Wednesday, March 20, 2013

சுஜாதாவும் கமலும்









 
ண்பதுகளில் திரைக்கதிர் என்றொரு பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது.
அப்பத்திரிக்கைக்காக பெங்களூரிலிருந்து வந்த சுஜாதாவும்...
 ‘வறுமையின் நிறம் சிவப்பு பட சூட்டிங் முடித்து வந்த கமலும் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள்.
 
அன்று அவர்கள் நடத்திய விவாதம் இன்றும் பொருந்தி வருகிறது.
அதிலிருந்து சில தேன் துளிகள்


 

 
சுஜாதா : நான்  'இஸட்'ன்னு  ஒரு பிரெஞ்ச் பிலிம் சமீபத்தில் பார்த்தேன்.
[ Z \ 1969 \ French \ Directed by : Costa - Gavras ]
அரசியலை மையமா வைச்சிகிட்டு ரொம்ப பிரமாதமா எடுத்திருக்காங்க.
தமிழ்ல ஏன் அரசியலை சம்பந்தப்படுத்தி படம் பண்ண மாட்டேங்கறீங்க ?

கமல் : உங்களுடைய ‘24 ரூபாய் தீவை’ ‘யாரோ பார்க்கிறார்கள்’ என்கிற பெயரில் படமா எடுக்க நினைச்சோம்.
முடியல.
பண்ண முடியாத சூழ்நிலை இருக்கு.
 Yes..It was denied ].
தீடிர்னு அந்தப்படத்தை தடை பண்ணிட்டாங்கன்னா... 
டிஸ்டிரிபியூட்டர் மாட்டிக்குவாங்க.
வட்டிக்கு வாங்கி படமெடுக்குற புரொடியூசர் காலி.
அரசியலை மையமா வைச்சு இங்கே படமெடுக்குறது கஷ்டம்.


 சுஜாதா : ரொம்ப பேர் அடிபட்டாலும், சினிமா எடுக்க வந்துகிட்டே இருக்காங்க !
அதுக்கு முக்கிய காரணம் சினிமாவைப்பற்றி இருக்கிற தப்பான அபிப்ராயமும்,
அவங்களுக்குள்ளே இருக்குற சபலமும்தான்.

கமல் : சினிமா படமெடுக்க ஆபிஸ் பிடிச்ச உடனே...
ஒரு படுக்கையை மூலையில ரெடி பண்ணி போட்டுக்கிட்டவங்க நிறைய பேர் இருக்காங்க.
ஆனா அவங்க யாரும் படம் எடுக்கல.

சுஜாதா : உங்களுடைய  ‘ராஜ பார்வை’ எப்படிப்பட்ட படம் ?

கமல் : ‘குரு’ மாதிரி முழுக்க முழுக்க மசாலா படமல்ல.
படத்தின் கதை பரிட்சார்த்தமானது அல்ல.
ஆனால் டெக்னிக்கலாக உயர்ந்த படமாக தயாரிக்க முயற்சி செய்கிறோம்.
குறியீடுகளை முழுசா இப்படத்தில் ஒதுக்கி வைச்சிருக்கோம்.
தப்பித்தவறி வந்தா அது எங்களுடைய பூர்வீக பழக்கமாக இருக்கலாம்.
ஒரு தெளிவான காதல் கதை.
சந்தோஷமான முடிவு.
நாங்க கூட நினைச்சோம்.
இந்த ஹீரோவை கொன்னு பாத்தா என்னன்னு ?
சந்தோஷமான முடிவுன்னு தீர்மானிச்ச பிறகு கொல்ல முடியலையேன்னு ரொம்ப துக்கமா இருந்தது - அழுகையா வந்தது. 

ரொம்பப்பிரமாதமான படமாங்கிறது... படம் வெளி வந்தப்புறம்தான் சொல்லணும்.
ஆனா இப்படி ஒரு படம் தயாரிச்சதுக்காக நிச்சயமாக என்னை வருத்தப்பட வைக்காத படம்.

சுஜாதா : நீங்க எழுதறதையெல்லாம் நான் விடாம படிக்கிறேன்.
உங்க நடை நல்லாயிருக்கு.
எழுதறதை விட்டுடாதீங்க.
எழுத்தாளர்கிட்ட இருக்கிற முதிர்ச்சி உங்ககிட்ட இருக்கு.
இன்னும் சரியா சொல்லணும்னா ‘கனவுத்தொழிற்சாலை’ எழுதறதுக்கு நீங்கதான் சரியான ஆள்.

கமல் : நீங்க எழுதுனதுக்கே அது யாரைப்பற்றி...
இது யாரைப்பற்றின்னு எல்லாம் கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தாங்க.
நான் எழுதினா அதை விட வம்பே வேண்டாம்.
தவிற நான் ஒரு ‘பிம்ப்’ பற்றி எழுதினேன்னு வைச்சுக்கங்க.
உடனே கேள்வி வரும்.
 “ Have You ever been a Pimp ?" அப்படின்னு.

ஆனா சுஜாதாகிட்ட அப்படியெல்லாம் கேட்க மாட்டாங்க.
சமீபத்துல ‘ஹோமோ செக்சுவல்’ பத்தி எழுதினேன்
உடனே பல பேர் என்னை கேட்டுட்டாங்க.
நீங்க ஒரு ஹோமோ செக்சுவலான்னு.

நீங்க ஒரு முறை ‘மழைத்தல்’னு எழுதியிருந்தீங்க இல்ல!

 “பெய்யென பெய்யும் மழை.
மழைக்குமெனில் சொல் உன் தாயிடம்...
நாடு நனையட்டும்” னு நான் எழுதியிருந்தேன்.
மழைக்கும்னு சொல்றது ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னுட்டாங்க.
  
சுஜாதா : சொல்லலாம் தவறில்லை.

கமல் : சுப்ரமணிய ராஜூவோ...மாலனோ...யார்னு ஞாபகம் இல்ல.
“ கீழ் பெர்த்தில் ஒரு நல்ல நாட்டுக்கட்டை.
மனதிற்குள் படுக்க வைத்தேன்”
அப்படின்னு எழுதியிருந்தாங்க.

சுஜாதா : புதுக்கவிதையில கல்யாண்ஜி எல்லாம்...பிரமாதம்.
ஒரு வேலைக்காரி சுமாரா இருக்கிறவ...
பெருக்கிட்டிருக்கா...
தரை சுத்தமாயிடுச்சு...
மனசு குப்பையாயிடுச்சு....அப்படீங்கறார்.
நாலு பக்க கதை...அந்த இரண்டு வரிகளில் வந்துடறதே !.

கமல் : இன்னொன்று நான் படிச்சேன். 
‘கருப்பு உதடுகளின் வெளிச்ச உளறல்கள்’ அப்படின்னு...
என்ன கற்பனை பாருங்க !

சுஜாதா : இன்னொரு புதுக்கவிதை நான் படிச்சேன்... 
‘கண்ணீர்’ என்ற தலைப்பில். 
“ இதயத்தில்தானே இடி....
இங்கே ஏன் மழை?” ன்னு எழுதியிருந்தாங்க!

இன்னொருவர் இப்படி...
“ திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவாம்.
என் கல்யாணம் மட்டும் ஏன் நொச்சிக்குப்பத்தில் நிச்சயிக்கப்படுகிறது ?”  

கமல் : சினிமா கவிஞர்கள் பலர் பிரமாதமாக பாட்டு எழுதி இருக்காங்க.
நான் சினிமா பாட்டு புத்தகத்திலிருந்தும்...
கலைஞர் கருணாநிதி வசனம் படிச்சும்தான் தமிழ் நல்லா பேசக்கத்துகிட்டேன்.

சுஜாதா : உங்க மாதிரி ஆளோடு எவ்வளவு நேரம் பேசறதுன்னாலும் நான் தயார்.
இன்னொரு முறை மீட் பண்ணி நாம்ப பேசுவோம்.
 
 
Thanks: Thenkoodu

சுஜாதா வெளியிட்ட கடைசி புத்தகம்.

 




 
2004 ஆம் எம்.டெக் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது இந்தியன் இன்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு எழுதுவதற்கென்று சென்னை சென்றேன். அது சென்னைக்கு எனது இரண்டாவது பயணம். அதற்கு நான்காண்டுகளுக்கு முன்பாக இஞ்ஜினீயரிங் கல்லூரி சேர்க்கைக்கான கவுன்சிலுங்குக்காக அப்பா, அப்பாவின் நண்பர்கள், அவருடைய சொந்தக்காரர்கள் என பட்டாளமாக சென்றிருந்தோம். இரண்டாவது முறை தனியாக செல்வது ஒரு சுதந்திர உணர்வை தந்திருந்தது. 

தேர்வுக்கு மட்டுமில்லாமல் சென்னையில் யாரையாவது பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அப்பொழுது எனக்கு இருந்த ஒரே சாய்ஸ் சுஜாதாதான். அதுவரை எழுதி வைத்திருந்த மொத்த கவிதைத் தாள்களையும் ஒரு கவருக்குள் நிரப்பி வைத்திருந்தேன். விகடன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சுஜாதாவின் முகவரியைக் கேட்டேன். தருவார்களா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் அவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.    "நெம்பர் 10,ஜஸ்டிஸ் சுந்தரம் அய்யங்கார் தெரு, மைலாப்பூர்" என்ற முகவரியை குறித்துக் கொண்டேன்.

சர்வீசஸ் தேர்வில் முதல் தாளையே சரியாக எழுதவில்லை. அடுத்த தேர்வை எழுதுவது வீண் வேலை என்று முடிவு செய்ததும் தேர்வை தவிர்த்துவிட்டு சுஜாதாவை பார்க்கச் செல்வது என்று முடிவு செய்து கொண்டேன். அன்றைய தினம் குளித்து முடித்து எட்டரை மணிக்கெல்லாம் அவரது வீட்டை அடைந்துவிட்டேன். வாசலில் இருந்த செக்யூரிட்டி தடுத்து நிறுத்தினார். சுஜாதாவை பார்க்க வேண்டும் என்றேன். சுஜாதா எப்பொழுதுமே காலை பதினோரு மணியளவில்தான் எழுவார் என்றார். மைலாப்பூரில் எனக்கு வேறு யாரையும் தெரியாது என்பதால் அவரது வீட்டிற்கு அருகில் இருந்த மைலாப்பூர் பூங்காவில் காத்திருந்து விட்டு, பத்தே முக்கால் மணிக்கு திரும்ப வந்த போது சுஜாதா வெளியில் சென்றுவிட்டதாகவும், மீண்டும் மதியம் இரண்டு மணியளவில்தான் வருவார் என்றார்கள். ஒன்றரை மணி வரைக்கும் அதே பூங்காவில் காத்திருந்துவிட்டு மீண்டும் சென்ற போது, “சார் தூங்கிட்டு இருக்கார்” என்றார்கள். ஏதாவதொரு காரணத்தை திரும்ப திரும்ப வாட்ச்மேன் சொல்வதுமாக இருந்ததால் நான் சுஜாதாவின் வீட்டிற்கும்,பூங்காவிற்கும் நடக்கத் துவங்கியிருந்தேன்.

சலிக்காமல் மாலை ஆறு மணிக்கு சென்றபோது பெசன்ட் நகர் பீச்சுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். பெசண்ட் நகர் பீச்சுக்கு சுஜாதா வாக்கிங் சென்றிருப்பதாகச் சொன்னவுடன், இனிமேல் பூங்காவிற்குச் செல்வது சரியல்ல என்று வீட்டு வாசலில் காத்திருக்கத் துவங்கியிருந்தேன். அப்பொழுது பொமேரேனியன் நாயுடன் அவரது மனைவி என்னைப் பற்றி விசாரிக்கத் துவங்கினார். சினிமாவில் சான்ஸ் கேட்கும் புதுமுக இயக்குனர் போல பரபரப்பாக பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். மதிய உணவில்லாத களைப்பு முகத்தில் படரத் துவங்கியிருந்தது. இரவு ஏழு மணிக்கு சுஜாதா வ‌ந்து சேர்ந்த‌ போது, வாட்ச்மேன் என் மீது க‌ருணை கொண்டு உள்ளே அனுப்பினார்.

அவ‌ர் சோபாவில் அம‌ர்ந்திருக்க‌ நான் என் க‌விதைக் க‌வ‌ருக்குள் கை நுழைத்துக் கொண்டிருந்தேன்.

"சொல்லுப்பா"

"இந்த‌ப்பைய‌ன் ரொம்ப‌ நேர‌மா உங்க‌ளுக்கு வெயிட் ப‌ண்ணிண்டு இருக்கான்" என்று அவரது மனைவிதான் ஆரம்பித்து வைத்தார்.

"சார்..நான் கோபியிலிருந்து வ‌ர்றேன். கொஞ்ச‌ம் க‌விதை எழுதியிருக்கேன். நீங்க‌ பார்க்க‌..." என்று நான் முடிக்கவில்லை.

"நிறைய‌ க‌விதை புஸ்த‌க‌ங்க‌ள் வ‌ருது. என்னால‌ ப‌டிக்க‌ முடிய‌ற‌தில்ல‌. நீங்க‌ ப‌த்திரிகைக‌ளுக்கு அனுப்புங்க‌. ந‌ல்லா இருந்தா என் க‌ண்ணுல‌ ப‌டும்"

"தேங்க்யூ சார்".

அவ்வளவுதான் சுஜாதாவுடனான எனது உரையாடல். நிராகரிப்பின் வேதனையுடன் வெளியேறி வந்தேன். வெறும் இர‌ண்டு நிமிட‌ பேச்சுக்காக‌ ஒரு நாள் காத்திருக்க‌ வேண்டுமா என்று நினைத்தால் முட்டாள் த‌ன‌மான‌ காரிய‌மாக‌த்தான் தோன்றும். ஆனால் சுஜாதா அத‌ற்கு ச‌ரியான‌ ஆளுமைதான் என்று நம்பிக் கொண்ட்டிருந்தேன். குறுந்தொகை, புற‌நானூறு, வெண்பாவின் சிக்க‌ல்க‌ளையும், வானிய‌ல் த‌த்துவ‌ங்க‌ளையும், நேனோ டெக்னால‌ஜியின் கூறுக‌ளையும்,ஆன்மிகத்தின் பன்முகங்களையும் எந்த‌த் த‌டுமாற்ற‌முமில்லாம‌ல் த‌மிழில் சொல்ல‌க் கூடிய‌ எழுத்தாள‌ர் அவ‌ர் ம‌ட்டுமாக‌த்தானிருக்க‌ இய‌லும்- அதேசமயம் சுவார‌ஸிய‌த்திற்கு எந்த‌க் குறையுமில்லாம‌ல்.

சிறுகதை, கட்டுரை, நாவல், நாடகங்கள் என இலக்கியத்தின் பல்வேறு வகைகளையும் சுஜாதா வெற்றிகரமாக தொட்டிருக்கிறார். சிறுகதை,கட்டுரை இலக்கியங்களின் உச்சபட்ச சாத்தியங்களையும், கட்டற்ற தன் எழுத்தின் போக்கில் தொட்டு வந்த எழுத்தாள ஆளுமை சுஜாதா என நம்புகிறேன்.

சுஜாதா என்னோடு சரியாக பேசவில்லை என்ற‌ கார‌ணத்திற்காக‌ அடுத்த‌ இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கு அவ‌ரின் வெகுஜ‌ன‌ ப‌த்திரிக்கைக் க‌ட்டுரைக‌ள் மீது கூட‌ என் வெறுப்பினைக் காட்டி வ‌ந்தேன். 2004,2005 ஆண்டுகளில் நடந்த புத்தகக் கண்காட்சிகளின் போது உயிர்மை அரங்கில் நின்று கொண்டிருப்பது வாடிக்கையாக இருந்தது. அப்பொழுது உயிர்மையில் சுஜாதாவின் புத்தகங்கள் நிறைந்து கிடக்கும். அரங்கில் நின்று கொண்டிருக்கும் போது, யாராவது 'சுஜாதா புக் புதுசா என்ன‌ வ‌ந்திருக்கு' என்று கேட்டால், வேறொரு எழுத்தாளரின் புத்தகத்தை பரிந்துரைப்பேன். சுஜாதாதான் எனக்கு எதிரியல்லவா? அவரது புத்தகத்தை எப்படி பரிந்துரைக்க முடியும்? 

வேறு எழுத்தாளரை பரிந்துரைக்கும் என் மீது பெரும்பாலானவர்கள் அல‌ட்சிய‌மான‌ பார்வையைச் செலுத்துவார்கள். என்னை தவிர்த்துவிட்டு அனாயசமாக நகர்ந்து சுஜாதாவின் புத்தகத்தை எடுத்துப் போவார்கள். அது எனக்கான சூப்பர் பல்பாக இருக்கும். ப‌டைப்பாள‌ன் என்ற‌ ஆளுமை மீது அவ‌னது வாச‌க‌ர்க‌ள் கொண்டிருக்கும் ந‌ம்பிக்கையை சுஜாதாவின் வாச‌க‌ர்க‌ள் வழியாக பார்க்க முடிந்த தருணம் அது.

ஏதோ ஒரு சமயத்தில் “கணையாழியின் கடைசிபக்கங்கள்” தொகுப்பை வாசிக்கத் துவங்கியபோது என‌க்கும் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் அவர்களின் எழுத்துக்கும் இடையில் நான் போட்டுக்கொண்ட திரையால் என்னைத் த‌விர‌ வேறு யாருக்கும் இழ‌ப்பில்லை என‌ உணர‌த்துவ‌ங்கினேன். 

அவ‌ருக்கு ஏதாவ‌து மின்ன‌ஞ்ச‌ல் அனுப்புவ‌தும் அத‌ற்கு எந்த‌ ப‌திலும் வராத‌தும் என‌க்கு சாதார‌ண‌மான‌ விஷ‌ய‌ங்க‌ள். எனக்கு அதில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. ஒரு வேளை இந்த‌ மின்னஞ்ச‌ல் முக‌வ‌ரியை அவ‌ர் உப‌யோக‌ப்ப‌டுத்தாம‌ல் இருக்க‌லாம் என்ற‌ எண்ண‌த்தில் எனக்கு வரும் அத்தனை மின்னஞ்சல்களையும் அவருக்கு 'Forward' செய்யத் துவ‌ங்கியிருந்தேன். அது கிட்டத்தட்ட ஒரு போர்த்தாக்குதல் மாதிரிதான். ஒரு நாளைக்கு நாற்பது அல்லது ஐம்பது மின்னஞ்சல்களைக் கூட Forward செய்திருக்கிறேன். அதில் Spam மின்னஞ்சல்கள் கூட இருந்திருக்கக் கூடும். இப்படியான தாக்குதலில் அவர் ஜெர்க் ஆகியிருக்கக் கூடும். 

'Please remove my ID from your group mailing list -ws" என்று என‌க்கு ப‌தில் வ‌ந்த‌து. அத‌ற்குப் பிற‌காக‌ அவ‌ருக்கு மின்ன‌ஞ்ச‌ல் அனுப்புவ‌தை நிறுத்திவிட்டேன்.

எனது முதல் கவிதைத் தொகுப்பான ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ தொகுதியின் அச்சாக்கப் பணிகள் முடிந்து புத்தகமாக வந்திருந்தது. புத்தகக் கண்காட்சியிலேயே வெளியிட்டுவிடலாம் என்று மனுஷ்ய புத்திரன் முடிவு செய்திருந்தார். “யாரை வெளியிடச் சொல்லலாம்” என்றார். “நீங்களே முடிவு செய்யுங்க சார்” என்றேன். சுஜாதாவை வைத்து வெளியிட‌ச் செய்ய‌லாம் என்ற‌ போது மிகுந்த‌ ச‌ந்தோஷ‌ம‌டைந்திருந்தேன். சுஜாதா புத்தகக் கண்காட்சிக்கு வந்தவுடன் என்னைப்பற்றி சில சொற்களில் அறிமுகம் செய்து வைத்தார்கள். புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று கேட்டபோது “சரி” என்றார். சுஜாதா புத்தகத்தை வெளியிட ரோஹிணி பெற்றுக் கொண்டார். 

நிக‌ழ்ச்சி முடிந்து கிளம்பும் போது சுஜாதாவிடம் "சார்,க‌விதைக‌ளை ப‌டிச்சுப் பாருங்”க‌" என்றேன். "ம்ம்..ஒரு காப்பி எடுத்துட்டு போறேன்ப்பா..ப‌டிக்கிறேன்" என்றார். இது எனக்கும் அவருக்குமான இரண்டாவது உரையாடல். இந்த‌ உரையாட‌ல் அரை நிமிட‌த்தில் முடிந்திருந்த‌து. ஆனால் என‌க்கு ஒரு திருப்தியிருந்த‌து. 

அவர் எனது கவிதைகளை வாசித்து முடித்தவுடன் அவரிடம் கவிதைகளைப் பற்றி ஓரிரு சொற்களாவது பேசி விட வேண்டும் என விரும்பியிருந்தேன். ஆனால் அடுத்த நாற்பத்தியிரண்டு நாட்களில் அவர் தனது ஞாபகத்தை முற்றாக இழந்திருந்தார். அவரது வரிகளில் சொன்னால் “மரணம் என்பது ஞாபகமிழப்பு”.

அவரோடு இரண்டாவதாக பேசியதுதான் அவருடனான எனது கடைசி உரையாடல். “கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுப்புதான் அவர் வெளியிட்ட கடைசி புத்தகம். 
 
-வா. மணிகண்டன்

Tuesday, March 19, 2013

சகோதரர்கள் ஐவருக்கு மனைவியாக வாழும் இந்தியப் பெண்!



 


ந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் உள்ள கிராமமொன்றில் பெண்ணொருவர் 5 கணவர்களுடன் வசித்து வருகின்ற செய்தி வெளியாகியுள்ளது.

அப்பெண்ணின் கணவர்கள் ஐவரும் சகோதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜோ வேர்மா என்ற குறித்த பெண்ணின் வயது 21. அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.



http://www.virakesari.lk/image_article/5husbandslivingaasa.jpg

 

எனினும் குழந்தையின் தந்தை ஐவரில் யார் என்பது குறித்து அப்பெண்ணுக்கு தெரியாது.
இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

ராஜோவேர்மாவை முதல்முறையாக திருமணம் செய்த கணவரின் பெயர் குட்டு (21) . அவரையே சட்டபூர்வமாக திருமணம் செய்துள்ளார்.



http://www.virakesari.lk/image_article/hyhfdtgdeynohio9977.jpg

 

 

பின்னர் அவர் தனது கிராமத்து வழக்கப்படி கணவரின் சகோதர்களான பாஜு(32), சாந்த் ராம்(28), கோபால்(26), தினேஷ் (19) ஆகியோருடன் வாழ்ந்து வருகின்றார்.

தான் ஒவ்வொருவருடனும் உடலுறவு கொள்வதாக தெரிவிக்கும் ராஜா வேர்மா அனைவரையும் ஒரே போல் கவனித்து வருவதாகவும் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சகோதரர்களும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பதாகவும், தனது தாயும்  3 கணவர்களுடன் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.



http://www.virakesari.lk/image_article/5guysmarriages.jpg

 

 

பலதுணை மணம் என்பது ஒருவர் ஒரே சமயத்தில் பலரைத் திருமணம் செய்து துணைவராகக் கொண்டிருப்பதைக் குறிக்கும். இதனை ஆங்கிலத்தில் polygamy என்பர்.

மணம் செய்பவர் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். எனவே பலதுணை மணத்தை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
ஓர் ஆண் ஒரே சமயத்தில் பல பெண்களை மணந்து மனைவியராக்கிக் கொண்டு வாழுதல் பலமனைவி மணமுறை ஆகும்.இது polygyny என்றழைக்கப்படுகின்றது.

அதேபோல் ஒரு பெண் பல கணவர்களைத் திருமணம் செய்து வாழும் முறை பலகணவர் மணம் எனப்படும் இதுவே ஆங்கிலத்தில் polyandry என்றழைக்கப்படுகின்றது.

ஒரு பெண் பல கணவர்களைத் திருமணம் செய்து வாழும் முறை இக்காலத்தில் மிகக் குறைவான அளவிலேயே பின்பற்றப்படுகின்றது. 

எனினும் இந்தியாவில் இமயமலைப் பகுதிகளில் இன்னும் பல கணவர்களுடன் வாழும் முறைமை பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

-  K. Shanmugarajah  

 

Thanks: Virakesari.com                        

இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினரா?


 


sri-lanka-muslims-threatened-by-rising-buddhist
 
 
 
லங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக் கூடிய, பிரிவினை வாத சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறி வைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்த காலங்களுக்குள் இலங்கையில் பெரும்பான்மையானோராக முஸ்லிம்கள் ஆகிவிடுவார்கள் என்ற அச்சம் இனவாத சக்திகளை பெருமளவில் அச்சுருத்தியிருக்கிறது. இந் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், முஸ்லிம்களை அடக்கி வைக்கவும் பல்வேறு விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.

 
 
முஸ்லிம்களுக்கு எதிராக இனத் துவேஷத்தைக் கிளப்பும் பற்பல நடவடிக்கைகள் காலம் காலமாக இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதிலும், அண்மையில் பங்களாதேஷில் பௌத்தர்களுக்கு எதிராக நிகழ்ந்த சில வன்முறைகள், இலங்கையிலுள்ள முஸ்லிம்களையும் பகிரங்கமாக எதிர்ப்பதற்கு ஏதுவாக அமைந்தன. இலங்கையில், பங்களாதேஷ் வன்முறைகளுக்கான எதிர்ப்பு நடவடிக்கைகள் ‘பொது பல சேனா இயக்கம்’ எனும் பௌத்த அடிப்படைவாத அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டன. இந்த இயக்கத்தின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் அதிகளவில் பௌத்த பிக்குகளே உள்ளனர்.
ஒவ்வொரு மாதத்தினதும் பௌர்ணமி தினமானது, போயா எனப்படும் பௌத்தர்களின் புனித தினமாகும். இத் தினத்தில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஆணும், பெண்ணுமாக பௌத்த விகாரைகளில் நடைபெறும் மதப் போதனை நிகழ்வுகளில் வெண்ணிற ஆடையுடன் கலந்துகொள்வர். பௌத்த பிக்குகளால் நிகழ்த்தப்படும் போதனைகளுக்குள் முஸ்லிம் இன வெறுப்பை ஏற்படுத்தும்படியான பல விடயங்கள் பெரும்பான்மையான சிங்கள மக்களிடையே சிறிது சிறிதாக ஊட்டப்படுகின்றன. இவ்வாறாக விதைக்கப்படும் நச்சு விதைகள், எதிர்காலத்தில் பெருவிருட்சங்களாக மாறி, வெகுவிரைவில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரங்கள் ஏற்பட அவை காரணமாக அமையும்.

 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் ‘கொழும்பு நகரத்தில் வசிக்கும் மக்கள் தொகையில் அதிகளவானோர் சிங்களவர்கள் என்ற போதிலும் அந்த எண்ணிக்கை 24% வீதமாகக் குறைந்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012.12.11 ஆம் திகதி வெளியான திவயின எனும் சிங்கள நாளிதழில் ’2012 இன் குடிசன மதிப்பீட்டு அறிக்கைக்கு இணங்க கொழும்பு நகர மக்கள் தொகையில் 24% சிங்களவர்களாகவும், 33% தமிழர்களாகவும், 40% முஸ்லிம்களாகவும் உள்ளனர்’ என பிரசுரிக்கப்பட்டிருந்தது.

 
 
இவ்வாறாக இலங்கையில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, பௌத்த அடிப்படைவாத அமைப்பினைப் பின்பற்றுவோருக்கு பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. எதிர்வரும் காலங்களில், இந்த எண்ணிக்கை அதிகரித்துச் சென்று இஸ்லாமியர்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக ஆகி விடுவார்களோ என்ற எண்ணம் அவர்களைத் தடுமாற்றமடையச் செய்துள்ளது. ஒப்பீட்டளவில் பார்க்கும்போது முஸ்லிம்களின் குடும்பங்களைப் பொறுத்த வரையில், அவர்கள் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையானது இலங்கையில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிங்கள மக்கள், குடும்ப பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு ஒரு தம்பதியினர் ஓரிரு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்கையில், இஸ்லாமியர் மாத்திரம் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி தமது இன விகிதாசாரத்தைக் கூட்டிச் செல்வது, அந்த அமைப்பினைப் பின்பற்றுவோரை பாரிய அளவில் சிந்திக்கச் செய்துள்ளது. இந் நிலைமையை பிரதிபலிக்கும் விதமாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும், ‘கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினராகி முஸ்லிம், தமிழ் சமூகங்கள் பெரும்பான்மையாகியுள்ளதை நான் வலியுறுத்த வேண்டிய நிலை உள்ளது’ என அவரது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களினுடனான சந்திப்பின் போது தெரிவித்தமை இதனைத் தெளிவுபடுத்துகிறது.

 
 
 
“பாதுகாப்பை பற்றி முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களை உடனடியாக அகற்றுவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். அதேவேளை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணிகளையோ ஊர்வலங்களையோ தடுக்க முடியாது. அவ்வாறு தடுப்பது ஜனநாயக விரோத செயற்பாடாக உள்ளதால் அரசாங்கத்தை அது நெருக்கடிக்கு உள்ளாக்கும். முஸ்லிம்களாகிய நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எம்மிடம் முன் வைப்பது போல் ‘பொது பல சேனா’ எனும் அமைப்பும் ‘வெளிநாடுகளில் முஸ்லிம்களுக்கு பர்தா அணிந்து முகம்மூடி செல்வதற்கு அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள். முன்பு பல்கலைக்கழகங்களில் முகம் திறந்து பர்தா அணியாமல் வந்தவர்கள் இப்போது அவ்வாறு வருகின்றார்கள்.ஆகவே அதை தடுங்கள்’ என்பது போன்ற பல விடயங்களை சுட்டிக்காட்டி எமக்கு பல அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்கள்” எனும் பாதுகாப்புச் செயலாளரது தொடர்ச்சியான கருத்து, சில எதிர்வுகூறல்களை முன்வைப்பதாக அமைகிறது.

 
 
 
இவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு சக்திகள், பர்தா விவகாரத்தைப் போலவே முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளப்பிவிட்டிருக்கும் இன்னும் இரண்டு பிரதான விடயங்கள், முஸ்லிம்களது கல்வியும், வர்த்தக ரீதியில் அவர்கள் பயன்படுத்தும் ஹலால் நடைமுறைகளும் ஆகும். கல்வி நடவடிக்கைகளில் மிகவும் முன்னிலையில் முஸ்லிம்கள் இருப்பது இத் தீய சக்திகளை உசுப்பி விட்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் நடைபெற்ற சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சையில் முஸ்லிம் மாணவர்கள் அதிகூடிய அளவில் சித்தி பெற்றிருப்பது பல ஆர்ப்பாட்டங்களைக் கிளப்பிவிட போதுமானதாக அமைந்திருக்கிறது. அவ்வாறே இலங்கை முஸ்லிம்கள் ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் பொருட்களை மாத்திரமே கொள்வனவு செய்வதானது, சிங்களவர்களது வர்த்தகத்தைப் பாதிக்கிறது எனும் கருத்தினை பரப்பி வருகிறது இந்த அமைப்பு. இதனால் எவ்வளவுதான் அவசரத் தேவைகள் ஏற்பட்டாலும் கூட, முஸ்லிம்களால் நடத்தப்படும் எந்தவொரு வர்த்தக நிலையத்திலும் எந்தப் பொருட்களையும் கொள்வனவு செய்ய வேண்டாமெனக் கட்டளையிடப்பட்டுள்ளது.

 
 
 
2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியன்று இலங்கையிலிருந்து வெளிவரும் ‘திவயின’ நாளிதழின் முன்பக்க செய்தியானது இந் நடைமுறையின் ஒரு பகுதியைப் பிரதிபலிக்கிறது. ‘வர்த்தகப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் சர்வதேச தீவிரவாத இயக்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது’ என டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, ‘பொது பல சேனா’ இயக்கம் தெரிவித்துள்ள கருத்தினை அந் நாளிதழ் தனது பிரதான செய்திகளிலொன்றாக தந்திருந்தது. ‘அல்கைதா’, ‘ஹமாஸ்’ போன்ற இஸ்லாமிய இயக்கங்களை நடத்திச் செல்வதற்கே இந்தக் கட்டணங்கள் செல்வதாகவும், இதனை ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் உடனடியாகக் கவனத்தில் கொண்டு, ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை தடை செய்ய வேண்டுமெனவும் அந்த இயக்கம் தெரிவித்த கருத்தின் மூலமாக வலியுருத்தியுள்ளது. அவ்வாறு நடைபெற சாத்தியமா? சர்வதேச இயக்கங்களான அவை, இலங்கையிலிருந்து அனுப்பப்படும் மிகவும் சொற்பமான பணத் தொகையிலா இயங்கும்? என்பது போன்ற எந்த சிந்தனையுமில்லாது அந்த அமைப்பு கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சிங்கள மக்கள் பெருகி வருகிறார்கள்.

 
 
 
2013 ஆம் ஆண்டுக்காக இலங்கை அரசு வெளியிட்டிருக்கும் காலண்டர் கூட, இந்த அமைப்பை மேலும் உசுப்பி விட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அரசால் வழங்கப்படும் காலண்டரில், மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் வரும் பௌத்தர்களின் புனித தினமான போயா தினத்தை அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக அரசு அறிவித்திருக்கும். ஆனால் இந்த வருடம் வெளியிடப்பட்டுள்ள காலண்டரில், மாதந்தோறும் வரும் பௌர்ணமி போயா தினங்கள் அரச, வங்கி விடுமுறை தினங்களாக மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் கொந்தளிப்புற்ற ‘பொது பல சேனா’ அமைப்பானது, ‘முஸ்லிம்களது பெருநாட்களை அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்க முடியுமானால், ஏன் பௌத்தர்களின் புனித தினங்களை அவ்வாறு அறிவிக்க முடியாது?’ என இதிலும் இஸ்லாமியர்களை வம்புக்கிழுத்திருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.

 
 
 
இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்களும் முஸ்லிம்களைப் போலவே விலைவாசி, வரிக்கட்டணங்களின் அதிகரிப்பால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். என்றபோதிலும் முஸ்லிம் மக்களை விடவும் சிங்கள மக்களில் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. காரணம் அவர்கள் சார்ந்திருக்கும் பல்வேறு விதமான கடன் சுமைகளாகும். கல்வி, வீடு, திருமணம், வாகனம், மருத்துவம் என அனைத்து பிரதான அம்சங்களுக்குமாக வங்கிகளையும், கடன் கொடுக்கும் நிறுவனங்களையும் அணுகி கடன்களைப் பெற்றுக் கொள்ளும் இவர்கள் தவணை முறையில் வட்டியுடன் அவற்றைச் செலுத்திச் செலுத்தியே சோர்ந்து போகிறார்கள். கடன்களுக்கான வட்டிகளில் தங்கியிராத இஸ்லாமியரின் வாழ்க்கை நெறிமுறை சிங்கள இனத்தவர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியுள்ளதோடு, பொறாமையையும், இஸ்லாமியரின் வர்த்தக முறைமையில் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள ‘பொது பல சேனா அமைப்பு’ பல்வேறு விதமான விஷமப் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 
 
 
கடந்த சில மாதங்களாக இலங்கையின் பிரதான நகரங்கள் பலவற்றில் இந்த இயக்கத்தின் தலைவரான கலகொட அத்தே ஞானஸார ஹிமியினால் பல கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான சுவரொட்டிகள் நகரெங்கிலும் ஒட்டப்பட்டிருக்கின்றமையைக் காணக் கூடியதாக உள்ளது. இவ்வாறான கூட்டங்களில் ஒன்றாக, கடந்த நவம்பர் மாதம் முப்பதாம் திகதி மஹரகம நகரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்காக பகிரப்பட்ட சுவரொட்டியில் இடம்பெற்றிருந்த கருத்துக்கள் விஷமத்தனமானவையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அவை இவ்வாறு சிங்களமொழியில் அமைந்திருந்தன.

 
 
 
‘எனது தாய்நாடு! இன்று எனக்குரியது, நாளை உங்களுக்குரியது. சிங்களவர்களே! சிங்கள சமூகத்தின் அழிவு காலம் தொடங்கிவிட்டது. ஏனென்றால், சிங்கள சமூகத்திற்கும், பௌத்த மதத்திற்க்கும் பல சவால்கள் இருக்கும்போது சிங்கள பௌத்தர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம் தீவிரவாதிகள் புராதன சின்னங்களையும், பாரம்பரியங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த செயல்கள், எந்தவித முடிவும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் அதே நிலையில், நாட்டின் மற்ற பாகங்களுக்கும் இவை பரவிக்கொண்டிருக்கின்றன. இந்தக் கயவர்கள் இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புக்களையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சவால்கள் இத்தோடு நின்றுவிடவில்லை. கிறிஸ்தவர்கள், அவர்களின் பிரச்சார வேலைகளையும் ஆரம்பித்துள்ளார்கள். இந்தக் கயவர்களின் செயல்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகளை, 30 நவம்பர் அன்று உங்களுக்கு தெளிவுபடுத்த முடியும் என நாம் நம்புகின்றோம். உங்கள் நாட்டையும், இனத்தையும், மதத்தையும், பாதுகாக்க விரைந்து வாருங்கள்!’
இந்தக் கூட்டத்தில் இந்த இயக்கத்தின் தலைவரான கலகொட அத்தே ஞானஸார ஹிமியினால் நிகழ்த்தப்பட்ட உரையும், இஸ்லாமியர் மீதான அவர்களது கோபத்தையும், சூழ்ச்சிகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. உதாரணத்துக்கு அவரது உரையிலிருந்து சில பகுதிகளை இங்கு தருவதன் மூலம் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளின் தீவிரத்தை உணரலாம்.

 
 
 
‘சிங்கள சமூகத்தை பாதுகாப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பள்ளிவாயலுக்கு கல் எறிவதனால் எதையும் சாதித்துவிட முடியாது. ஒரு முஸ்லிமுக்கு வீதியில் அடிப்பதன் மூலம் எதையும் நாம் அடைந்துவிட முடியாது. நாங்கள் மிகச் சிறந்த முறையில் திட்டமிட்டு, அவர்களின் ஆக்கிரமிப்பை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும். இன்று இலங்கையில், நான்கு ஆயுதம் தாங்கிய குழுக்களைச் சேர்ந்த, 12000 ஆயுதம் தாங்கிய ஜிஹாதிகள் உள்ளனர். அவர்கள் மிக விரைவில் இலங்கைத் தீவை அதிகாரத்தின் மூலம் கைப்பற்றி விடுவார்கள். இந்த அச்சுறுத்தலை எதிர் நோக்குவதற்கு இங்கு உள்ள அனைவரும், 24000 சிங்கள வாலிபர்களைக் கொண்ட ஒரு இராணுவத்தை உருவாக்க வெளிக் கிளம்ப வேண்டும். நாம் அவர்களின் வழியில் சென்றுதான், அவர்களை தோற்கடிக்க வேண்டும். ஆசியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் தலைவர்களின் மாநாடொன்று அண்மையில் மாலைதீவில் நடைபெற்றது.

 
 
 
இலங்கையைச் சேர்ந்த மூன்று நபர்கள் இதில் கலந்து கொண்டனர். அதில் அவர்கள், இலங்கை 2050 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்கொண்ட ஒரு நாடாக இருக்குமென்று வாக்குறுதியளித்தனர். தம்பியாக்கள் எங்களுக்கெதிராக திட்டமிட்ட முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக வேண்டும்.” என அவர் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களும், சிங்களவர்கள், இஸ்லாமியர்களைத் திட்டுவதற்குப் பயன்படுத்தும் சொல்லான ‘தம்பியா’ எனும் சொல்லை பகிரங்கமாகக் கூறி சாடியிருப்பதுவும் முஸ்லிம்கள் எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் இனக் கலவரங்களுக்கான எதிர்வு கூறல்கள் என்பதனைத் தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறான விஷமப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டங்களில் கலந்துகொள்ளும் சிங்கள இனத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதைப் போலவே இம் மோசமான கருத்துக்களை ஆதரிக்கும் பௌத்தர்களது இணையத்தளங்களும், சமூக வலைத்தளங்களும் தம் பக்கம் மக்களைச் சேர்த்துக் கொண்டே வருகின்றன.

 
 
 
இலங்கையின் முதலாவது சிங்கள – முஸ்லிம் இனக் கலவரமானது, 1915 ஆம் ஆண்டில் கம்பளை நகரில் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றுள்ளது. அதன்பிறகு நாடெங்கிலும் இவ்வாறான பல அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள போதிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், 2001 ஆம் ஆண்டு மாவனல்லை நகரில் இஸ்லாமியர்களின் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற இனக் கலவரம் பிரதானமானது. அவ்வாறான ஒரு கலவரத்தை, இலங்கையின் முதல் இனக் கலவரத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, எதிர்வரும் 2015 ஆம் ஆண்டும் ஏற்படுத்தி, கலவரத்தின் போது முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் குறைப்பது இவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு அமைப்புக்களின் நோக்கமாக உள்ளது என்பது சிங்கள சமூக நல ஆய்வாளர்களது கருத்துக்களாக அமைந்துள்ளன. பரவலான முறையில் நடைபெறப் போகும் இக் கலவரங்களுக்காக சிங்கள இனவாத அமைப்புக்களுக்கு ஆள் திரட்டும் நடவடிக்கைகளே கிராமங்கள், நகரங்கள் ரீதியாகவும், இணையத்தளங்கள் வாயிலாகவும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.

 
 
 
பௌத்த மதப் போதனைகளோடு இவ்வாறு பரப்பப்படும் தீய கருத்துக்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு பெரும் அச்சுருத்தலாக அமைந்துள்ளமையை இஸ்லாமியர்கள் அனைவரும் உணரவேண்டும். மறைந்திருப்பவை விஷப் பற்கள் அகற்றப்பட்ட பாம்புகள் அல்ல. எந் நேரத்திலும் வெடித்து, தீயாய்ப் பரவி, எரித்து விடக் கூடிய எரிமலைகள். எப்பொழுதும் அவை வெடிக்கலாம். இலங்கையின் சிங்கள இனவாதிகள் சிலரால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்கள், இன்னுமொரு சிறுபான்மை இனமான தமிழின மக்களுடனான யுத்தத்துக்கு எவ்வாறு வழிகோலியது என்பதனை கடந்த காலங்களில் மிகவும் அதிகமாகக் காண முடிந்தது. அவ்வாறான நிலைமை முஸ்லிம் மக்களுக்கும் வரக் கூடும். முஸ்லிம்கள் எப்பொழுதும் அந்நிய மதத்தவரோடு ஒற்றுமையோடு இருப்பதனாலும், சிறு சிறு கலவரங்களின் போது விட்டுக் கொடுத்து நடந்து, பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலமுமே இவ்வாறான பெரிய கலவரங்களை ஆரம்பத்திலேயே அடக்கி விடக் கூடியதாக இருக்கும். எனவே இஸ்லாமியர்கள் எல்லோரும் கூர்மையான அவதானத்துடனும், சமூக நல்லுறவுடனும், ஒற்றுமையுடனும், இறை நம்பிக்கையுடனும் இருப்பதன் மூலம் மாத்திரமே இவ்வாறான சக்திகளைத் தோற்கடிக்க முடியும் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


 - எம். ரிஷான் ஷெரீப்
 
Thanks: innoru.com

Friday, March 15, 2013

கமல் கவிதை









கிரகணாதி கிரகணங்கட்கப்பாலுமே
ஒரு அசகாய சக்தியுண்டாம்
ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை கிறுக்கியும்
ஆருக்கும் விளங்காததாம்
அதைப்பயந்து அதையுணர்ந்து
அதைத் துதிப்பதைத்தன்றி
பிறிதேதும் வழியில்லையாம்


000


நாம் செய்ததெல்லாம் முன்செய்ததென்று
விதியொன்று செய்வித்ததாம்
அதைவெல்ல முனைவோரை
சதிகூட செய்தது அன்போடு ஊர்சேர்க்குமாம்
குருடாக செவிடாக  மலடாக முடமாக
கருசேர்க்கும் திருமூலமாம்
குஸ்ட குஸ்யம் புற்று சூலை மூலம் என்ற
குரூரங்கள் அதன் சித்தமாம்


000


புண்ணில் வாழும் புழு
புண்ணியம் செய்திடின் புதுஜென்மம் தந்தருளுமாம்
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல் 
சோதித்து கதிசேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை
வேடிக்கை பார்ப்பததன்  வாடிக்கை விளையாடலாம்


000


நேர்கின்ற நேர்வெல்லாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதன்செயலாம்
பரணிகள் போற்றிடும்
உயிர்கொல்லி மன்னர்க்கு
தரணிதந்தது காக்குமாம்
நானூறுலட்சத்தில் ஒருவிந்தை  உயிர்தேற்றி
அல்குலின் சினைசேர்க்குமாம்


000


அசுரரைப்பிளந்தபோல் அணுவதைப் பிளந்தது
அணுகுண்டு செய்வித்ததும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்டதும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார்க்கருளிடும்
பரிவான பரபிரம்மமே



000


உற்றாரும் உறவினரும் கற்றாரும்
கற்றுக் கற்பித்து உளமார  தொழும்சக்தியை
மற்றவர் வை(யும்) பயம் கொண்டு நீ போற்றிடு
அற்றதை உண்டென்று கொள்!
ஆகமக்குளம் மூழ்கி மும்மலம் கழி
அறிவை ஆத்திகச் சலவையும் செய்!


000


கொட்டடித்துப் போற்று..!
மணியடித்துப்போற்று கற்பூர ஆரத்தியை..!
தையடா ஊசியில் தையெனத் தந்தபின்
தக்கதைத் தையாதிரு!
உய்திடும் மெய்வழி உதாசீனித்தபின்
நைவதே நன்றெனில் நை!

 
-கமல்ஹாஸன்
 
Thanks :' Coffee with Anu' TV programme

Friday, March 8, 2013

இலங்கை குறித்து அமரிக்காவின் 2013 திட்டங்கள் என்ன? :






லகத்தின் பேட்டை ரவுடி அமரிக்காவின் முடிவு தான் முடிந்த முடிவு.


வாசிங்டனிலோ நியூயோர்கிலோ உலகத்தின் மூலையில் இருக்கும் நாடு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பார்கள். அரசுகள் கூட இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதை நடைமுறைப்படுத்த உள்ளூர் முகவர்களை தந்திரமாகத் தயார்படுத்திக்கொள்வார்கள். அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசுகள், அமரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நோர்வே போன்ற நாடுகளோ இல்லை உலகில் வாழும் பன்நாட்டு நிறுவனங்களோ பணக் கொடுப்பனவுகளைச் செய்யும். பணத்தைப் பெறுபவர்கள் சிறிய கிராமிய அமைப்புக்களிலிருந்து பெரும் கட்சிகள் வரை யாராகவும் இருக்கலாம். சில சிக்கலான நாடுகளுக்கு அமரிக்க அரசு நேரடியாகவே பணக் கொடுப்பனவுகளை செய்யும்.
 
 
உலகம் முழுவதும் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கான தன்னார்வ நிறுவனங்களை விச வித்துக்கள் போல் விதைத்து வைத்திருக்கிறார்கள். இவற்றில் சில உளவு வேலைகள் கூட செய்கின்றன.
 
இலங்கையில் ஜனநாயகத்திற்கானதும், நல்லாட்சிக்கானதும்(Democracy and Governance ) என்ற திட்டத்தை முன்வைத்து அமரிக்க அரசு இயங்கிவருகிறது. யூஎஸ் எயிட்ஸ் (United States Agency for International Development (USAID)) என்ற அமரிக்க அரசின் சரவதேசப் பிரிவின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் USAID நிறுவனம் பல நாடுகளின் ஆட்சியைக் கவிழ்க்கவும் புதிய ஆட்சிகளை உருவாக்கவும் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
 
 
ஆப்கானிஸ்தான், கிழக்கு தீமோர், பங்களாதேஷ், கம்போடியா, ஈராக், நேபாளம், யெமன் உட்பட இலங்கையும் இந்த நிறுவனம் தீவிரமாக இயங்கும் நாடுகளில் ஒன்று.
 
 
இந்த நிறுவனம் ஊடகங்களுக்கும், தனிநபர்களுக்கும், கட்சிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும், அடையாளம் சார்ந்த இயக்கங்களுக்கும் பணக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும். சில சந்தர்பங்களில் அமரிக்க அரசுக்கு சார்பாக ஒரு அரசு முழுமையாக மாறும் வரை எதிர்க்கட்சிகளை வளர்த்து பின்னதாக அழித்து சிதைத்துவிடும் என்று செவேஸ் கோட் என்ற நூலை எழுதிய எவா கோலிக்கர் என்பவர் கூறுகிறார்.
 
 
ஜனநாயகமும் நல்லாட்சியும் என்ற தலையங்கத்தில் இலங்கையில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அந்த நிறுவனத்தின் (USAID) அடிப்படைத் திட்டமே கூறிவிடுகிறது.
 
 
-ஒரு நாட்டில் கட்சி அதிக பலமுடையதாக இருத்தல் ஆபத்தானது.
 
 
-ஒரு நாட்டில் கட்சி என்பது குடிசார் அமைப்புக்களை விட பலமானதாக அமைந்திருந்தால் அல்லது ஒரு கட்சி ஆட்சி அமைந்திருந்தால் தமது வேலை இலகுவானது.
 
 
-நாம் புதிய அமைப்புக்களை உருவாக்குவது இலகுவானது.
 
இவ்வாறு ஒரு கட்சி பலமான நிலையிலிருக்கும் நாட்டில் எதிர்க்கட்சியைப் பலப்படுத்தி ஆளும் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதே அமரிக்காவின் நோக்கம்.
 
 
இதற்காக அமரிக்காவின் நேரடி நிதி உதவியில் செயற்பட்டு வெற்றிகண்ட மாணவர் அமைப்பை தமது திட்டத்திலேயே உதாரணமாக முன்வைக்கிறார்கள். சேர்பியாவில் சில்படொன் மிலோசவிச்சை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கு அங்கே மாணவர் அமைபுக்களுக்கு அமரிக்கா நேரடியாகவே நிதி உதவி வழங்கியது
 
 
சேர்பியாவில் அன்றிருந்த மாணவர் ஒன்றிய இயக்கம் எனப்படும் ஒட்போர்  (OTPOR) என்ற அமைப்பு ஊக்கப்படுத்திய அமரிக்கா தமக்கு முழுமையாகச் சார்பான அரசு ஒன்று அமையும் வரை நாட்டை 'ஜனநாயகப்படுத்துவதாக' அமரிக்க அரசின் வெவ்வேறு உப - உறுப்புக்கள் ஊடாக நிதி உதவி வழங்கியது.
 
சேர்பியாவின் நிலையிலிருந்து இலங்கை சிறிதளவு வேறுபடுகிறது. இலங்கையில் அதிகாரத்திலிருக்கும் குடும்பம் அமரிக்க அரசின் நலன்களுக்கு முழுமையாக முரண்பட்டதல்ல. ஆயினும் உலகின் அதிகார மையங்கள் முகாம்களாகப் பிளவுபடும் நிலையில் இலங்கை அரசு தனது நலன்களின் அடிப்படையில் எதிர்கால நகர்வுகளை அமரிக்கா தவிர்ந்த அரசுகளோடும் மேற்கொள்ளும். இதனால் இலங்கையில் ஆட்சி மாற்றத்தையோ அன்றி பலமான எதிர்க்கட்சியையோ தோற்றுவிப்பதே அமரிக்காவின் நலன்களுக்குப் பொருத்தமானது.
 
 
இதனை அடிப்படையாகக் கொண்டே அமரிக்க அரசின் ‘ஜனநாயகமும் நல்லாட்சியும்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதுவரைக்கும் 20 மில்லியன் அமரிக்க டொலர்களை இலங்கையில் இத்திட்டத்திற்காக செலவு செய்துள்ளதாக அமரிக்க அரசு கூறுகின்றது.
 
 
ஆக, இலங்கையில் தோற்றுவிக்கப்படும் எழுச்சிகளும் மொட்டையான சுலோகங்களும் அரசின் அடிப்படைக் கட்டமைவினைச் சிதைக்கின்றனவா என்ற கேள்வி இன்று முதன்மையானது. வட-கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு போராட்டம் நடைபெறுகிறதா? ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை கோரிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா? போராட்டங்கள் எந்த வர்க்கத்தின் நலனை முன்னிலைப்படுத்துகின்றன? போராடுவதாகக் கூறும் அமைப்புக்களின் பண மூலம் என்ன? சமூக மாற்றத்திற்கான அடிப்படை அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றனவா? இலங்கையில் பிரதான முரண்பாடு மற்றும் அடிப்படை முரண்பாடுகள் குறித்த கட்சிகளின் நிலை என்ன? போன்ற அடிப்படையான அடிப்படையான ஆய்வுகளிலிருந்தே ஏகாதிபத்தியங்கள் முன்மொழியும் நாச வேலைகளிலிருந்து தப்பித்துகொள்ள இயலும்.
 
2013 ஆம் ஆண்டு உணர்ச்சிவயப்பட்ட நடவடிக்கைகளைவிட அறிவுபூர்வமான அவதானமான நகர்வுகளையே வேண்டி நிற்கிறது.
 
-நிவேதா நேசன்
 
Thanks: innoru.com

Thursday, March 7, 2013

விண்வெளிக்கு பயணம்புரிந்த முதல் மனிதன் உண்மையில் யார்?




Dear Feiends,

ஒமர் முக்தார் என்பவர், 'இதனைப் பிரசுரிக்கும் தைரியமுள்ளதா?' என்று கேட்டு  இன்று அனுப்பி வைத்திருக்கும் ஒரு தகவல் ஒன்றைக் கீழே உங்கள் பார்வைக்கு இடுகின்றேன்.

படித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
 
 

விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் உண்மையில் யார்?

 
“விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதன் யார்?” என்று படிக்கும் குழந்தைகள் யாரிடம் கேட்டாலும் சொல்லும் பதில் ‘யூரி காக்ரின்’ என்பதாகத்தான் இருக்கும். முஸ்லீகளிடம் கேட்டாலும் இதுதான் பதில், ஆனால் அவர்கள் நம்புவது வேறு. தோராயமாக 1400 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாளின் இரவில் முகம்மது விண்வெளியில் பயணம் செய்து தான் பிறப்பதற்கு முன்னரே இறந்துபோன மனிதர்களிடம் பேசி ஆலோசனை செய்து அல்லாவிடம் பேரம் நடத்தி ஐவேளைத் தொழுகையை வாங்கிவந்தார் என்பது அவர்களின் நம்பிக்கை. கல்விக்கு(மெய்யாக) ஒன்று, நம்பிக்கைக்கு(கற்பனையாக) வேறொன்று.
 
 
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ‘விடுதலை’ இதழில் புஷ்பக விமானமும் புராக் விமானமும் ஒன்றுதான், இரண்டுக்கும் அறிவியல் நிரூபணங்கள் இல்லை என்று ஒரு கட்டுரை வெளிவந்தது.அதை எதிர்த்து ‘உணர்வு’ இதழ் தொடற்சியாக பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வரைந்து தள்ளியது, ஆனால் முகம்மது விண்ணில் பறந்ததற்கு என்ன நிரூபணம் என்பதை மட்டும் தொடவே இல்லை. இதன் தொடர்ச்சியாக சென்னையில் நாத்திகர்களுடன் நேரடி(!) விவாதமும் நடந்தது. என்ன காரணமோ தெரியவில்லை அவர்களும்கூட ஏதேதோ பேசினார்களே தவிர மிகக்கவனமாக அந்தக் கேள்வியை மட்டும் தவிர்த்து விட்டார்கள். பின்னர் தனியாக “முகம்மது பூமியில் மட்டுமே புராக்கில் பயணம் செய்தார், விண்வெளிக்கு புராக்கில் செல்லவில்லை” என்றொரு விளக்கம் வைத்தார்கள். அப்போதும் கூட விண்ணில் சென்றது எப்படி என்று விளக்கும் நோக்கில் எதையும் கூறவில்லை.
 
 
இந்த விண்வெளி பயணம் குறித்து குரான் இப்படி கூறுகிறது
 
 
மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹரமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்…… குரான் 17:1
 
 
ஆனாலும் ஹதீஸ்களில் இன்னும் விரிவாக இந்தப்பயணம் பற்றிய செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன.
 
 
நான் இறையில்லத்தில் தூக்கமாகவும் விழிப்பாகவும் இருந்தபோது …. தங்கத்தட்டு கொண்டுவரப்பட்டது ….. என்னுடைய நெஞ்சில் காரையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது …. புராக் எனும் வாகனம் என்னிடம் கொண்டு வரப்பட்டது …. முதல் வானம் ஆதம் …. இரண்டாம் வானம் ஈசா, யஹ்யா …. மூன்றாம் வானம் யூஸுஃப் …. நான்காம் வானம் இத்ரீஸ் …. ஐந்தாம் வானம் ஹாரூன் …. ஆறாம் வானம் மூஸா …. ஏழாம் வானம் இப்ராஹிம் …. அதன் பின்னர் சித்ரத்துல் முந்தஹா …. வேர்ப்பகுதியில் நான்கு ஆறும் யானையில் காதளவு பெரிய இலைகளும் கொண்ட இலந்தை மரம் …. அல்லாவின் வஹீ, ஒரு நாளுக்கு ஐம்பது வேளைத் தொழுகை …. மூஸாவின் ஆட்சேபம் …. அல்லாவோடு பேரம் …. இதற்குமேலும் குறைக்கவா எனும் முகம்மதின் வெட்கமும் ஐவேளைத் தொழுகை இறுதியாதலும். புஹாரி 3207
 
 
குரான் இந்தப் பயணத்தை வெகுசுருக்கமாக‌ முடித்துக்கொள்கிறது. ஆனால் ஹதீஸ்கள் தான் அந்தப் பயணத்தை பேரண்டங்களைக் கடந்து விரித்துச் செல்கிறது. அதுவும் கிரிக்கெட் விளையாட்டில் ‘ரன்’ எடுப்பது போல பேரண்டங்களைக் கடந்த ‘சித்ரத்துல் முந்தஹா’ எனும் இடத்திற்கும் மூசாவின் வானமாகிய ஆறாம் பேரண்டத்திற்கும் மாறி மாறி ஓடுகிறார். அதுமட்டுமா? விண்வெளிப் பயணத்திற்கு முகம்மதை ஆயத்தப்ப‌டுத்த செய்யப்படும் அறுவைச்சிகிச்சை, புராக்கின் உருவம், எந்தெந்த அண்டங்களில் யாவர் என திரைக்கதையையே அமைத்துக் காட்டுகிறது.
 
 
முதலில் வான‌ம் என்பது என்ன? இங்கு ஏழு வானம் ஏழு கதவு என வருகிறது கதவு என்பதை குறியீடாகக் கொண்டாலும் ஒரு தடுப்பு அல்லது ஒவ்வொரு வானமும் தனித்தனி என பொருள் வருகிறது. ஆனால் வானம் என்பது தடுக்கப்பட்டதாகவோ தனித்தனியாகவோ இல்லை. எனவேதான் மதவாதிகள் வானம் என்பதற்கு பேரண்டம் என பொருள் தருகிறார்கள். அதாவது ஏழு தனித்தனியான பேரண்டங்கள். இந்த ஏழு பேரண்டங்களையும் கடந்து சென்றுவிட்டு ஒரிரவுக்குள் திரும்பியும் வந்திருக்கிறார் முகம்மது.
 
 
நாம் வாழும் இந்த பேரண்டம் எவ்வளவு பரந்து விரிந்தது என்பது துல்லியமாக இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை, மட்டுமல்லாது அது விரிந்து கொண்டும் இருக்கிறது. பூமி, சூரியக் குடும்பம், அதை உள்ளடக்கிய ஆகாய கங்கை எனும் பால்வீதி, இன்னும் இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான பால்வீதிகள், பலகோடிக்கணக்கான விண்மீன்கள், கருந்துளைகள், நெபுலாக்கள் இன்னும் பலவான விண்வெளி பருப்பொருட்களை உள்ளடக்கிய இந்தப் பேரண்டத்தின் அளவு தற்கால கணக்கீடுகளின்படி தோராயமாக 2500 கோடி ஒளியாண்டுகள். ஒரு ஒளியாண்டு என்பது ஒளித்துகளொன்று தடையாமல் தொடர்ந்து ஓராண்டுகாலம் பயணம் செய்தால் எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்குமோ அது தான் ஓர் ஒளியாண்டு தூரம். ஒளியின் வேகம் நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர். அதாவது நொடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய ஒரு பொருள் தொடர்ந்து நிற்காமல் பயணம் செய்தால் நாம் வாழும் இந்த பேரண்டத்தின் மறுஎல்லையைச் சென்றடைய 2500 கோடி ஆண்டுகள் தேவைப்படும். இது ஒரு பேரண்டத்தைக் கடப்பதற்கு தேவைப்படும் காலம், இதையும், இதுபோல் இன்னும் ஆறு பேரண்டங்களையும் கடந்து சென்று மீண்டு வந்திருக்கிறார் முகம்மது அதுவும் ஓர் இரவுக்குள்.

 
 இந்த பேரண்டத்தின் உச்சகட்ட வேகம் ஒளியின் வேகம் தான். ஒளியைவிட மிகைத்த‌ வேகத்திற்கு ஒரு பொருளை முடுக்கமுடியாது என்கிறது சார்பியல் கோட்பாடு. ஒரு வாதத்திற்காக இந்த உச்ச வேகத்தில் பயணம்
 
 
நிகழ்ந்திருக்கிறது என்று கொண்டாலும், ஓர் இரவு என்பது அதிகபட்சமாக 12 மணி நேரம். இந்த நேரத்தில் உச்சகட்ட வேகத்தில் சென்றாலும் ஒருவரால் அதிகபட்சம் 1296 கோடி கிலோமீட்டர்கள் தான் பயணிக்க முடியும். அதாவது 648 கோடி கிமீ தூரத்திற்கு சென்று வரலாம். ஆனால் முகம்மது சென்று வந்திருக்கும் தூரமும், அப்படி செல்வதற்கு கைக்கொண்ட வேகமும் கற்பனைக்குக் கூட எட்டாததாயிருக்கிறது.
 
 
குரானின் சொற்களுக்கும், எழுத்துகளுக்கும் இடையில் இண்டு இடுக்களிலெல்லாம் புகுந்து அறிவியலை அள்ளிக்கொண்டுவரும் மதவாதிகள் இந்த விண்வெளிப் பயணத்திற்கு என்ன அறிவியலைக் கொண்டுவருவார்கள்? இதில் வெளிப்படையான சிக்கல் இருக்கிறது எனத் தெரிந்ததால் சில மதவாதிகள், மக்காவிலிருந்து ஜெருசலம் வரையில் தான் பயணம் அதன்பிறகு உள்ளதெல்லாம் கனவு போல ஒரு காட்சி வெளிப்பாடு என நூல் விட்டுப்பார்க்கிறார்கள். ஆனால் குரானின் அது மெய்யான பயணம் தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
 
 
 
…..அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்……. குரான் 32:23.
 
 
ஆக நம்புவதற்குக் கூட துளியும் வாய்ப்பளிக்காத இதுபோன்ற கட்டுக் கதைகளைத்தான் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரே வேதம் என முழம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
 
மனிதர்களால் முடியாததெல்லாம் கடவுளால் முடியும் என்றெல்லாம் இதை எளிதாக குறுக்கிவிட முடியாது. அறிவியலை திணிக்க எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய அறிவியலை கூறிவிட்டது என ஜல்லியடிப்பதும், வெளிப்படையாக‌ பல்லிளிக்கும் இடங்களில் அல்லாவின் அருள் என பதுங்குவதும் அப்பட்டமான மோசடி. என்ன மோசடியாக இருந்தாலும் எங்கள் மதம் என்பர்கள் விலகிச் செல்லுங்கள், சிந்திக்கும் திறனுள்ளவர்கள் சிந்திக்கலாம்.
 
- Omar Muktar

Wednesday, March 6, 2013

விஸ்வரூபம் : ஒரு கலாட்டாக் கல்யாணம்






ரு கல்யாண வீட்டுக்கு நாம் தனியாகச் சென்று வந்தால் திரும்பி வந்ததும் வீட்டிலுள்ளவர்கள் முதலிலே என்ன கேட்பார்கள். கல்யாணம் எப்படி நல்லபடியாக நடந்ததா பெண் மாப்பிள்ளை பொருத்தமெல்லாம் எப்படி என்றுதானே?


இயல்பாக நிகழும் கல்யாணத்தில் வழமையான சம்பிரதாயங்களை விட்டுவிட்டு மணமக்களின் அழகையும் பொருத்தங்களையும் பற்றிக் கூறி அசத்தலாம். ஆனால் கடைசிவரை நடக்குமா அல்லது கலைந்துவிடுமா என்று கலாட்டாவாக நடந்து முடிந்த கல்யாணத்திலே பெண் மாப்பிள்ளை பொருத்தம் பற்றிச் சொல்வதற்கு முன்பு நாம் எதைப்பற்றியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.


விஸ்வரூபம் திரைப்படத்தை விமர்சிப்பதற்கு ஆரம்பிக்கும்போது என்னுடைய உணர்வும் அப்படித்தான் இருக்கின்றது. இயல்பாக படம் வெளியிடப்பட்டிருந்தால் அதன் கதையையும் அது சொல்லப்பட்டிருக்கும் பாங்கையும் பற்றி நெருடலின்றி விமர்சித்துக் கொண்டு சென்றிருக்க முடியும்.


ஆனால் இத்தனை சர்ச்சைகளும் இழுபறியும் ஆனபின்பு படத்தை நினைத்தாலே அதுபற்றிய நினைவுகள்தான் வந்து குறுக்கிடுகின்றன.
இருந்தாலும் கூடியவரை விஸ்வரூபத்தை இயல்பாக வெளிவந்த ஒரு திரைப்படத்தைப் போலவே கருதி விமர்சிப்பதற்கு முயல்கின்றேன். (அப்பாடா!)




முதலிலே கதையைச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.


அமெரிக்க வாழ் இந்திய நடன ஆசானாகிய கமல் சற்று பெண்மை கலந்த நடுத்தர வயது ஆசாமி.  அணு இரசாயனவியலிலே கலாநிதிப் பட்டம் பெறும் நோக்கத்திற்காக கமலை வயது வேறுபாடு கூடப் பார்க்காமல் திருமணம் செய்து மனைவியாகின்றார்  தமிழ்ப் பெண்ணான இளம் பூஜா. ஆனாலும் தன்னை மிகவும் நேசிக்கும் கமலுடன் ஒட்டுறவோ தாம்பத்திய உறவோ வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றார்.


பூஜாவும் அவர் வேலைபார்க்கும் இரசாயனவியல் கம்பனியின் உரிமையாளரான தீபக் எனும் இளைஞனும் காதல் கொள்கின்றனர். கமலிடம் இருந்து பிரிந்து தீபக்குடன் சேர்ந்துவாழ்வதற்காக கமல் பக்கம் ஏதாவது தவறு இருந்தால் தமக்கு வசதியாக இருக்கும் என்று எண்ணி அவரை இரகசியமாகக் கண்காணிக்க ஒரு பீட்டர் எனும் துப்பறிவாளரை அமர்த்துகின்றார்கள் பூஜாவும் தீபக்கும்.


கமலைப் பின்தொடரும் பீட்டர் மூலமாக கமல் ஒரு இந்து அல்ல என்பதும் அவர் விஸ்வநாதன் எனும் பெயரிலே தன்னை மறைத்துக்கொண்டு வாழ்ந்து வரும் முஸ்லீம் என்பது தெரியவருகின்றது.  அதேவேளை கமலை பின்தொடரும்போது  நியுயோர்க் நகரத்தை நிர்மூலமாக்கும் இரகசியத் திட்டத்தடன் புறநகர்ப்பகுதியில் மறைவாகச் செயற்பட்டுவரும் தீவிரவாதக்குழுவினரின் இடத்திற்கு தவறுதலாக சென்று விடும் பீட்டர் அங்கு கொல்லப்படுகின்றார்.



பீட்டரின் டயறியிலிருக்கும் குறிப்பில் பூஜா மற்றும் தீபக் ஆகியோரின் விபரங்கள் தீவிரவாதிகளுக்கு கிடைக்கின்றன. தீபக் ஏற்கனவே அதே தீவிரவாதிகளுடன் இரகசியத் தொடர்பிலிருந்து வருபவன். அவன் அவர்களது நியூயோர்க் நகரத்தை அழிக்கும் இரகசியத்திட்டத்திற்கு பணத்துக்காக உதவி வரும் ஒருவன் என்பதால் அவன் மீதும் பூஜாவின் அவர்களுக்குச் சந்தேகம் உண்டாகின்றது. இதனால் இருவரையும் விசாரிப்பதற்காக பூஜாவின் இடத்திற்குச் செல்லும் தீவிரவாதிகள் அங்கிருக்கும் கமலையும் சேர்த்துக் கடத்திக் கொண்டு தங்கள் இரகசிய இடத்திற்கு வருகின்றது.




அங்கு நிகழும் விசாரணையின் போது இந்து பெயரிலே வாழும் முஸ்லீமாகிய கமலின் தோற்றம் நியூயோர்க்கில் வேறு ஒரு இடத்திலே மறைந்து வாழும் தீவிரவாதத் தலைவனான ராகுல் போசுக்கு (ஒமர் முல்லா) மின்னஞ்சல்  செய்யப்படுகின்றது. அந்தப்படத்தைப் பார்க்கும் போஸ் அதிர்ச்சியடைகின்றான்.


தீபக்கை உடனடியாகச் சுட்டுக் கொன்று விட்டு தான் அங்கு வரும் வரை கமலை எங்கும் நகராதபடி முழங்காலிலே சுட்டு உயிரோடு வைத்திருக்குமாறு தொலைபேசியில் கட்டளையிடுகின்றான்.
அதன்படி தீபக் கொல்லப்பட்டதும் கமல் தான் ஒரு முஸ்லிம் என்பதால் சாவதற்கிடையில் பிரார்த்தனை புரிய விடுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றார். அதன்படி அவரது கைக்கட்டுகள் அவிழ்க்கப்பட்டதும் தீவிரவாதிகள் கவனக்குறைவாக இருக்கும் ஒரு தருணத்திலே உயிரைப்பணயம் வைத்து வெகுநுட்பமான அதிரடித்தாக்குதல் ஒன்றை நடாத்தி அங்கிருந்து பூஜாவுடன் தப்பித்து விடுகின்றார். அப்பாவிக் கணவனின் இந்தத் திடீர் மாற்றமும் அதிரடியும் பூஜாவுக்கும் அதிர்ச்சியளிக்கின்றது.



கமல் உண்மையிலே யார்... அவரது தோற்றத்தை புகைப்படத்தில் பார்த்ததும் தீவிரவாதத் தலைவன் அதிர்ச்சியடைந்தது ஏன்... என்பதையெல்லாம் முடிச்சவிழ்ப்பதுதான் படத்தின் தொடரும் கதை.





கமல்ஹாசனை ஒரு நடிகர் என்று சொல்வது ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை வெறும் விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்துவதற்கு ஒப்பானது.


குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவிலே அறிமுகமானதிலிருந்தே தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அந்தந்த காலகட்டத்திற்குரிய வழமையான  பாணியிலிருந்து ஏதாவது ஒரு வித்தியாச முயற்சியில் ஈடுபட்டு வருபவர் என்று கூறினால் அது மிகையாகாது.


ஆம், தமிழ் சினிமா உருவாக்கம் அவரது ஆளுமைக்குட்படாத ஆரம்ப காலத்தில் அவர் நடித்த படங்களில் கூட குறைந்தபட்சம் தனது பாத்திரத்தை நடிப்பால் முன்னிறுத்துவதிலாவது ஏதாவது வித்தியாசத்தைக் காண்பித்திருப்பார். இதனை ஆரம்ப காலம் முதல் அவரது படங்களைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.


மூடநம்பிக்கைகளுக்கும் போலியான சம்பிரதாயங்களுக்கும் பேர்போன தென்னிந்திய சினிமாவில் அதையெல்லாம் ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு தனது திறமையையும் உயர்ந்த ரசனையையும் மட்டும் நம்பி இன்றுவரை சினிமாவின் ஏறத்தாழ அனைத்துத் துறையிலும் வெற்றிகரமாக இயங்கி வருபவர்.


அவர் நினைத்திருந்தால் அவரிடமிருக்கும் பன்முக திறமைகளை வைத்து தனது சமகால கதா நாயகர்களைப்போல ஆயிரம் மசாலாப் படங்களை நடித்து பெரும் காசு பார்த்திருக்க முடியும்.  ஆனால் அவ்வாறில்லாமல் வசூல் வெற்றிக்காக அரைத்த மாவையே மாறிமாறி அரைத்துக் கொண்டிருக்கும் மசாலா கதாநாயகர்களிலிருந்து வேறுபட்டு, தான் சம்பந்தப்பட்ட படைப்புகள் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது உயர்ந்த தரத்திலும் உலகத் தரத்திலும் பேசப்பட வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு உழைத்து வருபவர் கமல்ஹாஸன். இதற்காக அவர் கொடுத்துவரும் விலைகள் மிக அதிகம் என்றே கூறவேண்டும்.


விஸ்வரூபம் அடிப்படையில் இன்றைய உலகம் எதிர்நோக்கிவரும் தீவிரவாத அச்சுறுத்தல்களை அடிப்படையாகக்கொண்ட சாகசக்கதை என்பதை முதலிலே நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதன் கதைக்களம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். எனவே இந்தக் கதைக்கு இயல்பாகவே ஒரு சர்வதேசத்தன்மை வந்துவிடுகின்றது. எனவே  சர்வதேச முகம் கொண்ட கதையை அதே தரத்தில் காட்சிப்படுத்தியாக வேண்டும் எனும் அக்கறை படத்தின் ஒவ்வொரு சட்டகத்திலும் புலப்படுகின்றது.






இந்தப்படத்திலே இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தயாரிப்பாளர் என்று கமலின் பல அவதாரங்கள் உள்ளன. இதிலே இயக்குனர் கமல்தான் மற்றைய எல்லோரையும் மிஞ்சுகின்றார். கதைக்கு அவசியமான படப்பிடிப்புத்தளம், தேவையான பாத்திரங்கள், பொருத்தமான நடிகர்தேர்வு, தொழினுட்பக் கலைஞர்களின் தேர்வு என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து இழைத்திருப்பதிலே அவரது அசாத்தியமான உழைப்பு மிளிர்கின்றது.


ஒரு திரைப்படத்தின் மையக்கதைக்கு அவசியமில்லாத அற்ப விடயங்களுக்கும் பாடல் காட்சிகளுக்கும் வீணாகச் செலவழிப்பதைத்தான் இதுவரை தமிழ் சினிமாவிலே பிரமாண்டமான படைப்பு என்று  பல பிரபல இயக்குனர்கள் நமது தமிழ்பட ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.  அவர்களுக்கெல்லாம் பிரமாண்டம் என்றால் என்ன என்பதையும் அதற்காக எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதையெல்லாம் தனது இயக்கத்தின் மூலமாக பாடம் நடாத்தியிருக்கின்றார் நமது சகலகலாவல்லவன்.


அத்துடன் நடிகர்களை அவரவர் பாத்திரங்களுக்குள்ளே -கமலின் வார்த்தைகளிலே கூறினால் - அடிப்பிடித்து விடாமலும் அதேவேளை பொங்கி வழிந்துவிடாமலும்  கன கச்சிதமாக பொருந்திப்போகச் செய்திருக்கின்றார். அதுமட்டுமல்ல இந்தியத் திரையுலகின் திறமையும் புகழுமிக்க தேர்ந்த கலைஞர்களிலே ஒருவராகிய தன்னையே கூட (அதாவது நடிகன் கமலையே) அவரது வழக்கமான சில சேட்டைகளிலிருந்து விடுபட்டு பாத்திரத்துக்குள் மட்டும் சுற்றிவர அனுமதித்து அடக்கி வாசிக்கச் செய்திருக்கின்றார் இயக்குனர் கமல்.






வழமையாக கமல் படங்களிலே இருக்கும் மதங்கள் பற்றிய கிண்டலைக்கூட இதிலே பெரிதாக காண்பிக்காமல் விட்டிருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அந்த அளவுக்கு கதையின் போக்கு அறிந்து இயக்குனரின் ஆளுமை மற்றைய துறைகளை கட்டியாண்டுள்ளது.


இயக்குனருக்கு அடுத்ததாக விஸ்வரூபத்திலே கொடிகட்டிப் பறப்பவர் வசனகர்த்தா கமல் என்பதை படத்தின் உரையாடலை கூர்ந்து செவிமடுத்தவர்களுக்கு நன்கு புரியும்.


திரைப்படம் என்பது அடிப்படையில் ஒரு காட்சி ஊடகமே என்பதை நன்கு மனதிற்கொண்டு பாத்திரங்களின் முகபாவனைகளின் மூலமாக கதைகூறுவதை ரசிகன்  புரியாமல் போகலாம் என்று அவர் கருதிய இடங்களில் மட்டுமே அவசியமான உரையாடலை வைத்திருக்கின்றார் வசனகர்த்தா கமல் . ஒவ்வொரு காட்சியிலும் கதையை நகர்த்துவதற்கு உரையாடல்களை இயல்பாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் இரசிக்கத் தக்கதாகவும் எழுதியிருக்கின்றார். பல இடங்களில் உரையாடல்களை ரசிப்பதற்கு உலக அறிவும் புத்திசாலித்தனமும் அவசியமாகவுள்ளது.


அடுத்து கமலின் நடிப்புப்பற்றி அவசியம் சொல்லியே ஆகவேண்டும். ஆரம்பத்தில் வரும் நடனக்கலைஞர் வேடத்தை அவரது அளவுக்கு வேறுயாராலும் ரசித்துச் செய்ய முடியாது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. இதுவரையிலான தமிழ் சினிமாவில் பெண்மை கலந்த ஒரு ஆண் பாத்திரம் என்றால் வழமையாக அனைவரும் பெண்போன்றே அங்க அசைவுகளைக் காட்டி மிகையாகத்தான் நடிப்பார்கள். ஆனால் கமலோ தனது பாத்திரத்திற்கான ஒவ்வொரு அசைவிலும் தான் பெண்மையின் நளினம் கலந்த ஆண்தானே தவிர தான் ஒரு பெண்ணல்ல என்பதை ஞாபகம் வைத்திருக்கத்தவறவில்லை. அந்தளவுக்கு அவரது உடல்மொழி கச்சிதமாகவுள்ளது.





அதேவேளை தீவிரவாதிகளின் முகாமில் வெகுளியான நடனக்கலைஞர் எனும் பாத்திரத்திலிருந்து திடீரென்று தனது உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தி உளவுத்துறை அதிகாரியாக இயங்கத் தொடங்கியதும் அவரது முகபாவமும் உடல்மொழியும் அப்படியே முழுமையாக மாற்றமடைந்து விடுவதை மிக நேர்த்தியாகச் செய்திருக்கின்றார். இப்படி மாற்றிக்கொள்வதற்கு அவரது கற்பனைத்திறனும் அர்ப்பணிப்பும் பரந்த அனுபவமும் கைகொடுத்திருக்கின்றன.



அதேபோல ஆப்கானிஸ்தான் காட்சிகளிலே தீவிரவாதியாக நடித்திருப்பார் கமல். வேறு ஒருவராக இருந்தால் அதற்குரிய ஆடைகளை அணிந்து தோளில் துப்பாக்கியோடு வீரவசனங்கள் பேசி, முடிந்தால் சக தீவிரவாதிகளோடு சேர்ந்து ஒரு குழுப்பாடல் பாடியாடிவிட்டு காரியத்தை முடித்திருப்பார். ஆனால் தனது தீவிரவாதி பாத்திரத்தினூடாக ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தீவிரவாதிகளையும் அங்குள்ள முகாம்களிலே நிகழும் ஆயுதப் பயிற்சிகள், பணயக் கைதிகளைக் கையாளும் முறைகள், தற்கொலைத் தாக்குதல்கள், துரோகிகள் மற்றும் எதிரிகள் மீதான தண்டனை முறைகள் உட்பட தீவிரவாதிகளின் மனோபாவம் என்பவற்றையெல்லாம் மிகுந்த பிரயத்தனத்துடன் காண்பித்திருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.


ஆப்கன் தலிபான்கள் புரியும் தீவிரவாதம் அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று எனவும் வல்லரசு நாடுகள் தமது நலன்களை பேணுவதற்காக தொடுத்த தாக்குதல்களின் எதிர்வினையே தவிர தலிபான்களாகவே தேர்ந்தெடுத்துக்கொண்டது அல்ல என்பது மிகச்சரியாக சில காட்சிகளினூடாகவும் பின்னணியில் இசைக்கப்படும் பாடல் வரிகளினாலும் புலப்படுத்தப்பட்டுள்ளது.


இன்னொரு காட்சியிலே நேட்டோப் படையினரின் ஹெலிகொப்டர் தாக்குதல் நிகழ்கின்றது.  அந்தக் காட்சியிலே நிகழும் கடுமையான சண்டைக்கிடையிலே மாட்டிக்கொள்ளும் தீவிரவாதத்தலைவர், 'அமெரிக்கர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதில்லை.. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஆண்(தீவிரவாதி)களாகிய நமது உயிர்கள்தான்!' என்று சகபாடிகளிடம் கூறுவதாக ஒரு காட்சி வருகின்றது.


இந்தக் காட்சியையும் உரையாடலையும் மேம்போக்காகப் பார்க்கும் யாருக்கும்  அமெரிக்க இராணுவத்தினரை  மனிதாபிமானிகளாக வலிந்து காண்பிப்பதற்காக எழுதப்பட்டது போலவே தோன்றும். ஆனால் தீவிரவாதத் தலைவர் அதை சொல்லி முடித்த அடுத்த நிமிடமே அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்று பெண்களும் பிள்ளைகளும் ஒதுங்கியிருக்கும் ஒரு கட்டிடத்தை அவர்கள் கதறக் கதறக் குண்டுவீசி நிர்மூலமாக்கி விட்டுச் செல்கின்றது. இப்போது கூறுங்கள்... இது அமரிக்கர்களுக்கு வழங்கப்படும் நற்சான்றிதழா என்ன?





இவ்வாறான முரண்நகை காட்சிகளைப் புரிந்து கொள்வதற்கு உலக சினிமா பற்றியும் உலகளாவிய அரசியல் விடயங்கள் பற்றியும் நிறைய அறிவு வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கேள்வியுற்றதால் வெகுண்டு அன்றுதான் திரைப்படத்தைப் பார்க்கும் ஒருவருக்கு அல்லது குழுவினருக்கு இவ்வாறான காட்சி உத்திகளை புரிந்துகொள்ள முடியுமா? இதனால்தான் படத்தின் preview காட்சிகளைப் பார்த்த பின்பும் குறித்த மதக்குழுவினர் ஒட்டுமொத்தமாக இந்தத்திரைப்படம் அமெரிக்கர்களுக்குச் சார்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டுக் கொண்டிருந்தனர்.


ஆனாலும் படத்திலே காண்பிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகள் மீதான அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் தாக்குதல்களை இன்னும் தாக்கமாக காண்பித்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. அவ்வாறு காண்பித்திருந்தால் விஸ்வரூபம் திரைப்படத்தின் மீது இஸ்லாமிய அமைப்புகள் முன்வைத்த அமெரிக்க சார்பு நிலை என்ற குற்றச்சாட்டினை இன்னும் வலுவாக மறுத்திருக்கலாம்.


ஆக, ஒசாமா பின்லாடனைக் கொன்று வெற்றிக்களிப்பில் பராக் ஒபாமா உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்காவிலே ஆரம்பித்து, ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஜனாதிபதியாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நிகழ்த்திக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தானுக்கு பின்னோக்கிச் சென்று, மீண்டும் ஆரம்பித்த அதேகாலத்திற்கு வந்து நியூயோர்க்கை நிர்மூலமாக்குவதற்காக தாலிபன்களின் வெகு நேர்த்தியாக திட்டமிட்டிருந்த தற்கொலைத் தாக்குதலை முறியடித்து நிமிர்வதுதான் விஸ்வரூபத்தின் கதை.

ஒரு  Action thriller film  என்ற வகையில் படம் ஆரம்பித்தபோது இருந்த பிரமாண்டமும் நேர்த்தியும் இறுதிக்காட்சிவரை சிறிதும் குறையாமல் தொடர்ந்து வருகின்றது. ஆனால் படத்தொகுப்பிலுள்ள சிறுசிறு குறைபாடுகள் காரணமாகவோ அல்லது சகல அம்சங்களையும் படத்திலே சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்பினாலோ என்னவோ கதை ஆப்கானிஸ்தானுக்குள்ளே இறங்கி சிறிது நேரத்தில் சுவாரஸ்யம் சற்று குறைந்து விடுகின்றது. ஆனால் காட்சியமைப்பின் நேர்த்தியுடன் திறமையான உரையாடலும் அதை ஒரேயடியாகத் தொய்ந்து போய் விடாமல் ஓரளவு காப்பாற்றி விட்டிருக்கின்றது.


ஆக மொத்தத்தில், உலகத்தரத்தில் ஒரு சாகசத் திரைப்படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்று தமிழ்த்திரையுலகினருக்கு கமல் காண்பித்திருக்கும்  ஒரு விலையுயர்ந்த பாடம் இந்த விஸ்வரூபம்.

(தொடரும்)
 
- Jesslya Jessly


 

Tuesday, March 5, 2013



அன்புள்ள நண்பர்களே!


 


எதிர்பார்த்திருங்கள்!

 



சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் திரைப்படத்திற்கான எனது விமர்சனம் வெகு விரைவில்!

- Jesslya Jessy

Sunday, March 3, 2013

சிறுகதை : விஸ்வரூபம்






யாரித்து முடித்த நாள் முதலாய் திரையிடப்பட முடியாமல் சர்ச்சைக்குள்ளாகி இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு பிரபல்யமான தென்னிந்தியத் தமிழ் திரைப்படம்.  பின்பு அது தடைகளையெல்லாம் மீறி ஒருவழியாக தலைநகரின் திரைகளுக்கு வந்திருந்தபோது அதனைப் பார்ப்பதற்காக தலைநகருக்குச் சென்றுவரத் தீர்மானித்தேன்.


விஷம்போல ஏறிச்செல்லும் விலைவாசிக்கும் இன்றிருக்கும் வாழ்க்கைச் செலவுக்கும் மத்தியில் என்னைப் போன்ற ஓர் அரசஊழியன் தலைநகருக்குச் சென்றுவருவது என்பது அதுவும் ஒரு திரைப்படத்தைப் பார்த்து ரசிப்பதற்காக பணம் செலவழித்து ஏறத்தாழ இருநூற்று ஐம்பது கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து திரும்புவது என்பதெல்லாம் நிச்சயம் மிகை முயற்சிதான்.


ஆனாலும் குறித்த திரைப்படம், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளிலே ஏற்படுத்திய பரபரப்புகளாலும் இணையத்தளங்களிலே அது தொடர்பாக நீண்டு கொண்டே போன இழுபறி விவாதங்களாலும் உருவாகிய 'அப்படி என்னதான் அதிலே இருக்கின்றது..?' என்ற சுவாரசியம் என்னைத் தின்று துளைத்தது. அந்த சுவாரசியம்தான் அடுத்தமாத பட்ஜட் பற்றிய அபாய உணர்வுகளையெல்லாம் தற்காலிகமாக ஒத்திப்போட்டு கொழும்புக்குச் சென்று உயர்ந்த தொழினுட்பத்தரத்துடன் அந்த படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்று என்னைத் தூண்டியிருக்க வேண்டும்.


 'படம் பார்க்க கொழும்பு செல்கின்றேன்' என்று யாராவது கேட்டால் சொல்ல முடியுமா? அப்படிக் கூறினால் எனது அலுவலகத்திலும் அயலிலும் வாழும் மத்தியதர வர்க்க சகமனிதர்களால் அதைத்தாங்கிக் கொள்வதற்குத்தான் முடியுமா என்ன? குறைந்தபட்சம் ஆதர்ச நாயகர்களுக்கு ஆளுயர கட்-அவுட் வைத்து பாலாபிஷேகம் புரிகின்ற தமிழ்நாட்டு சினிமாப் பைத்தியங்களோடு என்னையும்  இணைத்து கிசுகிசுத்துப் பழிவாங்கி விடுவார்கள். அதற்காகவே வேறு ஏதாவது ஒரு பொருத்தமான காரணம் தேடினேன்.  என்ன செய்யலாம் என்று மூளையைக் கசக்கியபோதுதான் சட்டென அது ஞாபகம் வந்து என் வயிற்றில் மைலோ வார்த்தது.


இப்போது மனதை உறுத்திக்கொண்டிருந்த குற்றவுணர்வு ஓரளவு தணிந்திருந்தது. அன்றைய தினம் கொழும்பு புறப்படும் இரவுத்தபால் ரயில்வண்டிக்குரிய ஒருசோடி புகையிரத ஆணைச்சீட்டுக்களை அலுவலகத்தில் எழுதிப் பெற்றுக்கொண்டு மாலையில் வீடு திரும்பினேன்.


000




'என்ன திடீரென்று... சொல்லவேயில்லையே நீங்க?'
கையிலே சமையல் கரண்டியுடன் அதிர்ச்சி காண்பித்த மனைவிக்கு காரணத்தை எப்படிச் சொல்வதென்று புரியாமல் விழித்தேன்.

'அது வந்து.. இந்த ஈடீசிஎஸ் ஊழியர் சேமலாப நிதி தெரியுமா... அது விஷயமா...'

 'சரி, அந்தப்படத்தைப்போய்  பார்த்திட்டு வாங்க! ஆனா நிறையச் செலவழிச்சிராதீங்க.. கரண்டுக்கும் ரெட் பில் வந்திருக்குது... உங்க உடுப்பு ஏதும் கழுவுறதெண்டால் ப்ளாஸ்டிக் பக்கட்டில எடுத்துப்போடுங்க?' என்றுவிட்டு சமையலறைக்குள் புகுந்துவிட்டாள் அவள்.

அவளுக்கு ஈடீசீஎஸ் பற்றித் தெரியாது போனாலும் சர்ச்சைக்குரிய திரைப்படம் பற்றிய செய்திகளை விடாமல் நான் வாசிப்பதையும் அலுவலக நண்பர்களுடன் நேரிலும் போனிலும் முழுமூச்சாக விவாதிப்பதையும் நன்கறிந்திருந்தாள்.

'என்ன யோசிக்கிறீங்க... ட்ரெயின்ல வோரண்ட்லதானே போறீங்க..?'

'ஓமோம்.. நாளைக்கு காலையில லிலானியை என்ன செய்யிறது?'

'அவளை நான் பஸ்ல கூட்டிக் கொண்டு போய் டியூஷனுக்கு விடுறன். நீங்க ஞாயிற்றுக்கிழமை விடிய வந்திடுவீங்கதானே..?'

'பின்னே..? அங்கேயே குடியிருக்கிறதுக்கா போறேன்.. திங்கள் ஒபிஸ்ல ஓடிட் வேற இருக்கு'


000 






திருகோணமலை ரயில் நிலையத்தில் போய் நான் இறங்கியபோது ரயில் புறப்படுவதற்கு இன்னும் முக்கால் மணி நேரமிருந்தது. நான் எதிலுமே சற்று முன்ஜாக்கிரதை முத்தண்ணாதான். கடைசிநேரத்தில் அல்லாடுவதெல்லாம் அறவே பிடிப்பதில்லை.


இரண்டாம் வகுப்பு டிக்கட் கவுண்டரில் இருந்தவரிடம் ஆணைச்சீட்டை நீட்டினேன்.

'இதுல சைனா பேயிலிருந்து புறப்படுறதா எழுதுப்பட்டிருக்கே.. மறந்துபோய் இங்க வந்திட்டீங்களோ..?' என்று சிரித்தபடி அதைத் திருப்பித் தந்தார் அந்த கவுண்டர் க்ளார்க். திருகோணமலை நகருக்கு அடுத்த ரயில் நிலையமான சீனக்குடாவிலிருந்து புறப்படும் விதமாக ஆணைச்சீட்டை எழுதி வந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது.

'பரவாயில்லை, ஒரு டிக்கட் எடுத்து இதே ட்ரெயின்ல சைனாபே போங்க. அங்க ஒரு பத்து நிமிஷம் நிக்கும். அங்கிருந்து உங்க வொறண்டை பாவியுங்க..' என்றபடி தந்தார் அவர் புன்னகை மாறாமல்.

புகையிரத மேடைக்கு நான் இறங்கியபோது தண்டவாள ஸ்லீப்பர் கட்டைகளுக்குப் புதிதாக அடித்திருந்த ஒயில் நாற்றம் நாசியைத் தாக்கியது. மேடையின் இடதுபுறமாக சற்றுத்தூரத்திலே இருளான இடத்தில் ரயில் எஞ்சின் இரைந்தபடி நின்றிருக்க பயணிகள் பெட்டிகள் கூட்டமின்றி வெறிச்சோடிக்கிடந்தது. ஒருசோடி உடுப்பு ஒரு டயறியுடன் முதுகிலே தொங்கிய நூல்பை மற்றும் ஒரு கையில் மனைவி கட்டித்தந்த இரவுச்சாப்பாட்டுப் பார்சல்; சகிதம் பயணிகள் பெட்டி ஒன்றிற்குள் ஏறி இரண்டாம் வகுப்பு இருக்கைகளைத் தேடி ரயில் பெட்டிகளுக்கேயுரிய நாற்பது வோட் மங்கலான வெளிச்சத்தில் நடந்தேன்.


இரண்டாம் வகுப்புப்பெட்டி என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் யன்னோலர இருக்கை தேடி அமர்ந்திருந்தார்கள். தெரிந்த முகமாக யாருமே தென்படவில்லை. இரவுநேரப் பயணமேயானாலும் எனக்கு ஓடும் ரயிலில் தூக்கம் வருவதில்லை. தெரிந்தவர்களும் இல்லையென்றால் இரவு முழுவதும் கொட்டக்கொட்ட விழித்தபடி சிந்தனைகளின் இறுக்கத்தில் உழன்று கொண்டுதான் இருக்கவேண்டும். 'சே! வாசிப்பதற்கு புத்தகம் ஏதாவது கொண்டு வந்திருக்கலாம்' என்று உள்ளுர நொந்து கொண்டிருந்தபோது யாரோ 'உஷ்ஷ்....ஷ்ஷ்!' என்று கூப்பிட்டார்கள்.


'என்னடா வாசுதேவா, யாரை ஏத்திவிட வந்த நீ...?'

பழகிய குரல் கேட்டு நிமிர்ந்தபோது வெளியே புகையிரத மேடையில் சிரித்தபடி நின்றிருந்தான் சலீம். அவன் என்னுடைய பழைய நண்பன். மிகவும் ஜாலியான பேர்வழி. ஒருகாலத்தில் இருவரும் திருகோணமலை தபால் அலுவலகத்தில் அமைய ஊழியர்களாக ஒன்றாக வேலைபார்த்தவர்கள். அதிலிருந்து கொண்டே இருவரும் ஆசிரியர்களையும் எழுதுவினைஞர்களையும் தெரிவு செய்வதற்குரிய ஒர் ஆங்கிலப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்றவர்கள். நான் பிரதேச அலுவலகத்தில் க்ளார்க் ஆகிவிட அவன் ஆங்கில ஆசிரியராகி இப்போது சுற்றயல் கிராமப் பாடசாலை ஒன்றிலே கற்பிக்கின்றான். அவன் மனைவி ரயில்வேயில் க்ளார்க்காக இருப்பதால் இந்தப் புகையிரத நிலையத்திற்கு மிக அருகிலுள்ள ரயில்வே விடுதி ஒன்றில்தான் இருக்கின்றான்.


'ஏண்டா என்னையெல்லாம் பார்த்தா பிரயாணஞ் செய்ய வந்தவன் மாதிரி தெரியாதோ..?' என்று மடக்கினேன் அவனைச் சந்தித்த குதூகலத்துடன்.


'அட! நீ கொழும்புக்குப் போறியா...? யா அல்லாஹ், வாசுதேவன் கொழும்புக்குப் போகிறானாம்யா அல்லாஹ்! மழைதான்டா வரப்போகுது இன்டைக்கு! டேய், உன்னைத் தெரியாதா...? நீ லேசில செலவழிச்சு பயணம் போக மாட்டியே?' என்று வானத்தைப் பார்த்து பிரார்த்திப்பது போல பாவனை செய்து  கலாய்த்தான் சலீம்.


இருவரும் ஒருவருரையொருவர் கட்டியணைத்துக் கொண்டோம்.

'சரி நீ எங்க..?' என்று கேட்டேன்.

'அது வந்து மச்சான், ஈடீசிஎஸ் ஒபிசுக்கு போறேண்டா! வாற மாதம் ஒரு பெரிய செலவொண்ணு இருக்கு. அதால ஒரு லோன் ஒண்டு எடுக்கலாமென்றுதான்'

'அட இவனும் அங்கேதான் போகிறானா?' எனக்கு ஆச்சரிமாக இருந்தது. இது என்ன பொருத்தம்? நானும் அங்கேதான் போக வேண்டும் என்பதை அவனிடம் சொல்லுவோமா வேண்டாமா என்று யோசித்தேன். அவனாக கேட்கட்டும் என்று ஒத்திப்போட்டேன்



குவார்ட்டசிலருந்து இடறிவிழுந்தா ஸ்டேஷன். நீ ஏண்டா சலீம் ஏழரைக்குப்போற ட்ரெயினுக்கு இவ்வளவு நேரத்தோட வந்து நிற்கிறா..?' என்றேன் ஆச்சரியத்துடன்.

'அதுவா? வெளிக்கிடும்போது கண்டால் என்ட சின்ன மகள் லைலா தானும் வர அழுது என்னை விடவே மாட்டாள்றா. அதான் நேரத்தோட வந்து இங்க நிக்கிறன்.'

'ம்ம்.. அன்புத் தொல்லையோ! பிறகு இப்ப ஸ்கூல் எங்க உனக்கு?'

அவன் பதில் கூறிவிட்டு இப்போதுள்ள பாடசாலைக் கல்வியின் நிலைமை பற்றி கவலையாக ஏதேதோ பேசிப் பெருமூச்சு விட்டான்.

'சரிசரி, அதையெல்லாம் விடு. இப்ப வா ட்றெயின் வெளிக்கிடும் வரையில வேற ஏதாவது பேசிட்டிருக்கலாம்'

இருவரும் அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தோம். இப்போது பயணிகள் கூட்டம் ஓரளவு கூடி ஒரு ரயில் நிலையத்திற்குரிய ஆரவாரங்கள் எல்லாம் ஆரம்பமாகியிருந்தன.

'அதுசரி, கமல்ற படம் பாத்தியா சலீம் ? அது என்னடா அதை ஓடவிடாம உங்கட ஆக்கள் பிரச்சினை பண்ணிட்டிருக்கிறாங்க?' என்று கேட்டேன் பேச்சைத் திருப்புவதற்காக.

அதுவரை அவனது முகத்திலிருந்த புன்னகை சட்டென மறைந்து போனது. சிறிது நேரம் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தான் அவன்.

'என்னடா இவ்வளவு யோசிக்கிறா நீ? இதுக்குப் பதில் சொன்னாலும் உன்ட அல்லா ஏதும் தண்டிப்பாராடா?'

உடனே அவன் சத்தமாய் சிரித்து விட்டான்.



''இல்லடா தேவா! ஆனா நீ இந்தா நினைக்கிறியே, எங்கட அல்லாஹ்வைப் பத்தி ஏதோ கொடுமையா. அதைத்தான்டா நினைச்சிக் கவலைப்படுறேன்!'
'என்னடா சொல்றாய் நீ?'
'உன்ன மாதிரி முஸ்லீம் இல்லாத ஒரு சராசரி மனிசன அப்பிடியெல்லாம் நினைக்க வச்ச எங்கட ஆக்கள்ற வேலைகளை நினைச்சித்தான்டா கோவம் வருது'


'..............'


'இதை விட வறுமை, உரிமைகளை மறுக்கிறது, சிறுபான்மை என்ற புறக்கணிப்பு என்று எத்தனையோ பிரச்சினைகள் எங்கட சமூகத்துக்கு இந்த நாட்டுலயும் உலகத்துலயும் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு ஒரு சினிமாப்படத்தைப் போய் இவ்வளவு பிரச்சினை பண்ணிட்டிருக்கிறதே முதல்ல தேவையில்லாத ஒண்ணு'



'நீதான்டா சலீம் இப்பிடிச் சொல்றா. ஆனா நான் செய்தியில பேப்பர்ல இன்டர்நெற்றில எல்லாம் பார்த்தேன். படம் பார்க்கிறவங்களையே தாக்க வேணும் என்கிற மாதிரி கொலைவெறியோட எழுதிறாங்களேடா உங்கட ஆக்கள் கனபேர்?'

'மச்சான் தேவா, உங்கட ஆக்கள் எங்கட ஆக்கள் என்டெல்லாம் இல்ல. எல்லா சமூகத்திலயும் மதவெறி புடிச்சவங்க இருக்கிறது வழமைதானே. அயோத்தியில பாபர் மசூதியை உடைச்சது யார்? குஜராத்தில அட்டூழியம் பண்ணது யாரு?'


'ஆனா அதை கடுமையாக எதிர்த்தவங்கள்ல எங்கட ஆக்களும் இருந்தாங்களே மறந்திட்டியா சலீம்?'

'மறக்கல்லடா! எல்லா மக்கள்லயும் மதவெறி பிடிச்சு அலையுறவங்க கொஞ்சப் பேரும் அந்த வெறியை விரும்பாம வெறுக்கிறவங்க நிறையப்பேரும் இருக்கத்தான் செய்யிறாங்க'

'ஆனா உங்கடவங்க இதுவரைக்கும் உங்கட ஆக்கள் செய்யிற தப்புகளை எப்பவாவது கண்டிச்சிருக்கிறாங்களா சலீம்?'


'தீவிரவாதிகளை அழிக்கிறதா சொல்லிக்கிட்டு ஆப்கானிஸ்தான்ல அமெரிக்காவும் நேட்டோ படைகளும் மக்களுக்குச் செய்யிற அநியாயங்களை தெரியுமா உனக்கு?'


'நல்லாவே தெரியும். அதை ஒரு மோசமான பயங்கரவாதம் என்று உலகம் முழுக்கவுள்ள எல்லா இனமக்களும் கண்டிக்கிறாங்கதானே.. எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யிறங்கதானே? ஆனா அதே ஆப்கானிஸ்தானில இருக்கிற தாலிபன்கள் மதச்சட்டங்கள் என்ற பேரால சொந்த மக்களுக்கே செய்யிற வன்முறைகளை நீங்க எப்பவாவது கண்டிச்சிருக்கிறீங்களா?'


'அது வந்து.. அவங்க நாட்டுல மதச்சட்டம் அப்பிடித்தான்..'

'சமாளிக்காதடா சலீம். எந்த மதமும் அடுத்தவரைத் துன்புறுத்தச் சொல்லியிருக்காது. கழுத்தை வெட்டிக் கொல்றது.. கல்லெறிஞ்சு கொல்றது.. பொம்பிளைகள்ற மூக்கை அறுக்கிறது... அசிட் வீசுறது என்று எவ்வளவு காட்டுமிராண்டித்தனம் செய்யிறாங்க.. கிட்டத்ததுல பாகிஸ்தான்ல மலாலா என்கிற பதினஞ்சு வயசு ஸ்கூல் பிள்ளைய அவள் பேஸ்புக்கில எழுதின பெண்கல்வி பத்தின கட்டுரைகளுக்காக சுட்டுக்காயப்படுத்தியிருக்கிறானுங்க தலிபான்கள். இதெல்லாம் அல்லா செய்யச் சொன்னாரா மச்சான்?'


'அதெல்லாம் பிழைதான். அதுக்காக எங்க எல்லாரையுமே பயங்கரவாதிகளா காண்பிக்கிறதும் கூடாதுதானே?'


'நீங்க சிலபேர் செய்யிற தவறுகளாலதான் அமெரிக்கா மாதிரி ஆட்களுக்கு தாங்கள் செய்யிற அட்டூழியங்களுக்கு நியாயஞ் சொல்லறதுக்கு வாய்ப்புகளை தாராளமாக குடுத்திட்டிருக்கிறீங்க தெரியுமா?'


'அமெரிக்கா முஸ்லீம்களை பயங்கரவாதிகள் என்று சொன்னா பரவாயில்ல. அவன் எப்பவுமே எங்களுக்கு எதிரிதான். ஆனா அதையே நீங்களுஞ் சொல்லலாமாடா தேவா?'

'ஓ! நீ கமல்ற படத்தைச் சொல்றியா?  நீ பாத்தியாடா சலீம், அந்தப் படத்தில அப்பிடி என்னதான்டா பிரச்சினை?'

'நானும் பார்க்கயில்ல.. வேறென்ன? அமெரிக்கன்களை நல்லவங்களாகவும் தாலிபான்களை கொடூரமானவங்களா காட்டியிருக்கிறாங்களாம் என்று கேள்விப்பட்டேன்'

'ஆனா அதுக்காக அந்தப்படத்தை மக்களைப் பார்க்க விடாம தடுக்கிறது சரியா?'
'இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள்தான் என்று காட்டுற படத்தை தடுக்கிறது தப்பில்லையேடா தேவா?'

'அது படம் பார்த்தால்தானே தெரியவரும். யாரோ கொஞ்சப்பேர் பார்த்திட்டு தடுத்தா அது நியாயமா? முதல்ல படத்தை கொஞ்ச நாளாவது ஓடவிடணும். பொதுமக்கள் பார்க்க வேணும். படத்தோட மையக்கருத்து உண்மையில நீ சொல்றதுபோல இருந்தால் வா. அதுக்கு எதிரா நாங்களும் சேர்ந்து போராட வாறோம்'


'நீ சொல்றதும் சரிதான் தேவா. படைப்பு உரிமையை இப்பிடி எல்லாருமே ஏதாவது ஒரு காரணத்துக்காக கேள்விக்குள்ளாக்கினா பிறகு அம்புலிமாமா கதைகளை மட்டும்தான் படம் எடுக்க வேண்டியிருக்கும்.'


சிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்ளாமல் அவரவர் யோசனையில் ஆழ்ந்திருந்தோம். நேரம் 7:16 ஐக் காட்டியது. தூரத்து வானிலே சில மின்னல் கீற்றுகள் ஓசையின்றி வெடித்துச் சிதறுவது தெரிந்தது.


 'அதுசரி தேவா, கேட்க மறந்திட்டேனே... கொழும்புக்கு நீ எங்க போகிறா..?'
'நானா? நானும்  உன்ன மாதிரி ஈடீசீஎஸ் ஒபிசுக்குத்தாண்டா போறன். இப்பதான் நான் மெம்பரா சேரப்போறன். எனக்கும் பிறகு லோன் தேவைப்படும்தானே..?'

'அதுசரி, மெம்பரா சேர்றதுக்காக ஏண்டா கொழும்புக்குப் போகிறா..? அநியாயச் செலவேடா'

'போகாம எப்பிடிடா சேர்றது..? இங்க மெம்பர்ஷிப் அப்ளிகேஷன் போர்ம் கூட கிடையாது?' என்றேன், அப்பாவிபோல முகத்தை வைத்துக்கொண்டு.

'அடப்பாவி! நீ உன்ட ஒபிஸ்ல யாரிட்டயாவது கேட்டிருந்தா தந்திருப்பாங்களேடா..? அதிருக்கட்டும் நீ அதுக்காக மட்டுந்தான் கொழும்புக்குப் போறியா.. சொல்லு?' என்று கேட்டான் சலீம் தீர்க்கமாக.
'இல்ல படம் பார்க்கத்தான் முக்கியமாக போகின்றேன்' என்று எப்படி அவனிடம் சொல்ல முடியும்?

'ஓம்டா! ஏண்டா கேட்கிறாய்?'  என்றேன்.

'அப்படியெண்டா கொஞ்சம் பொறு!' என்றபடி தனது செல்போனில் இலக்கங்களை ஒற்றி காதுக்குள் வைத்தபடி ஒரு ஓரமாய் நடந்து சென்று யாருடனோ பேசிக் கொண்டிருந்தான் சலீம்.

அவன் என்ன செய்யகின்றான் என்று புரியவில்லை எனக்கு. மெல்ல மெல்ல பயணிகளும் வழியனுப்பிகளும் மேடைக்கு வந்து கொண்டிருந்தார்கள். புகையிரத நிலைய அதிபர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்துநின்று பொதிகளேற்றப்படும் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.


அப்போது ஒரு சிறுவன் ஓடிவந்து, 'வாப்பா இந்தாங்க, உம்மா தந்தாங்க' என்று ஒரு பழுப்புநிற கவரைத் சலீமிடம் தந்து விட்டுப்போக அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அனுப்பி வைத்தான் தேவா.

'வாப்ப்ப்.....பா! நான் சொன்ன கன் வாங்கிட்டு வாங்க!'

'யாருடா அது? உன்ட மகனா.. முந்திப் பாத்ததுக்கு அப்பிடியே இருக்கான்?'

'அடேய், இவன் என்ட ரெண்டாவது பொடியண்டா! சரி, பிடி இதை!' என்று அந்த பழுப்பு நிற கவரை என்னிடம் நீட்டினான்.

'அப்பிடியா..? அதுசரி இது என்னடா கவர்ல..?

'சரி, இப்ப நான் சொல்றபடி கேளு தேவா! இது குவார்ட்டஸ்ல எனக்கிட்ட இருந்த ஈடிசிஎஸ் மெம்பர்ஷிப் அப்ளிக்கேஷன் போர்ம்.   இதை இங்கேயே நிரப்பித்தந்துட்டு நீ வீட்டுக்குப்போ! பெரிசா விபரம் ஒண்ணும் தேவையில்ல. நான் கொண்டுபோய் ஒப்படைக்கிறன். எனக்கு அங்க வேண்டிய ஆள் உதவியெல்லாமிருக்கு. உன்ட விபரமும் சைனும் இருந்தாலே போதும். மற்றதையெல்லாம் நான் பார்த்துக்கொள்றன்.. சரிதானே?' 


'சலீம், கொஞ்சமிரு!'

அவன் என்னைப் பேசவே விடவில்லை.

'டேய் நீ தனிச் சம்பளக்காரன். நீ ஏன்டா பாவம் சும்மா இதுக்காக கொழும்புக்கு வந்து  மெனக்கெடப்போறாய்...? கெதியாய் நிரப்பு இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு வா!' என்று உரிமையோடு பயணிகள் இளைப்பாறும் அறைக்கு என்னை அவன் இழுத்துக்கொண்டு சென்றபோது எனக்கு முகத்தில் ஈயாடவில்லை.


-மூதூர் மொகமட் ராபி