரையின் போது அசிட் வீசிக் கொடூரமாய் பழிவாங்கப்பட்ட ரப்பாத்.
Thanks: "Creeping Sharia"
- Jesslya Jessly
No comments:
Post a Comment