சினிமா
உலகிற்குச் செல்பவர்கள் ஒழுக்கமாக இருப்பது கடினம்
என்ற
கருத்தைப் பொய்யாக்கியவர் மறைந்த பிரபல ஹிந்திப் பாடகர் முஹம்மத் ரஃபி.
பஞ்சாப் மாநிலம் கோட்லா
சுல்தான்பூருல் 1924-ல்
பிறந்தார். பள்ளிக்கூட நிழல்
கூட
இவர்
மீது
படவில்லை. ஆனால்,
தொழுகை,
குர்ஆன் உள்ளிட்ட மார்க்கக் கல்வியைத் தமது
எட்டு
வயதில்
முழுமையாகக் கற்றார்.
Mohammed Rafi having fun with Boxing legend Mohammed Ali |
சிறு
வயதில்
தந்தையுடன் மசூதிக்குச் செல்லும் போது
மசூதி
அருகில் மார்க்கம் தொடர்பான பாடல்களைப் பாடும்
முதியவரை ரஃபி
தினமும் சந்திப்பார்.
முதியவரின் பாடலை
வீட்டுக்கு வந்து
ரஃபி
முணுமுணுப்பார். ரஃபியின் குரலுக்கு வீட்டுக்குள் கிடைத்த வரவேற்பும் பாராட்டும் அவருக்குள் பின்னணிப் பாடகராகும் ஆசையைத் தூண்டின. ஆனால்
தந்தை
முஹம்மத் அலீம்,
தாய்
அல்லா
ரக்காஹ் இதற்குச் சம்மதிக்கவில்லை. இதற்கிடையே தமது
சகோதரர் ஹாமீதின் உதவியுடன் மும்பைக்கு வந்தார். திரைப்பட வாய்ப்பைத் தேடிப்
பல்வேறு இசையமைப்பாளர்களைச் சலிக்காமல் சந்தித்தார்.
ஒரு
பஞ்சாபிப் படம்தான் அவருக்குப் பின்னணிப் பாடகர்
என்ற
அடையாளத்தைத் தந்தது.
இதையடுத்து பல்வேறு ஹிந்திப் படங்களில் பாடத்
தொடங்கினார்.
மேலா,
ஆன்,
தீதார்,
பைஜு
பாவரா,
தோஸ்தி,
தோஸ்த்,
தோ
ராஸ்தே,
கீத்,
ஷாகிருத், மேரே
மெஹபூப் உள்ளிட்ட படங்கள் அவரது
புகமுக்கு மகுடம்
சூட்டின.
திரைப்படத் துறையில் இருந்தும் ஐந்து
வேளைத்
தொழுகையாளியாகத் திகழ்ந்ததுதான் முஹம்மத் ரஃபி
மீது
இன்றும் கூட
முஸ்லிம்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கக் காரணம்.
திரைப்படத்துறையில் இருந்தும் திரைப்படங்கள் பார்க்காத ஒரே
கலைஞர்
முஹம்மத் ரஃபி.
தாம்
பாடிய
பாடல்களுக்கான காட்சிகளையும் அவர்
பார்த்ததில்லை என்கின்றனர் அவரது
குடும்பத்தினர்.
1972-ல் புனித
ஹஜ்
பயணம்
மேற்கொண்டார். அந்த
ஹஜ்
முடிந்ததும் இந்தியாவுக்குத் திரும்பாமல் மெக்காவிலேயே ஓராண்டு தங்கியிருந்து அடுத்த
ஹஜ்ஜையும் நிறைவேற்றினார்.
தாம்
வசிக்கும் மும்பை
பாந்த்ரா பகுதியில் மசூதி
ஒன்றைக் கட்ட
வேண்டும் என
தனது
கடைசி
காலத்தில் விருப்பப்பட்டார். 1980 ஜூலை 31-ம்
தேதி
அவர்
காலமானார். பின்
அவரது
மகன்கள் பாந்த்ராவில் மசூதியைக் கட்டினர்.
Mohmmed Rafi's daughter- in- law & grand son |
அவரது
இரண்டு
மகள்கள், 5 மகன்களையும் திரைப்படத் துறையின் நிழல்
கூட
படாதவாறு வளர்த்தார். அவரது
மனைவி
பல்ஃகஸ் பேகமும் ரஃபியின் நற்செயல்களுக்கு உற்ற
துணையாக இருந்தார்.
ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள ரஃபி, பிலிம்பேர் உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள ரஃபி, பிலிம்பேர் உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இஸ்லாமிய நெறிமுறைகளின்படி வாழ்ந்த முஹம்மத் ரஃபி,
திரைப்படத்துறையில் உள்ள
பிற
முஸ்லிம் கலைஞர்களுக்கு ஓர்
அழகிய
முன்மாதிரி.
நன்றி
: தினமணி
ஈகைப்
பெருநாள் மலர்
நான் பிறப்பதற்கு முதலே இவர் இறந்துவிட்டார்...
ReplyDeleteஇவர் பற்றி இன்றுதான் அறிகிறேன்
பகிர்வுக்கு நன்றி