Saturday, April 12, 2014

6 year old girl saved from forced marriage


Naghma

                    Sometimes, love isn't enough to save us.
 
 
Do you remember what you did when you were six years old? You probably rode a bike, went to elementary school, and had play dates with you neighbor. You were secure in the love of your family, and knew that no matter what, they would have your best interests at heart. Unfortunately, Naghma did not have the same luxuries. At six years old, the Afghan girl's father, Taj Mohammad, married her off to cover his debt.
 
The family of 11, including 9 children, lived in a refugee camp on the outskirts of Kabul. However, Taj struggled to make ends meet, causing the family to suffer, especially when the brutal winter arrived. When Taj's wife was hospitalized and his 3-year-old son froze to death, he borrowed $2,500 to pay for his wife's medical expenses.
 
When he couldn't repay his debt, he agreed to let his daughter marry the moneylender's son, who was 19 years old at the time. "It was a difficult decision," Taj Mohammad said after the fact. "Everyone gives away their child but to give Naghma away like that was just so hard." And yet, he did it.
When human rights groups found out they immediately brought in U.S. attorney Kimberley Motley to get Naghma out of the marriage. Taj is overjoyed to have his little girl back and has high hopes for her future. "I'd like to make sure she gets an education and becomes successful." The National Institute of Music, an Afghan school for orphans and underprivileged children, is his first choice for his daughter. The pair, along Taj's son Wakhil, recently toured the school, and have begun to hope for the future of their family.
 
Thanks: MSN

Tuesday, April 8, 2014

அலுமினியப்பறவை MH 370










'ஹலோ கேப்டன்.. திஸ் ஈஸ் ஃப்ரம் க்லாலம்பூர் கன்ட்ரோல் டவர்!'


'யெஸ்.. லவ்ட் என்ட் க்ளியர். இட்ஸ் எம். எச். த்ரீ செவன் ஸீரோ. கேப்டன் ஸ்பீக்கிங்..!' பதிலளித்தபடி கடிகாரத்தைப் பார்த்தார் தலைமை விமானி ஷஹாரி அஹமட் ஷா. நேரம் ஜீஎம்டீ 17:05 அருகிலிருந்த அவருடைய உதவி விமானி ஃபாரிக் அபு ஹமீட் தனது ஆசனத்தில் அமர்ந்தபடி லேசாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். பாவம், காற்றைக் கிழித்து அசுர வேகத்தில் விரையும் விமானத்தின் முன்புறம் இருந்தபடி எவ்வளவு நேரம்தான் இருண்ட வானத்தையும் நட்சத்திரப் புள்ளிகளையும் வெட்டியாய் பார்த்துக்கொண்டிருப்பான். அவனை லேசாய் ஒரு தட்டுத்தட்டி எழுப்பிய ஷஹாரி ஹெட்போனைத் தலையில் மாட்டும்படி சைகையால் காண்பிக்க அவ்வாறே செய்துவிட்டு அவரையே விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.


'ஈஸ் எவரிதிங் ஓகே..?' என்று காதுக்குள் இரைந்தது கண்ட்ரோல் டவர்.


'யா! எவ்ரிதிங் ஓகே. ப்ளையிங் ஓவர் த கல்ப்ஃ ஒப்ஃ தாய்லேண்ட், த ப்ளைட் ஓன் ஓட்டோ பைலட் மோட்.. வெதர் கண்டிஷன் ஓல்ஸோ குட் என்ட் பெர்பெக்ட்! ஓல் ரைட்.. குட்நைட்!'


 'குட்நைட், மலேசியன் த்ரீ ஸெவன் ஸீரோ!' என்று தானும் விழித்திருப்பதைக் காண்பிப்பதற்காக உளறிவிட்டு அசடு வழிந்தான் ஃபாரிக். அத்தோடு கோலாலம்பூர் விமான நிலைய ரேடார் மையத்திலிருந்து காதுக்குள் ஒலித்தவாறிருந்த பெண்குரல், 'குட்நைட்.. தேங்க்யூ' எனும் இறுதி இரு வார்த்தைகளுடன் அமைதியானது.


ஐந்து மணிநேரத்தில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் தரையிறங்க வேண்டிய போயிங் 777-2000 ரக பயணிகள் விமானம் சரியாக ஜீஎம்டீ 16:40க்கு பயணிகள் மற்றும் விமானச் சிப்பந்திகள் உட்பட 239 பேருடன் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து வானுக்கு ஏறியிருந்தது. புறப்பட்டு இருபத்து ஐந்து நிமிடங்களுக்குள் தாய்லாந்து வளைகுடாவுக்கு மேலாகப் பறந்து உச்சபட்ச உயரமான பன்னிரண்டாயிரம் அடியை எட்டிப் பிடித்து விட்டது. இனிமேல் சீனாவின் பீஜிங் ஆகாய எல்லையை அடையும் வரை அவ்வப்போது கண்ட்ரோல் டவர்களிலிருந்து வரும் தொந்தரவுகளுக்கு பதில் சொல்வதைத் தவிர வேறு ஏதுவும் பெரிதாகச் செய்ய வேண்டியதில்லை. சில விடயங்கள் தவிர எல்லாவற்றையும் கம்யூட்டர் மயமாக்கப்பட்ட விமானத்தின் தன்னியக்கச் செலுத்தியே  கவனித்துக் கொள்ளும்.


ஹெட்போனைக் கழற்றி வைத்துவிட்டு ஃபாரிக்கிடம், 'ஓகே யங்மேன், இனி நீ நிம்மதியாகத் தூங்கலாம்!' என்றார் ஷஹாரி.


 'தேங்க்யூ கேப்டன், அந்த சப்பை மூக்கன்கள்ற ஊர் வந்ததும் எழுப்பி விடுங்க.. எதுக்கும் பார்த்து ஓட்டுங்க.. முன்னால லொறி ஏதும் வந்திடப்போகுது..' என்று கண்ணைச் சிமிட்டிவிட்டு அவன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தூங்க ஆரம்பித்தான்.


'நல்ல பைலட்றா நீ!' என்று அவன் தலையை விரல்களால் கலைத்து விட்டு மீண்டும் நேரத்தைப் பார்க்க அவரது கைக்கடிகாரம் ஜீஎம்டீ 17:29 ஐக் காட்டியது.
இதுவரை எத்தனையோ தடவை இந்த ஏர்-லைனர் விமானத்தை இதே ஆகாயத் தடத்தில் ஓட்டிச் சென்று திரும்பியிருக்கின்றார் ஷஹாரி.  ஆனாலும் இம்முறை செல்லும் பயணம் அவரைப் பொறுத்தவரை சற்றுத் திகிலானது. அதற்குக் காரணம் இன்றைய தினம் இதே விமானத்தில் பணிப்பெண்களில் ஒருத்தியாக வந்திருக்கும்  ரோஸி. ஒரு போயிங் பயணிகள் விமானத்தினுள் அதுவும் விமானிகளின் காக்பிட் அறைக்குள்ளே யாருமே செய்வதற்கு நினைத்துக் கூடப்பார்த்திராத ஒன்றை அந்தப் பணிப்பெண்ணின் ஒத்துழைப்போடு இன்று அவர் செய்யப்போகின்றார். இதோ இன்னும் சில நிமிடங்களில் அவள் பயணிகள் பகுதியிலிருந்து கேப்டன் ஷஹாரியும் ஃபாரிக்கும் இருக்கும் காக்பிட் அறைக்குள் வந்துவிடுவாள். அதற்கு முன்பு திட்டமிட்டபடி இரண்டு காரியங்களை ஷஹாரி செய்தாக வேண்டும். இரண்டுமே விதிமுறைகளுக்கு மாறானவை. ஆனால் வேறுவழியில்லை. அவற்றை செய்தால் மட்டுமே அவரது வெகுநாள் கனவு நிறைவேறும்.


முதலாவதாக விமானத்தின் முதற்கட்டத் தொலைத்தொடர்பைத் துண்டித்தார். இரண்டாம் பகுதியையும் துண்டிக்க கையை உயர்த்தியவர் சில வினாடிகள் யோசனைக்குப் பின்பு பின்வாங்கி விட்டார். அதற்குக் காரணமிருந்தது. இரண்டாம் கட்டத்தையும் உடனடியாகத் துண்டித்தால் விமானம் கட்டுப்பாட்டு தலைமையகத்துடனான தொடர்புகளை முழுமையாக இழந்துவிடும். அப்படி மட்டும் நடந்து விட்டால் விமானம் எங்கோ விபத்துக்குள்ளாகிவிட்டதாக நினைத்துக் கொண்டு உடனடியாக இராணுவ விமானத்தை அனுப்பித் தேட ஆரம்பித்து விடுவார்கள். அது அவரது திட்டத்தைக் குழப்பிவிடும் என்பதால் ஒத்திப்போட்டார்.



இரண்டாவதாக தன்னருகிலிருக்கும் கோ-பைலட் ஃபாரிக்கை அமைதியாக்க வேண்டும். குறைந்தபட்சம் இன்னும் ஒன்றரை மணிநேரத்திற்கு விமானி அறைக்குள் நடப்பது எதுவுமே அவனுக்குத் தெரியக்கூடாது.  தூங்கிக் கொண்டிருந்த அந்த இருபத்திமூன்று வயது அப்பாவி இளைஞனின் முகத்தைப் பார்க்க ஷஹாரிக்குப் பாவமாக இருந்தது. சிறிது சோம்பேறி என்றாலும் அவன் நல்ல பையன். விமானப் பயணத்தில் அலுப்புத்தட்டும் போதெல்லாம் உருது மொழியில் காதல் கவிதையெல்லாம் பாடி ஷஹாரியை உற்சாகப்படுத்துவது அவன் வழமை. என்ன செய்வது வேறுவழியில்லை.
'ஐ'ம் ஸொறி ஃபாரிக்!' என்று நினைத்தவாறு தன் கிட்பேக்கினுள்ளிருந்த குளோரபோஃம் ஸ்ப்ரேயரை வெளியிலெடுத்தார்.


'என்ன பாஸ் அது..? சென்ட்டா.. ஏயர் ப்ரஷ்னரா?'


ஷஹாரி திடுக்கிட்டு, 'ஏய் நீ இன்னும் தூங்கல்லியா..?' என்று கேட்டார்.


'அஹ்! இடையில நீங்க எழுப்பினதால தூக்கமே வருதில்ல கேப்டன்' என்று சோம்பல் முறித்தவாறு எழுந்திருக்க முயன்றான் ஃபாரிக்.


'சரி, இதை அடிச்சுவிடுறேன். இனி நல்லாத் தூக்கம் வரும்' என்றபடி ஷஹாரி அவன் முகத்தில்; அதை வேகமாய் அவர் விசிறியடிக்க நிமிடத்தில் அவன் தலைதொங்கிப்போனது. இனிமேல் சீன எல்லை வரும் வரை அவன் எழுந்திருக்கப் போவதில்லை.




சிறிது நேரத்தில் ஷஹாரி எதிர்பார்த்தபடியே காக்பிட் கதவின் பஸ்ஸர் லேசாய் அலறியது. ரோஸிதான் வந்திருக்கின்றாள்.


'யெஸ், கமின்!' என்றதும் காக்பிட்டின் மூன்று அடுக்குகள் கொண்ட ஓட்டோமெட்டிக் பாதுகாப்புக் கதவுகள் தானாக திறந்து திறந்து மூடும் மெல்லிய ஒலிகளுக்குப் பிறகு ஆளுயர செலூலோயிட் பொம்மை போல அழகிய பெண்ணொருத்தி ஒரு ட்ரேயில் இரு மதுக்கிண்ணங்களில் பொன்மஞ்சள் நிறத்திரவத்தை ஏந்திக்கொண்டு உள்ளே வந்தாள்.


'ஹாய் ரோஸி!'


'ஹாய் கேப்டன்! நம்ம வேலையை ஆரம்பிக்கலாமா?' என்று கேட்டாள்.


'ஏய்.. பொறு பொறு! என்ன அவசரம்? அதுதான் இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கே..'


'ஓ! அபூ வேற தூங்கிட்டானா?' என்று அப்போதுதான் ஃபாரிக்கைப் பார்த்து விட்டுக் கேட்டாள். ஃபாரிக்கை அவள் அப்படித்தான் அழைப்பது வழக்கம்.


'இல்லை, நான்தான் தூங்க வச்சேன்'


'பாவம், என்னைப் பார்த்து எப்பவுமே ஜொள்ளு விடுற பையன். என்ன பண்ணீங்க கேப்டன் அவனை..?'


'ஒண்ணுமில்ல.. பீஜிங் வரும்வரை தூங்க ஆசைப்பட்டான். லேசா இதை முகத்தில் அடிச்சேன்.. தூங்கிட்டான்..! வேணும்னா உனக்கும் அடிச்சு விடட்டுமா..?'


'ஓகே.. அப்புறம் யாரோடு..?' என்று ஏதோ சொல்ல வந்தவள் சட்டென நாக்கைக்கடித்துக் கொண்டு நிறுத்தி விட்டாள். ரோஸி எதைச் செய்தாலும் அவை எல்லாவற்றிலுமே ஓர் அழகும் நளினமுமிருந்தது. பெல்ஜியம் பளிங்குச்சிலை ஒன்று உயிர்கொண்டு காக்பிட்டினுள் நடமாடுவது போல ஜொலிக்கும் அவள் அழகையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தார் கேப்டன் ஷஹாரி. அவர் மனதிலே ஏழுவருடங்களுக்கு முன்பு இதே மலேசியன் ஏர்-லைன்ஸில் அவர் இணைந்த ஆரம்ப காலத்தில் பழகிய அவளுடைய தாய் லிசி தோற்றம் நிழலாடியது.


ரோஸியின் தாய் லிசியை கேப்டன் ஷஹாரிக்கு நன்கு அறிவார். இதே மலேசியன் ஏர்-வேய்ஸில் ரேடார் கட்டுப்பாட்டுப் பிரிவில் ஒரு சிரேஷ்ட பெண் அதிகாரியாக அவள்  இப்போதும் பணியாற்றுகின்றாள். லிசி ஷஹாரியை விட ஒன்பது வயது பெரியவள் மட்டுமல்ல சேவையிலும் பல வருடங்கள் சீனியர். ஆனால் பார்வைக்கு எப்போதும் இளமையாகத்தான் தெரிவாள். ரோஸியோடு அவள் சேர்ந்து வருவதைப் பார்த்தால் லிசியை 'அக்காவா தங்கையா?' என்று அசட்டுத்தனமாகக் கேட்பீர்கள். அப்படியொரு உடல்வாகு லிசிக்கு.




 லிசி ஒரு தமிழ்ப் பெண்; சிறு திருத்தம்: தமிழ் பேசாத தமிழ்ப்பெண். இருநூறு வருடங்களுக்கு முன்பே இந்தியாவிலிருந்து மலேசியாவில் குடியேறிய பரம்பரை அவளுடையது. தாயும் மகளும் தாய்மொழி உட்பட அனைத்தையும் ஏறத்தாழ மறந்துவிட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள். நுனிநாக்கு ஆங்கிலம் மலாய் மொழி இரண்டிலும் மாற்றி மாற்றிப் பேசுவார்கள். இருவரின் பெயரின் பின்னால் மட்டும் முன்னோர்கள் போனால் போகிறது என்று ஒட்டிக்கொண்டு வருகின்றார்கள்.  'லிசி மகாலிங்கம்' என்ற தனது முழுப்பெயரை எப்போதாவது சொல்ல வேண்டியிருந்தால் கூட, 'லிசி, மாவ்- லிங்- கெம்' என்றுதான் உச்சரிப்பாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


ரோஸிக்கு அது கூட வராது என்பது வேறு விடயம்.


2006ல் மலேசியன் ஏர்-லைன்ஸின் இளம் விமானிகள் தேர்வு ஒன்றுக்காக ஷஹாரி தனது ஊரான மலாக்காவிலிருந்து கோலாலம்பூர் வந்திருந்தார். அன்றுதான் லிசியை அவர் முதன் முதலாகப் பார்த்திருந்தார். சாதாரணமாக அழகிய பெண்களைப் பார்த்தாலே வந்த வேலையெல்லாம் மறந்துபோகும் அவருக்கு. பார்த்ததுமே சொக்க வைக்கும் லிசி போன்ற பேரழகியை விடுவாரா என்ன? அவளைப் பின்தொடர முயன்று பாதியில் தவறவிட்டு விட்டார். அதன் பின்பு அந்த வளாகத்தைச் சுற்றிச் சுற்றித் தேடியும் அவளை எங்குமே காணக் கிடைக்கவில்லை அவருக்கு.


அடுத்து வந்த நான்கைந்து நாட்களில் அதற்கெல்லாம் நேரமிருக்கவில்லை ஷஹாரிக்கு. முதல் சுற்றிலே இருபத்து மூன்றுபேரிலிருந்து ஏழு பேரை மட்டும் சலித்து சலித்துத்  தேர்ந்தெடுத்தார்கள். அதிலே ஷஹாரி மட்டுமே மலேசியக் குடிமகன். ஏனையவர்களில் இரண்டு உக்ரேனியர்களும் மூன்று சிங்கப்பூரியன்களும் ஒரு பிலிப்பினோவும் இருந்தார்கள்.


கோலாலம்பூரிலிருந்து 350 கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் புளோவோ பினாங் எனும் தீவிலுள்ள பயிற்சி விமானத்தளத்துக்கு அழைத்துச் சென்று இரண்டு வாரங்கள் தங்க வைத்தார்கள். தேர்வாகிய ஏழுபேருக்கும் மலேசியன் ஏர்-லைனர் போயிங் ரக விமானங்களை ஓட்டுவதற்குரிய முழுத் தகுதியும் இருக்கின்றதா என்பதைப் பரீட்சித்துப் பட்டை உரித்தார்கள்.




அது முடிந்ததும் மற்றொரு நேர்முகத் தேர்வு. அதிலே கல்வி, தொழினுட்பத் தகைமைகளை மட்டுமல்ல விமானிகள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட விபரங்களையும் குடும்பப் பின்னணிகளையும் துருவித்துருவி விசாரித்தார்கள். உலகின் பயங்கரவாத இயக்கங்கங்களோடு அவர்களுக்கு எதுவித தொடர்பும் கிடையாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக கடினமான கேள்விகள் கேட்டுப் பொறுமையைச் சோதித்தார்கள்.


இவையெல்லாம் முடிவடைந்தும் இறுதி நேர்முகத்தேர்வு ஒன்றும் இருந்தது. அதற்காக மீண்டும் கோலாலம்பூர் விமானத்தளத்தின் பொறியியலாளர் வளாகத்திற்கு வரவேண்டியிருந்தது. அங்கு காத்திருந்தபோதுதான் லிசியை மீண்டும் கண்டார் ஷஹாரி. இம்முறை அவள் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருத்தியாக கண்ணாடி அறைக்குள் அமர்ந்திருந்தாள். தேர்வு விமானிகள் பற்றிக் கூறப்படும் குறிப்புகளை மடிக்கணினியில் நிசப்தமாகப் பொறித்துக் கொண்டிருந்தாள். பளிங்குப் பூச்சாடியில் வைத்த ஒற்றைச் சிவப்புரோஜா போல தனியாக ஜொலித்த அவளையே மெய்மறந்து கவனித்துக் கொண்டிருந்ததில் ஒலிபெருக்கியில் தன் பெயர் ஏலம் விடப்பட்டதைக்கூட கவனிக்கவில்லை ஷஹாரி. பின்பு சுதாரித்து அடித்துப் பிடித்து தாமதமாக அவர் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த கோட்சூட் ஆசாமிகள் கேட்ட முதல் கேள்வி:


'யங்மேன், ஷஹாரி அஹமட் ஷா என்பது உண்மையிலேயே உன்னுடைய பெயர்தானா?'


றுதி நேர்முகத் தேர்விலே வெற்றி பெற்ற விமானிகள் நால்வரும் மலேசியன் ஏர்லைன்ஸில் இரண்டு வருடங்கள் ஒரு பயிற்சி விமானிகளாகக் கடமையாற்ற வேண்டியிருந்தது. தவிர, அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் செல்லும் மலேசியன் ஏர்லைனர்களிலே உதவி விமானியாகவும் சென்று திரும்ப வேண்டியிருந்தது. அப்போது பைலட் பயிற்சிப் பிரிவில் புதிதாகத் தெரிவான விமானிகளுக்கு லிசி மகாலிங்கம்தான் பொறுப்பாக இருந்தாள். பயிற்சி பறப்புகளுக்குரிய நாள் அட்டவணை விபரம் மற்றும் மலேசியன் ஏர்-லைனர்களில் அனுபவமிக்க விமானிகளுடன் உதவி விமானிகளாக யார் யார் செல்வது என்பது பற்றியெல்லாம் லிசி மூலமாகத்தான் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.


இதற்காக ஒவ்வொரு தடவையும் லிசியைச் சந்திக்கும்போதெல்லாம் அவளது அழகும் கவர்ச்சியான அசைவுகளும் ஷஹாரியைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தன. இதனால் அவளோடு தனிப்பட்டரீதியில் நெருக்கமாகி நட்புக்கொள்வதற்காக அவள் முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருந்தார். ஆனால் அவளோ அவருடன்; வெகுகாலம் தொழில்ரீதியான பேச்சு வார்த்தைகள் தவிர வேறு எதுவிதபிடியும் தராமலே இருந்து வந்தாள். பின்பு ஒருநாள் திடீரென அவரை கோலாலம்பூரிலுள்ள பிரபல உணவுவிடுதி ஒன்றிற்கு இரவு உணவுக்காக வருமாறு கைத்தொலைபேசியில் செய்தி அனுப்பியிருந்தாள்.


அது போதா ஷஹாரிக்கு? தன்னிடமிருந்த மிகச்சிறந்த ஆடைகளைத் தெரிவு செய்து அணிந்து வெகுஉற்சாகமாக அங்கு சென்றிருந்தார். அத்தேர்டு தான் நினைத்தவளை அடைந்துவிடலாம் என்ற எதிர்பார்ப்போடு அவர் மனம் துள்ளியது. ஆனால் அங்கு நடந்ததோ வேறு ஒன்று. ஆம், ஷஹாரியை அன்பாக வரவேற்று  பேசிக்கொண்டிருந்த லிசி தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது எனும் அதிர்ச்சியான உண்மையை அவருக்குக் கூறினாள்.


பாடசாலை வயதில் பருவக்கோளாறில் தான் ஹொங்கொங் வாலிபன் ஒருவனைக் காதலித்து திருமணம் புரிந்ததையும் தற்போது அவனை விவாகரத்துச் செய்துவிட்டு தனியாக வசிப்பதையும் கூறிய அவள் தனக்கு டீனேஜில் ஒரு மகள் கூட இருப்பதாகவும் அவளை கோலாலம்பூரிலிருந்து நூற்றைம்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஓர் கிறிஸ்தவ பெண்கள் கல்லூரி விடுதியில் தங்கவைத்து படிப்பித்து வருவதாகவும் கூறினாள் லிசி. தனது தன் வாழ்வை மகளுக்காகவே அர்ப்பணித்திருப்பதால் இனிமேல் அவரைத் தன் வாழ்க்கையில் தலையிட வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டாள். ஷஹாரி ஏமாற்றமடைந்தாலும் லிசியின் துன்பமான கடந்தகால மணவாழ்க்கைதான் அவளை அளவுக்கு மீறிய எச்சரிக்கையுடன் வாழ நிர்ப்பந்தித்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு அவளின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருந்தார்.


அதன் பிறகு வெகுகாலம் ஷஹாரி அவளைத் தொந்தரவு செய்யவேயில்லை.






ஆனாலும் விதி லிசியையும் ஷஹாரியையும் வேறுவிதமாக இணைத்து  விளையாட ஆரம்பித்தது. ஷஹாரி முழுநேர விமானியாக ஆகிய அதே இரண்டு வருட காலத்தில் லிசியின் மகளான ரோஸி தன் கல்லூரிப்படிப்பை முடித்து இதே மலேசியன் ஏர் லைன்ஸில் ஒரு விமானப் பணிப்பெண்ணாக இணைந்து கொண்டதையும் ரோஸியாகவே கேப்டன் ஷஹாரியிடம் மனதைப் பறிகொடுத்ததையும் வேறு எப்படிச் சொல்வது?


தாயின் அழகை ரசித்த கேப்டன் ஷஹாரிக்கு அவளையே அச்சில் வார்த்தது போன்ற அழகு மகளை மட்டும் கசக்குமா என்ன? தன்னுடைய உயரதிகாரியான லிசி மகாலிங்கம் அறியாத வண்ணம் ரோஸியின் காதலை ஏற்றுக்கொண்டு விட்டார். ஆனாலும் ஒரு மெய்ப்பாதுகாவல் அதிகாரியைப்போல எங்கு சென்றாலும் தன் மகள் ரோஸி கூடவே லிசியும் அலைந்தாள். இதனால் காதலர்கள் இருவரும் தொலைபேசுவதைத் தவிர எங்குமே தனிமையில் சந்திக்க  முடியவில்லை. எத்தனையோ மாதங்கள் எத்தனையோ வழியில் முயற்சித்தும் இருவருக்கும் தனிமை என்பதே கிட்டவில்லை. சகல வழிகளையும் முயன்று தோற்று கடைசியில் வேறுவழியின்றித்தான் இந்த திட்டத்தை....


'கேப்டன், இப்பிடியே நீங்க யோசிச்சிட்டிருந்தா நானும் இவனைப்போல தூங்கிட வேண்டியதுதான்..?' என்று ஷஹாரியைக் கலைத்தாள் ரோஸி.


'ஓல்ரைட் டியர்! இதோ நான் ரெடி!' என்று எழுந்து சென்று ஷஹாரி  பணிப்பெண் சீருடையிலிருந்த அவளை முகர்ந்துபார்த்துக் கொண்டிருந்த அதேவேளையில் அத்தனைபேரையும் சுமந்தபடி பறந்து கொண்டிருந்த அந்த பிரமாண்டமான ஜெட்விமானம் தாய்லாந்து வளைகுடாவைத்தாண்டி வியட்நாமிய ஆகாய எல்லைக்குள் ஊடுருவிக்கொண்டிருந்தது.


 'சே! ரொம்ப மோசம் கேப்டன் நீங்க..? இதுக்கெல்லாம் போய் யாராவது பறக்கிற ப்ளைட்டை தெரிவு செய்வாங்களா..? தப்பித்தவறி மாட்டிக்கிட்டா இனிமே நாம் ப்ளைட்ல இருக்க மாட்டோம்.. ஜெயில்லதான்.!'


'என்ன பண்றது ரோஸி, எங்காவது ஹோட்டல்ல வச்சுக்கலாம்னா.. நீதான் உன் அம்மா பின்னாலயே நாய்க்குட்டி மாதிரி திறியிறியே! அவவும் பொடிகாட் மாதிரி உன்னையே வாட்ச் பண்ணிகிட்டு இருக்கிறா..!'


'நான் என்ன பண்றது கேப்டன்? அவவுக்கு தன்னை மாதிரியே என்னையும் யாராவது ஏமாத்திடுவாங்களோன்னு பயம்.. பாவம் அவ என்னை விட்டா அவவுக்கு வேற..' என்று லேசாக விசும்ப ஆரம்பித்தாள் ரோஸி.



'சரிதான் அம்மா சென்டிமென்ட்.. ஆரம்பிச்சாச்சு! இனி நீ நோர்மலாக அரைமணிநேரமாகுமே' என்று ஏமாற்றத்துடன் அவளை விட்டு விலகிச்சென்ற மீண்டும் விமானத்தின் கட்டுப்பாட்டு விசைகளை ஒழுங்கமைக்க ஆரம்பித்தார் ஷஹாரி.


'ஓகே.. ஐ'ம் ஓல்ரைட். கேப்டன், இப்ப கொஞ்சம் என்னைப் பாருங்க' என்றாள். ஷஹாரி திரும்பிப் பார்த்தபோது அந்த அழகுப்பதுமை தன் சீருடைக்கு விடைகொடுத்து விட்டு உள்ளாடைகளுடன் மட்டும் நின்று கொண்டிருந்தாள்.




அதற்குப் பிறகும் ஷஹாரி சும்மா நின்றுகொண்டிருப்பாரா என்ன? 'ஓ! மை ஸ்வீட்!' என்று எழுந்துபோய் அவளைக் கட்டியணைத்துக் கொண்டார்.
திடீரென ரோஸி விலகி மயக்கத்தில் சரிந்து கிடந்த ஃபாரிக்கைக் காண்பித்தாள் 'ஐ ஃபீல் வெரி ஷை கேப்டன்!' என்று சிணுங்கினாள் ரோஸி.
'ஐயோ ரோஸி.. அவன் முழுமயக்கத்திலிருக்கிறான்.. இப்ப ப்ளேன்ல இருந்து தூக்கிப்போட்டாலும் தெரியாது அவனுக்கு! எனிவே, ஹேவ் எ குட் ஐடியா' என்று எழுந்து போய் தன் கோர்ட்டைக் கழற்றி மயங்கிக் கிடந்த ஃபாரிக்கின் முகத்தை முழுமையாக மூடிவிட்டு மீண்டும் வந்து அணைத்துக் கொண்டார் ஷஹாரி.



'சரி, அது என்ன கேப்டன் முன்னால இருட்டில கறுப்பா என்னென்னவோ தெரியுது.. மலைகளா அது?' அவரது அணைப்பிலிருந்தபடியே விமானத்தின் முன்புற காற்றுத்தடுப்புக் கண்ணாடி வழியாக ஆகாயத்தை உற்றுப் பார்த்தவாறு கேட்டாள் ரோஸி.


'மோதிடாதா நம்ம ப்ளைட்?'


'சான்ஸே இல்ல, பன்னிரண்டாயிரம் அடி உயரத்திலே மலையெல்லாம் கிடையாது. அதெல்லாம் உன்னோட பிரமை ரோஸி! கமான் பேபி!' என்றபடி அவளை மீண்டும் வாரி அணைத்துக் கொண்டார் கேப்டன்.


சுற்றிலும் நவீன இலத்திரனியல் கருவிகளும் இணைப்பு வயர்களும்; நிறைந்த அந்த விமானி அறையினுள் மென்மையான முத்தங்களோடு ஆரம்பித்த அவர்களின் காதல் உல்லாசம் மலைகளிலிருந்து பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரும் நீரோடையைப் போல படிப்படியாக வேகம் பிடிக்க ஆரம்பித்தது.
இருவரினதும் ஆவேச அசைவுகளின் கவனக்குறைவான ஒரு தருணத்திலே கட்டுப்பாட்டு விசைகளில் ஒன்று எதேச்சையாக அழுத்தப்பட்டு விட, அதுவரை பீஜிங்கை குறிவைத்து கிடையாகப் பறந்து கொண்டிருந்த அந்தப் பிரமாண்டமான அலுமினியப்பறவை, தென்கிழக்குத்திசை நோக்கித் திரும்பியதையும் அதன் கீழே வெகுதூரம் வரை பரந்து கிடக்கும் இந்துமகாசமுத்திர கடற்படுக்கையை நோக்கிச் சாய்வான கோணத்திலே சிறிது சிறிதாக அது சரிய ஆரம்பித்ததையும் யாரும் கவனிக்கவில்லை.


-மூதூர் மொகமட் ராபி
(2014.04.05)

Sunday, March 23, 2014

யுவன் சங்கர் ராஜா மதமாற்றம் : களிப்பும் வெறுப்பும் ஏன்?





யுவன் சங்கர் ராஜா


தம் சார்ந்த உலகில் சில நாட்களாகவே கசிந்து வந்த செய்தி இப்போது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. தான் இசுலாத்தை ஏற்றுக் கொண்டது, தனது வீட்டார், தந்தை அனைவரும் அதை ஆதரிப்பதையெல்லாம் யுவன் சங்கர் ராஜா டிவிட்டரில் அறிவித்திருக்கிறார். கூடவே இந்த மத மாற்றத்தின் மூலம் மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுவது புரளி எனவும் யுவன் ஒரு சினிமா நட்சத்திரம் என்பதாலும் இந்த சாதாரண செய்தி கொஞ்சம் அதிர்ச்சி கலந்த பரபரப்பாய் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டதுதெரிவித்திருக்கிறார்.


பொதுவில் இசுலாம் மற்றும் இசுலாமியர்கள் குறித்து கட்டமைக்கப்பட்டிருக்கும் வெறுப்புணர்வாலும், யுவன் ஒரு சினிமா நட்சத்திரம் என்பதாலும் இந்த சாதாரண செய்தி கொஞ்சம் அதிர்ச்சி கலந்த பரபரப்பாய் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டது. சென்னையைக் கலக்கிய மோடி எனும் செட்டப் செய்தியின் வீச்சையும் ஜோடனை வெற்றியையும் இந்த செய்தி குறைத்து விடுமோ எனும் கவலையும் இதில் அடங்கியிருக்கிறது.


சமூக வலைத்தளங்களில் இருமதங்களிலும் இருக்கும் ஜனநாயக உணர்வு கொண்டோர் அவர்கள் சிறுபான்மை என்றாலும் இந்த மதமாற்றம் ஒரு தனிநபரது அந்தரங்க விசயம், அதை விவாதிப்பது சரியல்ல எனவும், முற்போக்கு மற்றும் இடதுசாரி கருத்துக்கள் கொண்டவர்கள் கூடுதலாக இதை பார்ப்பனியத்தை அம்பலப்படுத்துவதற்காக விவாதிக்கின்றனர். எனினும் இருதரப்பு மதவாதிகளின் விவாதம்தான் இவற்றில் முன்னணி வகிக்கிறது.


முதலில் பார்ப்பனியத்தை அரசியலிலும், மதத்திலும் ஏற்றுக் கொண்டோரை பார்க்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை ஒருவர் இந்துமதவெறி அரசியலை அதற்குரிய இயக்கங்களில் சேர்ந்துதான் பெற வேண்டும் என்பதல்ல. பொதுவான சாதிய படிநிலை அமைப்பும், சடங்கு-சம்பரதாயங்களும், ஊடகங்கள் – கலாச்சார – அரசு அமைப்புக்களின் பார்ப்பனிய சார்பும் கூட ஒரு ‘இந்து’ குடிமகனது சிந்தனையை வடிவமைப்பதில் பங்காற்றுகின்றன.


“முசுலீம்கள் மதவெறியர்கள், எதற்கும் தம் மதத்தை விட்டுக் கொடுக்கமாட்டார்கள், பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள், ஏட்டிக்கு போட்டியாக தாடி, குல்லா, கைலி என்று அடையாளத்தை பின்பற்றுபவர்கள், மாட்டுக்கறியை விரும்பி உண்பவர்கள், அதனால் வரும் துர்நாற்றத்தை தடுக்க ஃபாரின் செண்டை அடிக்கடி போடுபவர்கள், சளைக்காமல் குண்டு வைக்கும் தீவிரவாதிகள்” என்பதிலிருந்து விதவிதமாக இந்த வெறுப்புணர்வு மக்கள் மனதில் படிய வைக்கப்பட்டிருக்கிறது.


ஆகவே ஒருவர் முசுலீம் மதத்திற்கு மாறுகிறார் என்றால் இத்தகைய மனநிலையிலிருப்போருக்கு இயல்பாகவே அதிர்ச்சியும், வெறுப்பும், கசப்பும் வருகிறது. அதுவே இந்துமதவெறி இயக்கத்தவர் என்றால் கூடுதல் வன்மத்துடன் அந்த வெறுப்புணர்வு பீறிட்டு வருகிறது.


தினமலர் மறுமொழிகளில் துவங்கி சமூக வலைத்தளங்கள் வரை இத்தகைய வெறுப்புணர்வு விதவிதமாய் வெளிப்படுகிறது. “ஜனனி ஜகம் நீ, ரமணர் மாலை, திருவாசகம் என ஆன்மீகத்தில் இசையோடு திளைத்தவரின் பிள்ளை செய்யக்கூடிய செயலா இது”, “இனி யுவன் எத்தனை மனைவி வேண்டுமானாலும் கட்டலாம்”, “அவர் குண்டு வைக்காமல் இருந்தால் சரி”, “தாய்நாடு, தாய்மதம், தாய்-தந்தை அனைத்தையும் இழிவுபடுத்தி விட்டார்”, “சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு மதத்தை விற்று விட்டார்”, “இசையை மறுக்கும் இசுலாத்தில் எப்படி காலம் தள்ளுவார்” என தினுசு தினுசாக இந்த எரிச்சல்கள் கொட்டப்படுகின்றது.


இதனால்தான் “இளையராஜாவுக்கு நெஞ்சுவலி வந்தது”, “அவரது தந்தை டேனியல் ராமசாமி கிறித்தவ மதத்திலிருந்து தாய்மதமாம் இந்து மதத்திற்கு மாறியதை யுவன் அசிங்கப்படுத்தி விட்டார்” என்றெல்லாம் கூட இவர்கள் அடுக்குகிறார்கள்.


ஒரு மதத்தை ஒருவர் பின்பற்றுவது, மாற்றிக் கொள்வது என்பது சட்டப்படியும், தார்மீக நெறிப்படியும் அவரது தனிப்பட்ட உரிமை, தேர்வு. இதில் சரி தவறு என்று வாதிடுவதற்கு மற்றவர்களுக்கு உரிமையும் இல்லை, அது ஜனநாயகமும் இல்லை. மின்னணுவியல் எந்திரங்களின் கடைக்குச் சென்று ஒருவர் தனக்குப் பிடித்த நிறுவனத்தின் சலவை எந்திரத்தை வாங்குவதை எவரும் விமரிசிப்பதில்லை. சரக்குத் தேர்வு அவர் உரிமையென மற்றவர்கள் ஏற்கிறார்கள். நுகர்வு கலாச்சாரத்தில் இருக்கும் இந்த ‘நாகரீகம்’ மதம் குறித்த விவகாரங்களில் இல்லை.


இகலோக பொருட்களோடு பரலோக ஆன்மீகத்தையும் இணைத்துப் பார்க்கலாமா என்று பக்தர்கள் கேட்கலாம். பரலோக ஆன்மீகத்தில் கூட எங்கே தள்ளுபடி அதிகம், வசதிகள் இருக்கும் என்று ஒரு பக்தன் முடிவு செய்வதில் தவறென்ன? இல்லையென்றால், இல்லாமல் கருத்தளவில் மட்டும் நம்பப்படும் பரலோகத்தில் எது உண்மை, பொய், நல்லது என்ற விவாதங்கள் எழும். ஆகவேதான் மதத்தை எற்பதோ, பின்பற்றுவதோ, மாற்றுவதோ ஒருவரது தனிப்பட்ட உரிமை. அவர் எந்தக் காரணத்திற்காக செய்தார், அந்தக் காரணங்கள் சரியா, தீர்வுக்கு அந்த மதம் உகந்ததா என்று கேட்பதும், விவாதிப்பதும் அடிப்படை ஜனநாயகமற்ற செயல்.



அப்பர்


ஆனானப்பட்ட அப்பரே கூட அல்சர் பிரச்சினைக்காக சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியவர்தானே! அல்சருக்கு மருத்துவரைப் பார்க்காமல் மதத்தை ஏன் மாற்றினார் என்று இந்து அபிமானிகள் கேட்க மாட்டார்கள் அல்லவா? அப்பருக்கு அளிக்கப்பட்ட அந்த உரிமை குப்பனுக்கும், சுப்பனுக்கும் மட்டும் இல்லையா? ஆனால் குப்பன் சுப்பன்கள் பால் பவுடருக்காகவும், ரொட்டிக்காவும் மதம் மாறுகிறார்கள் என்று அப்பரை வியந்தோதும் அன்பர்கள் இழிவுபடுத்துவார்கள். தனது வயிற்றுப்பசிக்கு ஒரு மதம் வாழ்வளிப்பதை ஏழையொருவர் ஏற்றுக் கொண்டு மாறுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை?
ஒரு ஏழையின் ஏழ்மையை விதியென்றும், பாவமென்றும் ஏற்று நடக்க கோரும் மதம்தான் அதிலிருந்து விடுதலை பெறுவதையும் எதிர்க்கிறது. ஏழ்மை எனப்படும் இகலோக வறுமையை போக்குவதற்கு வக்கற்றவர்கள் ஆன்மீக வறுமை குறித்து எகத்தாளம் பேசுவது மேட்டிமைத்தனமானது. ஆகவே ஒரு மனிதன் ஆன்மீகவாதிகளால் பட்டியலிடப்படும் எந்த ஒரு ‘அற்ப’ காரணங்களுக்காகவும் கூட மதம் மாறலாம், அதில் தவறில்லை என்கிறோம். இப்படி இருக்க யுவன் இந்த ‘காரணங்களுக்காகத்தான்’ மதம் மாறினார் என்று பேசுவது பொருளற்றது.


வெள்ளையர்கள் வந்து சர்வே எடுத்தபின் உருவான இந்து மதம் வரலாற்றில் இன்றிருப்பதைப் போல ஒருங்கிணைக்கப்பட்ட மதமாக இல்லை. ஆறு வகை மதங்கள். அதில் சைவம், வைணவத்தின் கொலைச்சண்டையெல்லாம் வரலாறு பதிந்து வைத்திருக்கிறது. அம்பேத்கர் கூறியதைப் போல இந்து மதம் என்பது ஒரு மதத்திற்குரிய ஆன்மீக அம்சங்களை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை; அது சமூக வாழ்வில் சாதிப் பிரிவினைகளோடு வாழ்வதற்கும், மீறுபவர்களை தண்டிப்பதற்குமான ஒரு குற்றவியல் சட்ட தொகுப்புத்தான்.


இத்தகைய வருணாசிரம, சாதியக் கொடுங்கோன்மையிலிருந்துதான் மதமாற்றத்தின் தேவை பிறக்கிறது. இந்தியாவில் கிறித்தவமும், இசுலாமும் அப்படித்தான் தமது அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டன. அதே நேரம் பார்ப்பனியத்தை வெல்ல முடியாமல் அவை தமது நோக்கத்தில் தோல்வியடைந்தாலும் தோன்றியதின் காரணங்களை மறுக்க முடியாது. காலனியாதிக்கத்தின் கிறித்தவம், முகலாய மன்னர்களின் ஆட்சி மதம் என்ற அந்தஸ்தில் இருந்த இசுலாம் போன்றவையால் ஏற்பட்ட மதமாற்றத்தை விட சமூக கொடுங்கோன்மையால் நடந்த மாற்றமே அதிகம். 1980 களில் நடந்த மீனாட்சிபுரம் மதமாற்றம் வரை இதற்கு சான்றுகள் ஏராளம்.


எனவே தாய்மதமாம் இந்துமதத்திலிருந்து மதம் மாறலாமா என்று பொறுமும் இந்து பக்தர்கள் முதலில் தாய் மதத்தின் அநீதியை புரிந்து கொள்வது அவசியம். இல்லையென்றால் ஏட்டிக்குப் போட்டியாக கிறித்தவம், இசுலாம் போல இந்துமதமும் மதமாற்றத்தை செய்ய நினைத்தாலும் முடியாது, ஏன்? இந்து மதத்தின் சகல அடையாளங்களையும், உரிமைகளையும் அல்லது உரிமை மறுப்புகளையும் வழங்குவது சாதி என்பதால் வெளி மதங்களிலிருந்து வருபவரை இங்கு என்ன சாதியில் வைக்க முடியும்? விரும்பினாலும், விரும்பா விட்டாலும் பிறிப்பிலிருந்தே ஒட்டிக்கொள்ளும் சாதியை நடுவழியில் வேறொன்றுடன் இணைக்கவோ, மாற்றிக் கொள்ளவோ முடியாது.


ஆக மத மாற்றம் குறித்து கசப்புணர்வு கொள்ளும் இந்துக்கள் தமது மதத்திற்கு யாரையும் வரவேற்க முடியாமல் கதவை இறுக மூடியிருக்கிறோமே என்பது குறித்து பரிசீலித்து பார்க்கட்டும். சாதிகளோடு மட்டும் மணமும், உறவும் கொண்டிருக்கும் ‘இந்துக்கள்’ அதையே பிற சாதி இந்துக்களோடு ஏன் கொண்டிருக்கவில்லை என்பதை யோசிக்க வேண்டும். இது புரிந்தால் யுவனது மதமாற்றம் குறித்து எந்த எரிச்சலும் இருக்காது.


மேலும் என்னதான் இந்துமதவெறியர்கள் பத்வா பிறப்பித்து விதிமுறைகளை உருவாக்கினாலும் ஒரு படித்தான இந்து மதம், பண்பாடு, வாழ்க்கை முறை என்பது இங்கே இல்லை. சாதி, வர்க்கம், மொழி, பிரதேசம், இனம் என்ற பிரிவுகளோடே இங்கு இந்து மதம் இருக்கிறது. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்றாலும் இந்து மதத்தின் வேறுபாடுகள் தன்மையிலும் அளவிலும் அதிகம்.


காலை எழுந்து, நீராடி, துளசி மாடத்தை சுற்றி வந்து, கோலம் போட்டு, பூஜையறையில் பூஜை செய்து, நைவேத்தியம் படைத்து என்று பட்டயலிட்டு இதை செய்யாதவன் இந்து இல்லை என்றால் 99% மக்கள் இந்துக்கள் இல்லை என்றாகி விடும். கோனார் வீட்டின் முன் ஆட்டுப் புழுக்கைகளும், தேவர் வீட்டில் உப்புக் கண்டமும், மீனவர்கள் வீட்டில் கருவாடும், அலங்கரிக்கும் போது சுத்த பத்தமான துளசி மாடத்திற்கு எங்கே போவது? முதலில் சொந்த வீடு இருந்தால் அல்லவா துளசி மாடத்தை பற்றி யோசிக்க முடியும்.
துளசிமாடம் எனும் சிறு விசயத்திலயே இந்து மதம் அடிபடும் போது இவர்கள் சொல்லும் இந்துக்கள் யார்? பார்ப்பன மற்றும் ‘உயர்சாதி’ இந்துக்களின் பண்பாட்டைத்தான் அனைத்து இந்துக்களின் பண்பாடாக திணிக்கிறார்கள். அப்படித் திணித்தாலும் அது நடக்காது, நடக்கவில்லை என்பதை ஒத்துக் கொண்டால் யுவனது மதமாற்றம் எந்த அதிர்ச்சியையும் அளிக்காது.
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகங்களில் மதங்களுக்குரிய தனித்தன்மையும், சடங்குகளும் வெகு அபூர்வம். அங்கே ஒரே வீட்டில் இருவேறுபட்ட மதங்கள் இருக்கலாம். ஒரு திருமணத்தில் இரு மதங்கள் இருக்கலாம். என்றாலும் பிறப்பிலிருந்து, இறப்பு வரை மதங்களின் சண்டைகளும், பிரிவினைகளும், விதிமுறைகளும் அங்கே இருப்பதில்லை. சொல்லப் போனால் எளிய மக்களின் வாழ்க்கைக்கு கட்டுப்பட்டுத்தான் அங்கே மதங்கள் உயிர்வாழ முடியும். நாகூரூக்கும், வேளாங்கண்ணிக்கும், மாரியம்மன் கோவில்களுக்கும் மூன்று மத மக்களும் வேறுபாடின்றி அப்படித்தான் சென்று வருகின்றனர். ஏழை இசுலாமிய மக்கள் சென்னையின் குடிசைப் பகுதிகளில் உழைக்கும் ‘இந்துக்களோடு’ பிரச்சினைகளின்றி சமத்துவத்துடனும் தோழமையுடனும் வாழும் போது வசதி படைத்த இசுலாமியர்களுக்கு வசதி படைத்த இந்துக்கள் சுலபத்தில் வாடகை வீடுகள் தருவதில்லை என்பதையும் இங்கே பார்க்க வேண்டும்.



இளையராஜாவின் தந்தை டேனியல் ராமசாமி கிறித்தவர் என்று கூறுவது உண்மையில்லை. வெள்ளையர்கள் ஆட்சியில் கோவில்பட்டியில் இருந்து கேரளாவின் எஸ்டேட் வேலைக்கு கங்காணி பதவியில் பணிபுரிவதற்காக செல்லும் ராமசாமி ஆங்கிலேயர்களின் பெயர் சூட்டும் வழக்கப்படி டேனியல் என்ற பெயரை பெறுகிறார். தமிழ்நாட்டு பெயர்கள் வாயில் நுழையாததால் தமது பணியாளர்களுக்கு அப்படி கிறித்தவப் பெயர்களை ஆங்கிலேயர்கள் சூட்டிக் கொள்கிறார்கள். இது தெரியாமல் பண்ணைபுரத்தில் சின்னத்தாயை மணம் புரிந்து வாழ்ந்த டேனியல் ராமசாமிக்கு இப்படி ஒரு கட்டுக்கதையை கூட உருவாக்கியிருக்கிறார்கள்.



இன்றும் பண்ணைப்புரத்தில் கிறித்தவ, இந்து என்ற மதவேறுபாடு இன்றி மக்கள் வாழ்வதை பார்க்கலாம். பாவலர் வரதராசன் இறந்த போது இளையராஜாவும், கங்கை அமரனும் சினிமாவில் ஆளாயிருக்கவில்லை என்பதால் ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களே இறுதி அடக்க செலவை ஏற்றிருந்தார்கள். எனவே பண்ணைபுரத்தில் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள வாழும் பகுதிகளில் இல்லாதவன் என்ற யதார்த்தத்தில் நிலவும் வர்க்கம் எனும் கூட்டுத்துவத்தை எந்த மதமும் பிரிக்க முடியாது.
ஆனால் பண்ணைபுரத்தில் இருந்து சென்னையில் குடியேறி நாடறிந்த இசையமைப்பாளராக வாழும் இளையராஜாவின் நிலை வேறு. இப்போது பண்ணைபுரத்தின் வாழ்க்கை மதிப்பீடுகள் அவரிடமோ, குடும்பத்திடமோ இல்லை. தனது இசையில் கலைக்கு உண்மையாக இருத்தல் என்ற முறையிலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கர்வத்திலும் பார்ப்பனியத்தை கிண்டலடித்திருக்கும் இளையராஜா, கருத்தளவில் பார்ப்பனியத்தை மனதார ஏற்றுக் கொண்டு ஒரு ‘கருப்பு’ பார்ப்பனராகவே வாழ்ந்தார். இசையைத் தாண்டி அவரது பேச்சிலும், வீட்டிலும், இசைப்பதிவு கூடத்திலும், பொருட்கள் முதல் முறைகள் வரை பார்ப்பனியத்தின் தடங்கள் ஏராளம்.


இளையராஜா




இசையைத் தாண்டி இளையராஜாவின் பேச்சிலும், வீட்டிலும், இசைப்பதிவு கூடத்திலும், பொருட்கள் முதல் முறைகள் வரை பார்ப்பனியத்தின் தடங்கள் ஏராளம்ரமணருக்கும், அரங்கநாதனின் கோபுரத்திற்கும், திருவாசகத்திற்கும் மனமுருகிய இளையராஜா சமகால வாழ்வில் ஒடுக்கப்பட்ட மக்களின் இரத்த சுவடுகள் குறித்து அமைதி காத்தார். ஆகவே யுவனின் மதமாற்றம் அவருக்கு நிச்சயம் அதிர்ச்சி அளித்திருக்க வேண்டும். அதனால்தான் அவருக்கு நெஞ்சு வலி வந்ததா, நமக்குத் தெரியாது. ஒருக்கால் பண்ணைப்புரத்தின் சூழலிருந்தால் ராசையா இதை வெறுமனே கடந்து போயிருப்பார். தனது வாரிசுகள் மூன்று பேரும் மூன்று மதத்தில் இருந்தாலும் அவருக்கு பிரச்சினை இருக்காது. ஆனால் அக்கிரகாரம் கோலேச்சும் சென்னையிலும் – தமிழ் சினிமாவிலும் வாழும் இளையராஜாவுக்கு இது நிச்சயம் வலிதான். ஒரு வகையில் இது கூட அவரை ஏதேனும் ஒரு அளவுக்கு பண்படுத்தும் நல்ல சிகிச்சையும் கூட.



இதுவரை தான் பேசி வந்தது மதங்கள் கடந்த ஆன்மீகமா இல்லை இந்துத்வம் கட்டுப்படுத்திய ரணமா என்பதையெல்லாம் இளையராஜா யோசித்தல் நலம். அவரது வாழ்க்கை இசைதான் எனும் போது இத்தகைய அரசியல் பார்வை கொண்ட குறுக்கு விசாரணையை அந்த மகத்தான கலைஞன் மீது திணிக்கலாமா என்று ராசையா ரசிகர்கள் கேட்கலாம். அவரது இசையை நாங்களும் ரசிக்கிறோம். அதை எழுதியுமிருக்கிறோம். ஆனால் இங்கே எதை அவர் மீது விமரிசனமாக வைக்கிறோமோ அந்த பார்வையின் அடிப்படையில்தான் அவர் மீதான மரியாதையும் வியப்பும் ஏற்பட்டது. இதை இளையராஜா ஏற்காமல் போனாலும் அவரது இசைய ரசிக்கும் அரசியல் முன்னணியாளர்கள் பரிசீலிக்க வேண்டும்.



இறுதியாக இந்துமதவாதிகள் யுவனை மீட்பதற்கு விடும் அஸ்திரம் என்ன? இந்து மதம்தான் நெகிழ்ச்சியான மதம், இங்கே இருக்கும் சுதந்திரம் எங்கும் இல்லை, இசுலாத்தில் இசையமைப்பதற்கு கூட அனுமதி இல்லை என்று மன்றாடுகிறார்கள். இதிலும் ஒரு காப்பிரைட் திருட்டு இருக்கிறது. இந்து மதத்தின் ‘சுதந்திரத்திற்கு’ காரணம் பார்ப்பனியத்தின் இந்து ஞான மரபு அல்ல. சொல்லப் போனால் அத்தகைய சுதந்திர மறுப்பே பார்ப்பனியத்தின் ஆன்மா.
புத்தர், சமணர், சித்தர் முதல் பெரியார், அம்பேத்கார், பொதுவுடைமையாளர் வரை பார்ப்பனியத்தை மறுத்து வந்த மரபே இந்து மதத்தை அடித்து திருத்தி ஒரளவுக்கு வழிக்கு கொண்டு வந்தது. வைக்கம் போராட்டமா, தில்லை கோவில் மீட்பு போராட்டமா என்று சமீப கால வரலாற்றை பார்த்தாலும் அது பார்ப்பனியத்தை எதிர்க்கும் பெரியார், புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பாக இருக்கிறது. எனவே கோவில்களில் அனைவரும் நுழைந்து கும்பிடுவதற்கோ, தமிழ் நுழைவதற்கோ ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துமதத்திற்கு காப்பிரைட் கோரும் கூட்டம் எதுவும் எதையும் கிழித்ததில்லை என்பதோடு எதிராகவும் இருந்திருக்கிறார்கள்.
ஒருக்கால் இசையமைப்பது கூடாது என்று இசுலாமியவாதிகள் அச்சுறுத்தினாலும் அதற்கும் இதே முற்போக்கு கூட்டத்தினர்தான் போராட முடியுமே அன்றி இந்துமதவாதிகள் அல்ல. இனி இசுலாமியவாதிகளின் பக்கம் போகலாம்.




பெரியார்தாசன்

 
இசுலாமியவாதிகள் கேட்கும் கேள்வி “எனில் பெரியார்தாசனது மதமாற்றம் குறித்து ஏன் விமரிசித்தீர்கள்?”


மதமாற்றம் ஒரு தனிநபரது அடிப்படை ஜனநாயக உரிமை என்பதை விமரிசிப்பவர்கள் மட்டுமல்ல, அதை கொண்டாடுபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். உடனே இசுலாமிய வாதிகள் கேட்கும் கேள்வி, “எனில் பெரியார்தாசனது மதமாற்றம் குறித்து ஏன் விமரிசித்தீர்கள்?”. பெரியார்தாசன் இறை மறுப்பு, நாத்திகம், பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழின உரிமை என்று பல ஆண்டுகளாக முற்போக்கு மேடைகளில் பேசி வந்தார். அதனால் இந்த விமரிசனமும் கேள்விகளும் வருவது இயல்பு. இதையும் இந்துமதவாதிகளின் எரிச்சலையும் ஒன்றாக காண்பது அபத்தம். இப்படித்தான் தோழர் ஒருவர் பெரியார் தாசனிடம் கேட்டு அதற்கு அவர் ‘ஏன்’ மதம் மாறினேன் என்றே தெரியவில்லை என்று சொன்ன பதிலை ஆடியோவாக வினவிலும் வெளியிட்டிருக்கிறோம்.



தா.பாண்டியன் கட்சியில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் வகுப்பை திறமையாக எடுக்கக் கூடியவரும், இந்திய கம்யூனிசக் கட்சியின் மாநில துணைத் தலைவருமாகவும் இருந்த சீனிவாசன் என்பவர் சேலத்தில் இல.கணேசன் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். இதை ஏதோ ஒரு ஓட்டுக்கட்சி மாற்றம் என்று எடுக்காமல் ஏதோ கம்யூனிசம் என்று பேசிவிட்டு இப்படி பாசிஸ்டுக் கட்சியில் சேர்ந்தாயே என்று கூடுதலாக விமரிசன அடி கொடுக்க வேண்டியிருக்கிறது, அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. இது சரி என்றால் அதுவும் சரிதான்.


ஆனால் மதமாற்றம், மதத் தெரிவு என்பதை ஒரு ஜனநாயக உரிமையாக இந்துமதவாதிகள் மட்டுமல்ல இசுலாமிய மதவாதிகளும் ஏற்கமாட்டார்கள். துருக்கி, துனிஷியா போன்ற இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்த ஜனநாயகம் சட்டத்திலும், மக்கள் பண்பாட்டிலும் நிலைபெற்றிருந்தாலும் ஷரியத் கொடுங்கோன்மை நிலவும் வளைகுடா நாடுகளில் ஜனநாயக வாசனையை அதுவும் கனவில் கூட முகர முடியாது. இந்தியாவின் இசுலாமியர்களில் ஏழைகளாய் இருப்போருக்கு வர்க்கம் என்ற அளவிலேயே இந்த ஜனநாயகம் இயல்பாக இருப்பதால் பிரச்சினை அல்லை. அவர்களைத் தவிர்த்து வணிகர்கள், நடுத்தர வர்க்க முசுலீம்கள்தான் அதிகமும் வளைகுடா வகாபியிச அடிப்படைவாதத்தில் விழுகிறார்கள். வகாபியிச இயக்கங்களும் அப்படித்தான் வளருகின்றன. மக்களையும் மாற்றுகின்றன.



மேலும் மதம் என்பது வளர்ந்த பிறகு, பகுத்தறிவின் துணை கொண்டு ஒட்டிக் கொள்ளும் ஒன்றல்ல. யார் பெற்றோர்கள் என்பதே பிள்ளைகளின் மதத்தை தீர்மானிப்பதாக இருக்கிறது. இப்போது யுவன் எடுத்த முடிவைப் போலத்தான் இசுலாத்தை வளர்ந்து ஆளான பிறகு கடைபிடிக்க வேண்டுமென்றால் அதை மதவாதிகள் ஏற்கமாட்டார்கள். இதிலிருந்தே தெரிகிறது, மதமும், மதத்தெரிவும் வலிந்து திணிக்கப்படுகிறதா, தெளிந்து எடுக்கப்படுகிறதா என்று!



இசுலாமியர்
 

 
யுவனின் மதமாற்றம் ஒரு இசுலாமியரை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதற்கு வேறு ஒரு சமூக காரணம் இருப்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்
இருப்பினும் யுவனின் மதமாற்றம் ஒரு இசுலாமியரை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதற்கு வேறு ஒரு சமூக காரணம் இருப்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். இந்தியாவில் இந்துமதவெறி இயக்கங்கள் மற்றும் அதற்கு பொருத்தமான அரசு, சமூக, ஊடக அமைப்பால் இங்கே இசுலாமியர்கள் என்றாலே அடக்குமுறையும், கைதும், அச்சுறுத்தலும் இயல்பாக இருக்கின்றன. வாடகைக்கு வீடு கிடைக்காது, வேலை கிடைக்காது, பொது இடத்தில் சந்தேகப் பார்வை என்று அவர்களை அன்றாடம் ரணமாக்கும் நடைமுறைகள் ஏராளம். ஒருவகையில் இசுலாமிய கடுங்கோட்பாட்டுவாதத்தை முன்வைக்கும் வகாபியச இயக்கங்கள் இங்கே எடுபடுவதற்கு கூட இந்த அநீதிதான் காரணமே அன்றி அல்லாவின் அருளோ, இல்லை இசுலாத்தின் தனிச்சிறப்போ அல்ல.
ஆதலால் யுவனின் மதமாற்றம் குறித்து ஒரு சாதாரண முசுலீம் மகிழ்ச்சி கொள்வதை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். இது தண்டிக்க முடியாத இந்துமதவெறியர்களை ஏதோ கொஞ்சம் வெறுப்பேற்றவாவது முடிகிறதே என்ற இயலாமை கலந்த திருப்திதான். இந்தியாவில் இந்துமதவெறி அமைப்புகள் என்றைக்கு முடக்கப்படுகிறதோ அன்றுதான் இசுலாமிய மக்களை கருத்திலும், களத்திலும் ஜனநாயகப் படுத்துவது அவர்களது சொந்த விருப்பத்தின் பெயரில் நடக்கும்.



அதே நேரம் இந்த முயற்சியை பின்னுக்கிழுக்கும் வேலையை இசுலாமிய மதவாதிகள் செய்கிறார்கள். அப்படித்தான் யுவனின் மதமாற்றத்தை அவர்கள் மிகைப்படுத்துவதும் கொண்டாடுவதும். முக்கியமாக யுவனின் மதமாற்றம் இசுலாத்தின் வெற்றியாக அவர்கள் நம்புகிறார்கள். ஒரு தனிநபர் இசுலாத்திற்கு மாறுவது இசுலாத்தின் வெற்றி என்றால் அதே தனிநபர்கள் செய்யும் குற்றங்களுக்கும் இசுலாம்தானே பொறுப்பேற்க வேண்டும்?
காரைக்கால் கூட்டு வன்புணர்ச்சியில் சில முசுலீம் இளைஞர்களும் கைது செய்யப்பட்டார்கள். அப்போதெல்லாம் இது இசுலாத்தின் தோல்வி, மானக்கேடு, மதத்தின் போதாமை என்ற குரல்களை நாம் கேட்கவில்லை. இப்படிக் கேட்டால் தனிநபர்களை விமரிசியுங்கள், இசுலாத்தை குறை சொல்லாதீர்கள் என்பார்கள். என்றால் யுவனின் மாற்றத்தை வெற்றியாக சொல்வதும் உங்கள் கருத்துப்படியும் தவறுதானே? இசுலாமிய மக்கள் இன்றி இசுலாம் இல்லை. ஆனால் அந்த இசுலாமிய மதத்தை யதார்த்தமாக பார்க்காமல் வகாபியசத்தின் கண் கொண்டு செயற்கையாக பார்ப்பதுதான் பிரச்சினை.


தவ்கீத் ஜமாஅத்தின் கோவை ரஹ்மத்துல்லா சென்னை மண்ணடியில் பேசிய கூட்டம் குறித்து வினவில் விரிவாக எழுதியிருக்கிறோம். அதில் மதுரை ஆதினம் அருணகிரி வாயாலேயே புர்காதான் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது என்று அல்லா சொல்ல வைத்திருக்கிறான் என்று அவர் சொன்னதும் கூட்டத்தினர் அல்லா ஹூ அக்பர் சொன்னதும் இப்போதும் சிரிப்போடு  நினைவுக்கு வருகிறது. மதுரை ஆதீனம் போன்ற நாடறிந்த பொறுக்கி சாமியார்களின் வாய்களில் வரும் பாராட்டைக் கூட இவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறார்கள்? இது ஓட்டுப் பொறுக்கி அரசியலின் மேடை பாராட்டுகள், கண்டனங்களின் தரத்தை விட இழிவல்லவா?



இப்படித்தான் இசுலாத்தின் மகத்துவத்தை கடை விரிக்க வேண்டுமா என்றால் அவர்களிடத்தில் பதிலில்லை. சாதாராண முசுலீம்களிடத்தில் “எப்பேற்பட்ட பிரபலங்கள் அதுவும் ஒரு இந்து சாமியார் கூட இசுலாத்தை பாராட்டுகிறார், பார், எனவே நீ மார்க்கத்தை கறாராக கடைபிடிக்க வேண்டும்” என்று தமது மதவாத ஆதிக்கத்தை தக்கவைப்பதற்கு இதை பயன்படுத்துகிறார்கள். இந்த தந்திரம் இசுலாத்திற்கு வேண்டுமானால் ‘நற்பெயரை’க் கொண்டு வரலாமே அன்றி இசுலாமிய மக்களுக்கு எந்த விமோச்சனத்தையும் தந்து விடாது.
ஆகவே யுவன் எனும் ஒரு சினிமா பிரபலம் இசுலாத்திற்கு மாறியது இத்தகைய மதவாதிகளிடம் எத்தகைய புல்லரிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் சினிமாவின் பிரபலம் இங்கே அரசியல் முதல் பாமரன் வரை செல்வாக்கு செலுத்துவதால் யுவனது மதமாற்றத்தை வைத்து இசுலாத்தின் இமேஜ் பல மடங்கு உயரும் என்பது இவர்களது உட்கிடக்கை. ஆனால் மதுரை ஆதீனத்தை மட்டுமல்ல, யுவன் குறித்தும் இவர்களுக்கு தெரியவில்லை.



யுவன் சங்கர் ராஜா



இளையராஜாவுக்கு இருக்கும் ஒடுக்கப்பட்ட வாழ்க்கை பின்புலமோ, அனுபவமோ, இல்லை அதற்கான சூழ்நிலைகளோ யுவனுக்கு இல்லை..
இளையராஜாவுக்கு இருக்கும் ஒடுக்கப்பட்ட வாழ்க்கை பின்புலமோ, அனுபவமோ, இல்லை அதற்கான சூழ்நிலைகளோ அவருக்கில்லை. யுவன் மாநகரத்தை சேர்ந்த ஒரு மேட்டுக்குடி பீட்டர். அவரது பேச்சுக்களைப் பார்த்தால் தமிழை தட்டுத்தடுமாறி பேசுவார், ஆங்கிலத்தில் இயல்பாக இருப்பார். உடல் மொழியும் அப்படித்தான். ஒருக்கால் அவர் இசையமைத்த தமிழ் சினிமாதான் அவருக்குரிய சமூகப் பார்வையை அளித்திருக்கும் என்றாலும் தமிழ் சினிமாவின் தரம் தெரியுமென்பதால் அதையும் நிறைய நம்பிக்கையாக சொல்ல முடியவில்லை. இசைச்சூழல் மிகுந்த குடும்பத்தில் அவரது தனித்த திறமையாலும் யுவன் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி வர்க்கம் என்ற முறையில் சராசரி தமிழ் மக்களின் வாழ்க்கையிலிருந்து அன்னியப்பட்டவர். அத்தகைய தமிழ் வாழ்க்கையும் அவருக்கு தெரியாது.


அந்த சராசரி தமிழ் மக்களில்தான் சராசரி முசுலீம் மக்களும் இருக்கிறார்கள் என்பதால் யுவன் அலைவரிசையில் இசுலாமிய மக்களும் ஒன்ற முடியாது. ஒருக்கால் மதவாதிகள் முயன்று பார்த்தால்? பிரியாணி படத்தில் மஞ்சள் சேலை குத்தாட்டத்திற்கு யுவன் இசையமைத்த பாடலை ரசிக்க வேண்டும். அருணகிரியை ஆமோதித்தவர்கள் இதை ரசிப்பதில் என்ன பிரச்சினை என்ற கேள்வியும் எழாமல் இல்லை.


யுவனது இசையை ரசிக்கும் ரசிகர்களுக்கு அவர் இந்துவாகவோ, இசுலாமியராகவோ இருப்பதில் பெரிய பிரச்சினை இல்லை. அவர்களுக்குத் தேவையான இசையை அளிக்கும் யுவன்தான் முக்கியமே அன்றி மதம் அல்ல. ஆனால் அந்த இசையின் மூலம் பிரபலமான யுவனையும் அவரது மதமாற்றத்தையும் தூக்கிபிடிக்கும் மதவாதிகளுக்கு அந்த இசை தேவையில்லை. இசையையோ, இல்லை சினிமாவையோ ரசிப்பதற்கு இன்னமும் இசுலாம் போதிய அனுமதி கொடுக்கவில்லை எனும் போது இவர்கள் யுவனது மதமாற்றம் குறித்து துக்கப்படுவதற்கு பதில் மகிழ்ச்சி அடைவது ஏன்? பிரபலமும் வேண்டும், ஹராமையம் பின்பற்ற வேண்டும் என்றால் இந்த முரண்பாட்டிற்கு விடையில்லை. ஆக இதன் பொருட்டாவது இசுலாமிய மதவாதிகள் யுவன் மதமாற்றம் குறித்து அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை வெட்கத்துடன் பரிசீலிக்க வேண்டும்.


யுவனைப் போன்ற மேட்டுக்குடி இளைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பிரச்சினைகளும், அவற்றை அவர்கள் பார்க்கும் விதமும் வேறு. மண வாழ்க்கை பிரச்சினைகள், வியாபாரத் தொல்லைகள், வசதி குறித்த போதாமைகள் என்று இவர்களுக்கு வரும் பிரச்சினைகளின் அடிப்படையும் எளிய மக்களின் யதார்த்தமும் ஒன்றல்ல. அதனால் பிரச்சினைகளுக்காக இவர்கள் நவீன கார்ப்பரேட் சாமியார் வசம் போவதற்கும் அதையே ஒரு மத மாற்றத்திற்கு முகாந்திரமாக வைப்பதற்கும், பிறகு விரும்பா விட்டால் மாற்றிக் கொள்வதற்கும் எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. யுவனுக்காக கண்ணீர் வகுத்த மார்க்க சகோதரர்கள் இதன் பொருட்டாவது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படுதல் தவறு.


ஏழைகளையும் சரி, பணக்காரர்களையும் சரி எந்த மதமும் பெரிய அளவுக்கு மாற்றி விடாது. கோயம்பேடு சந்தைக்கு சென்று சந்தித்த ஒரு முசுலீம் தொழிலாளியிடம் தொழுவீர்களா என்று கேட்ட போது அதற்கு ஏது நேரம் என்று அவர் தெரிவித்தார். இதனாலேயே அவர் முன்னுதாரமான இசுலாமியர் இல்லையா? வர்க்கத்தின் வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் மதம் இருக்கமுடியுமே அன்றி அனைவருக்கும் பொதுவான இசுலாம் என்று ஒன்று கிடையவே கிடையாது. இது வர்க்கத்திற்கு மட்டுமல்ல இனம், மொழி, சாதி, பண்பாடு என்று நாட்டுக்கு நாடு வேறுபடும் பல யதார்த்தங்களுக்கும் பொருந்தும். இவற்றையெல்லாம் அழித்து விட்டு தூய இசுலாம் ஒன்றைக் கொண்டு வருவதுதான் அமெரிக்க அடியாள் சவுதி முன்வைக்கும் வகாபியசம். ஆனால் என்னதான் தலைகீழாக நின்று கத்தினாலும் வகாபியிசத்தின் தூய இசுலாம் என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று.



ஷியா கொலைகள்
 

அல்லா பாகிஸ்தானில் ஷியா பிரிவு முசுலீம் மக்களை அல்லும் பகலும் கொல்லும் சன்னி பிரிவு தீவிரவாதிகளை திருத்தாமல் வேடிக்கை பார்ப்பது ஏன்?


இன்னும் புரியும் விதத்தில் கேட்போம். யுவன் எனும் இளைஞனை நல்வழிப்படுத்தி ஆட்கொண்ட அல்லா, பாகிஸ்தானில் ஷியா பிரிவு முசுலீம் மக்களை அல்லும் பகலும் கொல்லும் சன்னி பிரிவு தீவிரவாதிகளை திருத்தாமல் வேடிக்கை பார்ப்பது ஏன்? யுவன் எனும் சினிமா பிரபலத்திற்கு நேரம் ஒதுக்கி பண்படுத்தும் வேலை பார்க்கும் இறைவனுக்கு ஷியா முசுலீம்களின் மரண ஓலத்தை நிறுத்துவதற்கு நேரம் இல்லையா?
ஈராக், ஆப்கான், சிரியா, பாலஸ்தீன் என்று பல நாடுகளில் இசுலாமிய மக்களைக் கொல்லும் அமெரிக்காவுக்கு அடியாளாக இருக்கும் சவுதி அரேபியாவை தண்டிக்காமல் அல்லா ஊக்குவிப்பது ஏன்? ஒரு இசுலாமிய மதவாதியின் மனதில் இத்தகைய கேள்விகள் ஏதும் குடையாமல் இருப்பதன் காரணம் என்ன? அதுதான் மதம் எனும் அபினின் மகிமை. வாழ்க்கை பிரச்சினைகளை எதிர்கொண்டு போராடுவதற்கு பதில் அதை சகித்துக் கொண்டு வாழ்வதையே எல்லா மதங்களும் சொல்லுகின்றன.
அதனால்தான் அனைத்து மதங்களும் ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறையை ஆன்மீகத்தின் பெயரால் மக்களிடம் கொண்டு செல்கின்றன.


எனவேதான் மதம் என்பது ஒரு தனிநபரது தனிப்பட்ட வழிபாட்டு உரிமையாக மட்டும் இருக்க வேண்டும். இதைத்தாண்டி அவரது சமூக, அரசியல், பொருளாதார விசயங்களில் கட்டுப்படுத்தும் உரிமையை மதங்களுக்கு தரக்கூடாது என்கிறோம். அப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் மற்றும் இசுலாமிய வகாபியவாதிகளின் விருப்பம். இவர்கள்தான் யுவனது மதமாற்றத்தை களிப்பும், வெறுப்பும் கொண்டு பார்க்கிறார்கள்.



அந்த வகையில் ஒரு மனிதனுக்குரிய மதம் மாறும் ஜனநாயக உரிமையை மற்ற எவரையும் விட இந்த மதவாதிகள்தான் மறுக்கிறார்கள். அந்த மறுப்பை வேரறுக்கும் விதமாக மதங்களின் விஷப்பல்லை முறியடிக்கும் வேலையினை நாம் தொடர்வோம்.

Thanks : Vinavu

Sunday, March 16, 2014

தவறவிடும் அப்ரிடி & தப்பிப் பிழைக்கும் ஜெயசூரிய






2014 ஆசியக் கோப்பைத் தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிராக அதிரடியாக அரைச்சதம் அடித்த பாகிஸ்தானின் ஷகிட் அப்ரிடி ஒரு பந்தில் ஜெயசூர்யாவின் சாதனையை தவறி விட்டார்.

பங்களாதேஷில் நடைபெற்ற  ஆசியக் கோப்பைத் தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிராக அதிரடியாக ஆடிய அப்ரிடி 25 பந்துகளில் 59 ரன்களைப்பெற்று ஆட்டமிழந்தார். இதில் 18 வது பந்தை எதிர்கொள்ளும் போது அவர் அரைச்சத்தை (50) பூர்த்தி செய்தார். இந்நிலையிலேயே இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யவின் சாதனையை தவறவிட்டார்.

ஜெயசூர்ய 1996–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 17 பந்தில் அரை சதம் அடித்ததே இதுவரை சாதனையாக உள்ளது. இந்நிலையிலேயே இச்சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை ஒரு பந்தால் அப்ரிடி தவற விட்டார்.

இச்சாதனையை அப்ரிடி 3 வது முறையாக தவறவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராகவும், 2002 ஆம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிராகவும் அவர் 18 பந்தில் 50 ரன்களை எடுத்து இருந்தார்.

ஆனாலும் 34 வயதானபோதிலும் இன்னும் ஒரு டீனேஜர் போலவே அதிரடியாக ஆடிவரும் அப்ரிடியின் வேகத்தில் என்றோ ஒருநாள் பல சாதனைகள் நொறுங்கும் சாத்தியமுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை!


RunsBalls6s4sPlayerMatchVenueYear
761758ST Jayasuriya Sri Lanka v PakistanSingapore07/04/1996
74 1864SP O'Donnell Australia v Sri Lanka Sharjah 02/05/1990
102 18116Shahid Afridi Pakistan v Sri Lanka Nairobi 04/10/1996
55* 1864Shahid Afridi Pakistan v Netherlands Colombo 21/09/2002
60 1873GJ Maxwell Australia v IndiaBangalore02/11/2013
591872Shahid Afridi Pakistan v BangladeshMirpur04/03/2014

Thursday, March 13, 2014

பிரபல்யத்தின் விலை








துவரை தமிழ்கூறும் நல்லுலகில் எத்தனையோ பல எழுத்தாளர்கள் வாழ்ந்து சாதனைகள் பல புரிந்து விட்டுச் சென்றிருக்கின்றார்கள். அவர்களிலே 'சுஜாதா'வும் ஒருவர்.


இந்த ஆளுமை மிக்க எழுத்தாளரைப்பற்றி சமகாலத்தவர்களான நமக்கு அதிகம் கூறவேண்டியதில்லை.

அவர் இறந்துபோய் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர் ஏற்படுத்தி விட்டுச்சென்ற பாதிப்புகளிலிருந்து இன்னும் நீங்க முடியாமலும் விரும்பாமலும் இருக்கின்றோம்.

அத்தகைய மனிதரின் தனிப்பட்ட வாழ்வு பற்றிய சில 'நம்ப முடியாத' தகவல்கள் கடந்த ஆண்டின் மே மாதமளவில் தமிழகத்திலிருந்து வெளிவரும் ஒரு தினசரியில் வெளியாகி பரபரப்பேற்படுத்தியது. அவரை பல விதங்களிலும் சிலாகித்தவர்களுக்கும் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கும் கூட அந்த விவரங்கள் அதிர்ச்சியாகவே அமைந்தன.

அதுகுறித்து பலரும் பலவிதமாக விமர்சித்தனர். எழுத்தாளனின் எழுத்துக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஒரு சாராரும், 'இல்லை..இல்லை.. த. வா. யையும் சேர்த்தே அவனை புரிந்துகொள்ள வேண்டும்' என்று மற்றொரு சாராரும் விவாதித்து இன்றுவரை பட்டை கிளப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விடயம் பற்றி ஜெயமோகன் மற்றும் பலரும் என்ன கருதுகின்றார்கள் என்பதை கீழே தருகின்றேன். படியுங்கள்:

ஜெயமோகனிடம் ஸ்ரீகாந்த் எனும் வாசகர் கேட்கும் கேள்வியும் அதற்கான ஜெயமோகனின் பதிலும். (கேள்வி அதன் அநாவசிய நீளம் கருதி குறுக்கப்பட்டுள்ளது)


-Jesslya Jessly



 

Q: சுஜாதா ஒரு கதாநாயகன் போல் எல்லோர் மனதிலும் இருந்தார்.. எழுத்தாளர் என்றவுடன் பலரும் அறிந்த மிக சில தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்..

 
வெகுஜனம் விரும்பும் படைப்பை நோக்கியே தன்னை திருப்பிக்கொண்டவர். அவர் படைத்த சினிமாக்களில் கூட அந்த பட இயக்குனரை தாண்டி சுஜாதா டச் இருப்பதை நாம் உணரலாம். அத்தகைய ஆளுமையை பற்றி அவர் மனைவி அளித்த பேட்டி வெளியாக உள்ளது..

 

'அவரை விட்டு பிரியணும்னுதான் நினைச்சேன்... அம்மா மடில படுத்து பல நேரம் அழுதிருக்கேன்... அவரோட வாழ பிடிக்கலைனு கதறியிருக்கேன்... ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழறது நல்லதுக்கில்லைனு அம்மா தடுத்துட்டாங்க... அவங்களை சொல்லி குற்றமில்லை. அந்தக் காலம் அப்படி. இந்தக் காலம் மாதிரி சமூக சூழல் இருந்திருந்தா நிச்சயம் அவரை விட்டு பிரிஞ்சிருப்பேன்...''

 

''அவரோட எழுத்துக்களை நான் படிச்சா திட்டுவாரு... சொல்லப் போனா புத்தகங்களை பெண்கள் படிக்கறதே அவருக்கு பிடிக்காது... சமையலறை, குடும்பத்தைத் தாண்டி பெண்கள் வெளிய வரக் கூடாதுங்கிறது அவர் கொள்கை...

 

''அக்கிரகாரத்துல தன் பாட்டி வீட்லதான் அவர் வளர்ந்தாரு. அதனால அக்கிரகாரத்தை தாண்டி அவர் சிந்தனை வளரவேயில்லை. கடைசி காலம் வரைக்கும் அவருக்குள்ள இருந்தது அந்த அக்கிரகார சிறுவன்தான்...''

 

இப்படி பல விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறார். தமிழகமே அந்த எழுத்தாளரின் நடைக்கு இன்றும் மயங்கியிருக்கிறது. அப்படிப்பட்டவரின் இன்னொரு முகத்தை முதல் முறையாக பதிவு செய்திருக்கிறார் அவர் மனைவி.

 
சுஜாதா குடும்பத்தின் நெருங்கிய நண்பர் விசாரித்ததில், திருமதி சுஜாதா 'ஆப் தி ரெகார்ட்' பேசியதை எல்லாம் பேட்டி என்று எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியவந்தது..

'எந்தப் பத்திரிகை, என்ன பேட்டின்னு கூட சரியா விசாரிக்காம சும்மா பேசிண்டிருந்தேன், கொஞ்சம் உளறவும் செஞ்சேன்' என்று கூறியுள்ளார்..

 


 
ஒரு எழுத்தாளர்.. அதுவும் இறந்து ஐந்து ஆண்டு ஆன பின் நொந்துகிடக்கும் அவர் மனைவியிடம் பேட்டி எடுத்து மக்கள் அவர் என கருதி வைத்துள்ள பிம்பத்தை உடைக்க ஏன் இந்த  ஆசை?

 

இலக்கியவாதியோ இல்லையோ.. சுஜாதா ஒரு தலைமுறை நாயகன் அல்லவா? அவருக்கு இப்படி நம் கண் முன் ஒரு அவமானம் நிகழ வேண்டுமா?

 

Answer:

அன்புள்ள ஸ்ரீகாந்த்,

 

நீங்கள் மிகவும் இளைஞர். ஆகவேதான் இந்தப்பதற்றம். யோசித்துப் பாருங்கள். இந்த வயதில் நீங்கள் வாழ்க்கையைப்பற்றி கொண்டுள்ள ஏராளமான நம்பிக்கைகள் வரும் வருடங்களில் அழியப்போகின்றன. விளைவாக நீங்கள் உடைந்து மறு ஆக்கம் பெறுவீர்கள். அந்த நிகழ்வுகள் மூலமே உங்களுடைய உண்மையான ஆளுமை உருவாகி வரப்போகிறது. அரசியல் நம்பிக்கைகள், ஒழுக்க நம்பிக்கைகள், தத்துவங்கள் பற்றிய மன உருவகங்கள் எல்லாமே மண்ணில் கால் பதிக்கப் போகின்றன. அதன் வழியாக நீங்கள் மதிக்கும் பலர் மதிப்பை இழப்பார்கள். பலர் புதிய வெளிச்சத்தில் கண்களுக்குத் தெரிவார்கள்

 

நம் இளமையில் கையை விட்டு சைக்கிள் ஓட்டும் ஒரு மாமாவை கண்டு வியந்து அவரை ஆதர்ச புருஷராக நினைத்திருப்போம். இன்று அப்படி இல்லை அல்லவா? இதுதான் வாழ்க்கையின் பரிணாமம். ஆகவே பிம்ப உடைவுகள் பற்றி பதற்றம் வேண்டாம். அது ஓர் இயல்பான நிகழ்வு

 

சுஜாதா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவரது பிம்பம் ஒன்று உங்கள் மனதில் உருவாகி வந்துள்ளது. அதை கொஞ்சம் அவர் உருவாக்கினார். கொஞ்சம் ஊடகங்கள் உருவாக்கின. கொஞ்சம் நீங்களே உருவாக்கி கொண்டீர்கள் அது உடையாமல் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள். அப்படி உடையாமல் அதை பார்த்துக்கொள்ள வேண்டியது உலகத்தின் கடமை என நினைக்கிறீர்கள், இல்லையா? நடக்கிற காரியமா அது?

 

ஓர் இலக்கிய வாசகனாக நீங்கள் உண்மையின் பக்கம் நிலைத்திருக்க வேண்டும் இல்லையா? உண்மையை வழிபட வேண்டும். உண்மையை தேடவேண்டும் இல்லையா? பிறிதொருவர் பற்றிய உண்மையை இந்த அளவுக்கு அஞ்சும் நீங்கள் எப்படி உங்களைப் பற்றிய உண்மையை தேடிச்செல்ல முடியும்? எப்படி அதை எதிர்கொள்ள முடியும்? அப்படி முடியாவிட்டால் நீங்கள் வாசிக்கும் இலக்கியத்திற்கு என்னதான் அர்த்தம்?

 

நான் சில மாதங்கள் முன்பு ஒரு கட்டுரையில் சுஜாதாவின் வீட்டுக்குச் சென்றபோது அவர் பெரிய நாமம் தரித்து வந்ததைக் கண்டதாக எழுதியிருந்தேன். அப்போது இணையத்தில் பலர் என்னை வசைபாடினர். அவதூறு செய்கிறேன் என்றும், சுஜாதா மிக நவீனமானவர் என்றும் வாதாடினர். ஆதாரம் காட்ட முடியுமா என்று கூவினர். அவர்கள் இப்போது ஒன்றும் சொல்லப்போவதில்லை. நான் எந்நிலையிலும் மனசாட்சிக்கு தெரிந்த உண்மைகளை மட்டுமே சொல்கிறேன் என்று இப்போது சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் அது என் இலக்கியக் கடமை. அதைச்சொல்ல தைரியமில்லா விட்டால் இந்த வேலையை எதற்காகச் செய்ய வேண்டும்?

 

நானறிந்தவரை சுஜாதா மிக ஆசாரமானவ்ர். தென்கலை அய்யங்காராக மட்டுமே தன்னை உணர்ந்தவர். அது ஓர் உண்மை. அதை எதிர்கொள்ள ஏன் அஞ்சவேண்டும்? இப்போது அவரது மனைவி அவரைப்பற்றிச் சொல்லும் எல்லாமே உண்மையாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் என் அப்பா அப்படித்தான் இருந்தார். சுஜாதா அவரது தலைமுறை. அவரது தலைமுறையில் அப்படி இல்லாதவர்கள் மிகமிக அபூர்வம். அதற்காக நான் என் அப்பாவை வெறுத்துவிட்டேனா என்ன? அவரை ஆராதிப்பதை விட்டுவிட்டேனா என்ன? அப்படி வெறுக்க ஆரம்பித்தால் சென்ற தலைமுறையில் எத்தனை பேர் நமக்குத் தேறுவார்கள்?

 

தலைமுறைகள் தோறும் மதிப்பீடுகள் மாறுகின்றன. நம்முடைய அடுத்த தலைமுறைக்கு நாம் பிற்பட்ட மதிப்பீடு கொண்டவர்களாகத்தான் தெரிவோம். மனிதர்களை அவர்கள் வாழ்ந்த காலச்சூழலை வைத்துப் புரிந்து கொண்டால் இத்தகைய மனக்குழப்பங்களில் இருந்து தப்ப முடியும். எனக்கு சுஜாதா ஒரு பழைமைவாதி என நன்றாகவே தெரியும். அது எனக்கு அவர் மீதிருந்த மதிப்பை சற்றும் குறைக்கவில்லை. எனக்கு அவர் இலக்கியவாதி அல்ல, ஆனால் ஒரு வகையில் அவர் என் ஹீரோதான்.

 

அப்படியென்றால் சுஜாதாவின் நவீனத்துவ முகம் என்ன நடிப்புதானா? இல்லை. இலக்கியவாதியின் அகம் செயல்படும் விதமே அதுதான். படைப்புகளில் சுதந்திரப் போராட்டத்தை கிண்டலடித்த புதுமைப்பித்தன் நிஜ வாழ்க்கையில் சுதந்திரப் போரில் ஈடுபட விரும்பினார் என அரை நூற்றாண்டுக்குப்பின் அவரது மனைவி வெளிபடுத்திய கடிதங்கள் ஜகண்மணி கமலாவுக்கு ஸகாட்டின . சுதந்திரப்போரில் ஈடுபட முடியாமல் அவரை வாழ்க்கையும் நோயும் கட்டிப்போட்டன. ஆகவே அவர் அதை தன் ஆக்கங்களில் நக்கலாக மாற்றி வெளிப்படுத்தினார்

 

ஒழுக்கவாதியான சுந்தர ராமசாமி ஒழுக்க மீறல்கள் மீது ஆழ்ந்த கவனம் கொண்டிருந்தார். ஒழுக்க மீறலை வாழ்க்கையாகக் கொண்டிருந்த ஜி.நாகராஜனின் அகம் ஒழுக்கம் மீதே படிந்திருந்தது. குறத்தி முடுக்கை அப்படித்தான் புரிந்து கொள்ள முடியும். எழுத்தாளனின் எழுத்து அவனை அப்படியே காட்டுவதில்லை. அவனுடைய ஆசைகளை, கனவுகளை, எதிர்பார்ப்புகளைக்கூடத்தான் அது காட்டுகிறது

 

நம் முந்தைய் தலைமுறையில்தான் அறிவியல் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது என்பதை காணலாம். இன்று எழுபது, எண்பது வயதானவர்களிடம் இந்த இரட்டைநிலையைக் காணலாம். அவர்களுக்கு அவர்கள் வளர்ப்பு காரணமாக சாதி மதம் சார்ந்த ஆசாரவாத நோக்கு இருக்கும். கூடவே நவீன அறிவியல் வழிபாட்டு நோக்கும் இருக்கும். பிள்ளைகள் 'சயன்சும் கணக்கும்' படிக்க வேண்டுமென விரும்புவார்கள். சுஜாதாவின் அகம் ஆசாரமான சூழலில் உருவாகி நவீனத்துவம் நோக்கி எம்ப முயன்றது என்று சொல்லலாம். அவர் விஞ்ஞானியாக ஆக முயன்ற ஆசார வைணவர்.

 

இத்தகைய இருபாற்பட்ட ஊசலாட்டமே எந்த படைப்பாளியையும் உருவாக்குகிறது. அதுவே அவரை நுணுக்கமாக அவதானிக்கச் செய்கிறது. திண்ணையில் ஏறி நின்று ஊர்வலம் பார்ப்பதைப்போல என்று சொல்லலாம். ஊர்வலத்தில் செல்பவர்களுக்கு அதைப்பார்க்கும் கண் இருப்பதில்லை. சுஜாதா ஏறி நின்ற திண்ணை வைணவம். அவர் அவதானித்த ஊர்வலம் அறிவியல்.

 

எழுத்தாளனிடம் எழுத்தை எதிர்பார்க்க பழகுங்கள். அவனுடைய எழுத்தைப் புரிந்து கொள்ள அவனுடைய அந்தரங்க வாழ்க்கையை கவனியுங்கள். அந்தரங்க வாழ்க்கையை வைத்து எழுத்தாளனை மதிப்பிடாதீர்கள். அப்படி மதிப்பிடப்போனால் உலகில் மிக மிகச் சில எழுத்தாளர்களே எஞ்சுவார்கள். எழுத்தாளனின் அகம் கொந்தளிப்புகளும் ஊசலாட்டங்களும் நிறைந்தது. அவனுடைய நிலையின்மையே அவனை எழுத்தாளனாக ஆக்குகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்

 

கலைஞர்களை தத்துவவாதிகளுடன் ஒப்பிடக்கூடாது. தத்துவஞானியின் ஒருமையும் தர்க்க ஒழுங்கும் கொண்ட நோக்கு அவனிடம் இருக்காது. கலைஞனை அரசியல் செயல்பாட்டாளர்களுடன் ஒப்பிடக்கூடாது. அவர்களிடம் அரசியல் செயல்பாட்டாளர்களின் ஒற்றை நோக்கும் அர்ப்பணிப்பும் தைரியமும் இருக்காது. கலைஞர்களை சாதாரணமான நல்ல மனிதர்களுடன் ஒப்பிடக்கூடாது. அவர்களிடம் சாதாரண மனிதர்களின் எளிய வாழ்க்கை நோக்கு இருக்காது

 

கலைஞனிடம் மேலே சொன்ன எவரிடமும் இல்லாத ஒரு விஷயம் இருக்கிறது. மொழியைக் கருவியாக்கி ஆழ்மனதுக்குள் செல்லும் நுட்பம். ஆகவேதான் அவர்கள் எவரை விடவும் கலைஞன் காலத்தில் வாழ்கிறான். சமூகத்தின் ஆழ்மனம் கலைஞன் வழியாகவே முன் செல்கிறது. கலைஞன் மட்டுமே ஒரு சோற்றுப்பதம் கொண்டு ஒரு பானைச்சோற்றை மதிப்பிட முடிகிறது. அதற்காகவே நாம் இலக்கியத்தை வாசிக்கிறோம்

 

நாம் எழுத்தாளர்களிடம் அவர்கள் எழுத்தை விட்டுவிட்டு என்ன செய்தார்கள் என்பதையே பார்க்கிறோம். சுதந்திரப்போரில் ஈடுபட்டார், ஆகவே நல்ல எழுத்தாளர் என்கிறோம். அரசியல் போர்களில் முன்னணி வகித்தார், மக்கள் சேவை ஆற்றினார், ஆகவே நல்ல எழுத்தாளன் என்கிறோம். முற்போக்குச் சிந்தனையாளர், நல்ல மனிதர், பழகுவதற்கு இனியவர் ஆகவே நல்ல எழுத்தாளர் என்கிறோம். இவையெல்லாம் அல்ல எழுத்தாளன். எழுத்துதான் எழுத்தாளன்.

 

இந்த அடிப்படைகள் இலக்கியம் வாசிப்பவனுக்கு இயல்பாகவே பிடி கிடைக்கும். உலக இலக்கியவாதிகளில் சிலரையேனும் அவதானித்திருப்பவனுக்கு புரியும் . மலையாளம் போன்ற சூழல்களில் இதை மீண்டும் மீண்டும் பேசி நிறுவிய விமர்சகர்களும் இலக்கிய இதழாளர்களும் உண்டு. தமிழில் நமக்கு இலக்கிய அடிப்படைகளை எவருமே சொல்லித் தருவதில்லை. நாமே புரிந்துகொள்ளும் அளவுக்கு வாசிப்பும் இல்லை. ஆகவேதான் எழுத்தாளனை நோக்கி 'நீ என்ன சமூக சேவை செய்தாய்?' என்றெல்லாம் கேட்கும் கோழிமுட்டை மொண்ணைத்தனம் நமக்கு வாய்த்திருக்கிறது

 

சுஜாதாவின் மனைவி வெளிப்படுத்தியிருக்கும் இந்தச் செய்திகளினால் என்ன ஆகப்போகிறது? சுஜாதா தமிழின் உரைநடையை நவீனப் படுத்திய முக்கியமான நடையாளர் என்பது இல்லை என்றாகி விடுமா? இல்லை அவர் எழுதிய நல்ல சிறுகதைகளும் நாடகங்களும் மோசமானவை ஆகிவிடுமா? இல்லை அவர் தமிழின் பெரும் பத்திரிகை சூழலில் அறிவியலை அறிமுகம் செய்தவர் என்பது மறைந்து விடுமா?

 

நான் அவரை என் நாயகனாகவே இன்றும் வைத்திருக்கிறேன். அதற்குக் காரணம் அவரது எழுத்துக்கள். அவரது எழுத்துக்கள் உள்ளவரை அவர் அப்படித்தான் நீடிப்பார். அவர் அவற்றை எழுதவில்லை சமையற்காரன் தான் எழுதினார் என்று நிரூபிக்கப் படுமானால் அதை மறுபரிசீலனை செய்வேன்.