விழித்திரு பெண்ணே !
விழித்திரு பெண்ணே!
விசித்திரமான காலம் இது
விழித்திரு பெண்ணே!
காதலெனும்
வலையில் விழுந்திடுவாய்
கவனமாய் இருந்திடு!
காதல் புனிதமானதுதான்
எப்போதெனில்
மனிதாபிமான உள்ளங்கள்
காதலிக்கும் வரையும்...
காதலை கவனத்துடன்
பார்த்திடும்போது
அது என்றும் சுகமானதே
அதனை சபலத்துடன்
பார்த்திடும்போது
அது சுமையானதே!
மனப்பரிமாறலுள்
செய்வதுதான் காதல்
மானப்பரிமாற்றம் செய்வதல்ல..
மனசாட்சியுடன் நடந்துகொள்!
ஐந்து நிமிட சுகத்திற்கு
ஆயுளையே அடமானம் வைக்கும்
பொய்மைபூத்த காதலைப்
பொருந்திக் கொள்ளாதே பெண்ணே!
பெண்ணே..!
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்து
உண்மைக் காதலை உள்வாங்கு
சந்தைப் பொருளாக மாறும்
சாயம் பூசிய காதலைத் தூரமாக்கு.!
சமூகத்தை வெற்றிகொள்
ஆனாலும் நீ
காதலித்துப் பார்... நிஜமான காதல்
என்றென்றும் சுகமானதே...!
-எஸ். முபீனா, திருகோணமலை
No comments:
Post a Comment