Wednesday, October 31, 2012

மூதூர் மாணவி பாத்திமா பாஃரா ரோஷன் கவிதைப்போட்டியிலே வெற்றி




 
தி/ மூதூர் அந்நஹார் மகளிர் கல்லூரி யைச் சேர்ந்த தரம் 7   மாணவி செல்வி. பாத்திமா பாஃரா ரோஷன் சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியிலே மூன்றாம் இடத்தை வெற்றியீட்டியுள்ளார். இவர் திருகோணமலையில் தொழில்புரியும் மூதூர் வர்த்தகரான ஜனாப். முஹம்மது பாயிஸ் - பரீன் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும் மறைந்த அதிபர் எம்.எம்.கே. முஹம்மது அவர்களின் பேத்தியுமாவார்.
 
இவருக்குரிய பரிசு இன்றைய 30.10.2012 தினம் சம்மாந்துறையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகள் தின விழா விலே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். கவிதைப்போட்டியிலே முதலாம் இரண்டாம் இடங்களை கிண்ணியா கல்வி வலயத்தைச் சேர்ந்த இரு பாடசாலை மாணவிகள் பெற்றிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 
பாத்திமா பாஃரா மற்றும் வெற்றி பெற்ற மாணவிகள் அனைவரையும் பாராட்டுகின்றோம்
 
- 'Mutur' Mohammed Rafi

3 comments:

  1. 'சகாராவின் பக்கங்கள்' என்ற பொருண்மையில், சில காலமாக வலைச்சரத்தில் எழுதி வருகிறேன்.

    http://vennilakavithaigal.blogspot.in/
    சகாராவுக்கான முகவரி.

    ReplyDelete
  2. பின் நவீனத்துவ சாயலில் ஒரே கருத்தியலை மையம் கொண்டு சகாராவின் பக்கங்கள் என்று எழுதியிருக்கிறேன்.

    வாசித்து விட்டு பகிர்ந்து கொள்ளுங்கள் ....

    அது என் எழுத்துக்கு உரமிடும் ...

    - சந்திரபால் ....

    ReplyDelete
  3. Mr. Chandrapaul thanks for your comments but your comments are not relavant to the above post. What's the purpose of your comments? Could you pl.explain me.

    ReplyDelete