Wednesday, December 25, 2013

உலகம் போற்றும் உத்தமபுத்திரன்!







 




ஞ்சகம் நெஞ்சிலே
மிஞ்சியவன் வதனம்போல்
கறுத்துக் கிடந்தது - அன்றைய
பெத்தலகேம் நகரத்து வானம்!
 

000
 
பட்டறைத்தீயிலே
பழுக்கக் காய்ச்சிய
வெட்டிரும்புத் துண்டுபோல
கீழ்வானின் விளிம்பில்
ஒளிவீசி உயரத்தோன்றியது
ஓர் விடிவெள்ளி!
 

000
 
 
சிப்பியின் வயிற்றிலே சிறுமுத்தும்
சேற்றுக் குளத்திலே செந்தாமரையும்
ஏழைகளின் வீடுகளில்
எழில்மங்கையர் கூட்டமும்
மாட்டுத்தொழுவத்திலே
உலகம் போற்றும் உத்தமபாலனும்
உதிப்பதுதான்
இவ்வுலகில் நியதியோ?
 

000
 

காட்டுவழியிலே கட்டின்றி அலையும்
மேய்ச்சல் மந்தைக்கோர் மேய்ப்பன் போல
கூச்சல் குழப்பம் கொலைகள் புரியும்
கொள்கையில்லா மாந்தர் மறைந்திட
மீண்டும் வந்துபிறவாயோ
இரக்கம் நிறைந்த இறைமைந்தனே!
 
000
 
 
 
 
 
 
 

உலகம் முழுவதும் வாழும்
 
கத்தோலிக்க நண்பர்களுக்கு
 
உற்சாகமான
 
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
 
 
-சிறகுகள்
 
 

No comments:

Post a Comment