Friday, February 15, 2013

சிறுகதை: கம்பீரம்“மை நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது.


நாங்கள் மொத்தம் பதினைந்து பேர். நான் உட்பட மற்றவர்களும் அப்போதுதான் பட்டயப் படிப்பை முடித்திருந்தோம். சிலருக்கு இன்னும் மீசை கூட அரும்பியிருக்கவில்லை. எனக்கு இடதுபுறமாக நின்று கொண்டிருந்த சபாபதி என்பவனின் வாய் லேசாக முணுமுணுத்தது.


“குமார்…” நடுங்கும் காற்றுக் குரலில் இரகசியமாய் அழைத்தான்.


“ஷ்ஷ்ஷ்… சும்மா இருங்க. எனக்கும் கெதக்குன்னுதான் இருக்கு”. ஆம். எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் அச்சமாகத்தானிருந்தது.


எங்கள் கிசுகிசுப்புகள் கங்காதரைக் கலைத்தன. சட்டென்று விரைப்பாய்த் திரும்பினார். ஒரு மயான அமைதி அந்த அறையைச் சட்டென போர்த்திக் கொண்டது. அது ஒரு பயிற்சி வகுப்பறை. பெங்களூருவில் இருந்த பன்னாட்டு கணினி நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது. நாங்கள் படிப்பை முடித்து விட்டு கேம்பஸ் தேர்வில் தேர்வாகி பயிற்சிக்காக வந்திருந்தோம். அன்றுதான் பயிற்சியின் முதல் நாள்.


அது RISC சர்வர் வகைக் கணினிகளைத் தயாரிக்கும் நிறுவனம். சர்வர் எனப்படுவது பல நூறு கணினிகள் சேர்ந்தால் கிடைக்கும் ஆற்றலை ஒரே பெரிய கணினிக்குள் அடக்கியதைப் போன்றது. இவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் சிக்கலானவை என்றும், புரிந்துகொள்வது சிரமம் என்றும் எங்களுக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தது. பயிற்சியாளர் வரும் முன் அதைப் பற்றி எங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த போதுதான் திடீரென அந்த அறைக்குள் இராணுவம் ஊடுருவியிருந்தது.


கங்காதர் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அட்டேன்ஷனில் நான் நின்று கொண்டிருந்த இடம் நோக்கி நகரத் துவங்கினார். எனது தொடைகள் எடை குறைந்து போல லேசானது. முழங்காலுக்குக் கீழே பஞ்சு போல் உணர்ந்தேன். தொண்டைக்குள் கசந்தது. இதயத்துடிப்பு எகிறியது. ‘என்னாங்கடா இது! பேசினதெல்லாம் ஒரு குத்தமாடா’ மனதிற்குள் தாறுமாறான சிந்தனைகள் துள்ளிக் குதித்தன.


மொத்தம் மூன்று வரிசைகளாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நடுவில் இருந்த வரிசையில் இரண்டாவதாக இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். மிகச்சரியாக என்னை நோக்கி வந்த கங்காதர், கருவிழிகளை மட்டும் திருப்பிப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றார். எனக்கு நேர் பின்னே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். வடிவேலுவைப் போல் உணர்ந்தேன்.


சற்று நேரத்திலேயே பயிற்சியாளர் ராகேஷ் வந்தார். முதலில் அறிமுகப் படலம். இராணுவத்தையும் சேர்த்து மொத்தம் பதினேழு பேர். இராணுவம் தன்னை முழுமையாக அறிமுகம் செய்து முடித்த போதுதான் எங்களுக்கு விசயமே புரிந்தது. இவர்கள் இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று.


கங்காதர் சவுத்ரி என்று அறிமுகம் செய்து கொண்டவர், இராணுவத்தின் ஏதோவொரு படைப்பிரிவில் கீழ்நிலையில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று, இப்போது காப்டனாகி இருக்கிறார். நாற்பதுகளின் இறுதியில் அல்லது ஐம்பதுகளின் துவக்கத்தில் இருந்தார். அந்த நிறுவனம் இராணுவத்துக்கு கணினிகளை விற்கும்போது அதோடு சேர்த்து அதை எப்படி இயக்குவது எப்படிக் கையாள்வது என்பதைப் பற்றிய பயிற்சிக்கும் இரண்டு சீட்டுகளை இலவசமாய் கொடுத்து விடும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவின் சார்பாக கங்காதரும் அவரது உதவியாளர் நிதின் ஷர்மா என்பவரும் தேர்வாகியிருந்தனர். இதற்காகவே டெஹ்ராடூனில் இருந்து பெங்களூரு வந்துள்ளனர்.


அந்தப் பயிற்சி பத்து நாட்களுக்கு நடந்தது. அந்த நாட்களில் நாங்கள் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டதோடு, இராணுத்தினர் பற்றியும் கொஞ்சம் போல் அறிந்து கொண்டோம் – உபயம் கங்காதர். அவர் எங்களிடம் இராணுவம் என்பதைப் பற்றிய உயர்வான பிம்பம் ஒன்றை உருவாக்க நிறைய மெனக்கெட்டார். ஓசிச் சோறின் விளைவாகவோ, ஓசிச் ‘சரக்கின்’ காரணமாகவோ அவர் பருத்த வயிற்றைப் பெற்றிருந்தார்.
ஆனால், தானொரு மிடுக்கான அல்லது விரைப்பான பேர்வழி என்பதை உலகுக்கு உணர்த்த கஷ்டப்பட்டு அடிவயிறை எக்கிப் பிடித்துக் கொள்வார். இதன் விளைவாய் இடுப்பு கொஞ்சம் போல் முன்னே இழுத்துப் பிடித்தது போல் நிற்கும். இந்தக் கஷ்டத்தோடு மார்புக்கூட்டை தூக்கலாக வைத்துக்கொள்ள வேண்டும். இத்தனை சித்திரவதைகளுக்கிடையே சிரமமின்றி சுவாசிப்பதைப் போல் நடிக்கவும் வேண்டும். கங்காதர் திறமைசாலிதான்… என்றாலும் மூன்றாவது நாளே கவனக்குறைவான ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அவர் ஒரு பெரும் தொந்தியர் என்பதை சபாபதி கண்டுபிடித்து, எல்லோருக்கும் ரகசியமாய்ச் சொல்லி விட்டான்.


அவர் சாதாரணமாக நடக்கும்போது கூட கால் மூட்டு மடங்காமல் அட்டேன்ஷனில்தான் நடந்தார். அதேபோல் பயிற்சி நடந்த நாட்களில் அவர் எப்போதும் அறையின் குறுக்குவாக்கில் நடந்ததே இல்லை; நுழைவாயிலில் இருந்து நூல் பிடித்தது போல் நேராக பத்து தப்படிகள், அப்புறம் மின்னல் போல ஒரு ‘ரைட்டர்ன்’; மீண்டும் நூல் பிடித்தாற் போல் பத்து தப்படிகள் நடை; ஒரு ‘அபவுட்டர்ன்’; அப்புறம் இரண்டு தப்படிகள் பக்கவாட்டில் நகர்ந்து நாற்காலியில் அமர்வார்.


உட்கார்ந்த பின் அவரது முதுகில் மட்டக்கோலை வைத்துப் பார்த்தால் முதுகெலும்பு நறுக்கென்று கச்சிதமாக நேர்கோட்டில் இருக்கும். பக்கவாட்டில் எதையாவது அல்லது யாரையாவது பார்க்க வேண்டுமென்றால் கூட ஸ்கேல் வைத்து அளந்தது போலத்தான் தலையைத் திருப்புவார்.கங்காதர் நிறைய சந்தேகப்படுவார். யாரையும், எதையும் நம்ப மாட்டார். ‘இன்றைக்கு செவ்வாய்க் கிழமை’ என்று அவரிடம் யாராவது சொல்லி விட்டால் கூட அவராக ஒரு முறைக்கு இரண்டு முறை நாள்காட்டியைப் பார்த்து, சரிபார்த்து விட்டுதான் ‘அப்படியா! சரிதான்’ என்று ஒத்துக்கொள்வார். அவ்வளவு முன்னெச்சரிக்கை. ராணுவம் என்றால் சந்தேகப்பட வேண்டும்; நாட்டையே காப்பாற்றுவது என்றால் சும்மாவா என்பதுதான் அதிலிருந்த செய்தி.


இராணுவம் பற்றி எங்களுக்கு உருவான சித்திரம் எந்த வகையானது என்று அன்றைய நிலையில் எங்களால் சரியாக கணிக்க முடியவில்லை. ஒரு வேளை அது கேலிச்சித்திரமாக இருக்குமோ என்று கங்காதரே எங்களை சந்தேகப்பட வைத்தார். அதற்கு அவரது உடல் மொழி மட்டும் காரணமல்ல.
தொழில்நுட்பத்தில் அவருக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதைத் தீர்த்துக்கொள்ள அவர் கேட்கும் கேள்விகளும் விநோதமானவை. உதாரணமாக, “மிஸ்டர் ட்ரைனர், உங்களது இந்த கணினியை நேர்மட்டமாகத்தான் நிறுவ வேண்டுமா? கிடைமட்டமாக நிறுவினால் வேலை செய்யாதா?” அல்லது, “மிஸ்டர் ராகேஷ், இந்தக் கணினி வேலை செய்து கொண்டிருக்கும் போது அதன் எலக்ட்ரிகல் வொயரை வெடுக்கென்று பிடித்து இழுத்தால் என்னவாகும்?”


‘கேள்விகள்’ இந்த ரகத்தில் படுபயங்கரமான மொக்கைகளாகத்தான் இருக்கும். அவர் ஒவ்வொரு முறை கேள்விகளைக் கேட்கும்போதும் கையிலிருக்கும் கோப்பு ஒன்றிலிருந்து எதையோ சரிபார்த்துக் கொள்வார். அந்தக் கோப்பை அவர் பயிற்சி நடந்த பத்து நாட்களும் இராணுவ ரகசியம் போல் பாதுகாத்து வந்தார். பயிற்சி இடைவேளைகளில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போதோ அல்லது யாரோடாவது கைகுலுக்க வேண்டுமென்றாலோ கூட அந்தக் கோப்பை பத்திரமாக கக்கத்தில் அதக்கிக் கொள்வார். யாரும் அதைப் பிரித்துப் பார்த்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இராணுவமும் ரகசியமும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்று நாங்கள் நம்பினோம்.


கங்காதரின் மேலதிகாரிகள் தினசரி ஐந்து கேள்விகளாவது கேட்க வேண்டுமென்று இலக்கு நிர்ணயித்து அனுப்பியிருப்பார்களோ என்று சபாபதி சந்தேகப்பட்டான். பயிற்சி நடந்த பத்து நாட்களிலும் இதே பாணியில் கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டேயிருந்தார். பயிற்சிக்கு வந்த மற்றவர்களோடு சேர்ந்து நாங்கள் உதடு பிரியாமல் சிரித்துக் கொள்வோம். ஆனால், பயிற்சியாளர் ராகேஷ் சிரிக்கவில்லை. கங்காதரின் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பொறுமையாகப் பதிலளிப்பார்.


எதாவது எடக்கு மடக்காகப் பதில் சொல்லி, அதனால் கங்காதர் ஆத்திரமடைந்து, அதனால் அவரது மேலதிகாரிகள் அதிருப்தியடைந்து, அதனால் அடுத்தமுறை ஆர்டர் கிடைக்காமல் போனால்? அந்த நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் இராணுவம் ஒரு பொன் முட்டையிடும் வாத்து. இதைக் கொன்று விட்டால் இன்னொரு வாத்துக்கு எங்கே போவார்கள்? எனவே ராகேஷுக்கு தெளிவான உத்திரவுகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி, எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட மூன்று இஞ்சுகள் அதிக உயரம் கொண்ட கங்காதரின் ஈகோவை எந்த சேதாரமும் இல்லாமல் பவுனைப் போல் பாதுகாத்து, பத்திரமாய் முகாமுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் ராகேஷ் தெளிவாக இருந்தார்.


கங்காதர் ஒவ்வொரு முறை கேள்வி கேட்கும் போதும் விரைப்பாக எழுந்து நிற்பார். கங்காதர் எழுந்து நிற்கும் போதெல்லாம் நிதின்ஷர்மாவும் எழுந்து கொள்வார்; அவர் உட்காரும் வரை உட்கார மாட்டார். அதிகாரியல்லவா? அவர் நிற்க, இவர் அமர…. அதெல்லாம் நிதினின் கற்பனையிலேயே இல்லை.
கங்காதர் தினசரி இரண்டு முறை நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்வார். காலை மற்றும் மதிய உணவு இடைவேளைகளின் போது கங்காதரால் சொல்லப்படும் ‘ஜோக்குகள்’ அவரது கேள்விகளை விடப் படுபயங்கர மொக்கைகளாக இருக்கும். அந்த ஜோக்குகள் அவருக்கு அவரது மேலதிகாரிகளால் சொல்லப்பட்டவை. அவர்களுக்கு அவர்களது மேலதிகாரி, அவர்களுக்கு அவர்களது மேலதிகாரி என்று இது பின்னோக்கி நீண்டுகொண்டே போய் ராபர்ட் க்ளைவின் காலத்தைத் தொடும் அளவுக்கு அரதப்பழசான ஜோக்குகள்.


இதைக் கேட்டு எல்லோரும் சிரிக்க வேண்டுமென்பதுதான் கங்காதரின் எதிர்பார்ப்பு. இந்த இராணுவ சர்வாதிகாரத்துக்கு ராகேஷையும், நிதினையும் தவிர மற்றவர்கள் யாரும் உட்படவில்லை. சிரிப்பதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டுமென்று கங்காதர் எதிர்பார்த்தார். சுமாரான நகைச்சுவை என்றால் மூன்று முறை “ஹஹ்ஹஹ்ஹா” சொல்ல வேண்டும்; சுமாருக்கு மேல் என்றால் நான்கு முறை சொல்ல வேண்டும்.


இப்படிச் ‘சிரிப்பதை’ நிதின் அளவுக்கு ராகேஷால் நேர்த்தியாகச் செய்ய முடியவில்லை. என்னயிருந்தாலும் இராணுவப் பயிற்சியல்லவா? பயிற்சிக்கு வந்த மற்றவர்கள் கங்காதரின் இந்த எதிர்பார்ப்பைக் கூட மிகுந்த சிரமத்துக்கிடையே சகித்துக் கொண்டார்கள். அவருக்கிருந்த இன்னொரு எதிர்பார்ப்பைத்தான் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.


அதாவது, அவர் தன்னை அனைத்தும் அறிந்த மேதாவி என்று கருதிக் கொண்டார். வானத்தின் கீழ் பூமிக்கு மேல் இருந்த சகலத்தைப் பற்றியும் அவருக்கென்றே பிரத்யேகமாக ஏதாவதொரு ‘கருத்து’ இருக்கும். சில சமயம் வானத்தைக் கடந்தும் பூமியின் ஆழத்திலும் இருப்பனவற்றைப் பற்றிக் கூட ‘கருத்து’ சொல்வார். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார். நிதின் அவரது கீழ்நிலை அதிகாரி என்பதால் வேறு வழியில்லை; ராகேஷ் அனுபவசாலி என்பதால் சமாளித்துக் கொண்டார்.
ஆனால் நாங்களோ அப்போதுதான் கல்லூரியிலிருந்து வந்திருந்த மாணவர்கள். முழுப் பொய்யையும், முழு உண்மையையும் எதிர்கொள்வது எளிது. பாதி உண்மை – பாதி பொய் என்றால் கொஞ்சம் சிரமம். ஆனால் முழுப் பொய்யை உண்மை என்று ஏற்றுக்கொள்வது போல் நடிக்க வேண்டுமென்றால்? நாங்கள் சொல்லவொண்ணா கொடுமைகளுக்குள்ளானோம்.


ஒரு வழியாக அந்த பத்து நாட்களும் ஒரு முடிவுக்கு வந்தது. பத்தாவது நாளில்தான் “யானைக்கும் அடி சறுக்கும்” என்பதை நாங்கள் நேரடியாகப் புரிந்து கொண்டோம். அதாவது, கங்காதரை பயிற்சிக்காக தேர்வு செய்து அனுப்பிய அவரது மேலதிகாரிகள், அவரிடம் தினமும் பயிற்சியில் கலந்துகொண்ட மற்றவர்களோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். பயிற்சிக்காக என்று வந்துவிட்டு ஒழுங்காக அதில் கலந்து கொள்ளாமல் மட்டம் போட்டு விட்டு, ஊர் சுற்றி விடுவார்களோ என்று அவர்கள் சந்தேகம் கொண்டிருக்க வேண்டும். இந்த ராணுவத்தினர் யாரையும் நம்புவதேயில்லை.


அது ஒரு பக்கம் இருக்கட்டும். கங்காதர் இந்த புகைப்பட சமாச்சாரத்தை ஒன்பது நாட்களாக மறந்து விட்டார் என்பது பத்தாம் நாளில் மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதை எப்படிச் சமாளிப்பது என்று மூளையைப் போட்டு கசக்கி, கடைசியில் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார்.
அதாவது, கங்காதரும், நிதினும் இராணுவச் சீருடை அணிந்தபடி எங்களோடு பத்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் நாங்களெல்லாம் வரிசை மாறி நிற்க வேண்டும். அதோடு எங்கள் தோற்றத்திலும் எதாவது ஒரு மாற்றம் செய்துகொள்ள வேண்டும். சட்டையை இன் செய்திருந்தால் எடுத்து விட வேண்டும். தங்களுக்குள் சட்டைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தலைமுடியை மாற்றி வகிடெடுத்து சீவிக்கொள்ள வேண்டும். இப்படி சில ‘மரு’ வேஷங்கள் போட்டு சமாளிக்க வேண்டும். வேறு வழியின்றி இந்திய இராணுவத்துக்காக இந்தத் தியாகத்தையும் செய்தோம்.


இந்த புகைப்படக் கூத்தோடு பயிற்சி ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் ராணுவம் பற்றி என்னில் உருவாகி வந்த மனச்சித்திரம் அப்போதைக்கு முழுமை அடைந்திருக்கவில்லை; ஏதோவொன்று குறைவது போலவே இருந்தது. பயிற்சிக்குப் பின் அந்தக் குழுவிலிருந்தவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போஸ்டிங் போடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்கள். நான் தில்லிக்குச் சென்றேன்.


தில்லியின் தால் ரொட்டிக்கும், ஆலு பரோட்டாவுக்கும், அனல் காற்றுக்கும், கடுங்குளிருக்கும் பழக்கப்படத் துவங்கியிருந்த நான்காம் வருடத்தின் முதல் மாதத்தில் எனக்கு எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு மின்மடல் வந்தது. எங்கள் நிறுவனம் தயாரித்து சந்தைக்கு அனுப்பியிருந்த குறிப்பிட்ட மாடல் கணினியில் சில பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதனால் உலகெங்கும் அந்த மாடல் கணினி எங்கெல்லாம் பயன்பாட்டில் இருக்கிறதோ அங்கெல்லாம் அதனைச் சரிசெய்ய அதன் மென்பொருளில் சில திருத்தங்கள் (bug fix) சேர்க்க வேண்டும் என்றும் அந்த மடலில் குறிப்பிடப்பட்டிருந்தது.


அந்த மடலின் பின்னிணைப்பாக நாங்கள் திருத்தங்கள் சேர்க்க வேண்டிய கணினிகளின் பட்டியலும், அது நிறுவப்பட்டிருக்கும் முகவரியும், தொடர்புகொள்ள வேண்டிய வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டிருந்தது. அகர வரிசைப்படியிருந்த பட்டியலில் முதலாவதாக “ஆர்மி ரிசர்ச் சென்டர் – டெஹ்ராடூன்” என்று குறிப்பிடப்பட்டு, அதற்கு நேராக தொடர்புகொள்ள வேண்டி கங்காதரின் பெயரும், அவரது தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.


உடனே அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்து கங்காதரைப் பிடித்தேன்.


“ஹலோ! கப்தான் கங்காதர் சௌத்ரி” மறுமுனையில் அதே விரைப்போடு மிரட்டல் கேட்டது.


என்னை நினைவூட்டி அறிமுகம் செய்துகொண்ட பின், கணினியில் கண்டறியப்பட்டுள்ள குறைபாட்டை விளக்கி அந்த வார இறுதியில் டெஹ்ராடூன் வருவதாகத் தெரிவித்து, அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டேன். திட்டமிட்டபடி அந்த வார இறுதியில் கங்காதர் சொன்ன நேரத்துக்கு சரியாக அங்கே இருந்தேன். நேரம் தவறாமையில் கங்காதர் கறார் பேர்வழி. பயிற்சியின் போது ஒரு நாள் கூட அவர் தாமதமாக வந்ததே இல்லை. நிதின் ஷர்மா இன்னமும் உதவியாளராகத்தான் இருந்தார். அவர்தான் எங்களை வரவேற்று அழைத்துச் சென்றார்.


“சார்! கணினியை எங்கே நிறுவி இருக்கிறீர்கள்?” வேலையைத் தவிர வேறு அநாவசியமான கேள்விகளை இராணுவம் விரும்புவதில்லை.


“முதல் தளத்தில்” கேட்ட கேள்விக்கு ஒரு வரி பதிலைத்தான் இராணுவம் அளிக்கும்.


முதல் தளத்தின் சந்து பொந்துகளைத் தாண்டி ஒரு கண்ணாடி அறையின் முன் அமர்த்தப்பட்டோம். உள்ளே பெரிய பெரிய சர்வர்கள் நிறுவப்பட்டிருந்தன. அங்கே இருந்த சர்வர்கள் ஒவ்வொன்றும் நம் வீடுகளில் பயன்படுத்தும் இரும்பு பீரோக்களின் உயரத்தில் இருந்தன.


“கொஞ்சம் பொறுங்கள்! காப்டன் சார் பத்து நிமிடத்தில் வந்து விடுவார்” குளிரூட்டப்பட்ட அறையில் கங்காதரின் வருகைக்காக காத்திருந்தேன். சரியாக ஒன்பது நிமிடம் ஐம்பத்தொன்பதாவது நொடியில் பழக்கப்பட்ட அந்தக் குரல் கேட்டது,


“ஹல்லோ யெங்மென்! எப்படிஇருக்கிறீர்கள்?” ஆரவாரமாக அந்த அறைக்குள் நுழைந்த கங்காதர், எனது கையை வலுவாகப் பற்றிச் சுளுக்கினார்.தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரம் கணினியில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பற்றி விரிவாக விளக்கம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.


“ஓக்கே! இதோ இந்த அறையில்தான் நீங்கள் சப்ளை செய்த கணினி இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள். உங்களோடு நிதின் இருப்பார்”
ஒரு வழியாக ஏழு மலை ஏழு கடல் தாண்டி அரக்கனின் அரக்கு மாளிகையில் சிறைவைக்கப்பட்ட லைலாவைக் காணும் சிந்துபாத்தைப் போல் அந்த அறைக்குள் பாய்ந்தேன்.


நுழைந்ததும் ஒரு கணம் அப்படியே உறைந்தேன். அங்கே அந்தக் கணினி மாலைகளெல்லாம் அணிந்து சந்தனம் குங்குமம் அப்பிக் கொண்டு அய்யனார் கோவில் பூசாரியைப் போல் கம்பீரமாய் நின்றது. அந்த மாலைகள் காய்ந்திருந்தன. ஆனால் அதிர்ச்சிக்கு அது காரணமில்லை.


“இதெல்லாம் நாங்க ஆயுதபூசை கொண்டாடும்போது போட்டது” நிதின் கேட்காமலேயே பதில் சொன்னார்.


“அது பரவாயில்லை.. ஆனால், கணினி இயக்கப்படாமல் ஒட்டடை படிந்துபோய்க் கிடக்கிறதே?” அதிர்ச்சிக்கு இதுதான் காரணம்.


“அதுவா… இந்தக் கணினியால் எங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்பதால் வாங்கிய நாளிலிருந்து இயக்காமலே வைத்திருக்கிறோம். நீங்கள் அதை இயக்கி வேலையை முடித்தபின் பழையபடி அணைத்து வைத்து விடுங்கள். வேண்டுமானால் ஆட்களை அனுப்பி இதில் படிந்திருக்கும் ஒட்டடைகளை சுத்தம் செய்யச் சொல்லவா?” நிதின் பதறாமல் கேட்டார்.
“அதுக்கில்லை சார்! இது இயங்காமல் நின்றால் நிறைய உற்பத்தி இழப்பு ஏற்படுமே?”ஆச்சர்யம் தாளாமல் கேட்டேன்.


“உற்பத்தியா? அதான் சொன்னேனே! வாங்கினதுலேர்ந்து பயன்படுத்தவே இல்லையென்று?” புன்முறுவல் மாறாமல் பேசினார்.


“ரெண்டு கோடிக்கும் மேல கொடுத்து வாங்கியதை இப்படியா வீணா போட்டு வைப்பீங்க? இந்த மாதிரி கணினிகளை வாங்குகிறவர்கள் இதிலேர்ந்து முடிந்தவரை வேலை வாங்குவாங்க சார்! யாரும் இப்படி சும்மா நிப்பாட்டி வைக்க மாட்டாங்களே!?”

“குமார்.. நீங்க டிபென்ஸ் செக்டாரை இப்பத்தான் பாக்கறீங்கன்னு நினைக்கிறேன்! சரியா?”

“ஆமா… ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
நிதின் சிரித்துக் கொண்டார். பின் தொடர்ந்தார், “குமார்! இங்க இருக்கிற மற்ற பெரிய சர்வர்கள் எல்லாமும் சாதாரண முப்பதாயிரம் ரூபா கணினிகள் செய்யும் அதே வேலைகளைத்தான் செய்யுது.. நீங்க சப்ளை செய்ததைத்தான் என்ன செய்ய வைக்கிறதுன்னு தெரியாம போட்டு வச்சிருக்கோம். கவர்மெண்ட் செக்டார்ல இதெல்லாம் சாதாரணம்… வருஷா வருஷம் எங்களோட கணினி பிரிவுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு செய்வாங்க. அதை எதுக்காச்சும் நாங்க பயன்படுத்தியாகணும். ஒரு வருஷம் முழுமையா பயன்படுத்தலைன்னா அடுத்த வருஷம் ஒதுக்கீட்டை குறைச்சிடுவாங்க. அதனால நாங்க வாங்கற கருவிகள் எல்லாத்தையும் அந்த வகையிலேயே காஸ்ட்லியா என்ன இருக்கோ அதைத்தான் வாங்குவோம். நீங்க புதுசில்லே! அதான் திகைச்சுப் போயிட்டீங்க. சரி! வந்த வேலையைப் பாருங்க!”


ஒரு வழியாக அதிர்ச்சியை ஜீரணித்துக் கொண்டு, அந்தக் கணினியை இயக்கி அதில் சேர்க்க வேண்டிய மென்பொருள் நிரலை சேர்த்துவிட்டு, மீண்டும் பழையபடி அணைத்து வைத்தேன். அந்தக் கணினி அறைக்குள் இரும்பு பீரோக்கள் போல் நிமிர்ந்து நின்ற மற்ற எல்லா கணினிகளுமே பிச்சையெடுக்கும் கோவில் யானைகளைப் போல் பரிதாபமாய் நின்றன. எத்தனை பொருட்செலவு? அத்தனையும் வீண் விரயம். மாதாமாதம் சம்பளத்திலிருந்து கேட்காமலேயே பிடித்தம் செய்துகொள்ளப்படும் வருமான வரிப்பணம் இப்படி பெருமாள் கோவில் பிச்சைக்கார யானைகளைப் பராமரிக்க வீணடிக்கப்படுவதைக் கண்டு, நீண்ட பெருமூச்சு எழுந்தது. அதற்குள் நிதின் கையில் ஒரு கோப்போடு வந்தார். அதே பழைய கோப்பு. இராணுவ ரகசியமாய் கங்காதர் போற்றிய கோப்பு.


“குமார்! இப்ப என்ன செய்தீங்களோ அதை அப்படியே ரிப்போர்ட்டா எழுதி இந்தக் கோப்பில் சேர்த்துடுங்க. ஆடிட் வர்ற மேலதிகாரிங்க இதையெல்லாம் கறாரா சரி பார்ப்பாங்க. நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன்” கையில் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.


ஆர்வத்தோடு திறந்து பார்த்தேன். உள்ளே, அந்தக் கணினி வாங்குவதற்காக வெளியிட்ட டெண்டர் பற்றிய அறிவிப்பிலிருந்து, கங்காதர் மற்றும் நிதினின் பெங்களூரு வருகைக்கான அனுமதிக் கடிதம், ரயில் டிக்கெட்டுகளின் நகல்கள், தங்கிய ஹோட்டலில் கொடுத்த பில்கள் வரை தேதி வாரியாக அடுக்கப்பட்டிருந்தது. இறுதியில் அந்த பத்து புகைப்படங்கள்.. சுத்தமாக வாயடைத்துப் போனேன்.


இதற்காகவா அத்தனை ஆர்பாட்டங்கள்? பயிற்சிக் காலத்தில் இராணுவம் பற்றி உருவாகத் துவங்கியிருந்த முற்றுப்பெறாத சித்திரம் இப்போதுதான் முழுமையடைந்தது. அதை உற்றுப்பார்த்ததில், நன்கு உருண்டு திரண்டு கொழுத்துப் போன பங்களா நாய் ஒன்று அந்த சித்திரத்தினுளிருந்து முறைத்துப் பார்த்தது.


ஆம்! இது ஒரு பிரமாண்டமான பங்களா நாய். பங்களா நாய்கள் தங்கள் எஜமானர்கள் கொடுக்கும் செல்லத்தின் விளைவாய் அதீதமாய்க் கொழுத்துப் போய்விடும். தெரு நாய்களைப் போன்றோ, வேட்டை நாய்களைப் போன்றோ ஓட முடியாது. தன் கொழுத்த உடலை அசைக்க முடியாமல் அப்படியே கிடையாய்க் கிடக்கும். அவ்வப்போது போகிற வருகிறவர்களைப் பார்த்துக் குரைத்தோ அருகில் அகப்பட்டவர்களைக் கடித்தோ தன் எஜமானனைக் குஷிப்படுத்தும். இது வெறும் அலங்காரம்தான். பயனற்றது – ஆனால் ஆபத்தான ஒட்டுண்ணி. மொத்த சமூகத்தின் இரத்தத்தையும், வியர்வையையும் உறிஞ்சிக் கொழுத்துக் கிடக்கிறது.
இவற்றின் எஜமானர்கள் கற்பனை செய்து கொள்வதைப் போல் இவை காவலுக்கும் கூடப் பயன்படாது. என்றைக்காவது தெரு நாய்களோடு சண்டை வந்தால் பரிதாபமாய் செத்துப் போகும். ராணுவம் என்பது ஒரு பங்களா நாயைப் போல் இந்தியாவின் மேல் அழுத்திக் கொண்டிருப்பதே என்பதுதான் அந்த சித்திரம் சொல்லும் செய்தி என்பது அன்றைக்கு எங்களுக்குப் புரிந்தது.

-மாடசாமி
 
Thanks: Puthiya Kalachcharam

Thursday, February 14, 2013

ஷரியா கொலைகாரர்களின் உள்ளுர் அடியாட்கள்:

 
 
 
லங்கலாகத் தெரிகிறது அந்தக் காணொளி.
வெண்ணிற பர்தா அணிந்த அந்தப் பெண் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறாள். அருகே சவுதி ஷேக் உடையணிந்த இரண்டு பேர் நிற்கிறார்கள். அவர்களைச் சுற்றி சீருடை அணிந்த, காவலர்கள் போல தோற்றமளிக்கும் சிலர் நிற்கின்றனர். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். அருகாமையில் சில வாகனங்கள் மற்றும் பல மனிதர்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். ஷேக் உடையணிந்த மனிதர்களில் ஒருவர் இடையிடையே மண்டியிட்டு அமர்ந்திருக்கும் பெண்ணின் காதில் எதையோ சொல்லியவாறே இருக்கிறார். மெல்லக் காட்சிகள் நகர்கின்றன. என்ன நடந்தது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருந்ததால் உள்ளத்தின் ஆழத்தில் இயலாமையும், ஆத்திரமும் பிசைய, பின்னணியில் வழிந்த இசை இன்னதென்று தெரியாத ஒரு அதீத பயத்தைக் கிளப்புகிறது.

சற்று நேரத்தில் அந்த இருவரில் ஒருவர் மட்டும், மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அப்பெண்ணின் கழுத்தைத் தொட்டு குனிய வைக்கிறார், பின் அப்பெண்ணின் தோளில் தட்டி விட்டு நகர்கிறார். வேளை நெருங்கி விட்டது என்பதை அப்பெண் உணர்ந்திருப்பாளோ? அந்த நேரம் அவளது மனதில் என்ன நினைத்திருப்பாள் என்று நமது மனம் பரிதவிக்கிறது.

அந்தப் பெண்ணிடமிருந்து நகர்பவர் தனது இடையிலிருந்து நீண்ட வாள் ஒன்றை உருவியெடுக்கிறார். அப்போது மட்டுமல்ல ஆரம்பம் முதலே அந்தப் பெண் அமைதியாய், எந்தச் சலனமும் இன்றி, எந்த எதிர்ப்பும் இன்றித் தலை கவிழ்ந்தபடியேதான் இருக்கிறாள். வெயிலில் பளபளக்கும் அந்த வாள் நிதானமாய் மேலெழுந்து அந்தப் பெண்ணின் பின்னங்கழுத்தைக் குறிவைத்து சட்டெனக் கீழ் இறங்குகிறது. ஒரே வெட்டில் அவள் தலை துண்டிக்கப்படுகிறது….

காணொளியின் காட்சிகள் முடிந்தது. ஆனால், அது உண்டாக்கிய உள்ளக் கொதிப்பும் ஆற்றாமையும் ஆத்திரமும் அவ்வளவு சீக்கிரம் முடிந்து போகாது. போகக் கூடாது.

அவள் பெயர், ரிசானா நஃபீக்!

ரிசானா-நபீக்
ரிசானா நபீக்

அவள் இலங்கையைச் சேர்ந்தவள். இசுலாமியத் தமிழ்பேசும் பெண். கிழக்கு இலங்கையில் இருக்கும் மூதூர் கிராமத்தில் ஒரு ஏழை முசுலீம் குடும்பத்தில் பிறந்தவள். 2004-ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து அவள் தந்தையின் வருமானம் நின்று போகிறது; குடும்பம் வறுமையின் பிடியில் சிக்குகிறது. பள்ளியில் நன்றாகப் படிக்கும் சிறுமி எனப் பெயர் வாங்கியிருந்த ரிசானா, குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப் போக்க வெளிநாட்டுக்கு வேலை செய்யத் தயாராக இருப்பதாக வீட்டாரிடம் தெரிவிக்கிறாள். அது 2005-ம் ஆண்டு.

1988 பிப்ரவரி மாதம் பிறந்தவளான ரிசானாவுக்கு அப்போது 17 வயது தான் ஆகியிருந்தது. பிழைக்க வேறு வாய்ப்புகள் இல்லாத அக்குடும்பத்தை அணுகும் இடைத்தரகன் ஒருவன், ரிசானாவின் பிறந்த தேதியை 02-02-1982 என்பதாக போலிச் சான்றிதழ் தயாரித்து அதனடிப்படையில் கடவுச் சீட்டும், சவுதியில் வேலை செய்வதற்கான பணி அனுமதியும் வாங்கித் தருகிறான். 2005 மே 4-ம் தேதி ரிசானா சவுதி செல்கிறாள். சவுதியின் தலைநகர் ரியாத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தவாதமீசா எனும் பகுதியைச் சேர்ந்த பணக்கார சவுதி ஷேக் ஒருவரின் வீட்டில் வேலைக்குச் சேர்கிறாள்.
வீட்டைப் பராமரிப்பது, சமைப்பது உள்ளிட்ட வேலைகளோடு மூன்று மாதங்களே நிரம்பியிருந்த ஷேக்கின் குழந்தையைப் பராமரிக்கும் வேலையையும் கவனித்து வருகிறாள். அதே மாதம் 22-ம் தேதி 17 வயதே நிரம்பியிருந்த ரிசானாவின் பொறுப்பில் தனது மூன்று மாதக் குழந்தையை ஒப்படைத்து விட்டு வெளியே செல்கிறாள் அந்த வீட்டின் எஜமானி. முன்பின் அனுபவமில்லாத ரிசானா, குழந்தைக்கு புட்டிப் பால் புகட்டுகிறாள். சற்று நேரத்தில் அக்குழந்தைக்குப் புரையேறி மூக்கிலிருந்து பால் வடிகிறது. என்ன நேர்ந்தது என்பதை உணராத ரிசானா, குழந்தைக்கு நீவி விடுகிறாள். குழந்தை தூங்கி விட்டதாகக் கருதிக் கொண்டு வேறு வேலைகளில் மூழ்குகிறாள்.
சற்று நேரத்தில் வீட்டுக்கு வரும் எஜமானி, குழந்தை இறந்து போயிருப்பதை காண்கிறாள் – ரிசானாவை அடித்துத் துன்புறுத்துகிறாள். தொடர்ந்து காவல் துறையிடம் கையளிக்கப்படும் பதினேழு வயதே நிரம்பிய சிறுமி ரிசானா மொழி தெரியாத நாட்டில், நண்பர்களோ உறவினர்களோ இல்லாத சூழலில் ஒரு கொலைப்பழியை எதிர் கொண்டு நிற்கிறாள். போலீசாரும் கண்மண் தெரியாமல் அடித்து வாக்குமூலம் கேட்கிறார்கள் – தமிழ் மட்டுமே அறிந்திருந்த ரிசானாவுக்கு மொழிபெயர்ப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கிறார்கள். அடி பொறுக்க முடியாமலும், கர்நாடகத்தைச் சேர்ந்தவர் (சிலர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள்) மொழிபெயர்த்துச் சொன்னதை விளங்கிக் கொள்ள முடியாமலும், அரபி மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலப் பத்திரத்தில் எழுதப்பட்டது என்னவென்று அறியாமலும் அதில் கையொப்பமிடுகிறாள் ரிசானா.
வழக்கு விசாரணைக்கு வருகிறது. இரண்டாவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்படுகிறார். ரிசானா தன்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்தை மறுக்கிறாள். அரபு தேசத்தில் நடந்த அந்த விசாரணையில், அரபிக் குடும்பம் தொடுத்த வழக்கில், தனது தரப்பில் வாதாட யாருமே இல்லாமல் ரிசானா நிர்கதியாக நின்ற நிலையில், நீதிமன்றத்தில் பேசப்படுவது என்னவென்பதையே புரிந்து கொள்ள முடியாமல் ரிசானா தவித்துக் கொண்டிருந்த நிலையில், அரபு போலீசார் முன்வைத்த ‘ஆதாரங்கள்’ மற்றும் குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடந்த அந்த ஒரு தலைப்பட்சமான விசாரணைகளின் முடிவில் அவளுக்கு ஷரியத் சட்டங்களின் அடிப்படையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். அது 2007-ம் ஆண்டு ஜூன்மாதம்.
2005-ம் ஆண்டு மே மாதத்திலிருந்தே சிறையிலடைக்கப்பட்ட ரிசானாவின் நிலை சுமார் ஓராண்டு காலம் வெளியுலகுக்கே தெரியவில்லை. அவளது வீட்டாருக்கும் எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை. ஹாங்காங்கைத் தலைமையகமாய்க் கொண்டு செயல்படும் ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தான் முதலில் இதை வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து ரிசானாவுக்கு அளிக்கப்பட்ட ஒரு தலைபட்சமான தீர்ப்பு உலகெங்கும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்போடு ரிசானாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யப்படுகிறது. மேல் முறையீட்டில் கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பே உறுதி செய்யப்படுகிறது. உலகளவில் இது சர்ச்சைக்குள்ளாகி விட்டிருந்த நிலையில், இலங்கையிலும் மக்கள் போராட்டம் வலுத்த நிலையில், இலங்கை அரசு இதில் தலையிட்டு மனிதாபிமான அடிப்படையில் ரிசானாவை விடுதலை செய்யக் கோருகிறது. தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே கூட மக்கள் போராட்டங்களுக்காக கொஞ்சம் ‘மனமிரங்கி’ சவுதி அரசுக்குக் கடிதங்கள் அனுப்புகிறார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளோடு மேற்குலகின் பிரபலங்களும் ரிசானாவை விடுவிக்க வேண்டுமென்று கோருகிறார்கள்.
குழந்தையின் பெற்றோர் இறந்த தமது குழந்தைக்கு பதிலாக ரிசானாவிடமிருந்து ‘குருதிப் பணம்’ பெற்றுக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தால், ஷரியா (ஷரியத்) சட்டப்படி அவள் சிரச்சேதத்திலிருந்து தப்ப முடியும் என்று ஷரியா சட்டம் கூறுகிறதாம். உடனே, சவுதி இளவரசர் குழந்தையின் பெற்றோர்களிடம் நேரடியாக பேசிப் பார்த்தாராம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்களாம். இதெல்லாம் மரண தண்டனையை தவிர்ப்பதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகள் என்று சவுதி அரசு கூறுபவை.
ரிசானாவின் உறவினர்களும், உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளும் அந்தப் பெற்றோருக்கு அனுப்பிய மன்னிப்புக் கடிதங்களும் மன்றாடல்களும், அல்லாவிடம் செய்யப்பட்ட துஆக்களும் ரிசானா மீண்டும் ஊர் திரும்புவாள் என்று வைத்த நம்பிக்கைகளும் பயனற்றுப் போயின. கடந்த ஜனவரி 9-ம் தேதி சவுதி உள்ளூர் நேரப்படி முற்பகல் 11:40க்கு ரிசானாவின் தலை வெட்டி வீழ்த்தப்பட்டது. காண்போர் பதைபதைக்க அல்லா அருளிய ஷரியத் சட்டப்படி பச்சையாய்ப் படுகொலை செய்யப்பட்டாள்.

ஷரியத் சட்டத்தை முன்வைத்து நடக்கும் வெட்டி விவாதங்கள்:


ரிசானாவின் படுகொலை உலகெங்கும் கடும் விவாதங்களைத் தூண்டியுள்ளது. இசுலாமிய ஷரியத் சட்டங்கள் சரியா தவறா என்பதைச் சுற்றி இவ்விவாதங்கள் நடந்து வருகின்றன. முசுலீம்களில் கடுங்கோட்பாட்டுவாதிகளான வகாபிகள் தவிர மற்றவர்களால் ரிசானாவின் கொலையை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இவர்களில் ஜனநாயக பூர்வமாகச் சிந்திக்க கூடிய மிகச் சிலர் மட்டும் இந்த தண்டனையை மாத்திரமின்றி, இதற்கு அடிப்படையாய் இருக்கும் ஷரியத் சட்டங்களையே கூட கேள்விக்குட்படுத்தி விமர்சிக்கிறார்கள்.

வகாபிகள் அளவுக்கு கடுங்கோட்பாட்டுவாதிகளாக இல்லாவிட்டாலும், இசுலாமிய சட்டங்களின் மேல் விசுவாசம் கொண்ட பலரும் இந்தக் கொலைக்குப் பல்வேறு வகையான வியாக்கியானங்களைத் தருகிறார்கள். அவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம் -

  1. குழந்தை மரணிப்பதற்கு உண்மையில் ரிசானா காரணமாக இருந்திருந்தால் இந்தத் தண்டனை மூலம் அவர் இவ்வுலகிலேயே தூய்மைப்படுததப்பட்டு இறை சந்நிதானத்தை அடைந்து விடுவார். அவருக்கு நல்ல எண்ணங்கள் இருந்திருந்தால் அதனடிப்படையில் அவர் உயர்ந்த சொர்க்கத்தை அடைவார்.
  2. அவள் எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டிருந்தால் அதுவும் அவருக்கு நன்மையே, அல்லாவிடத்தில் அதற்கான சிறந்த கூலியைப் பெற்றுக்கொள்வாள்.
  3. அறிந்து கொண்டே அவளுக்கு யாரும் அநீதி இழைத்திருந்தால் நிச்சயம் அவர்கள் அநியாயக்காரர்கள். அல்லாவின் கடுமையான தண்டனையிலிருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.
  4. மேலும் மன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவருக்கு இஸ்லாம் வழங்கிய உரிமையாகும், அவர் விரும்பினால் மன்னிக்கலாம், மன்னிக்காமலும் விடலாம். அவர் மன்னிக்கவில்லை என்பதற்காக குற்றவாளியோ, பாவியோ கிடையாது. அல்லா வழங்கிய உரிமையில் தலையிடவும், அவரை வஞ்சிக்கவும் நாம் யார் ?

அதாவது அனைவரின் கண் முன்பாகவே இகலோகத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு யாருமே காணாத பரலோகத்தில் தண்டனை வழங்கப்படும் என்று நம்ப வேண்டுமாம். ரிசானாவைப் போன்ற ஏழைகள் – மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் - ஷேக் குடும்பங்களைச் சாராதவர்கள் அநியாயமான முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்டால் ‘சொர்க்கம்’ கிடைக்குமாம்; யாருக்குத் தேவை அந்தச் சொர்க்கம்? ‘உளச் சுத்தியோடும் அர்ப்பணிப்போடும் வாழ்நாள் முழுக்க, மேல் வருணத்தாருக்கு நீ பீ அள்ளிக் கொண்டேயிருந்தால், உனக்கு அடுத்த பிறவியில் வருண புரமோசன் கிடைக்க கூடும்’ என்று கூறும் மனுநீதியின் அரபு மொழியாக்கம் தான் இந்த வாதங்கள்.

சுலாமிய மதவாதிகளின் தரப்பிலிருந்து இப்படுகொலையை ஆதரித்து வைக்கப்படும் அயோக்கியத்தனமான வாதங்களை உலகெங்குமுள்ள பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், நக்கீரன் இதழில் எழுதி வரும் ‘எதிர்குரல்’ எனும் தொடரில் கண்டித்திருந்தார். வழக்கின் விவரங்களை நேர்மையாக அலசும் மனுஷ்யபுத்திரன், மனிதாபிமானமற்ற விதத்தில் ரிசானா கொல்லப்பட்டது எவ்வகையிலும் நியாயமில்லை என்கிறார். ‘கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்’ என்கிற பழங்காலத்திய இனக்குழு சமூகங்களின் தண்டனை முறைகளை அப்படியே இன்றும் பின்பற்றுவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்.

மனுஷ்யபுத்திரனின் கட்டுரை வெளியானதும் அதை எதிர்த்து காட்டு மிராண்டித்தனமான எதிர்வினை தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த வகாபியர்களிடமிருந்து எழுகிறது. தவ்ஹீத் ஜமாத்தின் பி.ஜெயினுலாபிதீன், தனது தளத்தில் கிட்டத்தட்ட மனுஷ்யபுத்திரனை கொன்று போட வேண்டும் என்ற தோரணையில் இரத்தவெறி பிடித்து எழுதியிருந்தார். மேற்கோள் காட்டுவதற்கோ விவாதிப்பதற்கோ எந்த வகையிலும் தகுதியோ தராதரமோ இல்லாத நாலாந்தர பொறுக்கியின் மொழியில் ஏகவசனத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரையின் சுருக்கமான சாரம் இது தான் – “டேய் இடுப்புக்கு கீழே கால் இல்லாத மிருகபுத்திரா உன் குழந்தையை இப்படி கொன்றால் மன்னிப்பாயா?”

மனுஷ்யபுத்திரனை ரத்த வெறியுடன் கண்டிக்கும் ஜெயினுலாபிதீனின் கட்டுரை
மனுஷ்யபுத்திரனை ரத்த வெறியுடன் கண்டிக்கும் ஜெயினுலாபிதீனின் கட்டுரை

இத்துப்போன மதச்சட்டத்துக்கு விளக்கம் எதற்கு?

ரியத் சட்டங்கள் சரியானது தான் என்று நிறுவும் நோக்கம் கொண்ட மேற்படி வாதங்களில் இருக்கும் அபத்தங்களை ஆராய்ச்சி செய்வதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். எனினும் ஜெய்னுல்லாபிதின் உள்ளிட்ட வகாபியரின் இரத்தவெறி பிடித்த காட்டுக்கூச்சல்களின் முன் சில எளிய கேள்விகளை முன்வைக்கிறோம்.

ஈராக்கில் போர் துவங்குவதற்கு முன்பதாகவே பொருளாதாரத் தடை விதித்து மருந்துப் பொருட்களைத் தடுத்து ஐந்து இலட்சம் இராக்கிய குழந்தைகளை சாகடித்தது அமெரிக்கா. இதையெல்லாம் சவுதி அரசின் இடம், பணம், பொருள், ஆள்பல உதவியுடன்தான் அமெரிக்கா செய்தது.

ஷேக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்றின் இறப்புக்காக இந்த அளவுக்குத் துள்ளிக்குதிக்கும் பீ.ஜே, அமெரிக்காவின் அடியாளாக செயல்பட்டு உலகெங்கும் இசுலாமிய மக்களை கொன்று குவிப்பதற்கு துணை நின்ற சவுதி அரசை தண்டிக்க, இசுலாமிய சட்டத்தில் என்ன ஷரத்துகள் இருக்கின்றன என்று இவர்கள் இதுவரை ஆராய்ச்சி செய்யாத காரணம் என்ன? ’காஃபீர்களோடு’ கைகோர்த்து நிற்கும் சவுதி ஷேக்குகளின் பணத்தில் மஸ்ஜித் கட்டி தொழுகை நடத்துவதைக் காட்டிலும், மானங்கெட்ட வேலை எதுவுமில்லை என்றும், அப்படி காசு வாங்குபவன் இசுலாமியனே இல்லை என்றும் இவர்கள் ஏன் கூறுவதில்லை.

ஷரியத்தின் படி அந்தக்காசையெல்லாம், இராக் மக்களின் சார்பில், குருதிப் பணமாக வரவு வைத்துக் கொண்டு, சவூதி ஷேக்குகளின் குற்றத்தை மன்னித்துவிட்டார்களா பி.ஜே க்கள்?

ஜெயினுலாபிதீன்
பி.ஜெயினுலாபிதீன்

மிகவும் விரிவான வாழ்வியல் வழிகாட்டுதல்களைக் கொண்டதாகச் சொல்லப்படும் ஷரியத் சட்டங்களின் படி, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அதிலும் குறிப்பாக இசுலாமிய மதத்தைச் சேர்ந்த பெண்கள் அரபு தேசங்களுக்குச் சென்று வீட்டு வேலைகளில் ஈடுபடும் போது சந்திக்கும் பாலியல் கொடூரங்களுக்காக சவூதி ஷேக்குகள் எத்தனை பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன?

ஆப்கானிய தாலிபான்கள் ஷரியா சட்டப்படி பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்கிறார்கள், ஆண் துணையின்றி வெளியிடங்களுக்குச் சென்றாலே பெண்களைக் கொன்று போடுகிறார்கள் – ஆனால், அரபு தேசங்களோ மூன்றாம் உலக ஏழை நாடுகளில் இருந்து இசுலாமிய சிறுமிகளை வேலைக்கு தருவித்துக் கொள்கிறார்கள். அவர்களைச் சுரண்டுகிறார்கள்: பாலியல் வக்கிரங்களுக்கு கிடைத்த இலவசமான அடிமைகளாக கருதி அந்த பிஞ்சுகளைக் குதறுகிறார்கள்.

வெளி வேலைக்கு ஒரு பெண் விமானமேறுவதை ஷரியா அனுமதிக்கவில்லையென்றால், வளைகுடா ஷேக்குகள், இசுலாமிய ஏழைச் சிறுமிகளை எப்படி இறக்குமதி செய்கிறார்கள்? ஆண்கள் கூப்பிடுவது குற்றமில்லை, பெண்கள் போவதுதான் குற்றம் என்கிறதா இவர்களது சட்டம்? பரவாயில்லையே, நம்மூர் விபச்சார தடை சட்டம் மாதிரியே “நடுநிலையாக” இருக்கிறதே!

“இந்த விசயத்தில்” அல்லாவுக்கு பயந்து, நடந்து கொள்ள விரும்பும், 60, 70 வயதுக்கு மேற்பட்ட உண்மையான முஸ்லிம்கள், (ஷேக்குகள்,) 15 வயது சிறுமியாக இருந்தாலும் நிக்கா செய்து ஐதராபாத்திலிருந்து அழைத்துக் கொண்டு போய்விடுகிறார்கள். நிக்கா செய்து அழைத்துப் போவதால், இகலோகத்தில் பாஸ்போர்ட் விசா பிரச்சினையும் இல்லை. ஷரியா படி நடந்து கொள்வதால் சுவனத்தில் போதுமான பெண்களும் கிடைப்பதற்கும் உத்திரவாதம் உண்டு. இதெல்லாம் பி.ஜே போன்ற ஷரியா கன்சல்டன்சி சர்வீசஸ் நடத்துவோர் கொடுக்கும் ஐடியாவா, அல்லது டிராவல் ஏஜென்சி நடத்தும் முஸ்லிம்கள் கொடுத்த ஐடியாவா தெரியவில்லை.

குரானோ, ஷரியத்தோ சரியா, தவறா என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு எந்தத் தகுதியும் கொண்டவையும் அல்ல. நம்மைப் பொருத்தளவில் பார்ப்பன மனுநீதியை எந்த அளவுக்கு ம(மி)திக்கிறோமோ அதே தகுதியைத்தான் ஷரியத்திற்கும் ஒதுக்கியிருக்கிறோம்.

“இந்து சட்டம் எத்தனை பெண்டாட்டி வேண்டுமானாலும் கட்ட அனுமதித்தது. எங்கள் சட்டம் நான்கோடு உச்ச வரம்பு விதித்து விட்டது. அப்படிப் பார்த்தால் நாங்கள் தானே முற்போக்கு” என்று இசுலாமிய நண்பர்கள் தயவு செய்து கேட்காதீர்கள். அப்புறம் எங்கள் மதச்சட்டப்படி உச்ச வரம்பு 3 என்று யாராவது வருவார்கள். இன்னொருவன் எங்கள் மதத்தில் எல்லோரும் பாச்செலர்தான் என்பான். இந்த லூசுத்தனங்களின் பின்னால் மூச்சுக் கொடுத்துக் கொண்டிருப்பதல்ல நமது வேலை.

மதங்கள் உருவாக்கி வைத்திருக்கும் சட்டங்கள் எனப்படுபவை அவை தோன்றிய காலத்துக்கு மட்டுமே உரியவை. 7ம் நூற்றாண்டில் நாகரீகமற்று இனக்குழுக்களாய் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த ஃபதூயின் இன அரபிக்களை முகம்மது நபி அவருக்கு அந்தக்காலம் வழங்கியிருந்த வாய்ப்புகளுக்குட்பட்டு நெறிப்படுத்தினார். அந்தக் காலத்துக்கு மட்டும் பொருந்தக் கூடிய வாழ்வியல் நடைமுறைகளை வகுத்துக் கொடுத்தார். அதன் கதை அன்றோடு முடிந்தது. இது 21ம் நூற்றாண்டு. பங்குச் சந்தை சூதாட்டங்கள் பற்றியோ, இணைய வக்கிரங்கள் பற்றியோ, பாலியல் திரைக்காட்சிகள் பற்றியோ அல்லது விலையேற்றம், மின்சாரத் தடை, கேஸ் சிலிண்டர்களுக்குக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு சமகால வாழ்க்கைச் சிக்கல்களுக்கு குரானிலோ பைபிளிலோ என்ன சொல்லப்பட்டுள்ளது என்று தேடிக் கொண்டிருப்பது முட்டாள்தனம்.

ஆனால் ஜெய்னுல்லாபிதின் முதலான வகாபியர்கள் அந்த ஏழாம் நூற்றாண்டு விதிப்படிதான் இன்றும் வாழ வேண்டும் என்று பரிதாபத்திற்குரிய இசுலாமிய மக்களுக்கு கட்டளை போடுகிறார்கள். இல்லையென்றால் பத்வா விதித்து கொன்று விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். மனுஷ்யபுத்திரனுக்கு அவர் எழுதியுள்ள காட்டுமிராண்டித்தனமான மிரட்டலை பார்த்தால் போதும். இவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் மாட்டிக் கொண்டால் தமிழ்நாட்டில் ஏழை முஸ்லிம்கள், தலையில்லாமல் வாழும் கலையைக் கற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பணக்கார முஸ்லீம்கள், பி.ஜே யிடம் பணம் கட்டி, சொர்க்கத்துக்கு நுழைவுச்சீட்டு வாங்கிவிடுவார்கள்.

ஜெய்னுல்லாபிதின் உள்ளிட்ட வகாபியர்கள் இப்படியெல்லாம் இரத்த வேட்கையுடன் ஊளையிடுவதற்கு காரணம் இல்லாமலில்லை.
Thanks : Olirum Paathai
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யார் இந்த வகாபியர்கள் ?


 
 
 
காபிசம் அல்லது சலாஃபியிசம் என்று அழைக்கப்படும் சுன்னி இசுலாமியக் கடுங்கோட்பாட்டுவாதிகளின் பிறப்பிடம் அரேபியத் தீபகற்பம். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முகம்மது இப்னு அல்-வஹாப் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதுதான் வகாபிசம் எனும் இந்த மதப்பிரிவு.
 
மிகக் குறைந்த மக்கள் தொகையும் மிகப் பரந்த பாலைவனமும் கஞ்சிக்கே வழியில்லாத பொருளாதாரமும் கொண்டிருந்த அரபு தீபகற்பத்தில் நம்மூர் பாளையக்காரர்கள் போல கும்பல் கும்பலாய்ப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதில் திரிய்யா எமிரேட் எனப்படும் பகுதியின் இளவரசரான முக்கம்மது இப்னு சவூத்தோடு கைகோர்க்கும் வஹ்ஹாப், மதக் கடுங்கோட்பாட்டுவாதத்தை அடிப்படையாக வைத்து இசுலாமிய நாடு ஒன்றை உருவாக்க முனைகிறார்.

1744ல் திரிய்யா எமிரேட் சவுதி அரசானதைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி பல்வேறு விரிவாக்கச் சண்டைகளில் இறங்குகிறது. ஏற்கனவே அந்தப் பகுதியில் நிலவிய தர்ஹா வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற இசுலாமிய நம்பிக்கைகளை வாள் முனையில் ஒழித்துக் கட்டுகிறார்கள். சவுத்தின் அதிகாரம் 19 நூற்றாண்டின் துவக்கத்தில் ஒட்டோமன் சாம்ராச்சியத்தின் எகிப்திய தளபதியினால் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது. அதைத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டின் துவக்க காலம் வரைக்கும் ஒரு நிலையான அரசாட்சியின்றி சவுத் வம்ச வாரிசுகள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். சில காலத்திற்கு ரியாத்தைச் சுற்றியுள்ள மிகச் சிறிய பகுதியைக் கட்டுப்படுத்தவும் செய்கிறார்கள்.

முதலாம் உலகப் போரின் சமயத்தில் நேசநாடுகளுக்கு (இங்கிலாந்து பிரான்ஸ், ரஷ்யா) எதிரணியான அச்சுநாடுகளோடு (ஜெர்மன், ஆஸ்த்ரியா, இத்தாலி) இருக்கிறது துருக்கியை மையமாகக் கொண்ட ஒட்டோமன் பேரரசு. இந்நிலையில் ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட அரேபிய பகுதியைச் சேர்ந்த குட்டிக் குட்டி பாளையக்காரர்களில் சிலர் ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்திலிருந்து விடுபடுவதற்காக இங்கிலாந்தை ஆதரிக்கின்றனர். அதில் முதன்மையாக இருக்கிறார் சவுத் வம்சாவளியைச் சேர்ந்த இப்னு சவுத். அவருக்கு துணையாக நின்றது வகாபிய அடிப்படைவாதத்திற்கு ஆட்பட்டிருந்த பழங்குடியினர்.

வஹாப் மற்றும் சவூத் குடும்பங்கள் அன்றிலிருந்து இன்று வரை பரஸ்பர திருமண பந்தங்களின் மூலம் இணைந்துள்ளன – இவர்கள் தாம் சவுதி அரசின் பல்வேறு அடுக்குகளில் அமர்ந்து அதிகாரம் செலுத்துகிறார்கள்.

மேலும் விரிவான வாசிப்புக்கு

அமெரிக்க - சவுதி காதல் கதை
அமெரிக்க – சவுதி காதல் : முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சவுதி மன்னருடன்

20ம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளிடையே அதைக் கைப்பற்றும் நாய்ச்சண்டை மூள்கிறது. இதில் சவுதி அரச குடும்பம் நேரடியாக அமெரிக்காவின் காலில் சரணாகதியடைகிறது. எண்பதுகளில் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் படைகளை விரட்டியடிக்க நேரடியாக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட முஜாஹித்தீன் குழுக்களுக்கு அமெரிக்க உத்தரவின் படி, ஆள் பலம் முதல் மத அடிப்படையிலான தத்துவ அடிப்படை வரை வழங்கியதும் இசுலாமிய மதவெறியையும் ஊட்டியதும் சவுதியைச் சேர்ந்த வகாபிகளே.

மட்டுமின்றி, அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் நடத்திய ஈராக் போர் உள்ளிட்ட பல்வேறு போர்களிலும் அமெரிக்காவின் மத்திய கிழக்குப் பிராந்திய செல்ல ரவுடியாக செயல்பட்ட இசுரேலுக்கும் சவுதி நேரடியான நட்பு நாடாகவும் அடியாளாகவும் விளங்கி வருகிறது. ஈரான், சிரியா, லெபனான் என்று எங்கெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடியாட்களும் கூலிப்படையும் தேவையோ அங்கெல்லாம் முன்னின்று உதவிக்கு வருவது சவுதி அரசும் அதன் வகாபிய தத்துவமும் தான்.

உலகெங்கும் இசுலாம் அல்லாத மக்களிடையே எழும் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களை நிறுவனமயமாக்கி நீர்த்துப் போகச் செய்ய என்.ஜி.ஓக்களை அமெரிக்கா நம்பியிருக்கிறதென்றால், இசுலாமியர்களை அரசியல் ரீதியில் காயடிக்க சவுதி வகாபியம் உதவி செய்கிறது. சவுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் நேரடியாக அமெரிக்கா முதலீடு செய்துள்ளது என்றால், அவற்றில் பங்குகளைக் கொண்டிருக்கும் ஷேக்குகள் தங்கள் வருமானத்தை முதலீடு செய்வதும் அமெரிக்காவில் தான். அமெரிக்கப் பங்குச சந்தையில் மட்டுமின்றி, வால்வீதி (Wall Street) யின் முக்கியமான நிதிமூலதன வங்கிகள் உள்ளிட்ட முக்கியமான தேசங்கடந்த பன்னாட்டுத் தொழிற் கழகங்களின் பங்குகளிலும் ஷேக்குகள் தங்கள் பணத்தைக் கொட்டியிருக்கிறார்கள்.
 
ஒருவேளை இராணுவ ரீதியிலோ பொருளாதார ரீதியிலோ அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்ச்சியடையுமானால் அது அரபி ஷேக்குகளையும் தன்னோடே பாதாளத்திற்குள் இழுத்துச் சென்று விடும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இவர்கள் இருவரின் நலனும் பிரிக்கவொண்ணாதபடிக்கு பரஸ்பரம் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது.

ரூபர்ட் முர்டோச்சின் ஸ்டார் குழுமத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகெங்கும் அமெரிக்கா நடத்தும் இசுலாமிய நாடுகளுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போர்களுக்கு சாதகமாக கருத்துப் பிரச்சாரம் செய்து போருக்கு ஆதரவான பொதுக்கருத்தைக் கட்டமைப்பது இந்த ஸ்டார் குழுமம் தான். இதில் பிரதான பங்குதாரர், சவுதி இளவரசர். அந்த வகையில் இசுலாத்தையும் இசுலாமியர்களையும் கேவலமாக சித்தரிப்பதற்குத் துணை போகும் சவுதி ஷேக்குகள், மறுபுறம் தூய இசுலாம் எனும் பெயரில் வகாபியிசத்திற்கு ஸ்பான்சர் செய்கிறார்கள்.

உலகின் எந்த மூலையிலும் அமெரிக்கா வீசும் குண்டுகளுக்குச் சிதறி விழும் இசுலாமியச் சடலங்களிலிருந்து வழிந்தோடும் குருதியில் சவுதி அரசுக்கும் பங்கு கிடைக்கிறது. அந்தப் பங்கிலிருந்து கிள்ளிக் கொடுக்கப்படும் கோடிக்கணக்கான டாலர்களில் தான் வகாபிய மதரஸாக்களும் பள்ளி வாசல்களும் கொழிக்கின்றன. நமது ஜெய்னுல்லாபிதின்கள் மஞ்சக்குளிக்கிறார்கள்.

எண்பதுகளில் பாகிஸ்தானில் முஜாஹித்தீன்களை அறுவடை செய்ய அமெரிக்கா உருவாக்கிய மதரஸாக்கள் இன்று அதற்கு தலைவலியாக உருவெடுத்திருப்பதாக சிலர் கணிக்கிறார்கள். ஆனால், தன்னால் உருவாக்கப்பட்ட இந்தக் கடுங்கோட்பாட்டுவாதிகளின் நடவடிக்கைகளையே நாகரீக உலகத்திற்கான அச்சுறுத்தலாக பிரச்சாரம் செய்து அதையே தனது ஏகாதிபத்திய இராணுவ நடவடிக்கைகளுக்கான நியாயமாகவும் அமெரிக்கா முன்னிருத்துகிறது. இந்த மேட்ரிக்ஸ் உலகில் அமெரிக்க ஹீரோ தான் இசுலாமிய பூச்சாண்டியின் கர்த்தா. அந்தப் பூச்சாண்டியின் சின்னச் சின்ன சீண்டல்கள் தான் தனது போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்த அமெரிக்கா வைத்திருக்கும் முக்கியமான துருப்புச் சீட்டு.

இந்தப் பின்னணியில் வைத்துத் தான் உலகெங்கும் விஷம் போல பரவிவரும் வஹாப்பியத்தை நாம் ஆராய வேண்டும். இந்தியாவைப் பொருத்தமட்டில் தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட வஹாபிய அடிப்படைவாதிகள் இசுலாமியர்களின் சமூகப் பொருளாதார பிரச்சினைகளுக்குப் போராடுவதில்லை. கோகோ கோலா, டிஷ் ஆன்டனா, உலகமயமாக்கம் ஆகியவை குறித்து இசுலாம் என்ன சொல்கிறது என்று கூறுவதில்லை. தூய இசுலாமியர்கள் இப்படி சைத்தான் தனமான கேள்விகளைக் கேட்பதும் இல்லை.

கடுங்கோட்பாட்டுவாத நம்பிக்கைகளை காத்துக் கொள்ளும் நோக்கில் மட்டுமே குறியீட்டு எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்துவது தஸ்லீமா நஸ்றீன், சல்மான் ருஷ்டி போன்றவர்களை எதிர்த்துப் போராடுவது, உழைக்கும் மக்களின் தர்ஹா வழிபாடு எதிர்ப்பு போன்றவற்றில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஒருபக்கம் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து பயங்கரவாத அமைப்புகள் இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தும் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் நிலையில், ஜெய்னுல்லாபிதின் போன்றவர்கள் முன்னின்று அதைத் துரிதப்படுத்துகிறார்கள். இந்தக் கடுங்கோட்பாட்டுவாத வெறித்தனங்கள் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நச்சுப்பிரச்சாரங்களுக்கு ஒரு அரசியல் அடிப்படையை தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்குகிறது.

மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்

பீ.ஜே தளத்தில் வெளியாகியிருக்கும் மனுஷ்யபுத்திரனுக்கான எதிர்வினையில் தொனிக்கும் காட்டுமிராண்டித்தனத்தை அவதானித்திருப்பீர்கள்.
 
 
 
இது போன்ற காட்டுமிராண்டித்தனமான அடிப்படைவாத நடவடிக்கைகள் தான் சும்மா இருக்கும் இந்துக்களுக்கும் கூட காக்கி டவுசர் மாட்டி ஆர்.எஸ்.எஸ் ஷாக்காவுக்கு தெளிவாக மேப் போட்டு அனுப்பி வைக்கின்றது. இதன் விளைவுகளை பீ.ஜே எதிர்கொள்ளப் போவதில்லை – சாதாரண உழைக்கும் வர்க்கத்து இசுலாமியர்கள் தான் எதிர்கொள்ளப் போகிறார்கள். இந்தியாவில் இந்து பயங்கரவாதம் தன்னளவிலேயே ஒரு பாசிச அரசியல் அடிப்படையைக் கொண்டிருந்தாலும், மேலதிகமாக சாதாரண உழைக்கும் மக்களிடம் அதற்கு ஒரு அங்கீகாரம் வாங்கித் தரும் வேலையை பீ.ஜே போன்றவர்கள் செய்கிறார்கள்.

ஆதிக்க சாதியில் பிறந்த ஜனநாயகவாதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக சாதிய வன்கொடுமை நிகழும் போது அதை முன்னின்று எதிர்க்க வேண்டும். ஒரு ஜனநாயகவாதி என்கிற வகையில் அது தான் அவர்களின் முதன்மையான கடமை. அதே போல் இசுலாமியர்களில் கொஞ்சமேனும் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் முன்னின்று பீ.ஜே உள்ளிட்ட கடுங்கோட்பாட்டுவாதிகளையும், ஷரியத் சட்டத்தையும் எதிர்க்க வேண்டும். இசுலாமிய மத அடிப்படைவாதத்தால் வெட்டி வீழ்த்தப்பட்ட ரிசானாக்களின் தலைகளுக்கு அது தான் நாம் கொடுக்கக் கூடிய நேர்மையான பதிலாக இருக்க முடியும்.

ஆனால் ஜைனாலுபிதீன் போன் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் இசுலாமியராக பிறந்து ஷரியத்தையும், கடுங்கோட்பாட்டு வாதத்தையும் எதிர்க்கும் இசுலாமியர்கள் மிகக் குறைவு. இதுதான் தவஹீத் ஜமாஅத்துக்களின் பலம். இந்நிலையில் பிறப்பால் இசுலாமியராக இருந்தாலும் மனுஷ்ய புத்திரன் வெளிப்படையாக இவர்களை மட்டுமல்ல இவர்கள் புனித ஜல்லி அடிக்கும் இசுலாமிய மத பிற்போக்குத்தனங்களையும் கண்டிக்கிறார். அதுதான் அவர் மீது இவர்கள் கொள்ளும் கொலைவெறிக்கு அடிப்படை.

நாம் மனுஷ்யபுத்திரனை ஆதரிப்பதோடு குறிப்பாக இசுலாமிய நண்பர்கள் வெளிப்படையாக தவஹீத்தையும், பிஜேவையும், ஷரியத்தையும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இல்லையெனில் இசுலாமிய மக்களை ஒரு இருண்ட காலத்தில் மூழ்க வைத்து ஷரியத்தின் பெயரில் அவர்களை ஆயுள் கைதிகளாக்கி தொடர் விளைவாக இந்து மதவெறியர்களை மனங்குளிர வைக்கும் ஆபத்திற்கு நீங்கள் துணை போனதாக வரலாறு உங்களை கேள்வி கேட்கும்.

இசுலாமிய நண்பர்கள் வெளிப்படையாக பேச வேண்டும், ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நட்புடன் முன்வைக்கிறோம்.

பின்குறிப்பு:

1. இந்தப் பதிவு ஆர்.எஸ்.எஸ் டவுசர்களுக்கு மகிழ்ச்சியளித்திருப்பின், அவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டியது ஜெய்னுலாபிதினுக்கே! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

2. ‘விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்’ என்று பி.ஜே உள்ளிட்ட இஸ்லாமிய தலைவர்களும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், ரிசானா விவகாரத்தில் ‘நாங்கள் பயங்கரவாதிகள்தான்’ என்று பி.ஜெயினுலாபிதீன் உள்ளிட்ட இஸ்லாமிய மதவாதிகள் வெளிப்படையாகக் கூவுகின்றனர். இவர்களைக் கண்டிக்காமல் விஸ்வரூபத்தை மட்டும் எதிர்க்க முடியுமா?
Thanks : Olirumpaathai

சுஜாதா : சிறுகதை


 
 
என் முதல் தொலைக்காட்சி அனுபவம்

 
 
ஸ்ரீரங்கத்துக்கு டெலிவிஷன் அம்பதுகளிலேயே வந்துவிட்டது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்! தெற்கு உத்தர வீதியில்தி ரங்கநாதா ரேடியோ அண்ட் டெலிவிஷன் டிரெயினிங் இன்ஸ்டிடியூட்என்ற போர்டு திடீர் என்று தோன்றியது. ‘ப்ரொப்: அண்ணாசாமி ஸி அண் ஜி லண்டன்என்று அடி வரியில் இருந்தது. நான் அப்போது எம்..டியில் எலெக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு மூன்றாம் ஆண்டு கடைசி செமஸ்டரில் ப்ராஜெக்ட் படலத்தில் ஜாலியாக இருந்தேன்.

ரங்கு கடையில் இதுபற்றித் தீவிர சர்ச்சை நடந்தது. ‘‘இண்டியாவிலேயே டெலிவிஷன் கெடையாது. எப்டிரா ஸ்ரீரங்கத்தில் மட்டும் வரும்?’’

‘‘வரும்ங்கறாரே! அண்ணாசாமி சொல்றார்அமெரிக்காவில் காட்டறது நமக்கும் தெரியறதாம்.’’

‘‘புளுகுடா. நீ என்னடா சொல்றேஎலெக்ட்ரானிக்ஸ் படிச்சிருக்கியே?’’

‘‘சான்ஸே இல்லை!’’ என்றேன்.

‘‘அவர் வந்தா கேட்டுருவமே.

பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காராமேஆள் எப்படி?’’

‘‘சுமார் முப்பது வயசிருக்கும். லேசா தொந்தி முன்&னற்க வழுக்கை. சம்பா சம்பான்னு ஒரு பொண்ணு. சித்துப் பண்ணி வெச்சாப்பல இருக்குமே, நீங்கள்ளாம் பயங்கரமா சைட் அடிச்சிண்டிருந்தீங்களேஅவளைக் கல்யாணம் பண்ணிண்டிருக்கார்’’ என்றான் ரங்கு.’’

‘‘அமெரிக்கால படிச்சிருக்காராம். அதனால வயசு வித்தி யாசம் ஜாஸ்தியா இருந்தாலும் ஒத்துண்டிருக்கா.’’

‘‘இதைவிட அநியாயம் உண்டா ரங்கு?’’ என்று தம்பு ஆத்துப் போனான். தம்பு ஒரு காலத்தில் சம்பாவைக் காதலித்தவன்.

ஒரு முறை தெற்கு வாசலுக்கு கோயில் வழியாகப் போகாமல் தெற்கு உத்தர வீதி வழியாகச் சென்றபோது, அந்த போர்டைப் பார்த்தேன். வாசலில் பையன்கள் கோடுகிழித்து வீதி கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந் தார்கள். பெரிய திண்ணையுள்ள அகலமான வீடு. போர்டு புதுசாக எழுதியிருந்தது. அதை வெளிச்சம் காட்ட பல்பெல் லாம் இருந்தது. நெற்றியில் எலுமிச்சை > பச்சைமிளகாய் வைத்துக் கட்டியிருந்தது.

‘‘அது என்னடா ஸி அண்ட் ஜி? ஓமியோபதியா?’’ என்றான் ரங்கு.

‘‘இல்லை ரங்கு. சிட்டி அண்ட் கில்ட்ஸ்னு லண்டன்ல ஒரு இன்ஸ்டிடியூட் நடத்தற பரீட்சை. .எம்... மாதிரி இதும் ஒரு பரீட்சை. பாஸ் பண்ணியிருக்கலாம்.’’

‘‘அதில் டெலிவிஷன் எல்லாம் கத்துத் தருவாளோ?’’

‘‘இருக்கலாம். அதனால அப்படி போர்டு போட்டுண்டு இருக்கலாம். ஆனா, ஸ்ரீரங்கத்தில் டெலிவிஷன் கிடையாது; தெரியாது!’’

அவரே ரங்கு கடைக்கு ஒருமுறை வந்திருந்தார். ‘‘ரங்கு, இன்சுலேஷன் டேப் இருக்குமா?’’

‘‘இல்லை. அது கறுப்பா சேப்பான்னு கூட தெரியாது!’’

‘‘கறுப்பு. இதெல்லாம் கடைன்னா வாங்கி வெச்சுக் கணும்.’’

‘‘எப்படி இருக்கும்?’’

‘‘தொட்டா ஒரு பக்கம் ஒட்டிக்கிறா மாதிரி இருக்கும். ஒயருக்கு கனெக்ஷன் கொடுக்கறப்ப, ஷாக் அடிக்காம இருக்க டேப் சுத்தணும்.’’

ரங்கு தன் தொழில்நுட்ப அறிவை அதற்குமேல் விருத்தி செய்ய விரும்பவில்லை.

‘‘அண்ணாசாமிஎன்னமோ சொல்றா, உங்காத்தில டி.வி>யெல்லாம் இருக்காமே?’’

‘‘ஒரு தடவை வந்து பாரேன்…’’

‘‘நான் எங்க கடையை விட்டுட்டு வரது!’’

‘‘ஆமா, வியாபாரம் அப்படியே தட்டுக்கெட்டுப் போறது. ஓட்டிண்டிருக்கான். போய்ப் பார்த்துட்டுத்தான் வரலாமே!’’ என்றான் தம்பு. அவனுக்கு சம்பாவை பார்க்க வேண்டும்.

‘‘சம்பா சௌக்கியமா மாமா?’’

‘‘டேய்! மாமா இல்லைடா அவர். சரி அண்ணா வரேன். அதென்னதான் சமாசாரம்னு புரியறா மாதிரி சொல்லும். என்னவோ பேசிக்கிறாஅம்மணக்குண்டி பொம்மையெல்லாம் தெரியறதாம்!’’

‘‘சேச்சேஅதெல்லாம் இல்லை!’’

‘‘பின்ன என்னதான் வெச்சிருக்கீர்?’’

‘‘எதிர்காலத்தில இண்டியா வுக்கு டெலிவிஷன் வரத்
��ான் போறது. இப்பவே டெல்லில பரீட்சார்த்தமா ஆரம்பிச்சிருக்கா. அது நாடு முழுக்கப் பரவினதும் டி.வி. ரிப்பேர் செய்ய நெறைய பேர் தேவைப்படுவா. அதை எதிர் கொள்ள நம் இளைஞர்களைத் தயார் பண்ணப் போறேன். இப்பவே சேந்தா சலுகைல கத்துத் தருவேன்.’’

‘‘எத்தனை?’’ என்றான் ரங்கு.

‘‘அவாவா வசதிக்கு ஏத்தாப்பல.’’

‘‘இதா& வேணாங்கறது. சில்றை எத்தனைகரெக்டா சொல்லுமேன்.’’

‘‘ஏழையா இருந்தா இலவசமா கூட சொல்லித் தருவேன். முதல் பாடம் ஃபண்டமெண்டல்ஸ் ஆஃப் டெலிவிஷன், எல்லாருக்கும் இலவசம்!’’

‘‘பொம்மை தெரியுமா?’’

‘‘கட்டாயம்.’’

ரங்கு என்னைப் பார்த்தான். ‘‘நான்கூட சேரலாம் போலி ருக்கே. தம்பு சேர்றியா?’’

‘‘ஒரு நாள் போய்த்தான் பார்க்கணும்டா!’’ என்றான். ‘‘உன்னைக் கேட்டா டி.வி. கிடையாதுங்கறே?’’

எம்..டி>யில் மூன்றாம் வருஷத்தில் எனக்கு பாடத்தில் டி.வி. உண்டு. அது வி.எச்.எஃப். அலைவரிசையைப் பயன்படுத்துவதும் லைன்ஆஃப் சைட் பற்றியும் படித்திருக்கிறேன். அதை ரங்குவுக்கு விவரிக்க முற்பட்டேன்.

‘‘எல்லாம் சரி. நீ நிஜ டி.வி. பார்த்திருக்கியா?’’

நிஜ டி.வி-யை ஒரு தடவைதான். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொன்விழாக் கண்காட்சியின்போது பிலிப்ஸ்காரர்கள் கிண்டி இன்ஜினீயரிங் காலேஜில் ஒரு க்ளோஸ் சர்க்யூட் டி.வி. வைத்திருந்தார்கள். ஒரு ரூமில் காமிரா, மறு ரூமில் ரிசீவர் வைத்திருந் தார்கள். வந்திருந்த பெண்களையெல் லாம் காட்டினார்கள். கூட்டம் அலைமோதியது. ஒரு மணி நேரம் காத்திருந்ததால் திடுக்கிட்ட முகங்கள் தெரிந்தன.

ரங்குவுடன் தெற்கு உத்தர வீதிக்கு ஒரு நாள் சாயங்காலம் போயிருந்தேன். வாசலில் தெற்குச் சித்திரை வீதியுடன் பென்சில் மாட்ச் ஓடிக் கொண்டிருந் தது. நாங்கள் போனபோது பால்காரன் வந்து மடியில் தண்ணியடித்து பால் கறப்பதற்காக உருவிக் கொண்டிருந் தான். இடைவேளை விட்டிருந்தார்கள்.

அண்ணாசாமி, ‘‘வாங்க வாங்கசம்பா காபி போடு!’’ என்று வரவேற் றார். உத்தர வீதிக்கு சாதாரணமாக நாங்கள் அதிகம் போகமாட்டோம். அவை எல்லாம் எங்களுக்கு அரைவீதிகள். ஒரு பக்கம்தான் வீடு. எதிர்ப்பக்கம் கோயிலின் மதில். முள்ளுச் செடியாக இருக்கும். எத்தனைதான் சொன்னாலும் யாராவது ஒருவர் அல்பசங்க்யைக்கு ஒதுங்கிவிடுவார்கள். மேலும் அந்த நாட்களில் மதில் சிதில நிலையில் இருந்ததால், தலைமேல் விழுந்துவிடும் பயமும் இருந்தது. ஆனால், கிரிக்கெட்டுக்கு ஒரு சாரி இல்லாததால் ஏகாந்தமான இடம்.

‘‘மாமா மண்டி போட்டுண்டு க்ளான்ஸ் பண்றப்ப மார்ல பட்டா எல்.பி. கொடுக்கலாமா மாமா?’’ என்று என்னை ஒரு சிறுவன் வந்து கேட்டான்.

எனக்கு உட& சொல்லத் தெரிய வில்லை. அண்ணா, ‘‘வாங்க வாங்க’’ என்று வரவேற்று, சலுகையாக பனியன் போட்டுக் கொண்டார். உள்ளே சென்றோம்.

‘‘ஈயம் பூசறீங்களா என்ன?’’

‘‘இல்லை சால்டிரிங்’’ என்றார்.

ஒரு ரேடியோ கவிழ்த்துப் பிரிக்கப்பட்டு, உள்ளே கசகச வென்று பார்ட்டுகளுடன் கிடந்தது. அதன் .எஃப். டிரான்ஸ்ஃபார்மரை ஒரு குட்டிப் பையன் பலகை மேல் நின்று சீண்டிக் கொண்டிருந் தான்.

என்னவோ சத்தங்கள் கேட்டன.

இந்த ஓரத்தில் நிர்வாணமாக ஒரு ஸ்பீக்கர் வைத்து, ரேடியோவின் பல பாகங்கள் பரவலாக இருக்கவிந்தையாக அதில் கரகரப்ரியாவில் ஒரு மாமிபக்கல நிலபடிபாடிக் கொண்டிருந்தாள். ‘ஆர்.எஃப். ஆம்ப்ளிஃபையர்வெச்சா எல்லா ஸ்டேஷனும் கேக்கும்!’’ என்றார் அண்ணா.

‘‘எங்கய்யா உம் டெலி விஷன்?’’

ஜமக்காளத்தால் மூடியிருந்த ஒரு வஸ்துவைக் காட்டினார். ‘‘அதுக்குள்ள இருக்கு. பசங்க கிரிக்கெட் ஆடிண்டிருக்கான்முடிக்கட்டும். பந்து அடிச்சா பிக்சர் டியூபு உடைஞ்சுடும்!’’

‘‘அதுல பொம்மை தெரியுமா?’’ என்றான் ரங்கு.

‘‘ஆமா.’’

‘‘என்ன புருடா விடறீர்?’’ என்று என்னைப் பார்த்தான். ‘‘ஏய் நீ பொம்மை வராதுன்னுதா& சொல்றே?’’

‘‘ஆமா…’’ என்றேன்.

‘‘டி.வி. ஸ்டேஷ& இல்லாம எப்டி ஓய் பொம்மை தெரியும்? இப்ப ரேடியோவுக்கு, ரேடியோ ஸ்டேஷன் வேணும். டி.வி-க்கு டி.வி. ஸ்டேஷன் வேணுமா, இல்லையாநீ என்னடா சொல்றே?’’

‘‘நிச்சயம் வேணும். நான் படிச்சபடி நிச்சயம் வேணும்!’’ என்றேன்.

அண்ணா என்னைப் புன்னகையுடன் பார்த்தார். ‘‘அவ்வளவுதான் நீ படிச்சது. நீங்கள்ளாம் ஏட்டுச்சுரைக் காய். டெர்மன் போட்டிருக் கறதை அப்படியே நெட்ரு. நான் பிராக்டிக்கல். இந்த ரேடியோவைப் பார்த்த இல்லைஇது முழுக்க நா& அசெம்பிள் பண்ணது. டிரான்ஸ்ஃபார்மர் நா& சுத்தினது. டிராக்கிங், அலைன்மெண்ட், ட்யூனிங் எல்லாம் நான் பண்ணது. உன்னால முடியுமா சொல்லு! எங்கிட்ட ஹாம் லைசென்ஸ் இருக்கு.’’

நான் பிடிவாதமாக, ‘‘டி.வி. ஸ்டேஷன் இல்லாம டி.வி. தெரியாது!’’ என்றேன்.

‘‘அப்டின்னு நினைச்சிண்டிருக்கே. நீ கத்துக்க வேண்டியது நிறைய இருக்குப்பா.’’

ரங்கு, ‘‘ஓய் அவன் டி.வி. எல்லாம் படிச்சவன். எதுக்கு ஊரை ஏமாத்திண்டு, வாண்டுப் பசங்களுக்கெல்லாம் டி.வி. சொல்லித் தரேன்னு, ஒரொரு கிளாஸ§க்கும் அஞ்சு ரூபா வாங்கறிராமே?’’

‘‘ரங்கு, நான் கொடுக்க வசதியுள்ள வாகிட்டதான் வாங்கறேன். என் கரிகுலம் பாரு முதல்ல. டி.வி. ப்ரின்சிப் பிள். அப்புறம் பிராக்டிக்கல். சால்டரிங், பென்ச் வைஸ், கார்ப்பெண்டரி அப்புறம் காயில் சுத்தறது. பார்க் ரேடியோ, பஞ்சாயத்து ரேடியோவெல் லாம் ரிப்பேருக்கு இங்கதான் வரது.’’

நான் பிடிவாதமாக ‘‘டி.வி. ஸ்டேஷன் இல்லாம டி.வி. தெரியாது!’’ என்றேன்.

‘‘முதல்ல அது என்ன பெட்டிகாட்டும். பார்த்தா நெல்லு கொட்டற பீப்பா மாதிரி இருக்கு.’’

அண்ணாசாமி மிகுந்த கோபத்துடன் ‘‘அரைகுறையா படிச்சவா, சந்தேகப் படறவா, கேலி பண்றவாளுக்கெல்லாம் செட்டை காட்டமாட்டேன். ஒஸ்தி செட்டு இது. ஆர்.ஸி.. தெரியுமா?’’

‘‘காட்றதுக்கு எதும் இல்லைன்னு அர்த்தம்!’’

‘‘என்னவேணா நினைச்சுக்கோ.’’

சம்பா எல்லோருக்கும் வெள்ளி தம்ளரில் காபி கொண்டுவந்து வைத்தாள்.

தம்பு, ‘‘என்ன சம்பா சௌக்யமா?’’ என்று வாத்சல்யமாக விசாரித்தான். ‘‘பழசெல்லாம் ஞாபகமிருக்கா?’’ அண்ணா அதை ரசிக்கவில்லை.

‘‘சம்பா நீ உள்ளபோ!’’ என்றார்.

சம்பா ஏறக்குறைய அவர் மகள் போல இருந்தாள்.

நாங்கள் வெளிவந்தபோது அந்த எல்.பி.டபிள்யூ. தீர்மானத்தில் மாட்ச் கலைக்கப்பட்டுவிட்டது.

தம்பு ஆத்து ஆத்துப் போனான். ‘‘இந்த சம்பாவுக்கு நான் கொடுத்த லெட்டர் எல்லாம்அவ போட்ட பதில் எல்லாம் காட்டினா ரசாபாசமாய்டும். போனாப் போறதுன்னு விட்டுக் கொடுத்தேன்’’ என்றான்.

‘‘சும்மார்றா! பழசெல்லாம் கிளறாதே.’’

ஒரு காலத்தில் தம்புதான் சம்பாவைக் கல்யாணம் செய்து கொள்வதாக நிறையப் போக்குவரத்தெல்லாம் இருந்தது. அவளுக்கோ இவனுக்கோ செவ்வாய் தோஷம் என்று கல்யாணம் நின்றுவிட்டதாம். மேலும் தம்பு அவ்வளவு வசதி யுள்ளவன் இல்லை. ஒரு வருஷம் சன்யாசியாகப் போகிறதாக யோசித்துவிட்டு ஸ்ரீனிவாச நகரில் ஜெயலக்ஷ¢மி என்ற அடக்கமான பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு விட்டான். அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். இருந்திருந்தால் என்னைவிட ரெண்டு வயதுதான் மூத்தவன்.

‘‘சில பேருக்கு அதிர்ஷ்டம்டா!’’ என்றான் தம்பு பொதுப்படையாக. டி.வி. சர்ச்சை அத்துடன் ஓயவில்லை. அண்ணாசாமி கடைக்கு வரும்போதெல்லாம் தம்பு அவரைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தான்.

‘‘என்ன அண்ணாடி.வி. நன்னாத் தெரியறதா? அமெரிக்காகாரன் கப்பல் கார்ல போறதெல்லாம் தெரியறதாமே!’’

அண்ணாசாமி, ‘‘நம்பாதாளுக்கு ஒண்ணும் தெரியாது. பகவான் மாதிரி அது. என்ன சொன்னாலும் நம்ப வைக்க முடியாது!’’ என்றார்.

‘‘மாடிபூரா ஏரியல் போட்டிருக் கீராமேதுணி உலத்தவா?’’

‘‘ஆமா யாகி அர்ரே. உங்களுக் கெல்லாம் சொன்னா புரியாது!’’ என்று டெக்னாலஜியை முகத்தில் வீசினார்.

அவர்போனதும், ‘‘யாகி அர்ரேன்னா என்னடா? என்ன புருடா விடறான்பாரு மனுஷன்!’’

‘‘இல்லை ரங்கு. அந்த மாதிரி ஒரு அர்ரே இருக்கு. சிக்னல் வீக்கா இருந்தா அதை அதும் பக்கம் திருப்பினா வாங்கிக்கும் ஏரியல் மாதிரி.’’

‘‘அப்ப அவர் சொன்ன மாதிரி டி.வி. தெரியும்ங்கறே?’’

‘‘சான்ஸே இல்லை! சிக்னல் இருந்தாத்தா&?’’

‘‘அமெரிக்காகாரன் அனுப்பறது?’’

‘‘அதெல்லாம் இவ்வளவு தூரம் கடல் தாண்டி வராது ரங்கு’’ என்றேன்.

ஒரு நாள் ராத்திரி பத்தரைக்கு ரங்குகடையில் மூணுபேர் அலமாரிக்குப் பின்னால் ஜிஞ்சர் அடித்துக் கொண்டிருந்தபோது கடைக் கதவை மூடும் சமயம் அண்ணாசாமி சைக்கிளில் வந்து இறங்கி, ‘‘வாங்கடா எல்லாரும்!’’ என்றார்.

‘‘என்ன ஓய் பதற்றமாயிருக்கீர்? ஒரு ஜி.பி. அடிச்சுட்டுப் போமேன்’’ என்றான் தம்பு.

‘‘எல்லாரும் டி.வி. தெரியாது தெரியாதுன்னு பரிகாசம் பண்ணிங்களேஉட வாங்க எங்காத்துக்கு.’’

‘‘என்ன தெரியறதா?’’

‘‘அச்சுக் கொட்டினாப்பல தெரியாது. ஆனா, தெரியறது!’’

‘‘வாடா இன்ஜினீயர்!’’ என்று என்னையும் விளித்தார். எனக்கு வியப்பாக இருந்தது. ‘‘திஸ் இஸ் நாட் பாஸிபிள்’’ என்றேன். அவர் வீட்டுக்குப் போனோம். மாடியில் எடுத்துக்கட்டி ஜன்னல் வழியாக சம்பா டார்ச்லைட்டை வைத்துக் கொண்டு மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தாள் மாடிபூரா பரவியிருந்த அந்த ஏரியலை இவர் சொல்லச் சொல்ல மொத்தமாகத் திருப்பிக் கொண்டிருந்தாள்.

இங்கே கீழே கூடத்தில் ஒரு கறுப்பு வெள்ளை டி.வி. இருந்தது அதில் மணல் ஓடிக் கொண்டிருந்தது.

‘‘சம்பா டியர்திருப்பு திருப்பு!’’ என்றார்.

அவள் ‘‘தெரியறதாதெரியறதா?’’ என்று கேட்டுக்கொண்டே மாடியில் ஏரியலைத் திருப்பினாள். ஒரு கணத்தின் பிரிவில் அந்தத் திரையில் ஒரு பிம்பம் தெரிந்தது. ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தாள். என்ன பாஷை தெரியவில்லை.

‘‘நிறுத்துநிறுத்து! அங்கதான் அங்கயேதான்’’ என்று இங்கிருந்து சத்தம் போட்டார்.

‘‘ரங்கு! இப்ப என்ன சொல்றே?’’

‘‘பஜ்னுதான் இருக்குஆனா, மூஞ்சி தெரியறது.’’

‘‘டி.வியே தெரியாதுன்னிங்களேஉங்க எக்ஸ்பர்ட் என்ன சொல்றார் இப்ப?’’ என்று என்னைப் பார்த்துக் கண்ணடித்தார்.

நான், ‘‘இப்போதைக்கு ஒண்ணும் சொல்றதுக்கில்லை எங்க புரொபசரைத்தான் கேக்கணும்’’ என்றேன்.

‘‘எதையும் இப்படி அலட்சியமா பேசப்படாது. இன்னம் அர்ரே எலிமெண்ட்ஸ் போட்டா நன்னாவே தெரியும். அதும் ராத்திரி ஆக ஆகபோகப் போக…’’

மேலேயிருந்து சம்பா, ‘‘போருமாஇன்னும் திருப்பணுமா?’’ என்றாள்.

‘‘சம்பா, போதும் கீழ வா! எல்லாருக்கும் பயத்தஞ்கஞ்சி கொடு’’ என்று இவர் சொல்ல, மேலேயிருந்து தொபுக்கடீர் சப்தமும் ஐயோ சத்தமும் கேட்டது.

சம்பா எடுத்துக்கட்டிலிருந்து சுமார் பதினைந்து அடி விழுந்துவிட்டாள்.

அவளை கைத்தாங்கலாக நொண்டிக்கொண்டே அழைத்து வந்தோம். ‘‘பார்த்து நடக்கக்கூடாதோ?’’ என்றார். அவள் கால் சிவப்பாக இருந் தது. செமையாக வீங்கியிருந்தது. நிறைய வலித்திருக்கவேண்டும். தம்பு கண்ணீர் விட்டான்.

‘‘என்ன ஓய்எங்க ஊர் பொண்ண மாடியெல்லாம் ஏறவிட்டு பாடாப் படுத்தறீர். கொடுமைப் படுத்தறீர்!’’

‘‘உனக்கு என்னடா ஆச்சு?’’ என்றார்.

‘‘என்னடாவா? நாக்கை அடக்கிப் பேசும். எல்லா வண்டவாளத்தையும் வெளிலவிட்டா நாறிப்போய்டும்.’’

‘‘என்ன வண்டவாளம்
அவ என் பெண்டாட்டி. அவளை நான் என்ன வேணா செய்யச் சொல்வன். அதைக் கேக்க நீ யாரு?’’

சம்பா, ‘‘போருமேபோருமே…’’ என்றாள்.

‘‘நான் யார்றா? ரங்குசொல்றா நான் யாருன்னு!’’

‘‘தம்பு நீ வாடா! அப்றம் பேசலாம்.’’

‘‘இவர் கேக்கறதைப் பாரு! நான் யாரா…’’ தம்பு, ரங்கு கடையில் ஜிஞ்சர்பரிஸ் போட்டிருந்தான். சுருதி ஏறியிருந்தான். நாக்கு தொளதொளத்து விட்டது.

‘‘நான் யாருசொல்றன். இதே சம்பா, இதேசம்பாஎனக்கு மொத்தம் எத்தனை லெட்டர் எழுதிருக்கா தெரியுமா? காட்டட்டுமாநான் எத்தனை எழுதிருக்கேன் தெரியுமா?’’

அந்தக் கணத்தில் காலம் நின்று போகப் போகிறது என்றுதான் நான் எதிர்பார்த்தேன். இல்லை!

‘‘எல்லா பைத்தியக்கார லெட்டரையும் சம்பா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாகாட்டிட்டாபோடா!’’ என்றார்.

கடைசி செமஸ்டருக்கு எம்..டிக்கு சென்னைக்கு திரும்ப வந்தபோது பேராசிரியர் சோமயாஜுலுவை சந்தேகம் கேட்டேன். ஸ்ரீரங்கத்தில் அன்றிரவு டி.வி. தெரிந்தது எப்படி என்று கேட்டேன்.

அவர், ‘‘அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. டக்ட் ப்ராபகேஷன் என்று சில வேளை கடலின் இன்வர்ஷன் லேயர் இருக்கும்போது வேவ்கைடு மாதிரி ஃபார்ம் ஆகும் வி.எச்.எஃப். சிக்னல்கள் ஆயிரக் கணக்கான மைல்கள் கூட கடந்து வரும். அனாமலஸ் ப்ராபகேஷன் என்பார்கள். நீ பார்த்தது தெற்காசிய நாடுகளில் எதாவது ஒரு டி.வியாக இருக்கலாம்’’ என்றார்.

ரங்கு இப்போதும் அதை ரங்கநாதன் கிருபை என்றுதான் சொல்கிறான்.