'எப்படியிருந்த நான், இப்படியாயிட்டேன்!'
அவர் இன்னும் ஓய்வுபெறாத ஒரு முன்னாள் பாடசாலை அதிபர். முன்னாள் அதிபர் என்றால் 'இன்னாளிலே என்ன செய்து கொண்டிக்கின்றார்...?' என்ற வினா எழுமல்லவா...?
அதற்குரிய பதிலைக்கூறு முன்னர் இந்த விடயத்தை முழுமையாகப்படியுங்கள். சுவாரசியமாக இருக்கும்.
இது நமது பாடல்பெற்ற திருத்தலமான கோணேசர் பூமியில் நிகழ்ந்த / நிகழும் கதை.
அவர் தலைமையாசிரியராக கடமையாற்றிய பாடசாலை நகரிலிருந்து கூடிப்போனால் 4 கிலோமீற்றர் சுற்றளவுக்குள்ளே புகையிரதப்பாதையை ஒட்டிய பல்லின மக்களும் ஒன்றாக வாழும் ஒருபிரதேசத்தில் இருக்கின்றது.
எனினும் அந்தப்பாடசாலை ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் பெரும்பான்மையாக கற்கும் ஒரு தமிழ் மொழிமூலப்பாடசாலை என்பதால் அந்த இனத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக அறிந்துகொள்ளவும் பிற தேவைகளுக்குமாக அடிக்கடி பாடசாலைக்குச் சென்று வரவேண்டியிருந்தது. பொதுவாக பெற்றோர்கள் ஆசிரியர்களைச் சந்திக்க விரும்புவது என்பது இயல்பான ஒன்றுதானே?
அவ்வாறு பாடசாலைக்குள் வருகின்ற அப்பாவிப் பெற்றோர்களின் மீது நமது அதிபர் எவ்வாறு நடந்து கொள்வார் தெரியுமா?
'இஞ்சவா? எங்க வந்தா...? இப்ப சந்திக்கேலாது போ..! போ...!'
இப்படித்தான் 'மரியாதையாக' இருக்கும் நமது தலைமையாசிரியரின் பெற்றோருக்குரிய பொதுவான அணுகுமுறை.
இவர் தனது ஆசிரியர்களையும் கூட இவ்வாறுதான் நடாத்துவார் என்று சில தகவல்கள் உண்டு. வெளிப்படையாகப் பார்க்கும் யாருக்கும் இவர் ஒரு கண்டிப்பும் நிர்வாக இறுக்கமுமுள்ள திறமையான அதிபர் என்ற ஒரு மாயத்தோற்றம் முதலில் ஏற்படுவது இயல்பானதுதானே. ஆனால் உள்ளே புகுந்து உற்றுக்கவனித்தால்தான் இவர் ஒரு வெறும் வெற்றுவேட்டு என்பது புலனாகும்.
இவர் தன்னைச்சுற்றிலும் வைத்திருந்தது யாரைத் தெரியுமா?
கற்பித்தலைவிட மாணவர்களை ஏய்த்துச் சமாளிக்கவும் சலுகைகளுக்காக மேலதிகாரிகளை வருடிப் பிழைக்கவும் கூடிய பெண் ஆசிரியர் குழாம் ஒன்றைத்தான் வைத்திருந்தார். அதேவேளை தனக்கு ஒத்துவராத திறமையான ஆசிரியைகளை வருத்தி உழைப்பை உறிஞ்சிக் கொள்வாராம். ஆனால் அதனால் விளையும் பலாபலன்களை தானும் தன்னைச்சுற்றி வருடிக்கொண்டிருக்கும் ஏமாற்றுக்காரிகளான ஆசிரியைகளும் பெறுமாறு பார்த்துக் கொள்வாராம்.
எங்கு செல்வதென்றாலும் ஒரு துருப்பிடித்த பழைய துவிச்சக்கர (சைக்கிள்) வண்டியில்தான் அவரது பயணமிருக்கும். அந்தச் சைக்கிளைப்போலவேதான் அவரது சிந்தனையுமிருக்கும்
இவரது நோக்கம் பாடசாலை மாணவர்களின் கல்வியோ அல்லது சமூக அபிவிருத்தியோ அன்றி தனது மேலதிகாரிகளைத் திருப்திப் படுத்திக்கொண்டு தனது சுய முன்னேற்றங்களைப் பெற்றுக் கொள்வதாக மட்டுமே இருந்து வந்தது.
அத்துடன் பாடசாலைக்கு ஆண் ஆசிரியர்களை நியமிக்காமல் பார்த்துக் கொள்வாராம். தவறிப்போய் நியமிக்கப்பட்டாலும் அவர்களோடு அநாவசிய முரண்பாடுகளை ஏற்படுத்தி அவர்களாகவே இடமாற்றம் பெற்று ஓடிவிடச் செய்து விடுவாராம்.
அப்படியும் விடாப்பிடியாக அவர்கள் இருந்துவிட்டால் போதும். சினிமா தாதாவைப்போல தனது அல்லக்கைகளான அடிவருடிப் பெண் ஆசிரியர்களை வைத்து குறிப்பிட்ட ஆசிரியர் மீது ஏதாவது பாலியல் குற்றச்சாட்டுக்களைத் திணித்துத் தொடுத்து ஓட்டம் காட்டி விடுவாராம். இவ்வாறு அவர் தனது காலத்திலே அப்பாடசாலைக்குக்கு கிடைத்த எத்தனையோ திறமை வாய்ந்த ஆண் ஆசிரியர்களையெல்லாம் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்குப் பயன்படுத்தாமல் விரட்டி வீணடித்துள்ளாராம்.
ஒர் அதிபராக, தனது பாடசாலையின் வீழ்ச்சியைப் பற்றி அக்கறை கொண்டதில்லை. தனது அடிவருடி ஆசிரியைகளின் மோசடிக் கற்பித்தல்களால் மாணவர்களின் ஆளுமை விருத்தி தேர்ச்சிகள், அடைவுகள் வீழ்ச்சியடைந்து வந்தது பற்றிய உண்மையான கவலைகளெல்லாம் அவருக்கு இருக்கவில்லை. ஆனால் எல்லாமே சரியாக நிகழ்ந்து கொண்டிருப்பதாக புள்ளிவிபரங்களை வெறும் வெள்ளைக் காகிதங்களிலும் பைல்களிலும் மட்டும் டிப்டொப்பாக வைத்திருந்து கல்வி அதிகாரிகள் வரும்போது எடுத்துப் போடுவாராம்.
கல்வியில் ஏற்கனவே பின்தங்கிக்கிடக்கும் தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகத்தை சிறிதளவு கூட முன்னேறிவிடாமல் எவ்வாறு மேலும் மோசமாக்கலாம் என்று மண்டைகளைக் குடைந்து திட்டங்கள் தீட்டித் தந்திரமாகச் செயல்படுத்துவதிலே கில்லாடிகள்தான் நமது கோணேசர் பூமியின் கல்வி அலுவலக அதிகாரிகள். அவர்களுக்கு இப்படி ஒருவர் கிடைத்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இவரது ஏமாற்றுகளால் உள்ளுர மகிழ்ந்து, வெளிப்படையாக ஓஹோவெனப் பாராட்டிவிட்டுச் சென்றுவிடுவார்களாம்.
ஆனால்...
இந்த உலகில் அனைத்துச் சர்வாதிகாரங்களும் ஏமாற்றுகளும் ஒருநாள் முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும். இவரது இப்படியான நடவடிக்கைகள் மெல்லமெல்ல ஊருக்குள்ளே தெரிய வரத்தொடங்கியதும் பெற்றோர்கள் கொதித்தெழுந்தார்கள். மக்களை மதிக்காத அதிபருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தை சமாளித்து அதிபரைக் காப்பாற்றுவதற்கு கல்வி அதிகாரிகளும் அடிவருடி ஆசிரியைகளும் பகீரதப்பிரயத்தனம் செய்தார்கள். ஆனால் பெற்றோர்கள் ஒரேயடியா வேண்டாமென்று பிடிவாதமாக அதிபரைத் துரத்தியடித்து அனுப்பிவிட்டார்கள். தனத அடிவருடிகளையும் சேர்த்துக்கொண்டு வெருண்டோடிய சர்வாதிகார அதிபருக்கு அடைக்கலம் எங்கு தெரியுமா? வேறு எங்கே...?
சாட்சாத் நமது கோணேசர்பூமி கல்வி அலுவலகம்தான்...!
அங்கே ஒரு ப்ளாஸ்டிக் கதிரையிலே குந்திக்கொண்டு எடுபிடி வேலைசெய்து கொண்டிருக்கின்றாராம்.
-Jesslya Jessly
பிற்குறிப்பு:
முன்பு அதிபர் கதிரையில் குந்தியிருந்து பாடசாலையையும் சீரழித்த நமது அதிபர் தற்போது கோணேசர்பூமி கல்வி அலுவலகத்தில் ஒரு ப்ளாஸ்டிக் கதிரையிலே குந்தியிருந்து கொண்டு தான் துரத்தியடிக்கப்பட்டதை நினைத்து உள்ளுக்குள் புலம்பித் தீர்க்கின்றாராம். அத்துடன் தனது முன்னாள் பாடசாலையை, அங்கே மிஞ்சிக்கிடக்கும் அடிவருடியொன்றை பினாமியாக வைத்து மறைமுகமாக நடாத்திக் கொண்டிருக்கின்றாராம்.
No comments:
Post a Comment