'நல்ல பேனா இருந்தா ஒன்று தாங்க!' என்று கடைக்காரியிடம் காசை நீட்டினார் ஒருவர்.
'எப்படிப் பேனா வேணும்..?'
'விலையுயர்ந்த அழகான நல்ல பேனாவாகவே தாருங்க!'
கடைக்காரி ஒரு பேனாவை எடுத்து வைத்தாள்.
'இது நல்லதா!'
'ஆமாம். இதில நிறைய வசதிகள் இருக்கு தெரியுமா.. இதுல மணிக்கூடு இருக்கு...அலாரம் இருக்கு..திசைகாட்டி இருக்கு!'
'அப்படியா! ஆச்சரியமாயிருக்கே' என்றார் வாடிக்கையாளர்
'அது மட்டுமில்ல... இதில இன்னும் நிறைய இருக்கு!'
'ஐயோ! வேற என்னவெல்லாம் இருக்கு...?'
'கல்குலேட்டர் இருக்கு..ஸ்டெப்லர் இருக்கு..வெப்பமானி இருக்கு..கெமரா இருக்கு..கீழே விழுந்தா உடையாது.. இவ்வளவு ஏன் நெருப்பில கூட எரியாது தெரியுமா?'
என்று மூச்சு விடாமல் ஒப்பித்துக் கொண்டிருந்த கடைக்காரியை நிறுத்தி, வெகு அமைதியாகக் கேட்டார் அந்த வாடிக்கையாளர்.
'அதெல்லாம் சரியம்மா, இந்தப் பேனா எழுதுமா?'
***
'பாடத்திட்டம் இருக்கா?'
'ஆம் ஸேர்!'
' நல்லது.. பாடக்குறிப்புகள் இருக்கா?'
'ஆம், தினசரி எழுதி வைத்திருக்கிறேன் ஸேர்!'
'வெரிகுட்! கற்பித்தல் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா?'
'ஆம் எல்லாம் ஒன்றும் விடாமல் செய்யப்பட்டுள்ளது ஸேர்!'
'பாடப்பதிவுக் கொப்பிகள் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனவா?'
'ஆமாம்! இந்தாருக்கு பாருங்க, ஸேர்!'
'அப்படியா?! வரவு இடாப்பு வேலைகள் முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்டுள்ளதா?'
'ஆம், ஸேர்!'
' ஆச்சரிமாயிருக்கே... இந்தப்... புறக்கிருத்திய வேலைகளெல்லாம்..?'
'அதெல்லாம் டிப்டொப்பாக செய்யப்பட்டிருக்கு ஸேர்! அதுமட்டுமில்ல...'
'........@#...*^+#....! ' (தடால்!)
'ஆ! ஐயோ...ஸேரைப் புடிங்க! டேய் யாராவது ஓடிப்போய் தண்ணி எடுத்திட்டு வாங்க... ! ஸேர் தலைசுத்தி மயங்கி விழுந்திட்டாருடா'
முகத்தில் தண்ணீர் விசிறியடிக்கப்பட்டு மயக்கம் தெளிவிக்கப்பட்டது.
***
இந்த உரையாடலை வாசித்தால் என்ன தோன்றுகின்றது உங்களுக்கு?
அதே உணர்வோடு பாடசாலை ஒன்றில் நடைபெறும் கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்பான இந்த கல்வியதிகாரி-ஆசிரியர் உரையாடலையும் பாருங்கள்.

மயக்கம் தெளிந்து கண்ணை விழித்ததும் அந்தக் கல்வியதிகாரி கேட்ட முதல் கேள்வி:
'அதெல்லாம் சரி, பிள்ளைகளுக்குப் படிப்பிக்கிறீங்களா?'
-மூதூர் மொகமட் ராபி
No comments:
Post a Comment