மூதூர் மொகமட் ராபி எழுதிய சிறுகதைத் தொகுப்பு "இலுப்பம் பூக்கள்" நாளை 12. 04. 2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மூதூர் தி/அந்-நஹார் மகளிர் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் வைபவ ரீதியாக வெளியிடப்படவுள்ளது.
மூதூர் கலை இலக்கிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் நூலாசிரியரான ஜனாப். எம். பீ. மொகமட் ராபி நூலை வெளியிட்டு வைக்க ஓய்வுநிலை அதிபர்களான ஜனாப். ஏ. எம். புஹாரி மற்றும் ஜனாபா அம்ரா புஹாரி தம்பதிகள் நூலின் முதற் பிரதியை இணைந்து பெற்றுக்கொள்கின்றனர்.
ஓய்வுபெற்ற மற்றுமொரு அதிபரான எம். எஸ். அமானுல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெறும் இவ்வைபவத்தில் அதிபர் ஜனாப். ஏ.எஸ். உபைத்துல்லாஹ் நூல் அறிமுகவுரையை நிகழ்த்துவார்.
கலாநிதி கே. எம். எம். இக்பால், சிரேஷ்ட எழுத்தாளர் நந்தினி சேவியர் மற்றும் ஓய்வுநிலை அதிபரும் பிரபல பத்தி எழுத்தாளருமான திருமலை நவம் ஆகியோர் நூல் விமர்சனம் புரியவுள்ளனர்.
-Jesslya Jessly
Rafi s my best friend. He was my hostel mate at Kalmunai Zahira...congratulatiuons Rafi
ReplyDelete