புயலைப் போல
மேல்மூச்சு வாங்கி
புகை நுகர்ந்து
செவி கிழிக்கும் பம்பைச்சத்தம் சூழ
கற்பூர ஜ்வாலையை
கபக்கென்று நாவுக்குள் அடக்கி
பரிதாப மொழியால் சப்தித்து
ஆக்ரோஷமாய்க் காட்சியளித்து
சுத்துப்பட்ட எட்டு
கிராம சனங்களும்
கன்னம் தொட்டு
சேவித்து நிற்க
ஊருக்கெல்லாம்
குறிசொல்லும்
கோடி வீட்டு சாமிக்கு
ஏனோ தெரியவில்லை
போலியோவால்
முடங்கிய
தன்மகளின்
கால்களை
சரிபண்ணும் வித்தை மட்டும்!
-இலட்சுமணன்
Thanks: 'வீடுதிரும்புதல்' கவிதை தொகுப்பு
No comments:
Post a Comment