Thursday, July 11, 2013

குளிக்கப்போய் சேறுபூசும் நேத்ரா டீவி






ன்றைய தினம் (11.07.2013)  மாலை நமது நேத்திரா டீவி யில் ஒளிபரப்பான நோன்பு திறக்கும் விசேட ஒளிபரப்பினைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது மலைகள் பற்றி குர்-ஆனிலே குறிப்பிடப்படும் சில தகவல்கள் என்று பட விளக்கத்துடன் ஒரு நிகழ்ச்சியைக் காண்பித்தார்கள்.


'அடடா நமது ஆன்மீக நிகழ்ச்சிகளிலே அறிவியல் புகுந்து விளையாடுகின்றதே' என்று ஆவலுடன் பார்த்தபடியிருந்தவர்கள் பலர் அதிர்ச்சியிலும் சங்கடத்திலும் நெளிந்தார்கள். அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகவும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களாகவும் இருந்ததே அதற்குக் காரணமாகும்.


ஆறாம் தரத்தில் ஆரம்ப புவியியல் பாடத்தைப் படிக்கும் ஒரு மாணவன் கூட கைகொட்டிச் சிரித்துவிடக்கூடியதாக இருந்தது அந்த 'ஆன்மீக அறிவியல்' நிகழ்ச்சி.


பாவம் நமது நேத்திரா டீவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.


ஆன்மீகத்தை மக்கள் இதுவரை எதுவித தடங்கலுமின்றி நம்பிக்கொண்டு இருக்கின்றபோது, இத்தகைய நிகழ்ச்சிகள் என்ன நோக்கித்திற்காக உருவாக்கப்பட்டு ஒளிபரப்பாகின்றன என்பதுதான் எனக்குப் புரியவில்லை.


'இதோ பாருங்கள் எங்கள் ஆன்மீகத்துக்குள் இருக்கும் அறிவியலை!' என்று யாருக்கோ கலர்ஸ் காட்டப்போய்.... குளிக்கச் சென்று சேற்றைப் பூசிக்கொண்ட கதைபோலாக்கி விட்டார்கள், நமது நேத்ரா டீவி யினர்.


இப்படியெல்லாம் அறிவியலை திரித்து ஆன்மீகத்துக்குள் இறக்கினால், புவியியல் உண்மைகள் புரியாதவர்களும் டீவியில் எதைக்காண்பித்தாலும் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களும் வேண்டுமானால் நம்பலாம்.
ஆனால், சின்னஞ் சிறுபாராயத்திலிருந்தே அறிவியலை கற்றுவரும் புதிய தலைமுறைகள் இப்படியான திரித்தல்களை எவ்வாறு  ஏற்றுக்கொள்வார்கள்...?


'பூமியை தொட்டிலாகவும் மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?' (குர்-ஆன் 78:7)


இதில் மலைகளை முளைகளாக ஆக்கியிருப்பதாக குர்-ஆன் கூறுகிறது என்கிறார்கள் . இந்த வசனத்தில் மட்டுமல்லாது இன்னும் பல வசனங்களில் (15:19; 16:15; 21:31; 27:61; 31:10; 41:10; 79:32; 77:27) மலைகளை 'முளைகள்' என குர்-ஆன் குறிப்பிடுகிறது.

சரி, மலைகளை முளைகளாக குறிப்பிடுவதில் உள்ள அறிவியல் உண்மை என்ன?



நாம் வாழும் பூமி பலவித அடுக்குகளாக உள்ளது. ஒவ்வொரு அடுக்கும் வேறு வேறு கனத்தில் அமைந்திருக்கிறது. வேறு வேறு கனத்தில் பல்வேறு அடுக்குகளாக அமைந்துள்ள பூமி சுற்றிக்கொண்டேயிருக்கிறது. ஒரு சீரான வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் பூமியில் எப்படி பல்வேறு அடுக்குகளும் அதே சீர்வேகத்தில் சுழல முடியும்?





ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு வேகத்தில் சுழலும் சாத்தியமுண்டல்லவா? ஆனால் அப்படி வேறு வேறு வேகத்தில் சுழன்றால் பூமி பூமியாக இருக்குமா? உயிரினங்கள் நிலைத்து வாழ முடியுமா?

இருப்பினும் அப்படி வேறு வேறு  வேகத்தில் சுழலாமல் ஒரே வேகத்தில் எப்படி சுழல்கிறது என்றால், மலைகள் பூமியில் முளைகளாக நடப்பட்டு பல்வேறு அடுக்குகளையும் ஒன்றாக இறுக்கிப்பிடித்து வைத்திருப்பதனால் தான் பூமி ஒரே சீரான வேகத்தில் சுழல்கிறது. அதனால் தான் நாமெல்லாம் வாழ முடிகிறது.


ஆகா இது எவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மை?


நாம் வாழும் இந்த பூமி பல அடுக்குகளாகத்தான் இருக்கிறது. அதிலே பிரச்சினையில்லை. ஆனால் மலைகள் முளைகளாக இறுக்கிப் பிடித்துவைத்திருப்பதால் தான் பூமியால் சீராக சுழலமுடிகிறது என்று கூறுவதிலுள்ள அறிவியல் உண்மை என்ன?


முதலில் பூமியின் அடுக்குகளைப்பார்ப்போம். பூமியை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அதன் திணிவை மூன்றாக பிரிக்கலாம்,



1. inner core
2. outer core
3. mantle


இதில் இன்னர் கோர் திடப்பொருளாகவும், அவுட்டர் கோர் பாறைக்குழம்பாக திரவப்பொருளாகவும், மேண்டில் கனிம வளங்களை உள்ளடக்கிய திடப்பொருளாகவும் இருக்கிறது. மேண்டிலை மட்டும் அணுக்கமாகப் பார்த்தால் ஏதினோஸ்பியர், லிதோஸ்பியர், க்ரஸ்ட் என்று சில அடுக்குகளாகப்பிரிக்கலாம்.

இவற்றில் crust  என்பதில்தான் நாம் காணும் கடல், மலை, நிலம் என்று அனைத்தும் உள்ளன. இந்த க்ரஸ்டின் கனம் அதிகபட்சம் நூறு கிலோமீற்றர் வரை இருக்கிறது. அதாவது எல்லா இடங்களிலும் நூறு கிலோமீற்றர் அளவுக்கு இல்லை சமமற்ற முறையில் ஏற்ற இறக்கங்களோடு அமைந்திருக்கிறது. சில இடங்களில் பத்து கிமீ இருக்கலாம், சில இடங்களில் 20, 30 என அதிகபட்சம் 100 கிமீவரை.


இந்த அதிகபட்ச ஆழமானது மலைப்பகுதிகளில் இருக்கிறது. இதை வைத்துத்தான் இவர்கள் மலைகளை முளைகள் என்கிறார்கள்.





கவனிக்கவும் (படம்) மலைகளின் வேர்கள் எந்த அடுக்கையும் ஊடுருவிச்செல்லவில்லை. மற்ற இடங்களை விட அதிக ஆழமாக இருக்கிறது அவ்வளவுதான். இதை முளை என்றும் எல்லா அடுக்குகளையும் இறுக்கிப்பிடித்திருக்கிறது என்றும் கூறுவதற்கு  அசகாயத் துணிச்சல் தேவை.





"பூமி உங்களை அசைத்துவிடாதிருக்க அதில் முளைகளையும், ............அமைத்தான்.......... இந்த வசனத்தில் மலைகள் அதாவது முளைகள் இருப்பதால் தான் பூமி உங்களை அசைத்துவிடாதிருக்கிறது' என்று குர்-ஆன் கூறுவதாக நேத்ரா டீவியிலே இன்று மாலை சொல்கின்றார்கள்.


மலைகள் என்று கொண்டாலும் முளைகள் என்று கொண்டாலும் இதில் பொருள் மயக்கம் வருவதில்லை ஆனால் சொற்றொடரின் பொருளோ மயக்கம் வரவைக்கும் அளவிற்கு இருக்கிறது.


பூமி நம்மை அசைப்பதே இல்லையா?


அவ்வப்போது அது நிலநடுக்கம் எனும் பெயரில் நம்மை அசைத்து பல உயிர்களை கொள்ளையிட்டுக்கொண்டிருக்கிறது தூரப்பகுதிகளை விட்டுவிடுவோம், மலைப்பகுதிகளிலாவது நிலநடுக்கம் வராமலிக்கிறதா? பல மாதங்களுக்கு முன்பு கூட ஈரான், இத்தாலிய மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் வரை மரணமடைந்தனர். ஆனால் பூமி உங்களை அசைத்துவிடாதிருக்க மலைகளை அமைத்ததாக குர்-ஆன் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.



பூமியின் மேற்பரப்பு கண்டத்தட்டுகளாக அமைந்திருக்கிறது.  நிலப்பகுதியிலும் கடல்களுக்கு அடியிலுமாக பூமி ஆபிரிக்க, அண்டார்ட்டிக்,ஆஸ்திரேலிய, யூரேசிய, வட அமெரிக்க, தென் அமெரிக்க, பசிபிக், கோகோஸ், நாஸ்கா, இந்தியா என்று பத்து பெரிய தட்டுகளாகவும்; இன்னும் சில சிறிய தட்டுகளாகவும் அமைந்துள்ளன.


அதேவேளை இந்தக் கண்டத்தட்டுகள் நகர்ந்துகொண்டிருக்கிறன. ஆண்டுக்கு ஒரு சென்ரிமீற்றர் முதல் 13cm வரை நகர்கின்றன. சில ஒன்றை ஒன்று விலகி நகர்கின்றன. சில ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன.


இந்த நகர்வுகளை அல்லது அசைவுகளை மலைகள் கட்டுப்படுத்துகின்றனவா?


மாறாக இந்தியத்தட்டு யுரேசியத்தட்டுடன் மோதுவதால் தான் இமய மலை தோன்றியது இன்னும் ஆண்டுக்கு ஆண்டு அது வளர்ந்துகொண்டும் இருக்கிறது. புவியியல் அமைப்புகள் இப்படி இருக்க, மலைகள் எந்த அசைவைக்கட்டுப்படுத்துகின்றன?


இன்றுள்ள குர்-ஆனில் இதற்கு விளக்கம் ஒன்றுமில்லை, ஹதீஸ்களிலும் கூறப்படவில்லை. பின் யார் இதை விளக்குவது? தயவு செய்து வாய்மையுள்ளவர்கள் விளக்கவும்.


பூமிக்குள் மனிதனால் எவ்வளவு ஆழத்திற்கு செல்லமுடியும்?
அதிக அளவாக இதுவரை மூன்று கிலோமீற்றர் வரை சுரங்கம் அமைத்திருக்கிறார்கள். பத்து கிலோமீற்றருக்கு அதிகமான ஆழத்திற்கு குழாய்களை இறக்கியிருக்கிறார்கள். மூன்று கிலோமீற்றருக்கு கீழே மனிதர்கள் இறங்கவோ, இன்னும் ஆழமாக குழாய்களை இறக்கவோ தேவை ஒன்றும் இப்போதைக்கு ஏற்படவில்லை என்றாலும் இன்னும் ஆழமாக கீழே செல்வது சாத்தியக்குறைவானதுதான். ஆழம் செல்லச்செல்ல அதிகரிக்கும் வெப்பம், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, நச்சு வாயுக்கள் என பல பிரச்சனைகள் உள்ளன.


பூமியை பிளந்து மலையின் உச்சியளவுக்கு மனிதனால் செல்லமுடியாது என குர்-ஆன் உறுதியாக குறிப்பிட்டிருப்பதாக பலர் கதையளக்கின்றார்கள். பூமியில் உயரமான மலை இமயமலை, எவெரெஸ்ட் சிகரம் உயரம் சற்றேறக்குறைய 9 கிமீ. பூமியின் உயரமான மலையளவான இந்த அளவிற்கு பூமிக்குள் மனிதனால் செல்லமுடியாது என்று விவரிக்கிறார்கள்.


ஆனால், குர்-ஆன் அப்படி எங்காவது கூறியிருக்கிறதா?


"பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியை பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்" (குர்-ஆன் 17:37) பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பு இப்படிக்கூறுகிறது. 


ஆனால் இதே வசனம் ஜான் டிரஸ்ட் வெளியீட்டில் இப்படி இருக்கிறதா? "நீர் பூமியில் பெருமையாய் நடக்கவேண்டாம். நிச்சயமாக நீர் பூமியை பிளந்துவிட முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது."  


இரண்டுக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம்? கர்வம் பிடித்தலையும் மனிதர்களுக்கு குர்-ஆனின் அறிவுரை இது.

பூமியை பிளந்துவிட முடியுமா? மலையின் உச்சிக்கு சென்றுவிட முடியுமா? எனவே உன்னை பெரிதாய் நினைத்து கர்வத்துடன் நடக்காதே. இதுதான் குர்-ஆன் வாயிலாக இறைவன் நமக்குச் சொல்ல வருவது.


ஒரு ஒப்பீட்டுக்காக இறைவன் நமக்கு கூறுவதை அறிவியலாக எப்படி திரித்துவிட்டார்கள் பார்த்தீர்களா?


பிற்காலத்தில் மனிதர்கள் மலையின் உச்சியை ஏறியே அடைந்து விடுவார்கள், பூமியை பிளந்து விடுவார்கள்  என்பதெல்லாம் அன்று இருந்தவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.


நமது மதம் அறிவியல் சார்பான மதம், அறிவியலை முன்னறிவித்த மதம் என்று காட்டுவதற்காக எந்தவிதமான திரித்தலையும் செயலையும் செய்வதற்கு இந்த நேத்திரா டீவி யினர் போன்றவர்கள் பலர் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் தான் இவையே தவிர வேறு ஏதுமில்லை.

 - Omar Mukthar
 

12 comments:

  1. செங்கொடி இணையத்தில் உள்ள ஆக்கத்தை அப்படியே copy பண்ணி நேத்ரா டிவி யை சேர்த்து எழுதியிருகிறீர்கள்
    ஆஹா என்ன ஒரு திறமை !!!!

    sengkodiyin தளத்திலேயே ஒரு சகோதரர் தந்திருக்கும் பதிலே போதும் உங்கள் அறியாமையைக்கும் காழ்ப்புணர்வுக்கும்

    5:43 பிப இல் ஜனவரி5, 2010 பற்றி Mohamed Sabry
    மலை – பூமி பற்றிய ஆய்வுகள் (Geology)தொடர்பான பல தகவல்கள் மிக கஷ்டப்பட்டு பதிவு செய்துள்ளீர்கள். பதிவில் “வாய்மையுள்ளவர்கள் விளக்கவும்” என்று குறிப்பிட்டதட்கிணங்க நான் பதிவிடுகிறேன். நீங்கள் அரபியில் 0 என்பது உங்கள் தலைப்பை பார்த்தாலே புரிகிறது. குரானை குர்ஆன் என்று மாற்றிக்கொள்ளுங்கள்.

    மலைகள் பற்றி குர்ஆனில் நீங்கள் குறிப்பிட்டபடி (15:19; 16:15; 21:31; 27:61; 31:10; 41:10; 79:32; 77:27) பூமி உங்களை அசைத்துவிடாதிருக்க அதில் முளைகளையும், …………அமைத்தான்………. என காணப்படுகிறது. அது வரைக்கும் உங்கள் கட்டுரையில் “அசைத்தல் ” என்று குறிப்பிட்டு விட்டு பின்னர் “நிலநடுக்கம்” என்ற சொல்லை புகுத்தியதுதான் ஏன் என்று புரியவில்லை. சரி, நான் விளக்கத்திற்கே வருகிறேன்.

    பூமி மிக வேகமாக சுழல்கிறது என்று யாவரும் அறிந்ததே. மேற்கூறப்பட்ட அனைத்து குர்ஆன் வசனங்களிலும் “தமீதா” (thameedha) எனும் அரபுப் பதம் உபயோகிக்கப்படுகிறது. 79:32 எனும் தொடரில் “அதில் மலைகளையும் அவனே நிலை நாட்டினான். “என்றும் காணப்படுகிறது. .உங்கள் பதிவில் மலைகள் எந்த அசைவைக் கட்டுப்படுத்துகின்றன? என்ற கேள்வி தோன்றியதற்கு முக்கிய காரணம் உங்களுக்கு “thameedha” என்ற சொல்லுக்கு விளக்கம் தெரியாததே.

    உலகில் அநேக பல்கலைக் கழகங்களில் காணப்படுகின்ற Geology சம்பந்தமாக எழுதப்பட்ட Dr. frank press(American geophysicist and Advisor of former president Gimmy carter.USA ) அவர் தனது ஆய்வுப் குறிப்பில் பூமியை நிலைப்படுத்துவது மலைகளாகும்(the mountains give stability to the earth) என குறிப்பிடுகிறார். இப்போது குர்ஆனில் நீங்கள் குறிப்பிட்ட 21:31,31:10,16:15 போன்ற வசனங்களைப் பாருங்கள். “உங்களுடன் பூமி அசையாது இருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை நிறுத்தினான்”. என்று காணப்படுகிறது. செங்கொடி அவர்களே note this point:-mountains to prevent earth from shaking.not prevent the earth quake. வேகமாக பூமி சுழலும் போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும் மேல் அடுக்கில் உள்ள எடை குறைவான பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற முடியாது. இந்நிலை ஏற்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்களும் கட்டடங்களும் தூக்கி வீசப்படுவார்கள்.
    இந்த இடத்திலும் உங்கள் நுனிப்புல் மேய்தலை நிரூபித்து இருக்கிறீர்கள். நிலநடுக்கத்திற்கு அரபியில் “சல்சலா” (zalzala) என்ற பதம் பாவிக்கப்படும். நிலநடுக்கம் தொடர்பாக குர்ஆனில் 99 வது அத்தியாயத்தில் நீங்கள் பார்க்கலாம். zalzala (earth quake) – a sudden and violent shaking of the ground, sometimes causing great destruction, as a result of movements within the earth’s crust or volcanic action.
    ஆனால் இங்கு மேல் குறிப்பிட்ட அனைத்து வசனங்களிலும் “thameedha” என்ற சொல்லே குறிப்பிடப்படுகிறது. thameedha is – to prevent the earth from shaking with you.

    thameedha, zalzala போன்ற சொற்களுக்கு விளக்கம் தேவைப்படின் english-arabic dictionary யை பாருங்கள்.

    மேலதிக விளக்கத்திற்கு – http://www.youtube.com/watch?v=zQu7FznVOvI&NR=1

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கும் விளக்கத்திற்கும் நன்றி அன்பரே!

    செங்கொடியிடமிருந்து மட்டுமல்ல உலகளாவிய இணையம் முழுவதிலுமுள்ள பொருத்தமான விடயங்களை பயன்படுத்தி வாசகர்களுக்கு உண்மையைச் சொல்வதற்கு ஒன்றும் வெட்கப்படவேண்டியதில்லை. உங்களைப்போல சுட்டிகளைத் தந்துவிட்டு ஒதுங்கி நிற்காமல், வாசித்தறிந்தவற்றை நமது மொழிநடையிலே தருவதுதான் சிறந்தது என்பது என் எண்ணம்.

    நீங்கள் எழுதியுள்ள விளக்கத்திலே பல வாசிப்புகள் புரியவேண்டிய அவசியமிருப்பதால் சற்றுப்பொறுத்து பதில் தருவதற்கு உத்தேசித்திருக்கின்றேன். எனினும் நீங்கள் எனது பதிவிற்குரிய முழுவிடயத்திற்கும் பதில் தராமல் ஒரு குறிப்பிட்ட அரபுப் பதங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஜல்லியடிக்கின்றீர்களே..? - Omar Mukthar

    ReplyDelete
  3. ஆக்கத்தை எழுதியதே நீங்கலாக இருந்து கொண்டு Anonymous ஆக கமெண்ட்ஸ் பண்ணுகிறீர்கள்.
    இந்த தளத்தின் அறிமுகத்தில் "நான் jesslya jessly " இது என்னுடைய தளம் என்று இதுவரை இருந்தது இப்போது பல இணை நடத்துனர்கள் சேர்ந்து நடத்தும் தளமாக திடீரென உரு மாறியிருக்கிறது.(அவரது பேட்டியில் )
    இஸ்லாத்தை சொந்த பெயரில் விமர்சிக்க திராணியில்லாமல் முஸ்லிம் பெயர்களை வைத்து கொண்டு கம்யூனிச பேர்வழிகளின் உளறல்களை வாந்தி எடுத்து கொண்டிருகிறீர்கள்.
    காப்பி அடிப்பது தவறில்லை எங்கே இருந்து காப்பி அடித்தீர்கள் என்ற சுட்டியையும் வாசகர்களுக்கு கொடுங்கள் அப்போதுதானே உங்கள் ஆசாங்களுக்கே கொடுக்க பட்டிருக்கும் பதிலடிகளையும் வாசகர்கள் போய் பார்க்க முடியும்.
    செங்கொடி போன்றவர்களின் ஒவ்வொரு உளறல்களுக்கும் தனியான இணைய தளத்தில் தெளிவான மறுப்புக்கள் கொடுக்க பட்டுகொண்டிருக்கினறன.
    வாசகர்களே இந்த தலத்திற்கு சென்று பாருங்கள்
    http://ihsasonline.wordpress.com/

    நேருக்கு நேர் விவாதிக்க தைரியமில்லாத உங்கள் கம்யூனிஷ தலைவர்களை போன்று ஓடி ஒழியாமல் நீங்களாவது விவாதிக்க முன்வாருங்கள்
    Jesslya thaan ஒரு பெண் என்பதால் வெளியே வர அஞ்சுவதாக கூறியிருக்கிறார் நீங்களாவது முன் வரலாமே தோழா!
    உளரக்ளை வாந்தி எடுக்கும் உங்களிடம் சொந்த சரக்கு என்கே இருக்க போகிறது.

    //உங்களைப்போல சுட்டிகளைத் தந்துவிட்டு ஒதுங்கி நிற்காமல், வாசித்தறிந்தவற்றை நமது மொழிநடையிலே தருவதுதான் சிறந்தது என்பது என் எண்ணம்.//

    "நேத்ரா டிவி" என்பதை மட்டும் இடை செருகல் செய்து விட்டு அது உங்கள் மொழி நடை என்று சொல்வதற்கு வெட்கமா இல்லை ???

    ReplyDelete
  4. அபூ ஜீஸா,

    உங்களது கருத்துகளுக்கு மீண்டும் நன்றி. ஆனால் நீங்கள் திருமணத்தில் தாலிகட்டுவதை விட்டு "மாவிலைத் தோரணம் சரியில்லை... மணமகளின் பாட்டி சரியில்லை" என்று ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்கின்றீர்கள்.

    முதலிலே நாங்கள் முன்வைத்த விமர்சனங்களுக்கும் கருத்துக்களுக்கும் உங்கள் பதில் கருத்துக்களை முன்வையுங்கள். அதைவிட்டு விட்டு விவாதத்திற்கு தேவையில்லாத விடயங்களை நோண்டிக் கொண்டிருக்கின்றீர்கள்.

    நாங்கள் எப்போதாவது அபூ ஜீஸா என்பவர் யார்? ஆணா பெண்ணா அல்லது அரவாணியா என்று விசாரித்துக்கொண்டா திரிகின்றோமா? நாங்கள் உங்களை உங்கள் கருத்துகளைக் கொண்டு எதிர்கொள்ளும்போது நீங்கள் மட்டும் ஏன் எங்களை தனிப்பட நோண்டுகின்றீர்கள்?

    உங்களை எங்கள் வீட்டு வரவேற்பறையிலிருந்து பேசுவதற்கு நாங்கள் மரியாதை கொடுத்து அழைத்தால், நீங்கள் ஏன் எங்கள் குளியலறைக்குள் வந்து எட்டிப் பார்க்கின்றீர்கள்? வெட்கமாக இல்லை..?

    நினைத்தால் நாங்கள் கூட உங்களை எவ்வளவோ குறை காணலாம். உங்களது கேவலமான எழுத்துப்பிழைகள் முதற்கொண்டு எவ்வளவோ கூறமுடியும்.

    எங்களை தவறான ஆசாமிகளாக காண்பிப்பதற்கு முயற்சித்து முயற்சித்து மூக்குடைபடுவது நீங்கள்தான். உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்தாலே நாம் முன்வைத்திருக்கும் கருத்துக்களுக்குப் பயந்து பதில் கூற முடியாமல் உங்களக்குப் பீதியில் பேதி கண்டிருப்பதை நமது சமூகத்தில் வாழும் இணைய வாசகர்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள்.

    நீங்களே கூட ஒரு இஸ்லாமியரா அல்லது இஸ்ரேலிய யூத உளவாளியா என்பதிலே எங்களுக்கும் சிறு சந்தேகம் உள்ளது. நீங்களே உங்கள் சுயரூபத்தை கண்டறிந்து விடக்கூடாது என்பதற்காகவே இஸ்லாம் இஸ்லாம் என்று ஓவர் பில்டப் கொடுக்கும் ஒரு யஹுதியாகக் கூட இருக்கலாம்.

    இஸ்லாம் என்ற கவரிலே போட்டு எதைக் கொடுத்தாலும் மூடத்தனமாக நம்புவதனால் அல்லது நம்புவதுபோல பாவ்லா காண்பிப்பதால் மட்டும் நீங்கள் ஏதோ உத்தம புருசர் என்று மற்றவர்கள் நினைத்து விடுவார்கள் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்.

    இனிமேலாவது குளியலறைகளுக்குள் எட்டிப்பார்க்கும் உங்கள் களவாணித்தனத்தை விட்டுவிட்டு எங்கள் கருத்தோடு மோதி வெல்வதற்குப் பாருங்கள்.

    எங்களுடைய கருத்தை நீங்கள் வென்றுவிட்டால், நாங்கள் அதை ஏற்றுக்கொண்டு எங்களது பார்வையை திருத்திக்கொள்வோம். மாறாக, நாங்கள் உங்களை கருத்தால் வென்றால், நீங்கள் ஈகோவுடன் வீம்புக்கு ஜல்லியடிக்காமல் எங்களைப்போல உங்கள் பார்வைகளைத் திருத்திக்கொள்வோம் என்றுகூட வேண்டாம் உங்கள் கருத்துக்களை மறுபரிசீலனை செய்யத் தயாரென்றாவது கூறும் பெருந்தன்மை உண்டா உங்களுக்கு? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்ப்போம்...

    ஒரு உண்மையான இஸ்லாமியராக கூட வேண்டாம் ஒரு நல்ல மனிதராகவேனும் அடுத்தவரின் அந்தரங்கத்தை அலசிக்கொண்டிராமல் நாகரீகமாக நடந்துகொள்ள முயற்சியுங்கள். கருத்தை கருத்துகளால் மட்டும் சந்தியுங்கள். அவதூறுச் சேறுவீசி எங்களை மட்டந்தட்ட நினைப்பது வானத்தை நோக்கி உமிழ்வதற்கு ஒப்பானது என்பதை மிக விரைவில் உணர்ந்து கொள்வீர்கள்.

    தோல்வியடையும் கட்டத்திலே உயிருக்கு அஞ்சும் இராணுவச் சிப்பாய்கள்தான் அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து அப்பாவிப் பொதுமக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கி கொன்றொழிப்பதுண்டு. அதுபோல கருத்துகளால் தோல்வியடையும் நிலையிலிருப்பவன்தான் மாற்றுக்கருத்தாளியை தனிப்பட்ட ரீதியில் தாக்குவதற்கு நினைப்பான். பொதுமக்களை கொல்வதும் மாற்றக் கருத்துக்கூறுபவர்களை நிந்திப்பதும் ஒரு வீரமா என்ன? அதைவிட வடிகட்டிய கோழைத்தனம் உலகிலே இருக்கமுடியமா? த்தூ!

    நீங்கள் வஞ்சக நோக்கத்தோடு நைச்சியமாக எழுதும் அவதூறு பின்னூட்டத்தைக்கூட நாங்கள் பிரசுரித்திருப்பதிலிருந்து எங்களது பெருந்தன்மையை புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அனைத்துக்கும் எல்லையுண்டு. ஊடக நாகரீகம் தெரியாத உங்கள் முடை நாற்றமடிக்கும் உளறல்களையெல்லாம் தொடர்ந்து பிரசுரிக்க வேண்டிய அவசியமில்லை.

    ஆம், இனியும் கருத்துகளோடு மோதாமல் தனிப்பட்ட அவதூறுகளை நீங்கள் புரிந்து கொண்டிருந்தால் நாங்களும் சில எல்லைகளைத் தாண்டிச் செயற்பட வேண்டியிருக்கும் நண்பரே! -Omar Mukthar & Friends

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அபூ ஜீஸா,

    நீங்கள் மீண்டும் எழுதிய கருத்துக்கு நன்றி.

    நமது பின்னூட்டங்களை பொறுமையாக அவதானித்து வரும் ஒருவருக்கு பேதலித்துப்போய் உளறிக்கொட்டுவது யார் என்பது அழகாகப் புரியும். நீங்களே குட்டு வெளிப்படுத்தப்பட்டதாக உளறிக்கொண்டு அதற்கு கையும் தட்டிக்கொண்டு இருப்பதால் என்ன இலாபம்?

    உங்களை சிறகுகள் தளத்திற்கு வந்து பின்னூட்டமிடுமாறு நாங்கள் வருந்தி அழைத்ததுபோலவும் நீங்கள் வந்துதான் சிறகுகளை உய்வித்தது போலவும் உளறிக்கொட்டிக்கொண்டிருப்பது நல்ல வேடிக்கைதான்.

    சிறகுகள் வர்த்தக நோக்கிலோ அல்லது மாற்றங்களுக்கும் மறுபரிசீலனைகளுக்கும் இடமில்லாத செக்குமாட்டுச் சிந்தனைகளை அரங்கேற்றுவதற்கோ ஆரம்பிக்கப்பட்டதல்ல. அல்லது நிஜ வாழ்விலே அடைய இயலாத கற்பனை உலகை உருவாக்கி மனவக்கிரங்களை ஆற்றுப்படுத்தி சுகம் காண்பதற்கு தோற்றுவிக்கப்பட்டதுமல்ல. அது தனக்குச் சரியென்று படுவதை உலகளாவிய வாசகர்களுடன் யதார்த்தமாய் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்ட தனியொரு பாடசாலை மாணவியால் ஆரம்பிக்கப்பட்டது.

    சிறகுகள் தளம் தனியொருவரால் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட அது காலப்போக்கில் உலகின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள தர்க்கரீதியான சிந்தனையுடனும் மாற்றுக் கருத்துகளின் மீது நேர்மையான அணுகுமுறை கொண்டு செயல்படுபடும் நண்பர்களின் கூட்டிணைவினால் நடாத்தப்படும் சுதந்திரமான தளம்.

    சிறகுகளின் நடவடிக்கை பற்றி எல்லோருக்கும் பொதுவான இறைவனுக்கு அன்றி வேறு எவருக்கும் நாங்கள் விளக்கம் அளிக்கவேண்டிய அவசியமில்லை.

    அடுத்தவர் மனம் புண்படாதவாறு பல்வேறு துறைகள் பற்றிய இடுகைகளை பிரசுரித்து அதுபற்றி வாசகர்களின் பரவலான சிந்தனைகளை ஒன்றுதிரட்டி தர்க்கரீதியான கருத்துகளை ஏற்படுத்துவதுதான் எங்கள் நோக்கமே தவிர, குருடன் தடவிப் பார்த்து யானை போல எதையும் கண்மூடித்தனமாக நம்பும் மழுங்குகளுடன் எங்களுக்கு அலுவலில்லை.

    ஒரு தளத்திற்கு வந்தால், அதில் கூறப்படும் இடுகைகளை கவனமாகப் படித்து அவை தொடர்பாக தமது கருத்துக்களை நாகரீகமான வார்த்தைகளில் பதிவு செய்யும் பண்பு தெரியாத ஆடையணிந்த காட்டுமிராண்டிகளை நாங்கள் சட்டை செய்வதுமில்லை.

    எங்களுக்குள்ள மிக வேடிக்கையான ஆச்சரியம் என்னவென்றால், 'நற்பண்புகள் பற்றி அறியாதவர்களும் சிறந்த பண்பான வார்த்தைகளை பயன்படுத்த முடியாமல் உளறுபவர்களும் எப்படி இணையத்தளத்திலே இஸ்லாமியர்களாக இருக்க முடிகின்றது?' என்பதுதான்.

    தமிழ்-முஸ்லீம் இணையத்தளங்களிலே உங்களைப்போன்றவர்கள் இடும் சில பிறழ்வான மொழிப்பிரயோகங்களைப் பார்க்கும்போது ஆடையணியாத ஊரிலே கோவணம் கட்டியவர்கள்போல நாங்கள் வெட்கித்து நிற்கவேண்டியுள்ளது.

    'ஒரு இடத்தில் ஏதாவது நிகழ்வதாக அறிந்தால் படுக்கையறைவரை சென்று பார்ப்போம்' என்று பெரிய ஜம்பமாக எழுதியிருக்கின்றீர்களே அந்த வார்த்தைகளின் முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்டேதான் எழுதினீர்களா அல்லது நோன்பு என்பதையும் பொருட்படுத்தாமல் முதல் நாளிரவு உள்ளனுப்பிய மட்டமான சரக்கின் தாக்கத்திலே எழுதினீர்களா?

    விபச்சாரம் செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கூட கண்ணால் கண்ட பல நம்பகமான சாட்சிகளின் சாட்சியத்தோடு மட்டுமே குற்றவாளிகளெனத் தீர்மானிக்க வேண்டுமென்றும் அவர்கள் மீதுள்ள முன்கோபம் காரணமாகவோ பகை காரணமாகவோ வீண்பழிகூறக் கூடதெனவும் வலியுறுத்தியுள்ள நமது இறுதித்தூதர் முகம்மது (ஸல்) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுவோரின் சிந்தனையிலிருந்துதானா இந்த வார்த்தைகள் நண்பரே..?

    படு பிரமாதம்!

    படுக்கையறைக்குள்ளே வந்து அடுத்தவனின் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கபோவதாக கூறியிருப்பதிலே உங்களது இஸ்லாமியக் காவலர் இமேஜ் தெரியவில்லை. மாறாக உங்களது கேடுகெட்ட அற்ப குணமும் வக்கிர ஆசைகளும்தான் தெரிகின்றது. அதையெல்லாம் தீர்க்க வேண்டுமாயின் எத்தனையோ வழிகள் இருக்கின்றனவே. இதற்காக ஏன் உங்களக்கு இஸ்லாமிய காவலர் இமேஜும் ஊடகங்களுக்கான எழுத்துகளும்...?

    இதைவிட பொதுபல சேனாவில் சேரலாமே. உங்களது சூப்பர் வக்கிர குணத்திற்கு கேள்வி கேட்காமலே காவியுடையும் உதவித்தலைவர் பதவியும் உடனடியாகத் தருவார்கள்.

    சரி, ஒரு பேச்சுக்கு அமெரிக்கா பிற நாடுகளின் இரகசிய ஆவணங்களையம் இணையத்தளங்களையும் திருட்டுத்தனமாக உளவுபார்த்த கேடுகெட்ட தனத்தை எடுத்துக்கொள்வோம். அதை நீங்களும் கூட தவறு என்று விமர்சித்திருப்பீர்கள்.

    ஆனால், உங்களைப்போலவே அமெரிக்காவும் 'எங்களுக்கு எதிராக யாராவது செயற்படுகின்றார்களா என்பதை அறிந்து கொள்வதற்காகத்தான் அடுத்தவர்களின் அந்தரங்கங்களையெல்லாம் உளவுபார்த்தோம்' என்று கூறினால் அது பற்றி நீங்கள் எவ்வாறான துலங்கலைக் காண்பிப்பீர்கள்..?

    அமெரிக்கா கூறுவதை நீங்கள் சரியென்பீர்களா அல்லது தவறு என்பீர்களா? இதற்கு மட்டுமாவது உருப்படியான விடையளிக்க உங்களால் முடியுமா நண்பரே? - Omar Mukthar & Friends

    ReplyDelete
  7. ஜீஸா,



    இப்பொமுதுதான் நீங்கள் ஓரளவேனும் நிதானத்துக்கு வந்திரக்கின்றீர்கள் என்று கருதுகின்றன்.


    ஆனானப்பட்ட குர்ஆனையே தமக்குச் சாதகமாக மாற்றிய சழுமதாயத்திலிலுருந்து வந்தவர்களல்லவா நாங்கள்...?


    வெளிவந்த செய்தியை இடைச்செருகல் செய்வதற்கு இன்றிருக்கும் அல்டரா தொழினுட்ப மென்பொருட்களை வைத்து எதுவுமே செய்வீர்கள் என்பதை புரியாதவர்களா நமது வாசகர்கள்..? இந்ந பேக்குகளையெல்லாம் விட்டுவிட்டு கருத்துகளோடு மோதிப்பாருங்கன்

    படுபக்கையறையையும் அகற்குள் பாவாடை மற்றுதையும் ஒளிந்திருந்து பார்ப்பதற்கு நினைக்கும் களவாளணி நண்பரே-omar & FRIENDS

    ReplyDelete
    Replies
    1. அபூ ஜீஸா,


      நீங்களும் நானும் ஒரே மதத்தை பின்பற்றும் இரு தனிநபர்கள் என்றும் இதுரையிலே நாமிருவரும் விரோதிகளல்ல என்றும்தான் இந்த நிமிடம் வரை நான் நம்பிக் கொண்டிருக்கின்றேன்.
      இதுவரையிலே இஸ்லாத்தை எனது மதமாகவும் அதிலே பெண்களுக்கும் ஏழைகளுக்கும் அநியாயம் இழைக்கப்படும் வகையிலே இடைச்சொருகல்கள் ஏற்படடுத்தப்பட்டுள்ளதாக தனிப்பட்ட வகையிலே நான் கருதுவதும்தான் நமக்கிடையேயுள்ள வேறுபாடு என்றும் நான் நம்புகின்றேன்.உண்மை இவ்வாறு இருக்கும்போது நடந்ததை விவாதித்து கண்டறிவதைவிட்டு ஏன் நாம் விரோதிகள் போல நடந்துகொள்ள முயற்சிக்கின்றோம்?

      நான் அவ்வாறு நினைப்பதுபோல அப்படி ஒருவேளை இடைச்சொருகல் இல்லையென்றால் உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை இருக்கப்போகின்றது? யோசித்துப் பாருங்கள்?

      நானும் நீங்களும் கலிமாவை முன்மொழிந்த முஸ்லீம்கள்தானே? ஒரு இறந்து போன முஸ்லீம் அல்லாத பெண்ணின் ஜனாஸாவுக்கே எழுந்து நின்று மரியாதை செய்த முகம்மது நபி (Sal) அவர்களின் வழியைப் பின்பற்றும் வழிவந்தவர்களாகிய நீங்கள், ஒரு பெண்மகளான எனது படுக்கையறை வரை கூடவருவேன் என்று கூறியிருப்பதை சிறிது யோசித்துப் பாருங்கள்.


      நீங்கள் கருதும் இஸ்லாத்தை மற்றவர்கள் ஏற்கவேண்டும் என்ற அழிச்சாட்டியம் உங்கள் கண்ணை எவ்வளவு தூரம் மறைத்துவிட்டது பார்த்தீர்களா அபூஜீஸா? உண்மையான இஸ்லாமிய விழுமியங்களை பின்பற்றுவதிலிருந்தும் ஒரு முஸ்லீம் பெண்ணுக்குரிய கௌரவத்தை வழங்குவதிலிருந்தும் அது உங்களை எவ்வாறு தடுத்திருக்கின்றது என்பதையும்புரிந்து கொண்டீர்களா?

      ஒரு முஸ்லீம் பெண் தனக்குச் சரியென்று படுவதை சமூகத்தில் கூறுவதற்கும் எழுதுவதற்கும் எத்தனை விதமான தடைகளையெல்லாம் தாண்டி வரவேண்டும் என்பதை ஒரு சிந்திக்கத் தெரிந்த சிறந்த ஆண்மகளான ஏன் நீங்கள் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறீர்கள்...?

      இத்தனை நாளாய் இருந்துவிட்டு நான் எனது பேட்டியை வலிந்து வெளியிட்டதற்கு என்ன காரணம் தெரியுமா? என்னைப்பற்றி விளம்பரமோ ஜம்பமோ அடிப்பதற்கல்ல. எனது கருத்துக்களால் வெளியுலகத்திலே வீணாக பரவும் தவறான அபிப்பிராயங்களை மாற்றுவதற்காகத்தான். அந்தப் புகைப்பட விடயத்தை தவிர வேறு எதுவும் நான் உண்மைக்கு மாற்றமாக கூறவில்லை என்றுதான் நினைக்கின்றேன். அதைக்கூட இப்போது ஒத்துக்கொண்டுவிட வேண்டிய அவசியமில்லை. எனினும் நீங்கள் இவ்வளவு தூரம் சிரத்தை எடுத்திருப்பதற்கு சிறுமதிப்பையாவது வழங்க வேண்டியே எனது உடன்பிறந்த சகோதரர்களின் எதிர்ப்பையும் மீறித் தெரிவிக்கின்றேன்.
      எனது ப்ரொபைலை ஆரம்பித்தபோது சரியாக எனது தோற்றத்தை ஒத்த ஒரு பெண்ணிண் படத்தைக் கொண்டு வந்தவர் எனது மூத்த சகோதரர். என்னுடைய படமும் சகோதரர் கொண்டு வந்த படமும் மிகச்சிறிய வித்தியாசங்களையே கொண்டிருந்தன என்பதுதான் உண்மை. இதை எனது தோழிகளும் கூட கண்டறியவில்லை என்பதே உண்மை. நீங்கள் நம்பினாலும் நம்பலாம், நம்பாமல் விட்டாலும் விடலாம். இதனால் எனக்கு எதுவித மாற்றங்களும் உண்டாகப்போவதில்லை.

      பள்ளி மாணவியான எனக்கு அந்தப்படத்தில் இருந்த பெண் யாரென்றால்லாம் அப்போது தெரியாது. இப்போது நான் உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் -அது யாருடைய படம் என்பதை தெரிவித்தமைக்காக!


      என்னைப் பொறுத்தவரை நான் ஒரு பெண் என்பதால் வெளியுலகுக்குத் தெரியாது இருக்க வேண்டும் என்பதிலேதான் கவனமாக இருந்தேன். இப்போதும் இருக்கின்றேன். அதற்காக நான் ஒன்றும் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருக்கவில்லை. கெடுதி விiளைவிப்பதற்காக ஒளிந்து வாழவில்லை. நமது மார்க்கத்தை நம்மிலே பலர் சுயநலத்திற்காகவும் பகட்டுக்காகவும் பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் உண்மைக்கு மாறாக ஆன்மீக மாயையளிலே மக்களை வழிநடாத்துவதையும் சுட்டிக்காண்பிக்கவே முயற்சிக்கின்றேன்.


      தவிர, உயர்வான கொள்கைகளுக்காக ஒளிந்து வாழ்வது ஒன்றும் தவறுமில்லை. நமது முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதற்கொண்டு கார்ல் மாக்ஸ், உமர் முக்தார், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ, ஆயத்துல்லாஹ் கொமேனி நெல்சன் மண்டேலோவரை ஒளிந்து வாழவில்லையா என்ன, அதற்காக அவர்களெல்லாம் கோழைகளா?


      சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். இதற்குப் பிறகும் நீங்கள் என்மீது ஒரு பெண் என்பதற்காக தனிப்பட்ட அவதூறு செலுத்தினால் நான் அதை பொருட்படுத்துவதாக இல்லை.

      -Jesslya Jessly

      Delete
    2. இந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டங்கள் எல்லாம் "உமர் முக்தார்" என்ற போலி பெயரில் வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்குத்தான். த‌ன்னை ஒரு பெண்ணாக(?) அடையாள‌ப‌டுத்தி கொள்ளும் உங்க‌ளுக்க‌ல்ல‌.

      த‌வ‌றான‌ வார்த்தை பிர‌யோக‌ங்க‌ளை ஆர‌ம்பித்த‌வ‌ர்க‌ள், வாரி இறைத்திருப்ப‌வ‌ர்க‌ள் யாரென்ப‌தை பின்னூட்ட‌ங்க‌ளை பார்ப்ப‌வ‌ர்க‌ள் ந‌ன்குண‌ர்ந்து கொள்வார்க‌ள்.


      "jesslya jessly" என்ற‌ பெய‌ரில் உள்ள‌து உண்மையில் ஒரு பெண்ணா அல்ல‌து திரைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு (ஆண்)கூட்ட‌மா என்ப‌தை உங்க‌ள் த‌ள‌த்தில் உள்ள ஒன்றுக்கு ஒன்று முர‌ணான‌ கூற்றுக‌ளையும் பொய்க‌ளையும் வாசிக்கும் வாச‌க‌ர்க‌ளே தீர்மானிக்க‌ட்டும்.

      ஏதோ என‌க்கு ம‌திப்ப‌ளிப்ப‌த‌ற்காக‌ உண்மையை ஒத்துக் கொள்வ‌தாக‌ எழுதியிருக்கிறீர்க‌ளே இதை பார்த்து உங்க‌ளை ம‌தித்து உங்க‌ள் த‌ள‌த்திற்கு வ‌ரும் வாச‌க‌ர்க‌ள் வெட்க‌ ப‌ட‌ட்டும். யாரோ ஒருவ‌ரின் ப‌ட‌த்தை உங்க‌ள் ப‌ட‌மாக‌ பொய் சொல்லும் போதே எத்த‌னை வ‌கையாக‌ build-up கொடுத்த‌ நீங்க‌ள் ம‌ற்ற‌ விட‌ய‌ங்க‌ளில் எவ்வ‌ள‌வு நேர்மையாக‌ இருப்பீர்க‌ள் என்ப‌தை உங்க‌ள் வாச‌க‌ர்க‌ள் புரிந்து கொள்ள‌ட்டும்.

      இஸ்லாத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் கம்யூனிஷ வாதிகளின் வாதங்களை அப்படியே கிளிப்பில்லை பாடம் சொல்லலாம் முஸ்லிம் பெய‌ர்க‌ளில் போலியாக‌ உலாவ‌ருவ‌தை தான் த‌வ‌று என்கிறேன்.

      பெண் என்ப‌தால் நீங்க‌ள் ஒழிந்து வாழ‌ நினைப்ப‌து நியாய‌மாக‌ இருந்தாலும் "அல்ட‌ரா தொழில்நுட்பம்" ப‌ற்றி பேசிய‌ ஆசாமிக‌ளாவ‌து வெளியே வ‌ர‌லாமே!

      ச‌த்திய‌ம் என்ப‌து ஒன்றுதான். அதை ந‌டுநிலையாக‌ நேர்மையாக‌ தேடி ஆராய்ப‌வ‌ர்க‌ள் அடைந்து கொள்வார்க‌ள்.

      நீங்க‌ள் எல்லோரும் ச‌த்திய‌த்தை தேடி அதை அடைய‌ நேர்மையாக‌ உழைப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தால் அந்த‌ வ‌ழியை இறைவ‌ன் உங்க‌ளுக்கு இல‌குவாக்குவானாக‌!

      அல்ல‌து இஸ்லாத்தை பொய்யாக்க‌ வேண்டும் இடைச்செறுக‌லுக்குட்ப‌ட்ட‌து என்று பிர‌ச்சார‌ம் செய்ய‌ வேண்டும் என்ற‌ முன் முடிவோடு செய‌ற்ப‌டுப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தால்..

      வானத்தை பார்த்து உமிழ்ப‌வ‌ர்க‌ளின் நிலையே உங்க‌ளுக்கு ஏற்ப‌டும்..

      Delete
  8. அபூ ஜீஸா,

    'வானத்தைப் பார்த்து உமிழ்பவர்கள்' என்ற பதமே கூட நாங்கள் இந்த விவாதத்தில் உங்களுக்குப் பயன்படுத்தியதுதான். ஒரேவிடயத்தை நான் ஏற்கனவே பல தடவை கூறியிருந்தும் ஏன் அதையே புரியாதது போல மீண்டும் மீண்டும் கேட்கின்றீர்கள்.

    ஜெஸ்லியாவின் தளமாக ஆரம்பித்தது பின்னர் ஒத்த கருத்துடைய நண்பர்களின் கூட்டிணைவுடன் செயற்படுவதில் ஒன்றும் தப்பில்லையே. படம் கூட மாணவியாக இருந்தபோது அப்படியே என்னுடைய படத்தை முற்றிலும் ஒத்ததுதான் என்பதைக்கூட ஏற்றுக்கொண்டுள்ளேன். அதை நான் மறுத்திருந்தால் கூட உங்களால் என்ன செய்ய முடிந்திருக்கும். ஏசிவிட்டு நடையைக் கட்டியிருப்பீர்கள் அவ்வளவுதானே?

    அந்த ஒரு காரணத்தை வைத்து என்னுடையதும் மற்றையவர்களினுடையதும் கருத்துக்களை மலினப்படுத்துவதற்கு நினைக்கும் நீங்கள்தான் மன்னிக்கும் மனம் படைத்திராத ஒரு மனிதர்.

    ஒருபடத்தை மட்டும் வைத்து நாங்கள் கூறும் கருத்தை மறுப்பதாயின் ஒரு குழந்தையைக் கொஞ்சுகின்ற உங்கள் படத்தைக்கூட நாங்கள் எத்தனை விதமாக மலினப்படுத்தி உங்கள் கருத்துக்களை கொச்சை முடியும்.?

    ஜெஸ்லியா ஒருபோதும் அநியாயத்திற்குத் துணைநிற்பவள் கிடையாது. எனது தளத்தில் இயங்குபவர்கள் அனைவரும் இஸ்லாத்தை, அவற்றின் ஆன்மீக மௌட்டீகத்திலிருந்தும் மாயைகளிலிருந்தும் விடுவிப்பதற்கு தங்களால் இயன்றதை புரிய விரும்பும் இஸ்லாமிய மனிதர்கள்தான். (உ-ம்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணம் புரிந்த 'புராக்' எனும் வாகனத்தை பெண்ணின் தலையுடனான குதிரை வடிவ மிருகம் என்ற நமது முன்னோர்களை நம்பியதையெல்லாம் நினைத்துப் பாருங்கள்)

    நீங்கள்தான் ஏதேதோ பாதிப்பில் கம்யுனிஸம், வாந்தி என்றெல்லாம் பிதற்றுகின்றீர்கள். சொல்லப்போனால் நாம் அனைவரும் ஸேம் ஸைட் கோல்தான் போடுகின்றோம்.

    இனிமேலாவது பழைய பல்லவிகளை விட்டொழித்து சொல்லப்படும் கருத்துகளிலே நின்று விவாதியுங்கள் அபூ ஜீஸா!

    ReplyDelete
  9. .'வானத்தைப் பார்த்து உமிழ்பவர்கள்' என்ற பதமே கூட நாங்கள் இந்த விவாதத்தில் உங்களுக்குப் பயன்படுத்தியதுதான்
    அப்படியா?
    பொய் சொல்லுவது மட்டுமில்லாமல் அதற்கு பெருமை வேறு!!!
    என் வலைத்தளத்தில் நான் எழுதிய ஆக்கத்தின் இணைப்புடனான எனது பின்னூட்டத்தை நிராகரித்து விட்டு அதையே காப்பி அடித்து உமர் முக்தார் என்ற zerox machine இட்ட பின்னூட்டம் தான் உங்கள் பின்னூட்டம்.

    உங்கள் பொய் புரட்டுக்களுக்கு அளவே இல்லையா ???

    ReplyDelete
    Replies
    1. அபூ ஜீஸா,

      உங்கள் விடயத்திலே ஒரு விடயம் மட்டும் இல்லை.. இல்லை மூன்று விடயங்கள் எங்களுக்கு மிக நன்றாகத் தெரிகின்றது.

      1. உங்களுக்கு மண்டையினுள்ளே மூளைக்குப் பதிலாக வெறும் ரெஜிபோம்தான் இருக்கின்றது.

      2. ரெஜிபோம் இருந்தாலும் கூட உங்களிடம் நேரடியாக முன்வைக்கப்படும் சவாலான விடயங்களை கவனமாகத் தவிர்த்துக் கொள்வதற்காக வேறு ஒருவிடயத்தைப் பிடித்துக்கொண்டு தொங்குகின்றீர்கள்.

      (உ-ம்): யுரிகாகரின் வினா, புராக் வாகனம் போன்ற விடயங்களையெல்லாம் தொடுவதேயில்லை. அதற்குப் பதிலாக 'வானத்தைப் பார்த்து உமிழ்வதிலேயே' நிற்கின்றீர்கள்.


      3. கருத்துகளை மறுபரிசீலனை செய்வதற்கு எந்த நிலையிலும் கூடத் தயாராக இருக்கும் வாசகர்களே எங்களுக்குப் போதுமானவர்கள் என்பதால் குருட்டு நம்பிக்கையுடன் ஆயிரம் உட்பிரிவுகளுடனும் குளறுபடிகளுடனும் ஒருவருக்கொருவர் அடிதடிபட்டுக்கொண்டு வாழும் உங்களைப்போன்ற முட்டாள்களை இனிமேல் நாங்கள் பொருட்படுத்துவதாக இல்லை.

      உங்களுக்கு எட்டிப்பார்க்கவும் ஆசைதீர்க்கவும் இன்னும் நிறைய குளியலறைகளும் படுக்கையறைகளும் மீதமிருக்க வாய்ப்புகளுள்ளன.


      கருத்துகளால் வெல்ல முடியாத தோல்வியை அடையும்போது, வன்முறையிலும் அவதூறிலும் இறங்கும் மனசாட்சியற்ற உங்கள் குணங்களுக்கு ஆதரவு தர, காவியுடை பொதுபலசேனவுக்குப் போல ஆயிரம் முட்டாள்கள் உங்களுக்கும் இருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து வந்து உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்.


      எல்லோருக்கும் பொதுவான இறைவனின் உண்மையான தீர்ப்பு நாளில் மட்டுமே உண்மையறியப்போகும் உங்களுக்காக அனுதாபத்தை மட்டுமே விட்டு வைத்து விடைபெறுகின்றோம்.
      Goodbye!

      இதுவரை 'அருமையான' பல கருத்துக்கள் கூறி சிறகுகளுக்கு பங்களிப்புச் செய்தமைக்கு மிக்க நன்றி!

      -Team Of Sirahukal

      Delete