Tuesday, April 3, 2012

கவிதை:




வசந்தகால அனுபவங்கள்!






மது சந்தோச
சந்திப்புக்களை அரங்கேற்றும்
அழகான -
அந்திமாலைப்பொழுதுகள்!



உன் ஓரவிழிகளின்
ஓவியப்பார்வைகளில்
உல்லாச உலாவரும்
சின்னச்சின்னச் சிரிப்பலைகள்..!



இருவர் விரலிடைகளிலும்
தலைப்புகள் கூடப் புரிந்திடாத
புத்தகங்களின் திறந்த பக்கங்கள்..
அவையும் தலைகீழாய்...!



கண்கள் கனவுகளை
அடைகாத்திருக்க..
மனமோ...
மௌனங்களில் ஆர்ப்பரிக்கும்!


உள்ளடக்கத் திமிரோடு
உயரத்தில் உட்கார்ந்திருக்கும்
புரியாத புத்தகங்களெல்லாம்
வரிசையாய் -
நம்மை வேடிக்கை பார்த்திருக்கும்



நம் தவிப்புக்கள்தான்
எத்தனை சுகமானவை?

-மூதூர் மொகமட் ராபி

(நன்றி: வீரகேசரி 1990.05.06)

No comments:

Post a Comment