Tuesday, July 23, 2013

கணித பாடமும் கடவுள்கள் படும் பாடும்...!









ணிதபாடம் என்பது பொதுவாக பள்ளி மாணவர்களிலே அதிகமானோருக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் பாடம் என்பதை பள்ளித்தேர்வுகளிலே பார்த்தாலே தெரியும்.


ஆனால் கல்வி அதிகாரிகளுக்கும் அவை பல சமயங்களிலே பிரச்சினையாகிப்போய் விடுவதையும் பார்த்திருக்கிறோம். அண்மைக்கால பல்கலைக்கழக தெரிவுகளிலே இஸட் ஸ்கோர் போன்ற குளறுபடிகளெல்லாம் நமக்குப் பரிச்சயமானதுதானே.

சரி, இதெல்லாம் மனிதனின் தவறுகள் என்று நாம் சமாதானப்படுத்திக்கொள்ளலாம்.


ஆனால் அகிலங்களையே ஆளும் கடவுளர்களுக்கும் கூட கணிதப்பபாடம் சிரமதசை என்று தெரியவந்தபோதுதான் எனக்கு மூர்ச்சையாகிவிடும் போலிருக்கின்றது நண்பர்களே. அதுவும் அவர்களே கண்டுபிடித்த கணக்கு வழக்குகளிலே போய்...

சரி சரி உண்மையை நிலைநாட்டுவதற்காக அடுத்தவரின் குளியலறை மற்றும் படுக்கையறைகளைக்கூட விட்டு வைக்காத நமது அபூஜீஸாக்களே சற்றுப் பொறுமையாக இருங்கள்.


விடயத்திற்கு வருகின்றேன்...


சொத்துரிமைச் சட்டங்கள் தொடர்பாக இஸ்லாமிய விடயங்களில் அடிக்கடி கருத்துமோதல்கள் ஏற்படுவதை சிறகுகளிலும் ஏனைய தளங்களிலும் வாசகர்கள் அவதானித்திருப்பீர்கள்.

உண்மையில் பாகப்பிரிவினை பற்றிய இஸ்லாமிய சட்டம் குர்ஆனின் பல வாசகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. அல்-பகரா (2), அல்-மைதா (5), அல்-அன்ஃபால் (8) போன்ற சூராக்களில் இதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் சூரா நிசா(4) வில் தான் இந்த சட்டங்கள் அதிகமாக விளக்கப்பட்டு இருக்கின்றன.


'உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும்' என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தாலோ அவள் பங்கு பாதியாகி விடும்.

இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்; இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான். இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்;...' (குர்ஆன் 4:11)


'இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் – அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் – தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்;


உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்..' (குர்ஆன் 4: 12)


'ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு இதற்கு மாறாக அவள் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், சகோதரன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்; இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்; அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு – நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு விளக்கமாக சொல்லி இருக்கிறான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவராக இருக்கின்றான்.' (குர்ஆன் 4:176)


'அல்லாஹ் இவ்விதிகளை தெளிவாக்கி இருக்கிறான்' என்று சொல்லிக்கொள்ளப் பட்டதற்கு மாறாக, இவைகள் சிறிதும் தெளிவானவை அல்ல என்பதுதான் சிறிது அதிர்ச்சியாக இருக்கின்றது.


குர்ஆன் வாசகம் 4:11 ஆனது ஒரு ஆணுக்கு ஒரே ஒரு மகள் மட்டும் இருந்தால், மற்ற வாரிசுகள் எப்படி இருந்தாலும், அவள் பாதி சொத்தைப் பெறுவாள் என்கிறது. ஆனால் இதே வாசகம் ஒரு மகனின் பங்கு மகளின் பங்கை விட இருமடங்கு என்று சொல்வதால், அவளின் சகோதரனுக்கு முழு பங்கும் கிடைக்க வேண்டுமே. இது குழப்பமாக இல்லையா? இந்த சட்டத்தில் நிச்சயமாக பிழை இருக்கிறது.

பெற்றோர்கள் மனைவிகள் போன்ற மற்ற வாரிசுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்த சட்டம் மேலும் சிக்கலாகிறது.
சமயங்களில் வாரிசுகளுக்கு ஒதுக்கப்படும் பங்குகளின் கூட்டு மதிப்பு மொத்த சொத்து மதிப்பைத் தாண்டுகிறது. பின்வரும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
மேற்கண்ட வாசகங்களின் படி, ஒரு மனைவி, மூன்று மகள்கள், இரு பெற்றோர்களை உயிருடன் கொண்ட ஒரு ஆண் இறந்து போனால் என்று வைத்துக் கொள்வோம்.

அவனுடைய சொத்தில் மனைவியின் பங்கு 1/8. (உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்)

அவரின் மகள்கள் 2/3 பங்கை பெறுவார்கள் (பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும்)
அவரின் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் 1/6 பங்கைப் பெறுவார்கள். (இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு)
இந்த பங்குகளின் கூட்டுத் தொகை மொத்த சொத்து மதிப்பை விட அதிகம்.
பிள்ளையுள்ள மனைவி 1/8 = 3/24
மகள்கள் 2/3 = 16/24
தந்தை 1/6 = 4/24
தாய் 1/6 = 4/24
எல்லோருக்கும் விதிக்கப்பட்ட பங்கை கொடுப்பதற்கு போதுமான பங்குகள் இல்லை.


பற்றாக்குறை 1/8

மனைவிக்கு பிள்ளைகள் இல்லை என்றால் மகள்கள்.  'தலாக்' செய்யப்பட
பழைய மனைவியின் பிள்ளைகளாக இருந்தால் என்ன நடக்கும்?
பிள்ளையில்லா மனைவி 1/4 = 6/24
மகள்கள் 2/3 = 16/24
தந்தை 1/6 = 4/24
தாய் 1ஃ6 = 4/24
மொத்தம் = 30/24
இந்த முறை பற்றாக்குறை ¼
இந்த சட்டத்தின் அநீதி மிகவும் தெளிவு.


ஒரு பெண் ஒரு மனிதனுக்கு 25 வருடங்களாக மனைவியாக இருந்து அவனுடன் பிள்ளை பெற்றிருக்கிறாள் என்று கொள்வோம். அவள் 1= 8 பங்கை பெறுகிறாள்.

ஆனால் அதே மனிதன் அவன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஒரு புதிய பெண்ணை மணக்கிறான் என்று கொண்டால் அவள் பழைய மனைவியைவிட இரு மடங்கு பங்கைப் பெறுவாள்.


பொதுவாக குருடாக இருக்கும் முஸ்லிம் கூட இந்த சட்டத்தின் முட்டாள்தனத்தை பார்க்கமுடியும் என்று நான் நம்புகிறேன். மனிதர்கள் நியாய, அநியாய உணர்வுடன் தான் பிறக்கிறார்கள். எந்தளவுக்கு தவறான கொள்கைகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு இருந்தாலும், நம்மில் கொஞ்சமேனும் இந்த நியாய அநியாய உணர்வு மீதி இருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் சில முஸ்லிம்களாவது இந்த சட்டத்தின் கணக்குப் பிழையைக் கூட இல்லை, அதன் அநீதியை உணர்ந்து இஸ்லாம் எங்கோ யாராலோ திட்டமிட்டபடி அல்லது குளறுபடியாகவோ கபடத்தனமாக மாற்றப்பட்டுள்ளது என்று முடிவெடுப்பது உறுதி.


மற்றொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.



ஒரு ஆண் தனது பிள்ளையில்லா மனைவியையும், தாயையும், சகோதரிகளையும் விட்டுவிட்டு இறக்கிறான் என்று கொள்வோம்.
மனைவியின் பங்கு 1/4 (உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்)
தாய் 1/3 (ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்)
சகோதரிகள் 2/3 பங்கை பெறுவார்கள். (இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள் (அவர்களுக்கு இடையில்))


மறுபடியும் பங்குகளின் கூட்டுத்தொகை மொத்தத்தை விட அதிகம், இம்முறை பற்றாக்குறை 3/12 அல்லது 25%. இது அலட்சியப்படுத்த முடியாத அளவிற்கு பெரிய பற்றாக்குறை.

மனைவி 1/4 = 3/12
தாய் 1/3 = 4/12
சகோதரிகள் 2/3 = 8/12
மொத்தம் = 15/12



மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், வாரிசுகளுக்கு பிரிக்கப்பட்ட பங்குகள் மொத்த சொத்தை விட அதிகம். இந்த இரண்டு உதாரணங்களிலும், சொத்தின் மொத்த மதிப்பு, மனைவியின் பங்கை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு முன்னர் வரும் பங்குகளின் கூட்டுத்தொகைக்கு சமமாக உள்ளது.
ஒரு மனிதனுக்கு இரண்டு மனைவிகள், ஒருவர் பிள்ளையுடனும், மற்றவர் பிள்ளையில்லாமலும், இருந்தால் என்ன செய்வது?


ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகள் இருந்தால் என்ன செய்வது?


எல்லா மனைவிகளும் ¼ பங்கை பெறுவார்களா? அது முடியாது. ஏனென்றால் அவரின் சகோதரிகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஒன்றுமிருக்காது.

அப்படியென்றால் மனைவிகள் ¼ பங்கை தங்களுக்குள் பங்கிட்டு ஆளுக்கு 1/16 பங்கை பெறுவார்களா?


இந்த சட்டம் கணிதத்தில் மட்டும் பிழையானது அல்ல, குழப்பமானதும் அநீதியானதும் கூட.


ஒரு ஆண் பெற்றோர்களையும், இரு சகோதரிகளையும், நான்கு மனைவிகளையும் விட்டுவிட்டு இறக்கிறார் என்று கொள்வோம். கணக்குப் பிழைகள் இருந்துவிட்டுப் போகட்டும்.

இரு சகோதரிகள் ஆளுக்கு 1/3 பங்கையும் மனைவிகள் ஆளுக்கு 1/16 பங்கையும் பெறுவார்கள். இது ஒரு நியாயமான பாகப்பிரிவினையாக தோன்றுகிறதா?


இறந்தது பெண்ணாக இருந்தால்?


கணவனுக்கு பாதி (உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு)


சகோதரனுக்கு எல்லாமே (ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், சகோதரன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்)


சகோதரன் எல்லாவற்றையும் பெற்றுவிட்டால் கணவன் எப்படி பாதியைப் பெறுவான்?


கணவன், (1/2) = 1ஃ2
சகோதரன் (எல்லாமே) = 2/2

மொத்தம் ஸ்ரீ= 3/2


மறுபடியும் இந்த பாகப்பிரிவினை கணக்களவில் பிழையானது மட்டுமல்ல அநீதியானதும் கூட.


அவளின் பெற்றோர்கள் சகோதரிகள் என்ன ஆனார்கள்? அவர்களுக்கு ஒன்றும் இல்லையா?


இந்த வாசகம் மற்ற வாரிசுகள் இல்லாதபோதுதான் சகோதரன் முழு பங்கையும் பெறுகிறான் என்று கூறவில்லை. பிள்ளைகள் இல்லையென்றால் அவனுக்கு எல்லாமே என்று மட்டுமே சொல்கிறது. இதே வாசகம் ஒரு ஆண் சகோதரியை விட்டுவிட்டு இறந்தால், அவளுக்கு பாதி கிடைக்கும் என்கிறது.

மீதி பாதி என்ன ஆகும்?


மற்றொரு முட்டாள்தனமான பாகப்பிரிவினையைப் பார்ப்போம்.


ஒரு பெண் ஒரு கணவனையும், ஒரு சகோதரியையும், தாயையும் விட்டுவிட்டு இறக்கிறார் என்று கொள்வோம்.


கணவன், (1/2) = 3/6
சகோதரி, (1/2) = 3/6
தாய் (1/3) = 2/6
மொத்தம் = 8/6
1/3 பங்கு பத்தவில்லை!


பாகப்பிரிவினை விசயத்தில் இந்த தவறுகள் நாலாவது வகுப்பு மாணவனிடம் இருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் உலகிற்கோர் அதிசயமாக விபரிக்கப்படும் குர்ஆன் இருக்கிறது என்பதை நம்பச் சொன்னால் நாம் மூர்ச்சையாகிவிடுவதைத் தவிர வேறு என்ன செய்வது?


பாத்ரூம் + பெட்ரூம் ஸ்பெஷலிஸ்ட் அபூஜீஸா போன்றவர்களே,  இதையெல்லாம் நமது எல்லாம் வல்ல இறைவனின் தவறாக கொள்வதா அல்லது உங்களைப்போன்று இடையில் வந்து இடைச்சொருகலாக் கியவர்களின் தவறாகக்கொள்வதா?




இறைவனுக்கே இந்த சாதாரண பின்னங்களை கூட்டுதல் எப்படி என்று தெரியவில்லை என்பதை நம்புவது மிகவும் கடினம். இந்த தவறுகள் பெண்களுக்கும் ஏழைகளுக்கும் அநியாயம் நினைத்து செயற்பட்ட ஆரம்பக்கல்வி கூட இல்லாத மொண்ணை மனிதர்களுடையது.

இடைச்சொருகலுக்குள்ளான குர்ஆனால் உருவான சிக்கல் மனிதனின் புத்தி கூர்மையால் தீர்க்கப்படுகிறது. ஆனால் குர்ஆனை மீறாமல் இது முடியவில்லை. ஒவ்வொரு வாரிசும் தனது பங்கில் சிறிதளவு விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கிறது. மனிதனின் தலையீடு இல்லாமல் இடைச்சொருகலுக்குள்ளான அல்லாஹ்வின் வார்த்தைகளை அமல் படுத்தமுடியாது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


குர்ஆனின் சட்டங்களை அமல் படுத்த இஸ்லாமிய 'சட்ட வல்லுனர்கள்' தலையை சுற்றி மூக்கை நோண்டவேண்டியிருக்கிறது.


(Note: இனிவேண்டுமானால் பாத்ரூம் + பெட்ரூம் ஸ்பெஷலிஸ்ட்கள்  உங்கள் கைவரிசையைக் காட்டிப்  பாருங்கள் )

-Omar Mukthar

No comments:

Post a Comment