Sunday, July 21, 2013

அபூ ஜீஸாக்களும் தள்ளிச் செல்லும் கடவுளின் எல்லைகளும்!









யார் இந்த அபூ ஜீஸா..?


ன்பான சிறகுகள் வாசகர்களே அண்மைக்காலமாக அபூ ஜீஸா எனும் பெயரிலே ஒரு நபர் அடிக்கடி நமது தளத்திலும் ஏனைய சில முஸ்லீம் தளங்களிலும் தனது 'அறிவார்ந்த' கருத்துக்களால் அடிபட்டு  மூக்குடைபட்டு வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இதை தாங்களும் அறிவீர்கள்.

அபூஜீஸா போன்று காலத்துக்கு காலம் மாறும் பல  புனை பெயர்களோடு அவர்கள் அவ்வப்போது வந்து தந்துவிட்டு திரும்பியே பாராமல் ஓடிச்சென்று விடும் விபரங்களோ சிறகுகளுக்கு ஒன்றும் புதிய விடயங்களல்ல.
என்பதை இத்தனை கால வரலாற்றிலே வாசகர்களாகிய நீங்கள் அறிந்திருப்பீர்கள். அபூ ஜீஸா எமக்கு முக்கியமில்லை.


அவரது பெயரை ஒரு குறியீடாக வைத்துக்கொள்வோம். அவ்வளவுதான்!


இனி விடயத்திற்கு வருகின்றேன். அண்மையிலே  11.07.2013 நமது நேத்திரா டீவியிலே அறிவியல் விடயத்திற்கு முற்றிலும் ஒவ்வாத ஓரு புவியியியல் உண்மை பற்றிய வியடம் பற்றி காண்பிக்கப்பட்டிருந்தது.


அதாவது பூமியின் மேலோட்டிலே அமைந்திருக்கின்ற மலைகள் பூமியை அசையாமல் தாங்கிப்பிடித்திருக்கும் முளைகளுக்கு ஒப்பானதாகும் என்று குர்ஆன் ஆயத்துக்களை மேற்கோள் காண்பித்து படங்களுடன் காண்பிக்கப்பட்டது.



இது உண்மையிலேயே ஒரு தவறான முன்னெடுப்பாகும். உண்மையில் குர்ஆன் மலைகளை புவியை அதன் அசைவுகளிலிருந்து தாங்கிப்பிடிக்கும் முளைகள் என்ற பொருள்பட எங்குமே கூறியிருக்கவில்லை. அப்படிக் கூறியதாக இந்த நிகழ்ச்சியை தயாரித்தவர்கள் நிறுவினாலும் அவை உண்மைக்குப் புறம்பானவையாகவே இருக்கும் என்பதை பல புவியியல் அறிஞர்கள் கூறியுள்ளார்கள். விளக்கப்படங்கள் ஏற்கனவே உள்ளன.


இது அவ்வாறிருக்க அபூஜீஸா போன்ற சிலர் 'இல்லை இது உண்மையயேதான்'என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு அறிவியல் கற்கும் மாணவர் சமூகத்தை குழப்பத்திலும் தவறான வழியிலும் ஆழ்த்துகின்றார்கள்.
நான் அபூஜீஸா போன்றோரிடம் கேட்க நினைப்பது ஒன்றுதான். நீங்கள் அறிவியல் உண்மைகளை நம்புகின்றீர்களா அல்லது ஆன்மீகத்தை நம்புகின்றீர்களா?


இரண்டில் ஒன்றைக் கூறுங்கள்


குதிரையா கழுதையா உங்களுடைய வாகனம்?


இரண்டுக்கும் பிறந்த மலட்டுக் கோவேறு கழுதையிலே பயணம் செய்யாதீர்கள்?


இப்படித்தான் ஒருதடவை விண்வெளியை முதன்முதலிலே கடந்த மனிதன் யார் என்ற வினாவுக்கு ஒரு முஸ்லீம் மாணவன், யூரிகாக்ரின் என்று பதிலளித்தான்.


யூரி காக்ரின்
உடனே மாற்று இனத்தவனாகிய சக நண்பன் அதை மறுதலித்தான்.

"இல்லையே நண்பா, 1400 வருடங்களுக்கு முன்பே உங்கள் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கடந்து சென்றதாக என்னிடம் ஒருமுறை கூறினாயே... இப்போது மட்டும் ஏன் கி.பி. 1957ம் ஆண்டில் கடந்து சென்ற யூரிகாக்ரினை கூறுகின்றாய் ?"என்று கேட்டான்.



அதற்கு முஸ்லீம் நண்பன் கூறினான், "எனது ஆன்மீகப் பதிலை நான் இங்கு கூறினால் எனக்கு புள்ளிகள் கிடைக்காதே' அதனால்தான் சூழ்நிலைக்கேற்றபடி பதில்  சொன்னேன்" என்றான்.

உத்தேச ப்ராக் வாகனம்



இப்படித்தான் நண்பர்களே நமது நிலைமையுமுள்ளது.


இதுவரை இருந்து வந்த எத்தனையோ ஆன்மீக மதங்களெல்லாம் ஒருகட்டத்தில் அறிவியல் வளர்ச்சியுடன் போட்டியிடுவதை தாமாகவே உணர்ந்தோ வேறுவழியின்றோ நிறுத்திக் கொண்டு விட்டன. அல்லது அவை பற்றி அலட்டிக்கொள்ளாமல் அவரவர் பாதையிலே தனித்தனியே  தேமே என்று சென்று கொண்டிருக்கின்றன.



பூமியையன்றி, சூரியனைச் சுற்றியே அனைத்து கிரகங்களுமே நீள்வட்டப்பாதையிலே சுற்றி வருகின்றன எனும் அறிவியல் உண்மையைக் கூறியதற்காக விஞ்ஞானிகளை உயிரோடு எரித்த கத்தோலிக்கத் திருச்சபை கூட காலப்போக்கிலே அறிவியலின் அசுரவளர்ச்சியைத் தாளாமல் பின்வாங்கிவிட்டது.


வேறு எந்த மதங்களும் அறிவியல் உண்மைகளுடன் கொம்பு சீவிக்கொண்டு போட்டியிலிறங்குவதுமில்லை. மூக்குடையபடுவதுமில்லை. ஆனால் நாம் மட்டுமே இன்னும் கூட இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையெல்லாம் பற்றி  விரும்பியோ விரும்பாமலோ கருத்துக்கூறிக்கொண்டே வருகின்றோம்.














விஞ்ஞானமும் ஆன்மீகமும் அடிப்படையிலே இருதுருவங்கள் போன்றது. ஆன்மீகத்தில் எற்கனவே கூறப்பட்டவற்றுக்குள்ளிருந்து மட்டுமே தீர்வுகள் காணப்பட முயும். ஆனால் விஞ்ஞானமோ தொடர்ச்சியான மாற்றங்களை வரவேற்றபடி அசுரபலத்தோடு ரயில்வண்டிக்கு ஈடாக விரைந்து கொண்டிருப்பது. ஆன்மீகமோ மாட்டுவண்டிமேய்ப்பது.


விரைந்து பாயும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அத்தனையையும் 'இது 1400 வருடங்களுக்கு முன்பே...' என்ற சொற்றொடருக்குள் இலகுவிலே அடக்கிவிட முடியாது என்பது அதன் மற்றொரு சோகம்.

ஒரு அறிவியல் முயற்சி தற்காலிகமாக தோல்வியடையும்போது, 'ஆகா இதைத்தான் நாங்கள் அன்றே சொன்னோம்...' என்று குதூகலிக்கும் ஆன்மீக வாதிகளின் மகிழ்சி நீண்ட காலம் நிலைப்பதில்லை என்பதுதான் அதிலுள்ள மிக பலவீனம்.

உதாரணத்திற்கு உங்களால் முடிந்தால் ' புதிதாக ஒர் உயிரைக் கண்டுபிடியங்கள் பார்க்கலாம்' என்பார்கள். அவ்வாறு கண்டுபிடித்துவிட்டால் ஏற்கனவே இருக்கும் உயிரிலிருந்து அல்லாமல் புதிததாக செயற்கையான இழையங்களைப் பயனபடுத்தி கண்டுபிடியுங்கள் என்பார்கள். இப்படிக் கடவுளின் எல்லைகளை தள்ளிக்கொண்டே செல்லும் வரைதான் இவர்களுடைய பிழைப்பு எல்லாமே!




 -Omar Mukthar 


 

No comments:

Post a Comment