அரச திணைக்களங்களில் நிகழும் ஒழுங்கீனங்கள் ஒருங்கிணைப்பின்மை பற்றியெல்லாம் அறிந்திருப்பீர்கள்.
ஆனால் அவற்றின் பாதிப்பின் இலக்காக நாம் இருக்கும்போதுதான் அதன் வலியை முழுமையாக உணரமுடியும் அல்லவா? வலி, ஆச்சரியம், பரிதவிப்பு ஏன் சிலவேளைகளிலே பெரும் நகைப்புக்கூட ஏற்பட்டிருக்கும்.
அப்படியோர் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். அது என்ன என்பதை தயவு கீழே தரப்பட்டிருக்கும் இரு கடிதங்களிலிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
திருகோணமலையை சேர்ந்த என்னுடைய ஆசிரியர்களிலே ஒருவர் நீண்டகாலமாக மூதூர் வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அன்றைய கால கடல்வழிப் போக்குவரத்துச் சிரமங்களால் சோர்ந்துபோன அவர், திருகோணமலை கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெறுவதற்குத் தீர்மானித்தார்.
இதற்காக அன்றிருந்த வடக்கு-கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி எழுத்து மூலம் இடமாற்றம்கோரி விண்ணப்பித்திருந்தார்.
அவரது விருப்பப்படியே இடமாற்றம் கிடைத்தது.
திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்திலிருந்து (அப்போது அது பிராந்தியக்கல்வி அலுவலகம் என்ற பெயரிலே இருந்தது) இடமாற்றக் கடிதமும் அனுப்பப்பட்டது.
(மேற்படி ஆசிரியரின் சங்கடங்களைத் தவிர்க்க அவரது பெயர், விபரங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன.)
அந்த ஆசிரியர் புதிய பாடசாலைக்குச் சென்று கடமையயேற்று சரியாக இருவாரங்கள் கழித்து மாகாணக்கல்வி அமைச்சிலிருந்து அவரது வீட்டு முகவரிக்கு தபாலிலே வந்து சேர்ந்தது இப்படி ஒரு கடிதம் :
(திகதி, விடயம் இரண்டையும் கவனியுங்கள்)