Sunday, January 20, 2013

தலையிடிக்கு தலையணை மாற்றம் ஒரு தீர்வாகுமா?பெண்களைப் பணிப்பெண்ணாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கோரி  மாபெரும் கையெழுத்து வேட்டை மூதூரில் நடைபெற்று வருகின்றது என்று அங்கிருந்து வரும் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மூதூர் பீஸ் ஹோம் நிறுவனத்தோடு இணைந்து மஜ்லிஸ் அஸ்ஸுறா உலமா சபை, கதீப்மார் நலன்புரிச் சங்கம் மற்றும் தடயம் சமூக அபிவிருத்தி மையம் ஆகியன ஒன்றிணைந்து பெண்கள் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாகச் செல்வதை தடைசெய்யுமாறு கோரி பத்தாயிரம் பொதுமக்களின் கையெழுத்துக்களைத் திரட்டி அரசாங்கத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்பத் தீர்மானித்துள்ளனர்.

(தகவல்: மூதூர் முறாசில்)
 
நண்பர்களே,
 
மேலேயுள்ள செய்தியை வெளிப்படையாகப் பார்த்தால் ஏதோ பெரிய சமூகத்தைக் காக்கும் நடவடிக்கைபோலத் தோன்றுகின்றதல்லவா? ஆனால் இதற்கு இன்னொரு முகமும் உண்டு நண்பர்களே. கூறுகின்றேன் பொறுமையாகக் கேளுங்கள்.

 

நமது சமூகத்திலுள்ள பெண்கள் யாரும் உல்லாச வாழ்வுக்கு ஆசைப்பட்டு கடல்கடப்பதில்லை. ஒரு தாய் அல்லது இளம்பெண் எப்போதுமே தனது கணவன் குழந்தைகள் என்றும்  தாய் தகப்பன் உற்றார் உறவினர் என்றும் பாசப்பிணைப்புக்குள்தான் வாழ நினைப்பாள். அதுதான் அவளுக்குரிய உயரிய பாதுகாப்பையும் வழங்கமுடியும். அத்தகைய மனோபாவம் கொண்டவள் மொழிபுரியாத கலாசாரம் புரியாத அந்நிய நாடொன்றுக்குப் போக நினைக்கின்றாள் என்றாள் அங்கனம் அவளை நிர்ப்பந்தம் புரியும் காரணிகள் யாவை?

 

வேலையில்லா திண்டாட்டம், சீதனம் சேர்க்கும் தேவை, கணவரின் பொறுப்பின்மை, நோய் முதலிய இயலாமை, சோம்பேறித்தனம் பிள்ளைகளின் பசி, வறுமை அயலவரின் ஏளனம், அலட்சியம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றைவிட காசு பணத்துக்கு சமூகம் தரும் அபரிமித மதிப்பு,செல்வாக்கு பணத்தால் எதையும் வாங்கலாம் மறைக்கலாம் என்று காட்டித்தருகின்ற சமூகப் பெரிய மனிதர்களின் அற்ப நடவடிக்கைகள்....

 

சுற்றியுள்ள சூழல் இத்தனை 'ஆரோக்கியமாக' இருக்கும்போது ஒரு பெண் என்ன முடிவுக்கு வர முடியும்?

 

நீங்கள் தாடிகளையும் தொப்பிகளையும் வைத்துக்கொண்டும் குர்தாக்களை அணிந்துகொண்டும் வெறும் ஹதீதுகள் மட்டும் கூறிக்கொண்டிருந்தால் இந்த சமூக அவலங்களை ஒழித்துவிட முடியுமா? இந்த நிலைமைகளை ஒழிக்க குறைந்தபட்சம் கட்டுப்படுததுவதற்காகவாவது எதுவித சமூகநலத் திட்டமும் இல்லாது வெறும் கையெழுத்து வேட்டை நடத்துவதால் என்ன மாற்றம்தான் வந்துவிடும்?

 

தலையிடிக்கு தலையணைகளை மாற்றுவதால் மட்டும் பயனில்லை!
 
- Jesslya Jessly

3 comments:

 1. this type of things not happening in every part of srilanka...

  in centarl province ..in our muslim area only we can count 2 or 3 women s going to abroad...
  (we also have same problems that u have..)

  first give a faith in Allah...then act...

  ReplyDelete

 2. Yes Ofcourse, ஆனால் வயிற்றுப்பசி இருக்கின்றதே...? அதற்கு முன்பு எத்தனை புனிதமான விடயங்களும் பல்லிளித்துவிடும் அன்பரே!

  ReplyDelete
 3. கண்களுக்கு முன்னால் அக்கிரமங்களும் , அபத்தங்களும் வந்து போனாலும் யாரதை தட்டிக் கேட்பதென்று ஒரு பக்கம் அச்சமும் , மறுபக்கம் அலசியததோடும் கடந்து போகிறோம் .

  அதிகாரம் மட்டுமே செயலாகும் பட்சத்தில் , வேடிக்கை பார்க்க மட்டுமே பழகி விட்டோம்.

  ReplyDelete