Lyrics: Kannadhasan Music: R Govardhanam Film: Pattanaththil Bootham
பெண்: அந்த சிவகாமி மகனிடம் சேதிசொல்லடி
எனைச்சேரும் நாள்பார்க்கச் சொல்லடி
இங்கு எவரோடும் நான்பேச வார்த்தையேதடி
வேலன் இல்லாமல் தோகையேதடி...
கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் கூடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே...
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே...
நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே..
கண்ணில் நின்றாடச் சொல்லடி
ஆண்: மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
பெண்: நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தொடருமோ..
காலம் மாறினால் காதலும் மாறுமோ..
காலம் மாறினால் காதலும் மாறுமோ..?
ஆண்: மாறாது ..மாறாது இறைவன் ஆணை!
இருவரும்: என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை
ஆண்: இந்த சிவகாமி மகனிடம் சேதிசொல்லடி எனைச்சேரும் நாள்பார்க்கச் சொல்லடி இங்கு எவரோடும் நாம் பேச வார்த்தையேதடி தோகை இல்லாமல் வேலன் ஏதடி..
பெண்: அந்த சிவகாமி மகனிடம்... அந்த சிவகாமி மகனிடம்... சேதிசொல்லடி எனைச்சேரும் நாள்பார்க்கச் சொல்லடி...
No comments:
Post a Comment