Thursday, June 13, 2013

நெல்சன் மண்டேலா : வாழும்போதே வாழ்த்துகின்றேன்!




கறுப்பு சூரியன்
 
 

 



ஓ! நெல்சன் மண்டேலா!
இடுங்கிய கண்களினால்
நிறவெறிக்கொடுமைக்கு குறிவைத்த இலட்சிய வீரனே
உன்னை பிரசவித்ததற்காக - இன்று
இந்தப் பிரபஞ்சமே பெருமை கொண்டிருக்கின்றதடா!



னது இனத்தின் விடுதலைக்காக
அன்று நீ சிறைசென்றாய் - ஆனால்
நெஞ்சுரமூட்டி நீ வளர்த்த 
இலட்சியத் தீ  உலகமெங்கும் விடுதலையானது
இன்று இருபத்தியேழு ஆண்டு கழித்து விடுதலையானபோது
உலகின் ஐந்நூறு கோடி இதயங்களும்
உன்னை கைதுசெய்திருக்கின்றனவே..!



சிறைவாசமும் சித்திரவதைகளும்
கோழைகளுக்குத்தான் கட்டிலிடும் கடிவாளங்கள்
உன்போன்ற இலட்சிய வீரர்களுக்கு
சிறைக்கூடங்களும் போராட்டப்பாசறைகள்
கைவிலங்குகளும் ஆயுதங்களே என்பதை
நீ சுதந்திரக்காற்றை சுவாசித்த மறுநிமிடமே
உன் முதலாவது சொற்பொழிவிலேயே
நெஞ்சை நிமிர்த்தி நிரூபித்திருக்கின்றாய் தோழனே!




"நான் வெள்ளையரின் நிறவெறிக்கு மட்டுமல்ல அனைத்து அடக்குமுறைகளுக்கும்
ஆதிக்க வெறிகளுக்கும் எதிரானவன்
உலக சமாதானமே என் இறுதியான இலட்சியம்"




ன்று வெள்ளைத்தோல் வெறியர்களின்
நீதிமன்றில் நிமிர்ந்து நின்று 
நீயுரைத்த அதே சூளுரைகளை
இத்தனை கால இடைவெளிக்குப் பின்னும்
உன் உதடுகள் உறுதியோடு உச்சரித்தபோது
இந்தப்பூமியே ஒருகணம் புல்லரித்துப்போனதடா!




ருண்ட கண்டத்தில் உதயமாகி
இருள்துடைக்கப்போராடும் கறுப்புச் சூரியனே
மனிதலரலாறு உன்னை ஒருபோதும் மரணிக்க விடாது!



 
 
-மூதூர் மொகமட் ராபி
 

No comments:

Post a Comment