Monday, June 3, 2013

சிறுகதை : நீ எங்கே?




றைக்கதவைத் திறந்து நான் உள்ளே சென்றதுதான் தாமதம். பச்சக் என்று ஈரமாக எனது வலது கன்னத்தில் வந்து அப்பியது அது.
 
 
'ஓ! யே.. ஏஏ...!'
 
 
எதிர்பாராத அந்த தாக்குதலால் நான் பயத்திலே அலறிச் சரிந்து கட்டிலருகே விழுந்து விட்டேன். என் கையிலிருந்த பைல் பேப்பர்கள் சிதறி அறைமுழுவதும் இறைந்ததும் மேசை மீதிருந்த குவளைத்தண்ணீர் சரிந்து தரைமுழுவதும் பரவியது. மூன்று நாட்களாக நான் மாய்ந்து மாய்ந்து எழுதிய அத்தனை நோட்ஸும் என்கண்முன்னே நனைந்து பாழாகியது. ஆனால் இதற்கும் தனக்கும்  சம்பந்தமே இல்லாததுபோல உருண்டு கிடந்த தண்ணீர்க்குவளையின் மீது ஏறி உட்கார்ந்திருந்தது அது.
 
 
எனக்கு கோபம் உச்சிக்கு ஏறியதில் அழுகையே வரும் போலிருந்தது.
நான் சுதாரித்து எழுந்து கொள்வதற்குள் அது குவளையிலிருந்து மீண்டும் எங்கோ தாவிப் பாய்ந்துவிட்டது. விழுந்ததிலே அடிபட்டு வலித்த வலது முழங்காலுடன் சிரமப்பட்டு நடந்து அறையின் விளக்கைப் போட்டேன். நான் யூகித்தது சரியே. அறைச்சுவரில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கின் கீழே பின்னங்கால்களிலொன்றை நீட்டியபடி ஒரு மலையேறும் வீரனைப்போல அப்பிக்கொண்டிருந்தது அது.
 
 
'ஒன்னைக் கொல்றேன் இரு!' என்றபடி மூலையிலிருந்த தும்புத்தடியை ஓசைப்படாமல் கையிலெடுத்து அது இருந்த இடத்தைக் குறிவைத்து ஓங்கிவிட்டேன் ஒரு அடி. 'கலீர்' என்ற ஓசையுடன் நொறுங்கி வீழ்ந்தது, போன வாரம்தான் நான் புதிதாக வாங்கிய 23 வாட்ஸீஎப்ஃசீ மின்குமிழ்.
 
 
பிறகென்ன அறை முழுவதும் இருள் சூழ்ந்துகொண்டது.
 
 
'ஏய் ரெமி! என்னடா மச்சான் சத்தம் அது?' என்றபடி ஓடிவந்தான் எனது பக்கத்து அறை நண்பன் முக்தார். நானும் அவனும் பேராதனை ஆங்கில ஆசிரியர் கலாசாலையின் முதல்வருடப் பயிற்சி ஆசிரியர்கள். ஆண்கள் விடுதிவளாகத்திலுள்ள 'டென்ஸில் கொப்பேகடுவ' மாடிக்கட்டிடத்தின் மூன்றாம் மாடியிலே அடுத்தடுத்த அறைகளிலிருப்பவர்கள். விரிவுரையிலும் ஒரே குரூப்பில் இருந்ததால் நெருக்கமான நண்பர்கள்.
 
 
 'வேறென்ன, அந்தத் தேரைச் சனியன்தான்தாண்டா! இன்டைக்கு வந்து கதவைத் திறக்கிறேன்.. சரியா மொகத்துலயே பாஞ்சிட்றா!'
 
 
'சரிதான், றூம் பல்ப்பையும் ஒடைச்சிட்டியா... போனமாதம் மணிக்கூடு.. முந்தா நாள் முகம்பாக்கிற கண்ணாடி.. இன்டைக்கு பல்ப்பா..? நீயும் ஒருமாதமா அதை அடிக்கப் பாயுறதும் ஒடையுறதும்தான் வேலையாப் போயிட்டுது. ஆனா ஒவ்வொரு முறையும் அது தப்பிருதேடா' என்று சத்தமாய்ச் சிரித்தான் அவன்.
 
 
எனக்கு எரிச்சலாக இருந்தது.
 
 
'ச்சே.. அதை அடிச்சிக் கொண்டாத்தாண்டா முக்தார் நிம்மதி! பாருடா, சனியன் என்ன பாட்டைத்தான் படுத்துது. அடிக்கப் போனா அங்க இஞ்ச அலுமாரி இடுக்கு, புத்தகம் கட்டிலுக்குள்ளயெல்லாம் பாய்ஞ்சு மறைஞ்சு எப்பிடியோ தப்பிடுதுடா'
 
 
'டேய், அதை எலியடிக்கிற மாதிரி அப்பிடி அடிக்கேலாடா..மச்சான்! ஜன்னல நல்லா விரியத் தொறந்து வை. கண்ணடில அப்பிக்கிரிக்கக்கொள்ள தும்புத்தடியால தள்ளிரு. கீழ போய் வுழட்டும்!'
 
 
'திருப்பியும் மேல வராதாடா?'
 
 
'மூணாம் மாடிலருந்து கீழ வுழுந்தாருண்டா மாப்புள்ளைய ஹொருவெலக்குத்தான் கொண்டு போவணும். இடுப்பொடைஞ்சி கெடப்பாரு. பொறவெங்க இஞ்ச வாற..?' என்ற முக்தார் அறையை சிறிது ஒழுங்குபடுத்தி தந்துவிட்டுப் போய்விட்டான்.
 
 
அலுமாரியைத் திறந்து பழைய குண்டு பல்ப்பை எடுத்து ஹோல்டரில் மாட்டி சுவிட்சைப் போட்டேன். மீண்டும் வெளிச்சம் பரவியபோது சுவரில் அது இருந்த இடத்தைப் பார்த்தேன். இப்போது அதைக் காணவில்லை. வேறு எங்கேயும் தென்படவில்லை.
 
 
'இருடி.. என்டைக்காவது மாட்டாமலா இருப்பாய்' என்று மனதுக்குள் கறுவியபடி கட்டில்மெத்தையிலும் மேசையிலும் கிடந்த கண்ணாடிச் சிதறல்களையெல்லாம் பொறுக்கியெடுத்தேன். பின்பு தும்புத்தடியால் அறையைப்பெருக்கி வெளியே வந்து வராந்தாவிலே அதை அள்ளிக்கொண்டிருந்தபோது மீண்டும் அறைக்குள்ளே ஏதோ ஒன்றின்மீது அது தாவிப்பாயும் ஒலி கேட்டது. 
 
 
 
 
'என்னடா காலையிலேயே டல்லா இருக்கிறா.. அச்சினி கேகாலையிலருந்து கேள்ஸ் ஹொஸ்டலுக்கு இன்னும் வரல்லயோ?' சைக்கோலொஜி விரிவுரை முடிந்து இடைவேளை நேரத்தில் ரகசியமாய் கலாய்த்தான் முக்தார்.
 
 
'ஓ அதுதானா மாப்பிள்ளை.. லவ்வை சொல்லத் தெரியாத  பழைய முரளி மாதிரி ஃபீல் பண்ணிட்டிருக்காரு? என்று ராஜேசும் 'எய் மச்சான் லவ் ஃபீவர்த..? ஹா.. அத சுது பபா சுட்டக் பரக்குனவா நேத ?' என்று பத்திரணவும் சேர்ந்து கொண்டான்.
 
 
'டேய், எருமைகளா! அவள் அச்சினியை  கே குறூப் மகாநாமதாண்டா லவ் பண்றான்! நான் அவளோட சும்மா ப்ரண்ட்டாதான் பழகி...'
 
 
'ஓ! அப்பிடியா? சரி, நம்பிட்டோம்டா..'
 
 
'நீ வேற..! டேய் என்னை எப்பிடி வேணுமெண்டாலும் நக்கலடி! ஆனா கடவுளுக்காக அச்சினியைக் கொழப்பி வுட்றாதடா! ப்ளீஸ்!'
 
 
'ஓஹோ! இதில கடவுளுக்கும் ஒரு பங்கைக் குடுத்திட்டீங்களோ?'
 
 
'சரி அதைவுடுங்கடா. என்ட கவலை வேற முக்தார். மூணுநாளா நான் கஸ்டப்பட்டு எழுதியெடுத்த நோட்ஸ் எல்லாம் நேத்து அந்தச் சனியன்ட வேலையால திருப்பி எழுதணும். அதாண்டா யோசனையாருக்கு!'
 
 
'என்னடா இதுக்குப் போய் இவ்வளவு கவலையா..? அதுதான் உன்ட அச்சினிகிட்ட குடு நோட்ஸ்ஸ.  உனக்கென்டா சும்மா அழகா எழுதித் தருவாள் மச்சான்' என்று அபிநயித்தான்.
 
 
'பாத்தியா.. நீ திருந்தவே மாட்டியே. இல்லடா.. நேத்து அது மூஞ்சிலேயே பாஞ்சிட்டுது.. தேரை மூஞ்சில பாஞ்சா தேவாங்கு மாதிரி தேஞ்சுருவோமாம் என்டு எங்கட உம்மா சொல்லுவாங்கடா'
 
 
'யா அல்லாஹ்! நீ தேய்ஞ்சு முடியிறதுக்கு ஒரு நூத்தியம்பது வருசம் புடிக்குமேடா.. ஆளைப்பாரு இதையெல்லாம் போய் நம்பிட்டு.. டேய் நீயெல்லாம் ஒரு சயன்ஸ் படிச்சவனாடா? வெளிய சொல்லாத.. பழைய பஞ்சாங்கம்'
 
 
அவன் சொல்வது உண்மைதான். உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவிலே படித்தவன்தான் நான். ஆனாலும் 'தேரை பாய்ந்தால் தேவாங்கு மாதிரி மெலிவோம்.. பூனை குறுக்கே போனால் காரியம் ஆகாது என்பவற்றை  நம்புவது மட்டுமல்ல ஆவிகள் பேய்கள் பற்றிய பயமெல்லாம் கூட எனக்கு நிறையவே உண்டு. மூடநம்பிக்கைகளில் ஊறிய என்குடும்பம் சின்ன வயதிலிருந்து என்னையும் அப்படியே வளர்த்து விட்டார்கள். அறிவுக்குத் தெரியும் விடயங்களைக் கூட பழக்கவழக்கங்கள் விடாது என்பதற்கு நான்தான் நல்ல உதாரணம்.
 
 
 
 
 
 
பிற்பகல் விரிவுரைகள் முடிவடைந்து நான் மட்டும் அறைக்குத் திரும்பினேன். முக்தார் ஏதோ வேலையாக கீழே பெனிதெனியவுக்கு சென்றிருந்தான்.
அறையைத் திறக்கும்போது சட்டென தேரையின் நினைவு வந்துவிட்டது.  உடனே உள்ளே நுழையாமல் கதவைத்திறந்து பிடித்துக்கொண்டு சற்றுத்தாமதித்து எச்சரிக்கையாக லைட்டைப் போட்டேன். சுவர் முழுவதும் நோட்டமிட்டேன். அதைக் காணவில்லை. சரிதான் வெளியே போயிருக்கும் போல என்று நினைத்து உடுப்பை மாற்றிவிட்டு நிம்மதியாக ஒரு குட்டித்தூக்கம் போடலாம் என்று கட்டிலிலே சாய்ந்து ஒரு சஞ்சிகையை வாசித்தேன். சிறிதுநேரத்தில் தூக்கம் கண்ணைச்சுற்றியது. சரிந்து படுக்கலாம் என்று திரும்பியதுதான் தாமதம். வலது பாதத்திலே பனிக்கட்டி வீழ்ந்தது போல ஜில்லென்றது ஒரு தாவல். அடுத்து கண்ணிமைப்பதற்குள் அங்கிருந்து எனது வலது தோளுக்கு ஒரு சடுதிப்பாய்ச்சல். நான் சுதாரித்து எழுந்து கொள்வதற்குள் வேறு எங்கோ தாவி அது மறைந்து விட்டது. தோளிலே அது இருந்த இடம் ஈரமாக வேறு இருந்தது. பாயும்போது சிறுநீர் கழித்திருக்க வேண்டும் அது.
 
 
'சே! சனியன்!' அருவருப்புத் தாங்காமல் பாத்ரூமுக்கு ஓடிச்சென்று கழுவிக்கொண்டு வந்தேன். தூக்கம் கலைந்துபோன கோபத்திலே மீண்டும் நான் தும்புத்தடியை எடுத்தபோது முன்னைய தினம் முக்தார் கூறிய 'கீழே தள்ளிவிடும்' யோசனை  நினைவுக்கு வந்தது. அதன்படி அறை மேசைக்கு எதிரேயிருந்த கம்பிகளில்லாத கண்ணாடி யன்னல்களை நன்கு விரியத்திறந்து வைத்தேன். பின்பு தும்புத்தடியை அருகில் வைத்துக்கொண்டு கட்டிலில் படுத்திருந்தேன். எப்படியும் அது அங்கு இங்கு என்று பாய்ந்து விட்டு விரியத்திறந்திருக்கும் யன்னலின் கண்ணாடிக்கும் தாவும். அப்போது சட்டென கீழே தள்ளிவிடலாம் என்று யன்னலைப் பார்ப்பதும் தூங்குவதுமாக பாசாங்கு செய்துகொண்டு காத்திருந்தேன். ஆனால் நடந்ததோ வேறு. ஆம் என்னை மறந்து அப்படியே தூங்கிப்போய் விட்டேன்.
 
 
'டேய் ரெமி! ரெமி எழும்புடா..! ஏழரையாயிட்டுது என்னடா இது லைட்டையும் போடாம இப்பிடி நித்திரை கொள்றாய்...? இதென்னடாது கையில தும்புக்கட்டு..? ஏண்டா அதைக் கட்டிப்புடிச்சபடி படுத்திருக்கிறாய்?' என்று முக்தார் வந்து லைட்டைப்போட்டு என்னை உலுக்கியபோதுதான் கண்விழித்தேன். சிறிதுநேரம் ஒன்றுமே விளங்காமல் அப்படியே கட்டிலில் அமர்ந்திருந்தேன். பிறகு சற்றுத் தெளிந்ததும் நடந்ததைச் சொன்னேன்.
 
 
'சரி, நல்லகாலம் அதை நீ அடிக்கப்போய் திருப்பியும் எதையாவது ஒடைக்காதது. அதுசரி அது ஜன்னல் கண்ணாடிக்கிட்ட வந்திச்சாடா..?' என்று கேட்டுக் கொண்டிருந்த முக்தார் திடீரென்று அமைதியாகி மெதுவாக எழுந்தான்.
 
 
'டேய் ரெமி, கொஞ்சம் அப்பிடியே இரு!' என்று கிசுகிசுத்துவிட்டு எதையோ உற்றுப் பார்த்தான். பின்பு ஆள்காட்டிவிரலை தன் வாயில் வைத்து என்னை மௌனமாக்கி விரியத்திறந்திருந்த கண்ணாடி ஜன்னலை சைகையால் எனக்குக் காட்டினான்.
 
 
அப்போதுதான் நானும் பார்த்தேன். என் முகம் சட்டென மலர்ந்தது. திறந்து வைத்திருந்த கண்ணாடி யன்னல் கதவிலே எங்களுக்கு தனது பின்புறத்தைக் காட்டியவாறு அப்பிக்கொண்டிருந்தது அந்தத் தேரை.
 
 
'மச்சான், மெல்லமா ஒன்ட கையிலருக்கிற தும்புக்கட்டைத் தந்துபோட்டு நீ இஞ்சால வா..! நான் பாக்கிறேன் ஆளை..' என்று கிசுகிசுத்தபடி புலிவேட்டைக்கு தயாராகும் ஒரு தேர்ந்த வேட்டைக்காரனின் எச்சரிக்கையோடு செயல்பட்டான் முக்தார்.  தும்புத்தடியின் தும்பு இருக்கும் முனையை நீட்டிப் பிடித்தபடி யன்னலை நோக்கி மிக மெதுவாய் பதுங்கிப் பதுங்கி அவன் முன்னேற அது அசையாமல் அப்படியே இருந்து கொண்டிருந்தது.
 
 
'இந்த முறை ஆள் காலி' என்று எனக்குச் சைகை காட்டியபடி அவன் அதை நோக்கி நெருங்க நெருங்க பார்த்துக் கொண்டிருந்த எனக்குப் பரபரப்பாகிவிட்டது. ஒன்றரை மாதமாக என்னுடைய நிம்மதியைக் குலைத்து வந்த சனியன் இன்றோடு தொலையப்போகின்றது என்ற மகிழ்ச்சியில் எனது இதயம் எகிறிக் குதித்தது.
 
 
முக்தார் யன்னலை நெருங்கி.. நின்று நிதானித்து.. அந்தச் சனியனை வழித்துக் கீழே தள்ளிவிடுவதற்காக தும்புத்தடியை பின்னிழுத்து ஓங்கிய வினாடியில்...
சட்டென மின்சாரம் தடைப்பட்டுப்போனது.
 
 
எங்கள் விடுதி வளாகமே இருளில் மூழ்கிவிட எங்கும் கும்மிருட்டு! யார் எங்கிருக்கிறோம் என்பதே தெரியவில்லை
 
 
'முக்தார் தள்ளிட்டியாடா அதை! கீழ விழுந்திச்சா மச்சான்'
 
 
'அப்பிடித்தான் நெனைக்கிறேன்.. அதுக்குள்ள பாரு இந்த கரண்ட்ற வேலைய.. டோச் இருக்காடா.. சே!'
 
 
'அதுசரி கரண்ட் போனவுடனே என்னமோ கீழ விழுந்த சத்தம் கேட்டிச்சேடா முக்தார்?'  என்று டோர்ச்சை தேடிக்கொண்டே கேட்டேன்.
 
 
'நீ ஒண்ணு! அது தும்புக்கட்டு விழுந்த சத்தம்டா!'
 
 
சிறிது நேரத்தில் மீண்டும் கரண்ட் வந்துவிட்டது. உடனே இருவரும் அறையின் சுவர்களைப் பார்த்தோம். அதைக் காணவில்லை.
 
 
'மச்சான் ரெமி, ஆள் தும்புக்கட்டோட கீழ போய்ட்டாரு.. கவலைய வுடு' என்று என் உள்ளங்கைகளிலே தன்கையால் தட்டிக் குதூகலித்தான் முக்தார். சிறிது சந்தேகமிருந்தாலும் நானும் அவ்வாறு நம்பவே ஆசைப்பட்டேன்.
 
 
ஆனால் எங்கள் மகிழ்ச்சி அதிகநேரம் நீடிக்கவில்லை.
 
 
கீழே சென்று தரையில் விழுந்த தும்புக்கட்டை எடுத்துக்கொண்டு நாங்கள் மீண்டும் அறைக்கு வந்தபோது மின்விளக்கினடியில் சுவரில் அப்பிக்கொண்டிருந்தது அந்தச் சனியன்.
 
 
அதுதான் அந்தத் தேரையை அப்புறப்படுத்துவதற்கு நாங்கள் புரிந்த கடைசி முயற்சி.
 
 
 
 
ப்போதெல்லாம் நான் அந்தத்தேரையை அடிப்பதற்கு முயற்சிப்பதேயில்லை. சரியாகச் சொல்வதென்றால் அதனுடனே வாழப்பழகிக்கொண்டேன். அது எங்காவது சுவரிலோ அல்லது அலுமாரியிலோ ஒட்டியிருந்தால் அதை இடையூறு செய்யாமல் அதற்கேற்றபடி அந்தச் சிறிய அறைக்குள்ளே நான் எனது நடமாட்டத்தை வைத்துக்கொள்வேன். இரவில் தூங்கும்போது அது என்மீது பாய்ந்து தொல்லை தராமலிருப்பதற்காக கட்டிலைச்சுற்றி நுளம்புவலையைப் போட்டுக்கொள்வேன்.
 
 
சொன்னால் நம்பவே மாட்டீர்கள்.
 
 
முக்தார் உட்பட பக்கத்து அறைகளிலே இருந்த முஸ்லீம் நண்பர்கள் ரமழான் பண்டிகைக்கு ஊருக்குச் சென்றிருந்ததால் கடந்த பத்து நாட்களாக ஒருவிதத்தில் எனது தனிமையை விரட்டும் ஜீவனாகவும் எனது பொழுதுபோக்காகவும் அந்தத் தேரை மாறிவிட்டிருந்தது.
 
 
பரீட்சைக்கு புத்தகங்களைப் படித்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும்போது கண்களுக்கு சிறிது ஓய்வு தேவைப்படும். அப்போதெல்லாம் சுவரிலிருக்கும் மின்விளக்கினடியிலே சிறிய பூச்சிகளை அது வேட்டையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்ப்பதுதான் எனது வேலை. இன்னும் சொன்னால் அதனுடைய ஒவ்வொரு அசைவும் எனக்குப் பிடித்துப்போய்விட்டது. பூச்சிகளைப் பிடிப்பதற்காக அது அசையாமல் பொறுமையாய் காத்திருப்பதையும் மலையேறுபவனைப்போல பூச்சிகளை நோக்கி அது முன்னேறுவதையும் பார்க்க விநோதமாக இருக்கும்.
 
 
இரை எதுவும் கிடைக்காத பகல்வேளைகளில் தனது கால்களை உடலோடு நெருக்கமாக மடித்துச்சுருக்கி வைத்தபடி கண்களை மூடிக்கொண்டு ஒரு குழந்தையைப்போல நீண்ட உறக்கத்திலிருக்கும். வழக்கமாக வெளிறிய மண்ணிறத்தில் இருக்கும் அதன் தோலின் நிறம் பகல் உறக்கத்தின்போது மட்டும் அறைச்சுவரின் மெல்லிய பச்சை வண்ணத்திற்கு மாறிவிடும். உறக்கத்திலிருக்கும்போது எதிரிகளின் பார்வையில் இலகுவில் பட்டுவிடக்கூடாது எனும் அந்தச் சிறிய உயிரின் முன்னெச்சரிக்கையை நினைத்து நான் பலமுறை வியந்து போவதுண்டு.
 
 
முன்பெல்லாம் அது எங்காவது ஓரிடத்தில் அதிக நேரம் நிற்காதா என்று தும்புத்தடியுடன் தேடித்திரிந்ததை இப்போது நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இப்போதெல்லாம் விரிவுரைக்குச் சென்றுவிட்டு அறைக்குத் திரும்பினால் இயல்பாகவே எனது கண்கள் அந்தத் தேரையைத் தேடும். சிறிதுநேரம் அதைக் காணாவிட்டாலும் எனக்கு என்னவோ போலிருக்கும்.
 
 
ருநாள் வழக்கம்போல அறையை மூடிவிட்டு சில பொருட்கள் வாங்குவதற்காக கீழே பெனிதெனியவுக்கு சென்றிருந்தேன். சத்துரங்க பேக் ஹவுஸினுள்ளே நுழைந்து பாண் வாங்கிக்கொண்டிருந்தபோது தோளின்மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தேன். தோளிலே ட்ரவலிங் பேக்கோடு சிரித்தபடி நின்றிருந்தான், முக்தார்.
 
 
'டேய் முக்தார், எப்படா ஊர்லருந்து வந்த நீ' என்று அவன் கையிலிருந்த சிறிய பேக்குகளிலொன்றை வாங்கிக் கொண்டேன்.
 
 
'இப்பதான்டா பஸ்லருந்து எறங்கி வாறேன்.. வழியில நீ இதுக்குள்ள போறதை கண்டுட்டுத்தான் பின்னாலயே வந்தன். டேய் ரெமி, இரவுச்சாப்பாடு ஊர்லருந்து ஒனக்குஞ் சேத்துத்தான்டா கட்டி வந்திருக்கேன்.. பாணை நீ வாங்கிட்டியா..?'
 
 
'பரவாயில்ல இதைக் காலைல சாப்பிடலாம். பிறகு, நோன்புப் பெருநாள் எல்லாம் எப்பிடி நல்லமா?'  பேசிக்கொண்டே விடுதியை நோக்கி ஏறலானோம்.
 
 
பட்டர்புரூட் மரத்திலிருந்து பூக்களின் வாசைன காற்றில் மிதந்து வந்தது.
 
 
'ஓம்டா. இந்தமுறை எங்கட பக்கம் வயல் நல்ல விளைச்சல். அதால பெருநாளும் விசேசம்தான். ஒன்னையும் கூப்பிட்டந்தானே.. நீதான் அச்சினியை விட்டு வரமாட்டியே.. பரவாயில்ல, ஒனக்கு நெறைய தொதல் முறுக்கு பலகாரம்லாம் பார்சல்ல இருக்கு. தாறேன் அச்சினிக்கும் குடு...'
 
 
'சரி மச்சான்' என்றேன் உற்சாகத்தோடு. நாங்கள் பேசிக்கொண்டு நடந்தபோது பெண்கள் விடுதி வந்து விட்டது.
 
 
'இன்டைக்கு அச்சினி ஹொஸ்டல்லதானே இருப்பாள்..? இப்பவே கொண்டுபோய் குடுக்கிறியா அவளுக்கு தனியா பார்சல் சுத்தி வச்சிருக்கேன்டா..'
 
 
'இல்ல, நாளைக்கு நம்ம ரிஹான்ஸி ஸேர்ட சைக்கோலொஜி பீரியட்ல வச்சு குடுப்போம்.. அவருக்கும் உங்கட முஸ்லீம் தொதலென்டா நல்ல விருப்பம்'
 
 
'அதுக்கு வேறயா எனக்கிட்ட இருக்கு. இப்ப நீ அச்சினியை மட்டும் ரகசியமா கூப்பிட்டுக்குடு.. நோட்ஸெல்லாம் எழுதிட்டியா..? அதுசரி, உன்ட தேரை மச்சான் என்ன செய்யுறாரு.. உயிரோட இருக்காரா.. அடிச்சிட்டியா?
 
 
நான் பதில் சொல்லாமல் மையமாக புன்னகைத்தேன்.
 
டுத்து வந்த மூன்று நாட்களும் முதலாம் வருடத்திற்குரிய அரையாண்டுப்பரீட்சைகள் நடந்ததால் அனைவரும் பரபரப்பாக இருந்தோம். பரீட்சை நடைபெற்ற நாட்களிலே நண்பர்களோடு சேர்ந்து க்ரூப் ஸ்டடி செய்தோம். அதற்காக விரிவுரை அறைகளிலும் பிரதான மண்டபத்திலும் எங்கள் பொழுதுகள் கழிந்ததால் இரவில் தூங்கும் நேரம் தவிர எங்கள் அறைகள் பெரும்பாலும் பூட்டியே கிடந்தன.
 
 
வெள்ளிக்கிழமை முற்பகலோடு ஒருவழியாக சகல பரீட்சைகளும் முடிவடைந்தன. அதைக் கொண்டாடுவதற்காக அன்றிரவு பிரதான மண்டபத்திலே களியாட்ட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது. ஆனால் மாலையே முக்தார் ஏதோ ஓர் அவசர வேலையாக கொழும்புக்குக் கிளம்பிப் போய்விட்டான்.
 
 
மாலைமுதல் ஆடல்-பாடல், போட்டிகள், விளையாட்டுகள் டின்னர் பார்ட்டி அது இது என்று எங்கள் களியாட்ட நிகழ்வுகள் முடிவடைய நடுநிசி தாண்டி விட்டது. அச்சினியை பெண்கள் விடுதியில் கொண்டுபோய் விட்டுவிட்டு நடுங்கும் குளிரில் தள்ளாடிக்கொண்டு வந்து அறையைத் திறந்து கட்டிலிலில் தொப்பென விழுந்து படுத்தேன்.
 
 
மறுநாள் காலை கண்விழித்தபோது ஒன்பது மணி தாண்டிவிட்டது.
 
 
அன்று சனிக்கிழமை என்பதால் கலாசாலை வெகுஅமைதியாக இருந்தது. எழுந்திராமல் அப்படியே கட்டிலிலேயே படுத்திருந்தேன். ஏதோ ஒன்று குறைவது போன்ற இனம்புரியாத ஓர் உணர்வு என்னை வாட்டிக்கொண்டேயிருந்தது. அப்போது சட்டென அந்தத்  தேரையின் ஞாபகம் வந்தது. அது பகல்வேளைகளிலே அப்பிக்கொண்டு உறங்கும் மின்குமிழின் பின்புறச்சுவரைப் பார்த்தேன். அங்கு அதைக் காணவில்லை.
 
 
எங்கே போயிருக்கும்...?
 
 
பரீட்சை பரபரப்பில் சில தினங்களாக தேரையை நான் கவனிக்கவேயில்லை என்பது அப்போதுதான் உறைத்தது. இடையிடையே நான் நோட்ஸ் எடுப்பதற்காக அறைக்கு வந்த நேரத்திலும் அதைக் கண்டதாக ஞாபகம் வரவில்லை. எழுந்து பாத்ரூமில் குளித்துவிட்டு வந்து யன்னலைத் திறந்தேன். சில நாட்களாக நாங்கள் அறையில் இருந்தது குறைவு என்பதால் யன்னல்கள் திறக்கப்படாமலே இருந்தன. கண்ணாடி பார்த்துத் தலையைச் சீவிக்கொண்டே அறைமுழுவதும் நோட்டமிட்டேன்.
 
 
ம்ஹும். தேரை இல்லவே இல்லை. சிலவேளை அலுமாரிக்குள் புகுந்திருக்குமோ என்று அதையும் திறந்து பார்த்தேன். ஆனால் அங்கேயும் அது இல்லை. அறையைவிட்டு வெளியே வந்து வராந்தாச் சுவர்களிலும் பார்த்தேன். எங்கேயும் அதைக் காணவில்லை.
 
 
ஒருவேளை பாத்ரூம் பக்கம் தாவிப்போயிருக்குமா என்றால் அது இவ்வளவு தூரம் அறையை விட்டு வெளியே வந்ததே கிடையாது. ஆனாலும் பாத்ரூமையும் ஒரு இடம் விடாமல் முழுமையாக பார்த்துவிட்டேன். அங்கே மட்டுமல்ல எங்கேயும் அதைக் காணவில்லை.
 
 
மனமெல்லாம் வெறுமையாக இருந்தது.
 
 
எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. சட்டென டீசேர்ட் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு பெனிதெனியவுக்கு இறங்கிச்சென்று காலையுணவும் பழங்களும் வாங்கிக்கொண்டு திரும்பினேன். வழியிலிருந்த சிறிய ஆங்கிலிக்கன் தேவாலயத்தின் உள்ளே போய் சிறிது நேரம் அமைதியாக கண்களைமூடி அமர்ந்திருந்தேன். அப்போதும் மனம் ஏனோ ஒருநிலைப்படவில்லை.
 
 
கல்லூரி லைப்ரரி இருக்கும் ஆளரவமற்ற அமைதியான வீதியிலே உயர்ந்து வளர்ந்திருந்த பட்டர்ப்ரூட் மரங்களை அண்ணாந்து பார்த்தவாறு தனியாக உலாவினேன்.  கேள்ஸ் ஹொஸ்டலைத்தாண்டி வரும்போது வாசலில் நின்றிருந்த பெண்கள் சிலர், 'ஹாய் ரெமி!' என்று கையசைத்தார்கள். அவர்களிடம் சொல்லி உள்ளேயிருக்கும் அச்சினியைக் கூப்பிட்டு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருக்கலாமா என்று தோன்றியது. ஆனாலும் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு அறைக்கு வந்துவிட்டேன்.
 
 
இப்போதும் அறையிலே அந்தத் தேரையைக் காணவில்லை.
 
 
சாப்பாட்டுப்பார்சலை மேசையில் பிரித்து வைத்தும் ஏனோ சாப்பிட முடியவில்லை. மீண்டும் அறைமுழுவதும் தேரையைத்தேடும் படலம் ஆரம்பமானது. புத்தகங்கள், ஆடைகள், அலுமாரி இடுக்கு, மெத்தையின்கீழ் என்று ஒரு இடம் விடாமல் கடைந்து தேடியும் விளைவு தோல்வியே.
 
 
முன்பு இதே தேரையை கொல்லுவதற்காக நான் தும்புத்தடி சகிதம் கோபத்தோடு தேடியது ஞாபகம் வந்தது. இப்போது அதை நினைத்ததும் ஏனோ என்னையறியாமலே சட்டென கண்ணின் ஓரம் நீர் துளிர்த்தது எனக்கு. சாப்பாட்டுப் பார்சலை மீண்டும் மடித்து வைத்துவிட்டு சிறிதுநேரம் அப்படியே கட்டிலிலே படுத்தவாறு யோசித்துக் கொண்டிருந்தவன் அப்படியே தூங்கிப்போனேன்.
 
 
மீண்டும் கண்விழித்தபோது தோள்பட்டையிலே ஏதோ அரித்தது எனக்கு.
 
 
தலையைத் திருப்பிப் பார்த்தபோது கட்டிலினருகே சித்தெறும்புகள் சாரிசாரியாக ஒரு கோடுபோல எங்கோ போய்க்கொண்டிருப்பதைக் கண்டேன். சட்டென மேசையிலே வைத்திருந்த சாப்பர்ட்டை எடுத்துப் பார்த்தேன். ஆனால் அதிலே எறும்புகளைக் காணவில்லை. அப்படியானால் அவை எங்கேதான் போகின்றன என்ற ஆர்வத்தால் எறும்பு வரிசையை பார்வையாலேயே தொடர்ந்தேன். அவை மேசையைக் கடந்து மூடிக்கிடந்த கண்ணாடி ஜன்னலின் கதவுகள் நிலையோடு பிணைச்சல்களால் இணைக்கப்பட்டிருந்த சிறிய இடைவெளிக்குள் போவதைக் கண்டேன்.
 
 
ஆர்வம் மேலிட மெதுவாக ஜன்னல் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன்.
 
 
அந்த இடைவெளிக்குள் நசிந்து சப்பையாகிக் காய்ந்துபோய் எறும்புகளால் அரிக்கப்பட்டு பாதி எலும்பும் பாதி தோலுமாக ஒட்டிக்கிடந்தது அந்தச் சிறிய தேரை.
 
 
-மூதூர் மொகமட் ராபி
(2013.05.31)


 

Wednesday, May 29, 2013

அந்த சிவகாமி மகனிடம்...



Lyrics: Kannadhasan Music: R Govardhanam  Film: Pattanaththil Bootham


பெண்: அந்த சிவகாமி மகனிடம் சேதிசொல்லடி
எனைச்சேரும் நாள்பார்க்கச் சொல்லடி
இங்கு எவரோடும் நான்பேச வார்த்தையேதடி
வேலன் இல்லாமல் தோகையேதடி...

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் கூடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே...

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே...
நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே..
கண்ணில் நின்றாடச் சொல்லடி

ஆண்: மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்

பெண்: நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தொடருமோ..
காலம் மாறினால் காதலும் மாறுமோ..
காலம் மாறினால் காதலும் மாறுமோ..?

ஆண்: மாறாது ..மாறாது இறைவன் ஆணை!

இருவரும்: என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை

ஆண்: இந்த சிவகாமி மகனிடம் சேதிசொல்லடி எனைச்சேரும் நாள்பார்க்கச் சொல்லடி இங்கு எவரோடும் நாம் பேச வார்த்தையேதடி  தோகை இல்லாமல் வேலன் ஏதடி..

பெண்: அந்த சிவகாமி மகனிடம்... அந்த சிவகாமி மகனிடம்... சேதிசொல்லடி எனைச்சேரும் நாள்பார்க்கச் சொல்லடி...

Sunday, May 26, 2013

சாகித் அஃபிரிடி




விக்கிபீடியாவின் தமிழ்பதிப்பில் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும் விதம் ஒருவித தனித்துவம் மிக்கது. அதிகமான கட்டுரைகள் ஆங்கில மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படுவதும் அந்த மொழிபெயர்ப்பும் கூட கூகிள் மென்பொருள் மூலம் ஆற்றப்படுவதால்தான் வாசிப்பவர்களுக்கு தனியொருவிதமாக  அமைந்துள்ளது போலும். இதோ கிரிக்கட் உலகம் கண்ட தனித்துவமான அதிரடித் துடுப்பாட்ட வீரர் ஷகீட் அப்ரிடி பற்றிய விக்கிபீடியாவின் வருணனை:

- Mutur Mohammed Rafi
 
 



 

சாகிப்சாதா முகம்மது சாகித் கான் அஃபிரிடி (’’Sahibzada Mohammad Shahid Khan Afridi’’, பாஷ்டோ: صاحبزاده محمد شاهد خان افریدی, உருது: صاحبزادہ محمد شاہد خان آفریدی) (மார்ச் 1, 1980 ஆம் ஆண்டில் கூட்டரசுகளால் நிர்வகிக்கப்படும் பழங்குடிப் பகுதிகளின் கைபர் ஏஜென்சியில் பிறந்தார்)[2], ஷாஹித் அஃப்ரிடி (பஷ்தூ: شاهد ‏افریدی) என்று பிரபலமாக அறியப்பட்ட அவர் பாகிஸ்தான் மட்டைப்பந்தாட்டக்காரர், தற்போது அவர் சர்வதேச அளவில் பாகிஸ்தான் தேசியக் குழுவிற்காக விளையாடுகிறார். அவர் தன்னுடைய முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியை நைரோபியாவில் கென்யாவுக்கு எதிராக அக்டோபர் 2, 1996 ஆம் ஆண்டிலும், முதல் டெஸ்ட் போட்டியை கராச்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 22, 1998 அன்றும் தொடங்கினார்.[3]
அவர் தன்னுடைய வலிந்து தாக்கும் பாட்டிங் பாணிக்காக நன்கு அறியப்பட்டவர், மேலும் தற்போது சர்வதேச மட்டைப்பந்தாட்ட வரலாற்றின் அதிக ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டிருக்கிறார். ஒரு சமீபத்திய கருத்துக்கணிப்பின்போது, பாகிஸ்தானின் மிகப் பிரபலமான மட்டைப்பந்தாட்டக்காரராக அஃப்ரிடி குறிப்பிடப்பட்டுள்ளார்.[4] அவர் தன்னுடைய முதல் இன்னிங்சிலேயே, மிக வேகமான ஒரு நாள் நூறு ஒட்ட சாதனையையும் பெற்றுள்ளார்,[5][6] அது மட்டுமல்லாது ஒரே ஓவரில் 32 ஒட்டங்களைப் பெற்றுள்ளார், இது ஒரு நாள் போட்டியில் எப்போதும் பெற்றிராத இரண்டாவது அதிகமான மதிப்பெண்ணாகும்.[7]

அஃப்ரிடி, ஆப்கானிஸ்தான் எல்லைக்கருகில் இருக்கும் குடியரசுகளால் நிர்வகிக்கப்படும் பழங்குடியினப் பகுதிகளிலிருந்து வந்தவர் மேலும் அவர் பஷ்துன் குடும்ப[2] த்தைச் சார்ந்தவர்.

விளையாடும் பாணி [தொகு]

பாட்டிங் [தொகு]

அவருடைய பொதுவான மட்டை அடிக்கும் (பாட்டிங்) பாணி மிகவும் தீவிரமானதாகவும் தாக்கும் தன்மையுடையதாகவும் இருக்கிறது, வேகமான ஒரு நாள் சர்வதேச நூறு ரன்களை வெறும் 37 பந்துகளில் எடுத்தபின்னர், "பூம் பூம் அஃப்ரிடி" என்ற புனைபெயரைப் பெற்றுத்தந்தது.[8] பிப்ரவரி 21, 2010 அன்று அவருடைய ஒருநாள் சர்வதேச ஸ்ட்ரைக் ரேட் 100 பந்துகளுக்கு 111.65 ஓட்டங்களாக இருந்தது, மட்டைப்பந்தாட்ட வரலாற்றிலேயே இது மிக அதிக மதிப்பெண்ணாகும். இந்த மனப்பான்மை டெஸ்ட் மட்டைப்பந்தாட்டத்திலும் இடம்பெற்றது, இதில் அஃப்ரிடி டெஸ்ட்களில் உயர்ந்த ஸ்ட்ரைக் ரேட்டான 86.13 ஒட்டங்களைப் பெற்றிருக்கிறார். அவர் மட்டை அடிப்பதற்காக வைத்திருக்கும் அணுகுமுறை ஆட்டத்தின் வேகத்தை மாற்றக்கூடியதாக இருக்கிறது, மேலும் பார்வையாளர்களின் உணர்வுநிலையைத் தூண்டுகிறது, இது, 2005 ஆம் ஆண்டின் இறுதியில், பாகிஸ்தானில் அவர் க்ரீஸிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பார்வையாளர்கள் பெரும் அளவில் கூட்டமாக வெளியேறியதிலிருந்து நிரூபிக்கப்படுகிறது. அவர் பல சிக்ஸர்களை நீள வாக்கிலும் உயரத்திலும் அடித்து விளாசுகிறார், பந்தை மிட்விக்கட் மேலே அல்லது நேராக மைதானத்தின் எல்லைக்கே அனுப்பிவிடுவார். அவரின் அடையாளக்குறியாக ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியிலுள்ள பந்திற்கு லெக்-சைடிற்கு ஒரு குறுக்கு பாட்டிங் செய்யப்பட்ட அடியைக் கொடுப்பார்.[9] இத்தகைய அதிரடி பாணிகள் நினைவைவிட்டு நீங்கா சில விளாசல்களை ஏற்படுத்தியிருக்கிறது, 2002 ஆம் ஆண்டில் பவர் மட்டைப்பந்தாட்டத்தில் எப்போதும் இல்லாது முதல் 12 ஒட்டங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கது, அப்போது அஃப்ரிடி வெற்றிகரமாக கூரையை நோக்கி அடித்தார்.[10] எனினும், அவருடைய தாக்கும் பாணி அவர் வெளியேறிவிடும் இடர்ப்பாட்டினை அதிகரிக்கிறது, மேலும் மட்டைப்பந்தாட்டத்தில் மிகவும் முரண்பாடுடன் கூடிய பாட்ஸ்மேன்களில் ஒருவராகவும் இருக்கிறார். 25 வயதுக்கும் கீழ் சராசரியாக 5000க்கும் மேலான ஒரு நாள் சர்வதேச போட்டி ஓட்டங்களைப் பெற்ற ஒரே வீரர் இவர்தான் என்னும் உண்மையுடன் இது பிரதிபலிக்கிறது.[11]

பந்து வீசுதல் [தொகு]

பந்து வீச்சைப் பொறுத்தவரையில், லெக் பிரேக் தான் அவருடைய ஸ்டாக் பாலாக இருந்தது, ஆனால் அவருடைய உத்திகளில், வழக்கமாயுள்ள ஆஃப் பிரேக் மற்றும் 'விரைவான ஒன்று' ஆகியவையும் உள்ளடங்கியிருக்கிறது, இதை அவர் ஒரு மீடியம் பேசர் பாணியில் கிட்டத்தட்ட மணிக்கு 80 மைல் வேகத்தில் போட முடியும். ஒரு ஸ்பின்னருக்குரிய அதி வேகத்தில் அவர் பந்தை வீசுகிறார், இதன் விளைவாக பந்து குறைந்த சுழற்சியை ஏற்படுத்தி வேகத்தில் மாறுபாடுகளின் மீது அதிகமாகச் சார்ந்திருக்கச் செய்கிறது. அவர் மட்டை அடிப்பாளருக்கு எப்போதாவதுதான் ஒரு பௌன்சர் போடுவார், இது ஸ்பின் பௌலர்களிடத்தில் அரிதான ஒன்றாக இருக்கிறது.

சர்வதேச போக்கு [தொகு]

 
 
ஒவ்வொரு இன்னிங்ஸாக அஃப்ரிடியின் டெஸ்ட் போட்டி பேட்டிங் முன்னேற்றம், அவர் எடுத்த ரன்கள் (சிகப்பு பார்கள்) மற்றும் அவர் ஆடிய கடைசி பத்து இன்னிங்ஸின் சராசரி ரன்கள் (நீலக் டு) காட்டப்பட்டுள்ளது.
அக்டோபர் 1996 ஆம் ஆண்டில் பதினாறே வயதாக இருக்கும்போது காயமடைந்த முஷ்டாக் அஹ்மத்துக்குப் பதிலாக ஒருநாள் சர்வதேசக் குழுவுக்கு ஒரு லெக் ஸ்பின்னராக கொண்டுவரப்பட்டார். பின்னர் அவர் ஒரு பின்ச்-ஹிட்டர் ஆக சிறப்புப் பெற்றார், மேலும் சயீத் அன்வர் உடன் துவக்க ஆட்டக்காரராக ஆனார். ஒருநாள் சர்வதே ஆட்டங்களில் வேகமான நூறு ரன்களைப் பெற்ற சாதனையைக் கொண்டிருக்கிறார் (37 பந்துகளில்),[12] இதை அவர் தன்னுடைய இரண்டாவது போட்டி மற்றும் அவருடைய முதல் ஒருநாள சர்வதேச இன்னிங்ஸில் பெற்றார். அவர் பிரெய்ன் லாராவுடன் ஒரு நாள் சர்வசே போட்டிகளில் மூன்றாவது வேகமான நூறு ரன்களுக்கான சாதனையைப் பகிர்ந்து கொள்கிறார் (45 பந்துகளில்). பாகிஸ்தானின் மிகவும் பயனுள்ள ஆல்ரவுண்டர்களில் ஒருவராக மிகவும் தாக்குதலுக்குரிய மட்டை அடிக்கும் பாணியைக் கொண்டிருக்கிறார், இது அவருக்கு 5,000 க்கும் மேலான ஒரு நாள் சர்வதேச ஒட்டங்களைப் பெற்றுத்தந்தது, (அதில் ஒரு முன்னாள் உலக சாதனையான 249 சிக்ஸர்களும் உள்ளடங்கும், இது சமீபத்தில் சனத் ஜெயசூர்யாவால் முறியடிக்கப்பட்டது), அத்துடன் அவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 250 விக்கெட்களையும் டெஸ்ட் நிலையில் 47 விக்கெட்களையும் எடுத்திருக்கிறார்.

பல்வேறு காரணங்களுக்காக, பாட்டிங்கின் போது பொறுமை இல்லை என்னும் புலப்பாடு உட்பட, அஃப்ரிடிக்கு டெஸ்ட் ஆட்டங்களில் குறைந்த அளவே வாய்ப்புகள் கிடைத்தன, இருந்தபோதிலும் தற்சமயம் அவர் மட்டை அடிப்பதில் மற்றும் பந்து வீசுவதில் முறையே உயர்ந்த முப்பதுகள் மற்றும் மத்திய முப்பதுகளில் சராசரியாக இருக்கிறார். உள்ளபடி பார்த்தால், தன்னுடைய வாழ்க்கைத் தொழில் காலத்தில் பாகிஸ்தானால் ஆடப்பட்ட டெஸ்ட் ஆட்டங்களில் மூன்றில் ஒன்றுக்கும் குறைவான ஆட்டங்களில் அஃப்ரிடி இடம்பெற்றிருக்கிறார்.[13] எனினும், 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் தன்னுடைய இருப்பை வெளிப்படுத்தினார், அப்போது அவர் விரைந்த இரண்டாவது இன்னிங்ஸ் அரை-நூறு ஒட்டங்களைப் பெற்றார் மேலும் அந்த ஆட்டத்தில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி (டெண்டுல்கரை இருமுறை வீழ்த்தியது உட்பட), பாகிஸ்தான் அந்த ஆட்டத்தை வெற்றிபெறவும் ஆட்ட வரிசையை சமநிலையில் முடிக்கவும் உதவி புரிந்தார்.[14]
பௌன்ஸ் ஆகும் பிட்சுகள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற எதிராளிகளிடத்தில் அவருடைய மட்டை அடித்தல்கள் போராடுகின்றன என்று புலப்பட்டுள்ளது, இருந்தாலும் காலப் போக்கில் ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக அவருடைய சாதனைகள் மேம்பட்டு வந்திருக்கிறது. துணைக்-கண்ட பிட்சுகளில் ஒரு ஓப்பனராக அவர் வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அஃப்ரிடி அவ்வப்போது லோயர் ஆர்டருக்கும் கூட நகர்த்தப்படுகிறார்.
அஃப்ரிடி 2005 முழுவதும், இந்தியா மற்றும் மேற்கிந்திய பயணங்கள் தொடங்கி, இங்கிலாந்து பயணம் முழுவதும், தன்னுடைய மட்டை அடித்தல் மற்றும் பந்துவீச்சில் மிகவும் உறுதியாகவே இருந்துவந்தார். பாகிஸ்தானிய பயற்சியாளர் பாப் உல்மெர், அஃப்ரிடியின் ஷாட் தேர்வுகளை மேம்படுத்தியதன் மூலமும் அவருடைய மட்டை அடிக்கும் போக்கில் ஒரு கட்டுப்பாடற்ற தன்மையையும் வழங்கி அவர் முழுமையான செயல்திறனை அடைய உதவிபுரிந்தார்.
2007 ஆம் ஆண்டு உலக இருபது20 போட்டியில் மட்டைஅடிப்பதில் மிக மோசமாகவும் பந்துவீச்சில் மிகச் சாமர்த்தியமாகவும் விளையாடினார், இறுதி ஆட்டத்தில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தாதபோதும் மற்றும் ஒரு கோல்டன் டக்கிற்கு வெளியேறியபோதும் அவர் மேன் ஆஃப் தி சீரீஸ் விருதைப் பெற்றார்.

தற்காலிக டெஸ்ட் ஓய்வு மற்றும் திரும்புதல் [தொகு]

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று, ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்தும் வகையில் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு தான் டெஸ்ட் மட்டைப்பந்தாட்டங்களிலிருந்து தற்காலிகமாக ஓய்வு கொள்ளப்போவதாக அறிவித்தார். அப்போதும் கூட அயர்லாந்துக்காக மேற்கொண்ட கௌண்டி கிரிக்கெட்டில் அவருடைய நிகழ்த்தும்தன்மை குறைந்திருந்தது, அவர் மட்டை அடிப்பதைவிட பந்து வீசுவது நன்றாக இருந்தது. வேலைபளுவுடன் ஈடுகொடுப்பது மிகச் சிரமமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இருந்தபோதிலும், ஏப்ரல் 27, 2006 அன்று, பாகிஸ்தான் மட்டைப்பந்தாட்ட வாரியத் தலைவர், ஷார்யார் கானுடன் பலமான பேச்சுவார்த்தைக்குப் பின், அஃப்ரிடி தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார். இவ்வளவுக்குப் பிறகும், இங்கிலாந்துக்கு எதிரான மூன்று விரைந்த இன்னிங்ஸிற்கு பிறகு, 2006 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் அஃப்ரிடி டெஸ்ட் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மட்டை அடிக்கும் வரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டார், இது அவருடைய அதிக வழக்கமான மத்திய வரிசையிலிருந்து விலகி இருந்தது, இங்கிலாந்து பிட்சுகளில் பகட்டான அசட்டைக்குரிய ஸ்ட்ரோக்பிளேகளை வெளிப்படுத்தினார், இது குறைந்த ஆனால் மகிழ்விக்கக்கூடிய இன்னிங்ஸிற்கு வழிவகுத்தது.

வாழ்க்கைத் தொழில் சிறப்புகள் [தொகு]

  • 1996 ஆம் ஆண்டு அக்டோபர் நான்கு அன்று தன்னுடைய முதல் சர்வதேச இன்னிங்சில் விளையாடிய அஃப்ரிடி, நைரோபியில் இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் வேகமான ஒரு நாள் நூறு ஓட்டங்களை எடுத்தார். அவருடைய இன்னிங்ஸில் சனத் ஜெயசூர்யாவின் ஓவர்கள் ஒன்றில் 28 ஒட்டங்ளை எடுத்ததும் உள்ளடங்கும், அவருடைய சாதனையை இவர் முறியடித்தார்.[12]
  • இலங்கைக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச ஆட்டத்தில் தன்னுடைய 37 பந்தில் நூறு ஒட்டங்ளைப் பெற்று, தன்னுடைய 16 ஆண்டுகள் 217 நாட்களே ஆன வயதில், வரலாற்றிலேயே இளம் விளையாட்டு வீரரானார். அதில் 11 ஆறுகளும் ஆறு நான்குகளும் அடங்கும்.[15]
  • 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தொடர் வரிசை போட்டி வெற்றியில் 26 பந்தில் அரை-நூறு ஒட்டங்களையும் மூன்று இரண்டாவது-இன்னிங்ஸ் விக்கெட்களையும் எடுத்தார்.[14]
  • 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கு எதிராக 45 பந்துகளில் ஒருநாள் சர்வதேசத்தில் மூன்றாவது வேகமான நூறு ஒட்டங்களுக்கான சாதனையை அவர் பிரெய்ன் லாராவுடன் பகிர்ந்து கொள்கிறார்.[12] இந்திய மட்டைப்பந்தாட்டக்காரராக இருந்து வர்ணனையாளராக மாறிய ரவி சாஸ்த்ரி, உண்மையிலேயே அவருக்கு பூம் பூம் அஃப்ரிடி என்ற பட்டப்பெயரை கொடுத்ததைக் கண்ட முதல் ஆட்டமும் இது தான்.[16]
  • 50-ஒவர் ஆட்டத்தில் சமமான மிகஅதிக ஒட்டுமொத்த சிக்ஸர்களைப் பெற்றுத் தலைசிறந்த இலங்கை பாட்ஸ்மான் சனத் ஜெயசூர்யாவுடன் பகிர்ந்துகொண்டார், மேலும் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச சிக்ஸர் சாதனையையும் கொண்டுள்ளார்.[17]
  • 2006 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங்கின் ஓவரில் தொடர்ச்சியான நான்கு சிக்ஸர்களைப் பெற்றார், இது 1990 ஆம் ஆண்டில் கபில் தேவ் செய்த அருஞ்செயலுக்கு ஈடானது.[18]
  • ஒரே பந்தில் 12 ஓட்டங்களைப் பெற்ற முதல் நபரும் இவரேயாவார், அப்போது அவர் மில்லேனியன் ஸ்டேடியத்தின் கூரையில் அடித்தார். இது பவர் கிரிக்கெட்டின் ஒரு ஆட்டத்தின் போது நிகழ்ந்தது.[10]
  • வேகமான முதல் எட்டு ஒரு நாள் சர்வதேச அரை-நூறுகளில் நான்கினை இவர் கொண்டுள்ளார், இருமுறை 18 பந்துகளிலும் மேலும் இருமுறை 20 பந்துகளிலும் நிறைவுசெய்தார். வெறும் 21 பந்துகளில் ஒரு அரை-நூறையும் அவர் பெற்றிருக்கிறார்.[19]
  • அபுதாபியில், 2007 ஆம் ஆண்டில் நடந்த ஒருநாள் சர்வதேச ஆட்டத்தில் மலிங்கா பண்டாராவின் ஒரு ஓவரில் 32 ரன்களை எடுத்தார். அவர் தொடர்ச்சியான நான்கு சிக்ஸர்களை அடித்தார், அதுதான் ஒருநாள் சர்வதேச வரலாற்றில் இரண்டாவது அதிகமான விலைமதிப்புமிக்க ஓவராக இருந்தது.
  • ஒரு நாள் சர்வதேச வரலாற்றில் 5000 ஒட்டங்கள் மற்றும் 200 விக்கெட்டுகளின் கூட்டணியைச் சாதித்த மூன்றாவது விளையாட்டு வீரரும் கூட. இலங்கையின் சனத் ஜெயசூர்யா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஜாக்குயஸ் கல்லிஸ் ஆகியோர் இதர வீரர்களாவார்கள்.

பிட்சை சட்டவிரோதமாக மாற்றம் செய்தல் [தொகு]

2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று, இங்கிலாந்துக்கு எதிரான மூன்று-டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஷாஹித் அஃப்ரிடி வேண்டுமென்றே பிட்சை சேதப்படுத்தியதற்காக ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் இரு ஒரு-நாள் சர்வதேசங்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டார். ஒரு எரிவாயு தகரப்பெட்டி வெடித்துச் சிதறியதும் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது அவர் தன் பூட்ஸ்களை உரசி பிட்சின் மேற்பரப்பை தேய்த்துக்கொண்டிருப்பதைத் தொலைக்காட்சிக் கேமராக்கள் படம்பிடித்தன. ஆட்டத்தின் உற்சாகநிலை தொடர்பாக ஐசிசி ஒழுக்க நெறிமுறையின் சட்ட நிலை மூன்றை மீறியதாக அஃப்ரிடி பின்னர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அஃப்ரிடியின் கோமாளித்தனங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அவர் விசாரிக்கப்பட்டு, அந்த நாளின் ஆட்டம் முடிந்தபின்னர் நீக்கப்பட்டார், மேலும் ஆட்டத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தியதற்காக மட்டைப்பந்தாட்ட இரசிகர்களிடமிருந்து கடும் விமர்சனங்களையும் பெற்றார்.
ஆட்ட நடுவர் ரோஷன் மஹாநாமா இவ்வாறு கூறினார்: "இந்த நீக்கம், மற்ற விளையாட்டு வீரர்களிடம், இத்தகைய நடத்தைகள் அனுமதிக்கப்படமாட்டாது என்னும் செய்தியாக இருக்க வேண்டும்." அதற்கு அஃப்ரிடி தன்னுடைய தவறை ஏற்றுக்கொண்டு, "என்னைப் போன்ற மூத்த விளையாட்டு வீரர்கள் மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்கவேண்டும், ஏனெனில் அவர்கள் கற்றுக்கொள்வதற்கு எங்களைப் பார்க்கிறார்கள்" என்று கூறினார். அவருடைய நடத்தை பாகிஸ்தான் மட்டைப்பந்தாட்ட வாரியத்திடமிருந்தும் கண்டனத்துக்கு உள்ளானது.[20][21][22]

பார்வையாளர் சம்பவம் [தொகு]

அஃப்ரிடி டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிறகு படியில் ஏறிவந்துகொண்டிருக்கும்போது ஒரு பார்வையாளர் அவரை சபித்ததால் அந்த பார்வையாளர் மீது தன்னுடைய மட்டையை நீட்டியதை காமிராவில் கண்ட பிறகு அவர் அந்த விளையாட்டுக்குக் களங்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறி 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி எட்டு அன்று குற்றஞ்சாட்டப்பட்டார். ரீப்ளேக்கள் அந்தச் செயல் எந்தவித காயங்களையும் ஏற்படுத்துவதற்காக செய்யப்படவில்லை என்று காட்டியபோதிலும், அந்தப் பார்வையாளர் அதன் தொடர்பினைத் தவிர்ப்பிதற்காக அதன் பாதையிலிருந்து சற்று நகர்ந்து சென்றிருக்கிறார். அஃப்ரிடி குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, ஒரு நாள் சர்வதேசத்திலிருந்து நான்கு ஆட்டங்களுக்கு நீக்கப்பட்டார், இது அத்தகைய குற்றங்களுக்கான குறைந்தபட்ச இயலக்கூடிய தடையாகும், அதன் விளைவாக அவர் பாகிஸ்தானின் முதல் இரண்டு 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஆட்டங்களைத் தவறவிடுவார். இந்தத் தண்டனை மிகவும் கடுமையானதாக உணரப்பட்ட போதிலும், பிசிபி மற்றும் அஃப்ரிடி இந்தத் தடையை எதிர்த்து முறையீடு செய்ய விரும்பவில்லை. இந்த நிகழ்வு ஏற்படுவதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்த தென் ஆப்பிரிக்க மட்டைப்பந்தாட்ட நிர்வாகிகள் மற்றும் அந்த பார்வையாளர் ஆகிய இருவரும் கண்டிக்கப்பட்டனர் என்பதையும் கவனிக்கப்படவேண்டியுள்ளது.[23]

பந்தைச் சேதப்படுத்துதல் [தொகு]

ஜனவரி 31, 2010 அன்று, ஐந்தாவது காமன்வெல்த் பாங்க் ஒரு நாள் சர்வதேச ஆஸ்திரேலியா தொடர், WACA மைதானத்தில் நடைபெற்றபோது, இறுதியில் அஃப்ரிடி பந்தை மிகவும் வலிமையுடன் கடித்துக்கொண்டிருப்பது காமிராவில் படம்பிடிக்கப்பட்டது.[24][25][26] ஆட்டம் முடிவடைந்தவுடன் ஆட்ட நடுவர் அவரை உடனடியாக அழைத்தார். தன்னுடைய தற்காப்பாக, அவர் ஒரு பாகிஸ்தான் தொலைக்காட்சிக்குக் கூறுகையில் தான் "பந்தை வாசனை பிடிக்க" முயன்று கொண்டிருந்ததாகக் கூறினார்,[27] இருந்தாலும் பின்னர் அஃப்ரிடி பந்தைச் சேதப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார், அவர் இரு இருபது20 சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டார்.[28] இந்தச் சம்பவம் ஊடகங்களில் பைட்கேட் நிகழ்வு என்று பரவலாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.[29]

Thursday, May 16, 2013

சோசலிஷம் எதற்காக? : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


 
 
 
 
Albert-Einstein
பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.
 
 
 
விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட தொகுப்பில் அடங்கிய நிகழ்வுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பினைக் கூடுமானவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் தொகுதிக்குப் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்க விதிகளைக் கண்டறிய முயல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அத்தகைய நடைமுறை ரீதியான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அனேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பொருளாதாரத் துறையில் செயல்படும் பொதுவான விதிகளைக் கண்டறியும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. அதோடுகூட, மனித வரலாற்றில், நன்கு அறியப்பட்ட நாகரிகக் காலப்பகுதி என்று சொல்லப்படுகின்ற காலந்தொட்டு இன்றுவரை நாம் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின்மீது பெருமளவு செல்வாக்குச் செலுத்திய, கட்டுப்படுத்திய காரணிகள் முற்றாகப் பொருளாதார இயல்பு கொண்டவையே அன்றி வேறல்ல.
எடுத்துக்காட்டாக, வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரும் பேரரசுகளில் பெரும்பாலானவை போர் வெற்றிகளாலேயே நிலைபெற்றுள்ளன. வெற்றி பெற்ற மக்கள், வெற்றி கொள்ளப்பட்ட நாட்டின் சிறப்புரிமை பெற்ற வர்க்கமாக சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். அந்நாட்டு நிலங்களின் மீதான ஏகபோக உரிமையை தமக்கென அபகரித்துக் கொண்டனர். தங்களுடைய ஆட்களையே அந்நாட்டில் மதக் குருக்களாய் நியமித்தனர். அம்மதக் குருக்கள் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சமுதாயத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினைகளை நிரந்தர சமூக அமைப்புகளாக மாற்றிவிட்டனர். அந்நாட்டு மக்கள் தமது சமுதாய நடவடிக்கைகளில் பின்பற்றக்கூடிய சமூக மதிப்புகளின் கட்டமைப்பை உருவாக்கினர். மக்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலேயே அதன்படி வழிநடத்தப்பட்டனர். ஆனால், தார்ஸ்டெயின் வெப்லென் (Thorstein Veblen) அவர்கள், மனிதகுல வளர்ச்சியில் ”கொள்ளைசார்ந்த காலகட்டம்” (predatory phase) என்று அழைக்கிற நேற்றைய வரலாற்று மரபை நாம் எங்கேயும் உண்மையிலேயே விட்டொழித்ததாகத் தெரியவில்லை.
 
 
அந்தக் காலகட்டத்துக்குரிய அறியக்கூடிய பொருளாதார உண்மைகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் தருவிக்க முடிகிற விதிகளும்கூட வரலாற்றின் பிற காலகட்டங்களுக்குப் பொருந்தாதவை ஆகும். சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளைசார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும். பொருளாதார விஞ்ஞானம் இப்போதிருக்கும் நிலையில் வருங்கால
 
 
சோசலிஷ சமுதாயம் பற்றி எதுவும் கூற இயலாத நிலைமையே உள்ளது.
இரண்டாவதாக, சோசலிஷமானது ஒரு சமூக–அறநெறி முடிவை நோக்கி (towards social-ethical end) நெறிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், விஞ்ஞானத்தால் முடிவுகளை உருவாக்க முடியாது. மேலும் முடிவுகளை மனிதர்களுக்குள் புகட்ட அதைவிடவும் முடியாது. விஞ்ஞானம், அதிகப் பட்சமாக, சில முடிவுகளை எட்டுவதற்கான சாதனங்களை வழங்க முடியும். ஆனால் இத்தகைய முடிவுகள் தம்மளவில், உன்னத அறநெறி இலட்சியங்களைக் கொண்டுள்ள தலைவர்களின் சிந்தனையில் உருவானவையே ஆகும். சாராம்சமான, உந்துசக்தி மிக்க இந்தக் கருத்துகள் எண்ணத்திலிருந்து வெளிப்பட்டவுடனே, சமுதாயத்தின் மெதுவான பரிணாம வளர்ச்சியைத் தீர்மானிக்கின்ற மக்கள் திரள் அக்கருத்துகளை ஏற்றுக் கொண்டு, முன்னெடுத்துச் செல்கின்றனர். அவர்களில் பாதிப்பேர் தங்களை அறியாமலேயே இதில் ஈடுபடுகின்றனர்.
 
 
இந்தக் காரணங்களினால், மானுடப் பிரச்சினைகள் என்று வரும்போது, விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞான வழிமுறைகளைப் பற்றி அதிகமாக எடைபோட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமுதாய அமைப்பினைப் பாதிக்கின்ற பிரச்சினைகளின் மீது வல்லுநர்கள் மட்டுமே கருத்துக் கூறும் உரிமை பெற்றவர்கள் என நாம் கருதிவிடக் கூடாது.
 
 
மனித சமுதாயம் ஒரு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது, அதன் நிலைப்புத் தன்மை மிக மோசமாக ஆட்டம் கண்டுள்ளது என்று அண்மைக் காலமாக எண்ணற்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் தனிமனிதர்கள் தாம் சார்ந்த குழுவின்பால் – அது சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் – வெறுப்பும், பகைமையும் காட்டுவது இயல்பாய் உள்ளது. என்னுடைய கருத்தை விளக்கும் பொருட்டு என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் அண்மையில், அறிவாளியான சிறந்த அந்தஸ்தில் உள்ள ஒருவருடன், இன்னொரு போர் வருவதற்கான அபாயம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன்.
 
 
என்னுடைய கருத்தில் இன்னொரு போர் என்பது மனிதகுலத்தின் இருப்புக்கே மிக மோசமான ஆபத்தினை விளைவிக்கும். தேசங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பு ஒன்றினால் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற முடியும் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அந்த மனிதர் மிகவும் அமைதியாக, நிதானமாக என்னிடம் சொன்னார்: ”மனித இனம் அழிந்து போவதை இவ்வளவு ஆழமாக எதற்காக நீங்கள் எதிர்க்கிறீர்கள்?”
 
 
ஒரு நூற்றாண்டு அளவிலான மிகக் குறுகிய காலத்துக்கு முன்னால் இதைப்போன்ற ஒரு கூற்றை இவ்வளவு அக்கறையின்றி எவரும் கூறியிருக்க முடியாது என என்னால் நிச்சயமாகக் கூற முடியும். தனக்குள்ளேயே ஒரு சமநிலைத் தன்மையை அடைவதற்கு வீணே போராடி, ஏறத்தாழ வெற்றி பெறுவதில் நம்பிக்கையை இழந்துவிட்ட ஒரு மனிதனின் கூற்றாகும் இது. வலிமிகுந்த தனிமையில் தனித்து ஒதுக்கப்பட்ட ஒருவரின் மன வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் யாது? இதிலிருந்து மீள்வதற்கு வழியுண்டா?
 
 
இத்தகைய கேள்விகளை எழுப்புவது எளிது. ஆனால், அக்கேள்விகளுக்கு ஓரளவுக்கேனும் நம்பிக்கையுடன் விடையளிப்பது கடினம். நமது உணர்வுகளும் முயற்சிகளும் எப்போதுமே முரண்பட்டும் தெளிவற்றும் உள்ளன. அவற்றை எளிய, சாதாரணச் சூத்திரங்களில் விளக்கிவிட முடியாது. இந்த உண்மையை நான் நன்கு அறிந்துள்ள போதிலும், என்னால் முடிந்த அளவுக்கு மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில்கூற முயல்கிறேன்.
 
 
மனிதன் என்பவன் ஒரே நேரத்தில் தனிமனிதனாகவும் சமூக மனிதனாகவும் இருக்கிறான். தனிமனிதன் என்ற நிலையில், அவன் தன் சொந்த விருப்பங்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டும், தன் உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பொருட்டும், அவனுடைய வாழ்க்கையையும் அவனுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்களின் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறான். சமூக மனிதன் என்ற நிலையில், அவனுடன் வாழும் மனிதர்களின் அங்கீகாரத்தையும் அன்பையும் பெறவும், அவர்களுடைய மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடைய துயரத்தில் பங்கு கொள்ளவும், அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் விரும்புகிறான். இத்தகைய, வேறுபட்ட, அடிக்கடி மோதிக் கொள்ளும் முயற்சிகள் இருப்பதே ஒரு மனிதனின் தனிச்சிறப்பான பண்புக்குக் காரணமாக அமைகிறது. இவற்றின் குறிப்பிட்ட சேர்க்கையே ஒரு தனிமனிதன் எந்த அளவுக்கு அகச் சமன்நிலையை அடைய முடியும், சமுதாயத்தின் நலனுக்குப் பங்காற்ற முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த இருவேறு உந்து சக்திகளின் ஒப்பீட்டுப் பலம், பிரதானமாக மரபு வழியில் நிர்ணயிக்கப்படுவது சாத்தியமே. ஆனால், ஒரு மனிதனில் முடிவாக வெளிப்படும் ஆளுமை, அவனுடைய வளர்ச்சியின்போது அவன் வாழ நேர்ந்த சூழல், அவன் வளர்ந்த சமுதாயத்தின் கட்டமைப்பு, அந்த சமுதாயத்தின் மரபு, அந்தச் சமுதாயம் குறிப்பிட்டவகை நடத்தை பற்றிக் கொண்டுள்ள மதிப்பீடு ஆகியவற்றாலேயே பெருமளவு உருவாக்கப்படுகின்றது. தனிமனிதனைப் பொறுத்தவரை “சமுதாயம்” என்கிற அருவமான கருத்துருவின் (abstract concept) பொருள், அவனது சமகால மனிதர்களோடும், முந்தைய தலைமுறைகளின் அனைத்து மக்களோடும் அவன் கொண்டுள்ள நேரடியான மற்றும் மறைமுகமான உறவுகளின் ஒட்டு மொத்தத்தையே குறிக்கிறது. ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்க, உணர, முயல, வேலை செய்ய இயலும்; ஆனால், அவருடைய உடல் ரீதியான, அறிவு ரீதியான, உணர்வு ரீதியான வாழ்க்கையில் அவர் சமுதாயத்தின் மீது வெகுவாகச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சமுதாயம் என்னும் கட்டமைப்புக்கு வெளியே அவர் தன்னைப் பற்றிச் சிந்திக்கவோ, தன்னைப் புரிந்து கொள்ளவோ இயலாது. சமுதாயமே மனிதனுக்கு உணவு, உடை, உறையுள், வேலைக்கான கருவிகள், மொழி, சிந்தனையின் வடிவங்கள், சிந்தனையின் பெரும்பாலான உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்குகிறது. “சமுதாயம்” என்னும் சிறிய சொல்லின் பின்னால் மறைந்துள்ள, இக்காலத்து மற்றும் கடந்த காலத்து மக்கள் பலகோடிப் பேரின் உழைப்பின் மூலமாகவும், செயல்பாடுகளின் மூலமாகவுமே மனிதனின் வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது.
எனவே, தனிமனிதன் சமுதாயத்தின் மீது சார்ந்துள்ள தன்மையானது இயற்கையின் உண்மை என்பது வெளிப்படையாகும். எறும்புகள், தேனீக்கள் விஷயத்தில் நடந்ததைப் போல இந்த உண்மையை அழித்துவிட முடியாது. என்றாலும், எறும்புகள், தேனீக்களுடைய மொத்த வாழ்க்கையின் நிகழ்வுப்போக்கும் மிக நுண்ணிய அசைவுகள் வரைக்கும், கறாரான, பரம்பரை ரீதியான உள்ளுணர்வுகளினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. அதே வேளையில், மனிதர்களின் சமூகப் பாங்கும், பரஸ்பர உறவுமுறைகளும் மிகவும் வேறுபட்டவையாகவும் மாறக்கூடிய இயல்புடையனவாகவும் இருக்கின்றன. நினைவிருத்தல், புதிய சேர்க்கைகளை உருவாக்கும் திறன், பேச்சுவழித் தகவல் தொடர்பென்னும் கொடை ஆகியவை மனிதர்களிடையே வளர்ச்சியைச் சாத்தியமாக்கியுள்ளன.
 
 
இவை உடலியல் ரீதியான தேவைகளால் ஆட்டுவிக்கப்படுவதில்லை. இத்தகைய வளர்ச்சியின் அடையாளங்கள் மரபுகளிலும், சமூக நிறுவனங்களிலும், அமைப்புகளிலும், இலக்கியத்திலும், விஞ்ஞான, பொறியியல் செயல்பாடுகளிலும், கலைப் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இது, ஒருவகையில், மனிதன் தன் சொந்த நடத்தை மூலமாக அவனுடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடிவதும், இந்த நிகழ்வுப் போக்கில் உணர்வு பூர்வமான சிந்தனையும், போதாமையும் ஒரு பங்கு வகிக்க முடிவதும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது.
 
 
 
மனிதன் பிறப்பின்போது, மனித இனத்துக்கே உரிய இயற்கையான வேட்கைகளுடன் பரம்பரை வழியான உடல் கட்டமைவைப் பெறுகிறான். இவற்றை நிலையானதென்றும் மாற்ற முடியாதது என்றும் நாம் கருத வேண்டும். அதோடுகூட, அவனுடைய வாழ்நாளில் தகவல் தொடர்பு மற்றும் பிற வகையான பல்வேறு தாக்கங்கள் மூலமாகச் சமுதாயத்துடன் தகவமைத்துக் கொள்வதிலிருந்து ஒரு கலாச்சாரக் கட்டமைவைப் பெறுகிறான். காலத்தின் ஓட்டத்தில் மாற்றத்துக்கு உள்ளாகக் கூடிய இந்த கலாச்சாரக் கட்டமைவுதான் தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் இடையிலான உறவுமுறையை மிகப் பெருமளவுக்குத் தீர்மானிக்கின்றது. நடப்பிலுள்ள கலாச்சாரப் பாங்குகளைப் பொறுத்தும், சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் சமூக அமைப்பின் வகைகளைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை மிகப்பெரும் அளவுக்கு வேறுபட முடியும் என்பதை புராதனக் கலாச்சாரங்கள் என்று சொல்லப்படுவனவற்றை ஒப்பீட்டாய்வு செய்ததன் மூலம் நவீன மானிடவியல் நமக்குக் கற்பித்துள்ளது.
 
 
 
மனித குலத்தை மேம்படுத்த முயன்று வருவோர் தமது நம்பிக்கைகளை இதன்மீது ஊன்றலாம்: மனிதர்கள் அவர்களுடைய உடல்கூறு அமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கவோ, கொடூரமான, தாங்களே விதித்துக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதற்கோ சபிக்கப்படவில்லை.
மனித வாழ்க்கையைச் சாத்தியமான வரையில் திருப்திகரமானதாக ஆக்கிக் கொள்ளும் பொருட்டு, சமுதாயத்தின் கட்டமைப்பும், மனிதனின் கலாச்சார அணுகுமுறையும் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோமானால், சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்க முடியாதவாறு உள்ளன என்னும் உண்மையை எப்போதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும். ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, எந்த வகையில் பார்த்தாலும், மனிதனின் உடலியல் ரீதியான இயல்பு, மாற்றத்துக்கு உட்படாதது. அதற்கும் மேலாக, கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப, சமூகநிலை வளர்ச்சிகள் இங்கே நிலைத்து நிற்கக் கூடிய நிலைமைகளை உருவாக்கி வைத்துள்ளன. தமது தொடர்ச்சியான வாழ்க்கைக்கு இன்றியமையாத சாதனங்கள் தேவைப்படுகின்ற, சற்றே நெருக்கமான மக்கள் தொகை கொண்ட சமுதாய அமைப்பில் தீவிரமான உழைப்புப் பிரிவினையும் மிக அதிகமாக மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையும் கட்டாயத் தேவையாகும். தனிமனிதர்களோ, ஓரளவு சிறிய குழுக்களோ முழுமையான தன்னிறைவுடன் வாழ முடிகின்ற காலம் – திரும்பிப் பார்த்தால் சொர்க்கமாய் இருந்த அந்தக் காலம் – போயே விட்டது. மனிதகுலம் இப்போதும்கூட உற்பத்தி மற்றும் நுகர்வு சார்ந்த பூமிவாழ் சமூகத்தையே கொண்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது.
என்னைப் பொறுத்தவரை நமது காலத்து நெருக்கடியின் சாராம்சம் என்ன என்பதைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டத்துக்கு நான் இப்போது வந்துவிட்டேன். அது தனிமனிதருக்கு சமுதாயத்தோடுள்ள உறவுநிலை பற்றியதாகும். தனிமனிதர் சமுதாயத்து மீதுள்ள தனது சார்புத் தன்மையை முன் எப்போதையும்விட இப்போது அதிகமாக உணர்கிறார். ஆனால், இந்தச் சார்புத் தன்மையை ஒரு சாதகமான அனுகூலமாகவோ, ஓர் இயற்கையான பந்தமாகவோ, ஒரு பாதுகாப்பான சக்தியாகவோ அனுபவத்தில் அவர் உணரவில்லை. மாறாக, அவருடைய இயல்பான உரிமைகளுக்கும் அவருடைய பொருளாதார வாழ்வுக்குமேகூட ஓர் ஆபத்தாகவே கருதுகிறார். மேலும், சமுதாயத்தில் அவர் வகிக்கும் இடம், அவரின் உள்ளார்ந்த ’தான்’ என்னும் தன்முனைப்பு உந்துதலை எப்போதும் வலியுறுத்துகின்ற நிலையிலேயே உள்ளது. அதே வேளையில், அவருடைய சமுதாய ரீதியான உந்து சக்திகள் இயல்பாகப் பலவீனமாகவே உள்ளன, படிப்படியாக நசிந்து வருகின்றன. அனைத்து மனிதர்களுமே, அவர்கள் சமுதாயத்தில் எத்தகைய அந்தஸ்தில் உள்ளவராயினும், இத்தகைய நசிவுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை அறியாமலேயே தமது சொந்தத் தன்னகந்தையின் கைதிகளாக இருக்கும் இவர்கள் பாதுகாப்பற்று இருப்பதாகவும், தனித்து விடப்பட்டுள்ளதாகவும் உணர்கின்றனர். சூதுவாது இல்லாத, எளிய, பகட்டில்லாத முறையில் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை குறுகியதாகவும் ஆபத்தானதாகவும் இருந்த போதிலும், மனிதன் சமுதாயத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே வாழ்க்கையின் அர்த்தத்தைக் காண முடியும்.
 
 
இன்றைய மனித சமூகத்தின் கேடுகளுக்கு உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகமே என்பது என்னுடைய கருத்தாகும். உற்பத்தியாளர்களைக் கொண்ட ஒரு பெரிய சமூகக் குழுவின் உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு உழைப்பின் பலன்களை அனுபவிக்க விடாமல் ஒருவர் மற்றவரைத் தடுப்பதற்கு தொடர்ந்து முயன்று வருகின்றனர் என்பதை நம் கண்முன்னால் காண்கிறோம். பலாத்காரத்தின் மூலமாக அல்ல, மொத்தத்தில் சட்டப்படி நிலைநாட்டப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டே இதனைச் செய்து வருகின்றனர். இந்தவகையில், உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் அதாவது, நுகர்வுப் பண்டங்களையும் அதோடுகூட மூலதனப் பண்டங்களையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஒட்டுமொத்த உற்பத்தி சக்தி அனைத்தும் சட்ட ரீதியாகவே தனிநபர்களின் தனிச்சொத்தாக இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும்.
 
 
இனிவரும் விவாதத்தில், எளிமை கருதி, உற்பத்தி சாதனங்களின் உரிமையில் பங்கில்லாத அனைவரையும் “தொழிலாளர்கள்” என்று அழைக்க இருக்கிறேன், வழக்காற்றில் இச்சொல்லை அந்தப் பொருளில் பயன்படுத்துவதில்லை என்றபோதிலும். உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குகின்ற நிலையில் உள்ளார். உழைப்பு சாதனங்களைப் பயன்படுத்தி தொழிலாளி உற்பத்தி செய்யும் புதிய பண்டங்கள் முதலாளியின் உடைமையாக ஆகின்றன. இந்த நிகழ்வுப்போக்கு பற்றிய சாராம்சமான கருத்து என்னவெனில், தொழிலாளி உற்பத்தி செய்த பொருள், அவருடைய கூலி இவை இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பே ஆகும். இரண்டும் உண்மை மதிப்பின் மூலமே அளவிடப்படுகின்றன. உழைப்புக்கான ஒப்பந்தம் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில், தொழிலாளி கூலியாகப் பெறுவது அவர் உற்பத்தி செய்த பண்டங்களின் உண்மையான மதிப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. தொழிலாளியின் குறைந்தபட்சத் தேவைகள், உற்பத்தி வேலைகளுக்காகப் போட்டியிடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் முதலாளிக்குத் தேவைப்படும் உழைப்பு சக்தி ஆகியவற்றைக் கொண்டே [தொழிலாளியின் கூலி] நிர்ணயிக்கப்படுகிறது. கொள்கை அளவில்கூட, தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலி அவர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.
 
 
தனியார் மூலதனம் ஒருசிலரின் கைகளிலேயே குவியத் தொடங்குகிறது. முதலாளிகளுக்கு இடையே நிலவும் போட்டி இதற்கு ஒரு காரணமாகும். தொழில்நுட்ப வளர்ச்சியும் வேலைப் பிரிவினையின் அதிகரிப்பும் சேர்ந்து, சிறிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலகங்களை விழுங்கிப் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைவதற்கு உதவுவதும் இன்னொரு காரணமாகும். இத்தகைய வளர்ச்சிப்போக்கின் விளைவாக, தனியார் மூலதனத்தைக் கையில் வைத்துள்ள ஒருசிலரின் ஆதிக்க ஆட்சி உருவாகிறது. அதன் அளவிறந்த ஆற்றலை ஜனநாயக ரீதியில் அமைந்த ஒர் அரசியல் சமுதாயத்தால்கூடத் தீர்மானகரமாய்த் தடுத்து நிறுத்த இயலாது. இது உண்மை ஆகும். காரணம், தனியார் முதலாளிகள் பெருமளவு நிதியுதவி அளிக்கின்ற அல்லது பிறவகையில் செல்வாக்குச் செலுத்துகின்ற அரசியல் கட்சிகளே சட்டமன்றங்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. எந்த வகையில் பார்த்தாலும், வாக்காளர்களைச் சட்டமன்றங்களிலிருந்து பிரித்து விடுகின்றனர். இதன் விளைவாக, மக்களின் பிரதிநிதிகள் [என்று சொல்லப்படுகின்றவர்கள்] சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவுக்குக் காப்பாற்றுவதில்லை. மேலும், தற்போது நிலவும் சூழ்நிலையில், தனியார் முதலாளிகள், நேரடியாகவோ மறைமுகமாகவோ, பிரதான தகவல் சாதனங்களை (பத்திரிகை, வானொலி, கல்வி) தவிர்க்க முடியாதவாறு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே, ஒரு தனிக் குடிமகன் புறநிலையான முடிவுகளுக்கு வருவதோ, தனது அரசியல் உரிமைகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்வதோ மிகமிகக் கடினம், பல நேரங்களில் நிச்சயமாக முடியாததும் ஆகும். மூலதனத்தின் மீதான தனிச் சொத்துரிமையின் அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்தில் நிலவுகின்ற சூழலை இரண்டு பிரதானக் கோட்பாடுகளின் மூலம் இவ்வாறாக விளக்கலாம்: முதலாவதாக, உற்பத்தி சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக இருக்கின்றன. அதன் உரிமையாளர்கள் தாம் விரும்பியவாறு அவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானது. என்றாலும், இந்த அர்த்தத்தில், கலப்பற்ற முதலாளித்துவ சமுதாயம் என எதுவும் கிடையாது. குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட கசப்பான அரசியல் போராட்டங்களின் மூலமாக, சில வகையினத் தொழிலாளர்களுக்குச் சற்றே மேம்பட்ட வடிவில் “சுதந்திர உழைப்பு ஒப்பந்தம்” பெற்றுத் தருவதில் வெற்றி கண்டனர். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இன்றைய பொருளாதாரம், “கலப்பற்ற” முதலாளித்துவத்திலிருந்து பெரிதாக வேறுபடவில்லை. உற்பத்தியானது இலாபத்துக்காக செய்யப்படுகின்றது, பயன்பாட்டுக்காக அல்ல. வேலை செய்ய முடிகிற, வேலை செய்ய விரும்புகின்ற அனைவருக்கும் எப்போதும் வேலை கிடைப்பதற்கான உத்திரவாதம் அளிக்கின்ற சட்டம் எதுவுமில்லை. எந்த நேரத்திலும் வேலை பறிபோகலாம் என்ற பயத்திலேயே தொழிலாளி வாழ்கிறான். வேலையற்ற தொழிலாளர்களும் மிகக் குறைவான கூலி பெறும் தொழிலாளர்களும் இலாபகரமான சந்தைக்கு உதவ மாட்டார்கள். இதன் காரணமாக, நுகர்வுப் பண்டங்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது. மிகுந்த இன்னலே இதன் விளைவாகும். தொழில்நுட்ப முன்னேற்றம், அனைவரின் வேலைச் சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக, பெரும்பாலும் மிகுதியான வேலையின்மைக்கே வழி வகுத்துள்ளது. இலாப நோக்கம், முதலாளிகளுக்கு இடையேயான போட்டியுடன் சேர்ந்து, மூலதனக் குவிப்பிலும், அதன் பயனாக்கத்திலும் ஒரு நிலையற்ற தன்மைக்குக் காரணமாக அமைகிறது. இதுவே, மிகுதியான அளவில், மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்கிறது. வரம்பிலாப் போட்டி, மிகுதியான உழைப்பு விரயத்துக்கும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, தனிமனிதர்களின் சமூக உணர்வு ஆட்டம் காண்பதற்கும் காரணமாகிறது.
 
 
 
தனிமனிதர்களின் சிதைவையே முதலாளித்துவத்தின் மிக மிக மோசமான கேடாகக் கருதுகிறேன். நமது மொத்தக் கல்வி அமைப்பே இந்தக் கேட்டினால் கெட்டுக் கிடக்கிறது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவனுக்குள்ளே வளர்க்கப்படுகிறது. அவன் தன்னுடைய எதிர்கால முன்னேற்றத்துக்குப் பொருளாயத வெற்றிகளைப் பூஜிப்பதற்கே பயிற்றுவிக்கப்படுகிறான். இத்தகைய மோசமான கேடுகளையெல்லாம் களைவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது என நான் நம்புகிறேன். ஒரு சோசலிஷப் பொருளாதார அமைப்பை நிறுவி, சமூக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி. அத்தகைய ஒரு பொருளாதார அமைப்பில் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமுதாயத்துக்கே சொந்தமானதாக இருக்கும். திட்டமிட்ட முறையில் அவை பயன்படுத்திக் கொள்ளப்படும். சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்பாக அது இருக்கும். செய்யப்பட வேண்டிய வேலைகள், வேலை செய்ய முடிகிற அனைவர்க்கு இடையேயும் பகிர்ந்தளிக்கப்படும். ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும். ஒருவருக்கு அளிக்கப்படும் கல்வி, அவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை வளர்ப்பதோடு, தற்கால சமுதாயத்தில் இருப்பதைப்போல அதிகாரத்தையும் அதன் வெற்றியையும் போற்றுகின்ற மனப்பான்மைக்குப் பதிலாக, சக மனிதர்கள் மீதான ஒரு அக்கறை உணர்வை அவருக்குள்ளே வளர்ப்பதற்கு முயலும்.
 
 
 
எனினும், திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சோசலிஷம் ஆகிவிடாது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். திட்டமிட்ட பொருளாதாரத்துடன், இயல்பாகவே தனிமனிதனின் முழுமையான சார்புநிலையும் சேர்ந்தே வரலாம். சோசலிஷத்தை அடைய, மிகமிகக் கடினமான சில சமூக – அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவசியமாகிறது: தீவிர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய, அரசியல், பொருளாதார அதிகாரங்களை மையப்படுத்தலை நோக்குகையில், அதிகார வர்க்கம் எல்லாம் வல்லதாகவும், அகங்காரம் மிக்கதாகவும் ஆகிப்போவதைத் தடுப்பது எவ்வாறு சாத்தியம்? தனிமனிதனின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும்? அதன்மூலம், அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிரீட்டை உறுதி செய்வது எவ்வாறு? [புதிய கட்டத்துக்கு] மாறிச் செல்லும் நமது காலத்தில், சோசலிஷத்தின் நோக்கங்கள் பற்றியும் அதன் பிரச்சினைகள் பற்றியும் தெளிவு பெறுவது மிகப்பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய சூழ்நிலையில், இத்தகைய பிரச்சினைகள் பற்றிய சுதந்திரமான, குறுக்கீடில்லாத விவாதம் சக்திமிக்க தடைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதால், இந்தப் பத்திரிகையைத் தொடங்குவது ஒரு முக்கியமான பொதுச் சேவையெனக் கருதுகிறேன்.
 
சோசலிஷம் எதற்காக?
 
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
 
தமிழாக்கம்: சிவலிங்கம் மு.
 
[1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரை]
 
Thanks : Inioru.com

Sunday, May 12, 2013

சுஜாதா எழுதாத சுஜாதா கதை :

 
 
 
மதுமிதா சில குறிப்புகள்

 
 
 
 








மதுமிதாவின் ஹேண்ட் பேகிலிருந்த‌ வஸ்துக்கள்…

காலியான‌ மினி வெல்வெட் பௌச், கண்ணாடி, சீப்பு, ஹேர் பின், ஹேர் க்ளிப், ரப்பர் பேண்ட், சேஃப்டி பின், ஸ்டிக்கர் பொட்டு, ரோஸ் பௌடர், டியோட்ரண்ட், பெர்ஃப்யூம், லிப் கார்ட், சன்ஸ்க்ரீன் லோஷன், ஃபேஸ் க்ரீம், மாய்ஸ்ச்சரைசர், நெயில் பாலீஷ், ஐ லைனர், வெட் டிஷ்யூ, மௌத் ஃப்ரெஷ‌னர், ஸ்விஸ் சாக்லேட், சூயிங் கம், கந்தர் சஷ்டி கவசம், Hopeless (Colleen Hoover) பேப்பர்பேக், ஐஃபோன் 5, ஐசிஐசிஐ மாஸ்டர் ப்ளாட்டினம் டெபிட் கார்ட், ஹெடிஎப்சி விசா சிக்னேச்சர் க்ரெடிட் கார்ட், சில புதிய இந்திய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள், கிழிந்த‌ விஸ்வரூபம் பட பிவிஆர் டிக்கெட்கள் இரண்டு (10 பிப்ரவரி 2013), மணிப்பால் ஹாஸ்பிடல் கார்ட், பேண்ட் எய்ட், அனாசின், அவில், ஐபில் மாத்திரைக‌ள், பயன்படுத்தப்படாத சோஃபி சைட் வால்ஸ் சானிடரி நாப்கின், ஓர் ஆணின் வேர்வை கர்ச்சீஃப் மற்றும் காமசூத்ரா ப்ளெஷர் காண்டம்கள்.
~0~
மதுமிதாவுக்கு Orkutல் வந்திருந்த‌ Testimonialsலிருந்து…

Senthilnathan – Dec 02, 2011

நான் இதுவரைக்கும் நேர்ல பாத்ததிலயே சூப்பர் ஃபிகரு.

Vidhya S. – Apr 13, 2010
hmm. tym’s not enuf 2 describe tis wonderful frend- but lemme tel u wat it strikes 2 me now. madhu is a happy go lucky person. not much bothered bout nythg in life. kind, jovial, loving, caring, stupid.
 ~0~
மதுமிதாவின் Wardrobeலிருந்த‌ T-Shirtகளிலிருந்து…

Forbidden Fruits, Braille System, HTTP 403, Sample Specimen: Not For Sale, Catch Me If You Can, Click Here To Continue, Biological Inflation, Testers Wanted, Ripen Mangoes, This Is Not Touch-Me-Not.
 ~0~
மதுமிதாவின் ஐஃபோன் Bluetooth Received Filesலிருந்த ஃபோட்டோ…

(இது சென்ஸார் செய்யப்படுகிறது – ஆசிரியர்)
  ~0~
மதுமிதாவின் படுக்கையில் சிதறிக் கிடந்தவை…

11-inch Apple MacBook Air லேப்டாப், The Music Messiah (Ilayaraaja) டிவிடி, காமக்கடும்புனல் (மகுடேசுவரன்) கவிதைத் தொகுப்பு, கரீனா கபூர் படம் போட்ட ஃபிப்ரவரி 2013 VOGUE இதழ், இதய விடிவிலான சிவப்பு நிறத்திலான‌ குட்டி குஷன் தலையணை, கழற்றி எறியப்பட்ட‌ Wonderbra ப்ரேஸியர், Wacoal பேண்டீஸ், சால்வ் செய்யப்பட்ட‌ Rubik’s Cube, ஐஃபோன் சார்ஜர், குடித்து மீந்திருந்த மதுக்கோப்பை – அதில் கிடந்த ஒரு சிறிய‌…
  ~0~
 மதுமிதாவின் Apple MacBook Airலிருந்த‌ திரைப்படங்கள்

 Gangs of Wasseypur – 1 & 2, Inception, நந்தலாலா, The Isle, Love Sex Aur Dhokha, ஆரண்ய காண்டம், ரெட்ட்யூப் வலைதளத்திலிருந்து தரவிற‌க்கப்பட்ட சில பாலியல் படங்கள்.
   ~0~
மதுமிதாவின் ஐஃபோன் Messagesலிருந்து (Sent Items)…
Pappu
03-May-2012 21:09
sorry
 ~0~
மதுமிதாவின்  Yahoo! Messenger உரையாடலிலிருந்து…
———— IM 01 Jun 10:55 ————
Madhumitha : “யாரோ ஒருத்தன் தினம் மெசேஜ் அனுப்பி டார்ச்சர் பண்றான்டி, Idiot”
Saranya : “என்ன Lovable Idiot-ஆ? ;-)
Madhumitha : “ம். இல்ல‌. Sweet Bastard! :-)
Saranya : “அட, வெட்கத்தைப் பாருங்கடா!”
Madhumitha : “ச்சீய், போடி!”
  ~0~
மதுமிதாவுக்கு வந்திருந்த Birthday Cardலிருந்து…
 ம‌துமிதா எனப்படும் 17 வயது தேவதையே,
என் உயிர் குடிக்க‌ நிறைய மார்க்கமுண்டு.
ப்ளீஸ், உன் அழகை அதற்கு வீணாக்காதே!
Infinite more happy returns of the day and night ;-)
உந்தன் பப்பு,
Jul 21, 2012.
   ~0~
மதுமிதாவின் ரெக்கார்டட் Skype சம்பாஷணை ஒன்று…
 “டாடி தந்த‌ பர்த்டே கிஃப்ட் ஓர் அற்புதம். எத்தனை பணக்காரன் என்றாலும் இந்தப் பரிசு கொஞ்சம் ஜாஸ்தி. உடலின் பாகம் மாதிரி அதை எப்போதும் என்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்புகிறேன். Love you, dad. But பப்பு கார்ட் ஒரு riot. I am having my periods, now. முட்டி வலிக்கிறது. ஆனால் பப்பு மனசுக்கு சுகமாய் இருக்கிறான்.”
 ~0~
மதுமிதா Hopeless நாவலில் அடிக்கோடிட்டிருந்த வரி…
“That moment when your lips touched mine? You stole a piece of my heart that night”
 ~0~
மதுமிதாவின் Facebook தளத்திருந்து…
 Madhumitha Natarajan
August 13, 2012 at 12:09am via mobile ·
காதலில் விழுந்தேன்!
Unlike · Comment · Unfollow Post · Share · Promote
Baskaran Deivasikamani, காயத்ரி சேஷாத்ரி, Victor Antony and 723 others like this.
View all 1026 comments
Victor Antony Who is that lucky guy? Aug 19, 2012 at 2:55am • Like
பார்வதி யமுனா கடைசில நீயும் விழுந்துட்டியா? Aug 20, 2012 at 1:11am • Unlike
Madhumitha Natarajan விழாமலே இருக்க முடியுமா! Aug 20, 2012 at 1:30am via mobile • Like
Write a comment…
~0~
மதுமிதாவின் ஐஃபோன் Messagesலிருந்து (Inbox)…
Pappu
30-Sep-2012 11:27
movie at pvr

 ~0~
மதுமிதா blogger வலைப்பதிவிலிருந்து… 
மதுமிதா மனசிலே…
 சில்MISSION
 திரையரங்க மெல்லிருட்டின்
தித்திக்கும் சில்மிஷங்களில்
திட்டித் தீர்க்கின்றேனுன்னை –
அடுத்தடுத்த‌ கட்டங்களுக்கு
அழகாய் அனுமதித்தவாறே.
Posted by மதுமிதா On Sunday, October 06, 2012

~0~
மதுமிதாவின் 2012 Personal Diaryயிலிருந்து…
November 5, Monday
எதற்கு பயந்திருந்தேனோ அல்லது எதை விரும்பினேனோ அது நடந்தே விட்டது. பப்பு திருட்டுப் பயல் எப்படித் தான் காண்டம் பாக்கெட் தயாராய்க் கையில் வைத்திருந்தானோ, ஆச்சரியம்தான்! ஒருவகையில் என்னைப்போல் அவனும் இந்நிகழ்விற்கென‌ எப்போதும் தயாராகவே இருந்திருக்கிறான் எனத் தோன்றுகிறது. பழுத்த அனுபவமுள்ள ஒரு டூரிஸ்ட் கைட் தனக்கு மிகப் பரிச்சயமான ஊரினை அலட்சியமாகச் சுற்றிக் காட்டுவதைப் போலத் தான் பப்பு இன்று நடந்து கொண்டான்.
அந்த விசித்திர‌ப் பள்ளத்தாக்குகளுக்கு, அந்த மிக‌ அழகிய மலைமுகடுகளுக்கு எந்தப் பதட்டமில்லாமல் புன்னகையுடன் என்னைக் கை பிடித்தழைத்துச் சென்றான். ஒரே சமயத்தில் ஒரு ராட்சசனைப் போலவும் ஒரு குழந்தையைப் போலவும் மாறி மாறி என்னை ஆக்ரமித்தான். கிட்டதட்ட‌ சாகடித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
இதன் ஞாபகமாய் பப்புவின் கர்ச்சீஃப்பை எடுத்து வந்து விட்டேன். அது எப்போதும் என்னோடு என் கைப்பையில் இருக்கும். இன்னமும் என் உடம்புக்குள் ஆங்காங்கே இனித்துக் கொண்டிருக்கிறான் ராஸ்கல். கொஞ்சம் வெட்கமாய்க் கூட‌ இருக்கிறது.
எல்லாம் முடிந்து இதை எழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் மிகச் சந்தோஷமாக உணர்கிறேன். காரணமேயில்லாமல் உப்புக்கண்ணீர் கன்னங்களில் பிசுபிசுக்கிறது.
Anyway, Virgin Mary turned into Bloody Mary, today. Let me celebrate it with a sip of Diva Vodka!
~0~
மதுமிதாவின் ஐஃபோன் Messagesலிருந்து (Draft)…
Shit, that’s not enough. I need you again and again, da.
 ~0~
மதுமிதாவின் blogger வலைப்பதிவின் draftலிருந்து…
மதுமிதா மனசிலே… · Post · காதல் காதல் காதல் · Publish · Save · Preview · Close
Compose | HTML
இந்த பப்பு ராட்சசன். மூன்றாம் முறைக்கு காண்டம் தீர்ந்து விட்டது. ஐபில் என்று ஏதோ ஒரு மாத்திரை இருக்கிறதாம், இன்று வாங்கி வ‌ருகிறேன் என்று சொல்லி இருக்கிறான். 36 மணி நேரத்துக்குள் போட்டுக் கொண்டால் எந்தப் பிரச்சனையும் இல்லையாம். இந்தப் பப்புவுக்கு எப்படித் தான் எல்லா விஷயமும் தெரிகிறதோ!
  ~0~
மதுமிதாவின் ஐஃபோன் Facetime உரையாடல் ஒன்று…
Pappu
15-Dec-2012 20:47
“அப்பாவிடம் சொல்லி விடப் போகிறேன்!”
“அதுக்கு என்ன அவசரம், அவசியம் இப்போ?”
“பொய் சொல்ல முடியல, பப்பு. சல்ஸா க்ளாஸ், ப்யானோ க்ளாஸ், ஜேஈஈ களாஸ் எல்லாம் கட் பண்றேன். ஃப்ரெண்ட்ஸ் கூட காஃபி டே, க்ரூப் ஸ்டடி, கெட்டுகெதர்னு அப்பாகிட்ட பொய் சொல்லிட்டு உன்கிட்ட வந்து படுத்துக்கறேன். And I really feel guilty.”
“:-(“
 ~0~
மதுமிதாவின் Gmail – Sent Itemsலிருந்து…
from   Madhumitha N. <madhumitha1995@gmail.com>
to    “Natarajan Muthuraman” <mail2natarajan@gmail.com>
date   Sat, Dec 22, 2012 at 11:28 PM
subject            Help me, daddy!
டியர் டாடி,
எல்லாவற்றையுமே உங்களுடன் நேரிலேயே பேசிப் பழக்கப்பட்ட எனக்கு இதை மட்டும் உங்கள் முகம் பார்த்துச் சொல்ல முடியவில்லை. பயமோ, தயக்கமோ, வெட்கமோ காரணம் என்று நான் சொன்னால் நீங்கள் வழக்கம் போல் வீடதிரச் சிரிப்பீர்கள் எனத்தெரியும். நான் முதன் முதலில் இருமியபடி புகைப்பிடித்ததும், மெலிதாக மதுவ‌ருந்தியதும் உங்களுடன் தான். அம்மா தவறிய பின் இத்தனை ஆண்டுகளில் நீங்கள் எப்போதும் என்னை மகள் என்று போலி மரியாதை காட்டித் தள்ளி வைத்துப் பார்த்ததாய் நினைவில்லை. நானும் அப்படியே – always your friend.
ஆனால் இவ்விஷயம் ச‌ற்று வேறு மாதிரியானது. இதிலெல்லாம் ஒரு முடிவெடுக்க எனக்கு புத்தி வந்து விட்டதா என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இருக்கட்டும்.
நான் கேட்டதெல்லாம் வாங்கித் தந்தீர்கள் என்று சொன்னால் கூட அது உண்மை திரித்ததாகி விடும். எந்தப் பொருள் என்றாலும், எவ்வளவு விலை என்றாலும் நான் கேட்க நினைக்கும் முன்பே அது என் கைகளில் இருந்தே பழகி விட்டது. கடந்து என் பிறந்த நாளுக்கு நீங்கள் தந்த பிறந்த நாள் பரிசு ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
இப்போது நான் கேட்கவிருப்பது அதையெல்லாம் விட மதிப்பானது; விலை மதிப்பே இல்லாதது என்று சொல்வது தான் சரியாக இருக்கும் – அது உங்கள் கௌரவம்.
ஆம். கோடீஸ்வரரான உங்கள் மகள் எந்த வசதியும் இல்லாத, இப்போதைக்கு நிரந்தரமாக ஒரு வேலை கூட அற்ற ஓர் ஆசாமியைக் காதலிக்கிறாள் என்பது உங்களுக்கு நிச்சயம் அகௌரவம் தான். பப்பு என்ன ஜாதி என்பது கூட எனக்கு இன்று வரைக்கும் தெரியாது. அவனுக்கே தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகம் தான்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எனக்குத் தெரியும். பப்பு திட்டமாய் நல்லவன் – உங்களை விட, என்னை விட‌. மற்றதெல்லாம் என் கண்ணுக்கு தெரியவில்லை. அவனைப் பார்த்துப் பேசினால் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். மயக்கி விடுவான்!
பதினெட்டு வயது கூட ஆகாத‌ எனக்கு என்ன அவசரம் என இப்போதும் உங்களுக்குத் தோன்றலாம். இதை உங்களிடமிருந்து மறைக்க மறைக்க அடிக்கடி பொய் சொல்ல வேண்டியிருக்கிறது; நிறைய கள்ளம் செய்ய‌ வேண்டியிருக்கிறது. எல்லாம் புதிதாய் இருக்கிறது. எனக்கே என்னைப் பிடிக்கவில்லை. அதையெல்லாம் நிறுத்த வேண்டும்.
இதைப் படித்துக்கொண்டிருக்கும் இக்கணம் உங்களுக்கு எத்தனை அதிர்ச்சியாக இருக்கும் என்பதைக் துல்லியமாக உணர்கிறேன். ஆனால் எனக்கு வேறு மார்க்கம் இல்லை. நீங்கள் ஒப்புக்கொண்டால் அதை இந்தப் புத்தாண்டுப் பரிசாகக் கொள்வேன்.
காத்திருக்கிறேன்.
Cheers,
மது
 ~0~
மதுமிதாவின் Twitter தளத்திருந்து…
மதுமிதா @madhumitha140                               Dec 31, 2012
பிடிக்காத கல்யாணத்தில் வாழ்வதை விட பிடித்த‌‌ காதலுக்காக சாகலாம்.‌
Expand
Sowmya @arattaigirl                                          Dec 31, 2012
குழந்தைகள் திரும்ப வாங்கி விடக்கூடிய பொருட்களையே போட்டு உடைக்கின்றன.. பெரியவர்களைப் போல மனங்களை அல்ல!
Retweeted by மதுமிதா
Expand
மதுமிதா @madhumitha140                               Dec 31, 2012
@writercsk பெத்த பொண்ண விட மத்ததெல்லாம் முக்கியமாப் போச்சா?
View conversation
மதுமிதா @madhumitha140                               Dec 31, 2012
Money, status, caste and blah-blah.. #love #fuck-off
Expand
 ~0~
மதுமிதாவின் Gtalk – Chat Historyயிலிருந்து…
from   பப்பு பப்பு <pappuinlove@gmail.com>
to    madhumitha1995@gmail.com
date   Fri, January 11, 2013 at 10:15 PM
subject            Chat with பப்பு பப்பு
பப்பு: மது
me: sollu pappu
பப்பு: என்ன ஆச்சு?
me: no change. still same. வேற மாப்பிள்ளை பாக்கறார்.
பப்பு: முடிவா என்ன சொல்றார்?
me: அவரு முருங்கை மர‌ வேதாளம்டா பப்பு.
பப்பு: so?
me: let us wait.
பப்பு: எவ்வளவு நாள்?
me: days, months or may be years too.
பப்பு: ஒத்துக்குவார்னு இன்னமும் நம்புறியா?
me: what to do, then?
பப்பு: சரி, விடு.
me: dai, chellam, kovama?
பப்பு: இல்ல‌.
me: இல்லன்னு சொல்றதுலயே கோவம் தெரியுதே.
பப்பு: கோபம் தான். ஆனா உன்னால என்ன பண்ண முடியும்?
me: true. am helpless. ஆனா hopeless இல்ல‌.
பப்பு: பாக்கலாம்
me: எதுவுமே முடியலைனா அதான் எப்பவுமே கையில வச்சிருக்கிறனே. அதை…
பப்பு: ச்சீ. என்ன எப்பப் பாத்தாலும் இதே பேச்சு. சரி, வெயிட் பண்ணலாம், மது.
me: I love you da, pappu.
பப்பு: ம்.
me: goodnight.
 ~0~
மதுமிதாவின் unofficial மரணவாக்குமூலத்திலிருந்து…

டியர் பப்பு,

இந்நாள் நமக்கு முதல் வேலண்டைன்ஸ் டே மட்டுமல்ல; கடைசியானதும் கூட‌!

இதை நீ படிக்கும் நேரத்தில் நிச்சயம் நான் உயிருடன் இருக்கப்போவதில்லை. நீ எண்ணிக் கொண்டிருந்தாயா தெரியாது – இக்கணம் நீ களைத்துறங்கக் காரணமான கலவி எண்ணிக்கையில் நூறாவது. இந்த நூறில் ஒவ்வொன்றையுமே தனித்தனியே அதனதன் பிரத்யேக அடையாளங்களுடன் எனக்கு நினைவு கூரவியலும். எப்போதும் வற்புறுத்தி அணியச் செய்யும் நானே இன்று காண்டம் வேண்டாம் என்று சொன்னது ஆச்சரியமாய் இருந்திருக்கலாம். அல்லது எப்போதுமே ‘அதற்கு’ மட்டும் மறுத்து விடுபவள் இன்று தானாக‌ முன் வந்ததும் விசித்திரமாகத் தோன்றியிருக்கலாம்.
கடிதம் மட்டுமல்ல, கலவி கூட இதுவே கடைசி. அணுஅணுவாய் அனுபவித்த இன்பத்துக்கெல்லாம் இறுதி நாள். ஆம். நான் செத்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்ச கொஞ்சமாய், ஆனால் வேக‌ வேகமாய். இன்று நீ களித்துக் கிடந்த என் தேகம் உண்மையில் அரைப்பிணம். வரும் போதே அதை விழுங்கி விட்டுத்தான் வந்தேன்.

எப்போதும் கைப்பையில் வைத்திருக்கும் என் அப்பா தந்த‌ பரிசே எனக்கு எமனாய் விடியும் என்று அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். தெரியும் போது மிக வருத்தப்படுவார். தலையிலடித்துக் கொண்டு தேம்பி அழுவார். அம்மா இறந்த போது அப்படித்தான் செய்தார் – எனக்குத் தெரிந்து அது தான் அவர் கடைசியாக அழுததும் கூட. ஒத்துக் கொண்டிருக்கலாமோ என்று கூட அப்போது யோசிப்பார். பாவமாய் இருக்கிறது. என்னை அவர் புரிந்து கொள்ளாதது போல் நானும் அவரை சரியாய்ப் புரிந்து கொள்ளாமலேயே மரித்துப் போவதற்காய் உச்சமாய் வருந்துகிறேன்.
ஆனால் இப்போது அப்பா நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார் என்பது எனக்குத் புரிந்து விட்டது. வீட்டில் இப்போதெல்லாம் நிறைய கண்டிஷன்கள். போகும் இடம் சொல்ல வேண்டும், திரும்பும் நேரம் சொல்ல வேண்டும். எட்செட்ரா எட்செட்ரா. இப்போது கூட ஏரோபிக்ஸ் க்ளாஸ் போவதாகப் பொய் சொல்லித் தான் வந்திருக்கிறேன். லேட்டாகி விட்டது. ஏற்கனவே ஆங்காங்கே தேட ஆரம்பித்திருப்பார்கள். தேடட்டும்.
அப்பா எனக்கு கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கிறார். ஐரோப்பிய மாப்பிள்ளை. நிரம்பப் படித்திருக்கிறான். பெரிய வசதிக்காரன். பிஸ்னஸில் மகாபுத்திசாலி. அதை விட‌ முக்கியமாய் எங்கள் ஜாதிக்காரன். கொஞ்சம் நாள் போனால் எனக்கே அவனைப் பிடித்து விடுமோ என்று பயமாய் இருக்கிறது. நான் உனக்குக் கிடைக்கமாட்டேன் என்பது ஏமாற்றம் தான். ஆனால் துரோகத்தை விட ஏமாற்றம் தரும் வலி குறைவு தான். வேறொரு ஆணுடன் கலந்து நான் உனக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை.
என் அப்பாவிற்குப்பின் நீ தான் என் வாழ்க்கையில் முக்கியமான ஆசாமி. ஒரு கட்டத்தில் அவரை விடவும் நீ முக்கியமானவனாகத் தோன்றப் போய், இப்போது உயிரை விடுவது வரை வந்தாயிற்று. நினைத்தபடி வாழவியலாவிடில் வாழ்ந்தென்ன லாபம். ஓர் அரசியை போல் கம்பீரமாய் இறந்து போவதே சௌக்கியம், சௌகரியம்.
ஃப்ராஸ்டின் “Miles to go before I sleep” நினைவுக்கு வந்து சங்கடப் படுத்துகிறது. எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் எல்லாம் சற்று நேரத்தில் பூஜ்யமாகப் போகிற‌து. எல்லாவற்றிலுமே எனக்கு அவசரம் என்பார் அப்பா – இப்போது சாவிலும்.
உண்ட சங்கதி தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது, பப்பு. உன்னிடத்தில் உன் மடியில் தான் உயிரை விட வேண்டும் என்ற பாழாய்ப் போன செண்டிமெண்ட் தான் என்னை இங்கே இழுத்தது. இதையே எனது Dying Declaration ஆக‌ போலீஸில் சேர்ப்பித்து விடு – உயிரற்ற உடலையும். பின் உனக்கு ஒரு தொந்தரவும் வராது.
இன்னுமொரு உதவி. கடைசி ஆசை என்று கூட சொல்லலாம் – Autopsy முடிந்தபின் சாத்தியமான என் அத்தனை உடற்பாகங்களையும் தானம் செய்ய விரும்புகிறேன்.
ஐ லவ் யூ டா, பப்பு. See you சொல்ல முடியாது; அதனால் Bye மட்டும்.
Cheers,
மது.
14/02/2013
 ~0~
 தினத்தந்தி (பெங்களூர் பதிப்பு, 15-02-2013) நாளிதழிலிருந்து…

அனாதைப் பெண் பிணம் – மர்ம நபர் வெறிச்செயல்
போலீஸ் தீவிர விசாரணை
பெங்களூர், ஃபிப்.14–
ஈஜிபுரா அருகே இன்னர் ரிங் ரோடை ஓட்டியிருக்கும் ஆர்மிக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத 18வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மிகக்கொடூரமான நிலையில் வயிறு கிழித்து கொலை செய்து அடையாளம் காண முடியாத அளவில் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோரமங்களா இன்ஸ்பெக்டர் ப‌சவப்பா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
 ~0~
மதுமிதாவின் Post-Mortem Reportலிருந்து…
“கூர்மையான துருவேறிய ஆயுதத்தினால் (உதா: பேனாக்கத்தி‌) வயிற்றுப் பகுதி 3 இஞ்ச் ஆழத்துக்கு கிழிக்கப்பட்டு, பெருங்குடல் முழுக்க சேதாரமான‌தால் உடனடி மரணம். தவிர உணவுக்குழாய்ப்பாதை முழுக்கவும் ஆழமான‌ சிறுசிறு கீறல்கள்.”
  ~0~
மதுமிதாவின் அப்பா நடராஜனின் வாக்குமூலத்திலிருந்து…
“அந்த காலியான‌ மினி வெல்வெட் பௌச்சில் இருந்திருந்தவை பிறந்தநாள் பரிசாக நான் கொடுத்த ரூ. நூறு கோடி மதிப்புள்ள பதினேழு தென்னாப்பிரிக்க‌ வைரங்கள்!”
  ~0~
 (மதுமிதா கொலை வழக்கின் போலீஸ் விசாரணைக் குறிப்புகளிலிருந்து)


-CSK
 
Thanks: tamilpaper.net