தூங்குமுன்
கழுத்தைக்
கட்டிக்கொண்டு
கதைகேட்ட
குழந்தைக்கு
கதைமுடிந்ததும்
நீதியைச்சொல்ல
ஆரம்பித்தேன்
தூக்க சுவாரஸ்யமோ
அல்லது
போதனையின் அசுவாரஸ்யமோ
போ உன் கதையை
நீயே வைத்துக்கொள் என்று
திரும்பிப்படுத்துக்கொண்டது.
சொன்னபின்
யாருக்குச் சொந்தம் கதை?
சொன்ன பின் கதையை புலனுக்குள் புகுந்து
திரும்பி வாங்கிக்கொள்ளத்தான்
கதைசொல்லிக்கு
முடியுமோ?
Thanks:கலாப்ரியாவின் 'வனம் புகுதல்' கவிதைத் தொகுப்பு
No comments:
Post a Comment