நண்பர்களே,
வெகு அண்மையில் ஒர் இணையத்தளத்திலே எனது பின்னூட்டம் ஒன்றைப் படித்துவிட்டு தொடர்பு கொண்டார் தமீம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு நபர்.
பெண்கள் விடயத்திலே காண்பிக்கப்படும் பாரபட்சங்களையும் அடக்குமுறைகளையும் விமர்சித்து கிண்ணியாநெற், ஜாஃப்னா முஸ்லிம், காத்தான்குடி இன்போ முதலிய பலஇணையத்தளங்களிலே நான் எழுதும் பல பின்னூட்டங்களும் விமர்சனங்களும் நேர்மையான ஆண்களின் மனதையும் புண்படுத்துவதாக குறைபட்டு மின்னஞ்சலிட்டிருந்தார் அவர்.
அவரது கருத்துக்குரிய எனது பதில் கருத்தை நான் அவரது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திருந்தேன். எனது நியாயங்களை ஒரளவு ஏற்றுக்கொண்ட தமீம் பொதுவான விடயங்களை என்னோடு விவாதிக்கும் எண்ணத்தையும் கொண்டிருந்தார். அதன்படி நாங்கள் ஒரு விவாதமொன்றை மேற்கொள்வதற்கு உடன்பட்டுள்ளோம். அதனை சிறகுகளிலே தொடர்ந்து வெளியிடவும் உத்தேசித்துள்ளோம்.
விரைவில் விவாதம் ஆரம்பமாகும். Wait & Enjoy!
-Jesslya Jessly
இஸ்லாம் பற்றிய உங்கள் தேடலும் தர்க்கரீதியான அணுகுமுறையும் அறிவார்ந்த நோக்கும் சிறந்தது .
ReplyDeleteஅல்லாஹ் உங்களுக்கு அவனது மார்க்கத்தில் சிறந்த விளக்கத்தை தர்வானாக!
இஸ்லாத்தை பற்றி பொது தளங்களில் விவாதிக்கு முன் உங்கள் தனிப்பட்ட விடயங்களில் இஸ்லாத்திற்கு முரணான விடயங்களை சீர் seithu கொள்வது சிறந்தது
ஒரு இசை ரசிகையாக தங்களை அறிமுகம் செய்து கொண்டு இஸ்லாத்தை பற்றி பேசுவது சிறந்த்த தள்ள .
இந்த மார்க்கம் மனிதட்களுக்கு அருளாகவே இறக்கப்பட்டது அதில் ஏவப்பட்டவைகளும் விளக்கப்பட்டவைகளும் மனிதர்களின் நல வாழ்வுக்கே.
இஸ்லாம் கடுமையாக எதிர்த்த இசையை மிக அதிகமாக நேசிப்பதாக பகிரங்கமாக கூறிக்கொண்டு இஸ்லாத்தின் மேன்மைகளை பேசுவதாக காட்டிக் கொள்ளாதீர்கள்.
இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்தவர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் aakkuvaanaaka