அண்மையிலே திருகோணமலை சாகித்திய விழா மற்றும் மாவட்ட இலக்கிய விழா ஆகியவற்றினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஆக்கப்போட்டிகளிலே சிறுகதை மற்றும் கவிதைகளுக்காக முறையே முதலாம் இரண்டாம் இடங்களை வென்றிருந்தவரான மூதூர் மொகமட்ராபி இம்முறை மற்றுமொரு வெற்றியையும் பெற்றுள்ளார்.
ஆம்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை வரை கொழும்பிலுள்ள தேசிய அருங்காட்சியக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய இலக்கிய, கலையுலகப் பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ளவிருக்கும் கோலாகலமான விருது வழங்கும் விழாவில் இவருக்கான விருதும் பரிசும் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக தன்னை நிரூபித்துவரும் இவரை சிறகுகள் இணையத்தளத்தின் சார்பிலே வாழ்த்துவதிலே மகிழ்ச்சியடைகின்றோம்.
Jesslya Jessly
No comments:
Post a Comment